Wednesday, March 31, 2010

பெரியார் குஷ்பூ சோ


கற்பு பற்றி குஷ்பு பேசியதை எல்லோரும் கண்டிக்கிறார்கள்... அனால் பெரியாரும் இதே போல எழுதி இருக்கிறார்... அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை...

இது திருவாளர் சோ அவர்களின் வருத்தம்...

பெரியார் பற்றி , இன்றைய பெரியாரிச்ட்களிடமே ஒரு தெளிவு இல்லை என்கிறபோது, சோ அவர்களுக்கு , அந்த தெளிவு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது...

பெரியார் , கடவுளை மறந்து விட்டு மனிதர்களை பற்றி சிந்திதத்வர்... சில விஷயங்களில், கடவுயல் பெயரை சொல்லி மக்கள் சுரண்ட படுகிறார்கள் என்ற காரந்தில்தான், கடவுள் என்ற விஷயத்தை அவர் எதிர்த்தார்... அவர் நோக்கம் மனித முன்னேற்றமே தவிர, கடவுள் எதிர்ப்பு அல்ல...
அதே போல , ஒழுக்கம் என்ற பெயரில், பெண்கள் அடிமை படுத்த படுவதை எதிர்பதுதான் அவர் நோக்கம்,,,, ஒழுக்கத்தையே எதிர்ப்பது அல்ல.
பெண் ஏன் அடிமை அடிமை அனால் என்ற நூலில் அவரது நோக்கம் தெளிவாக தெரிகிறது...

கற்பு , ஒழுக்கம் என்ற போர்வை யில் பெண்கள் அடிமை ஆக்க படுவதை அவர் எதிர்கிர்ரர்... ஒழுக்கம் கூடாது என்பது அல்ல.. அனால் ஒழுக்கம் , கற்பு என்று சொல்லி பெண்ணை அடிமை ஆக்குவதை அவர் எதிர்கிர்ரர்..

வலை பதிவுகளை பார்க்றோம்... ஹாட் போட்டோ, ஜொள்ளு விடுதல் என்று மற்ற பெண்களை , கவர்ச்சியாக பேசுகிறோம் , எழுதிக்றோம்,.... நம் மனிவியியோ, நம் பெண் தோழியோ, சகோதரியோ அப்படி எழுதின்னல் அனுமதிப்போமா?... .. இந்த ஆண் ஆதிக்கத்தை தான் அவர் சாடுகிறார்..

இது புரியாமல், குஷ்பூ வையும், பெரியார்யும் ஒப்பிடுவது வருந்த தக்கது

Tuesday, March 30, 2010

மலர மறந்த மொட்டுக்கள்


"பிரிஞ்சுடலாம் பா ..இது சரியா வராது..."

அவள் சொன்னதை கேட்டு, நான் சந்தோஷ பட்டு இருக்க வேண்டும்... ஆனால், இல்லை ...இனம் புரியாத உணர்சியடன் " என்னடி சொல்ற ? தெளிவாதான் இருக்கியா " என்றேன்...

" ஆமா,... நல்ல யோசிச்சு பார்த்துட்டேன்... உங்க மேல என் அன்பு எப்பவும் மாறது...ஆனா நாம சேர்வது நடக்க முடியாதது.. என்னை பொண்ணு பார்க்க நாளை வர்ரங்க,,, நான் முழு மனசோட சம்மதம் சொல்லிட்டேன்..." என்றாள்..

" நாளை நேர்ல பேசலாம் ..வெயிட் பண்ணு"
" இனிமே நீங்க என் கூட பேசுனா, அது என் வாழ்கையை பாதிக்கும்... இனி நானும் உங்களுடன் பேச மாட்டேன்,.,,நீங்களும் பேச வேண்டாம் ..ப்ளீஸ்
அதுக்கு மேல மேல உங்க இஷ்டம் "

********************************

அவளை முதன் முதலில் சந்தித்த போது, எனக்குள் எந்த ரசாயன மாற்றமும் ஏற்படவில்லை... லால் பாக்கில் , எப்போதும் அமரும் இடத்தில அமர்ந்து , சீரோ டிகிரி படித்து கொண்டு இருந்தேன்... யாரோ அருகில் வருவது போல இருக்கவே, சட் என புத்தகத்தை ஒளித்தேன்...

நாம் தமிழ் புத்தகத்தை படிப்பதை வேறு யார் பார்த்தாலும், நம்மை ஒரு மன நோயாளி என்றுதான் நினைகிறார்கள். ஆந்திரா பய உணர்வு...
ஆனால் அவள் பார்த்து விட்டால் போலும்,.,,, சார் நீங்க தமிழா ? நானும் தான் சார்... ஐநூறு ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா , என்றாள்...

என்னிடமும் இல்லை... பிறகு பேசியது... அவளை டிராப் செய்தது,,, அவளும் என் வீட்டு அருகில் வசிக்கிறாள் என்பதை அறிந்தது, கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தது என்பதெல்லாம் , என்னை பொறுத்த வரை, சாதரணமாந விஷய்னகள் தான்...

நான் பல பெண்களுடன் பழகி இருக்கிறேன்.. இவளை ஒரு வித்தியாசமான பெண் என்றெல்லாம் சொல்ல முடியாது.... அழகு சிலை என்றும் சொல்ல முடியாது..
அப்படியே உலக அழகியாக இருந்தாலும், எனக்கு பயன் இல்லை... எனாகு ஊரில் , திருமணத்துக்கு பெண் ரெடி... பெங்களூர் ஒப்பந்த வேலை முடித்ததும்.. ஊர் - கல்யாணம் எல்லாம் முன்பே முடிவு செய்ய பட்டதுதான்..

ஆனாலும், ஒரு பேச்சு துணை என்ற அளவில் , அவள் ஓகே தான்... பேசி கொண்டே இருப்பாள்... நான் ரஜினியை ரசித்தால், அவள் கமல் ரசிகை,.,, நான் சாரு எனறால், அவள் ஜெ மோ ... சின்ன சின்ன முரண்பாடுகள், அவளை சுவாரசியம் ஆக்கின...


***********
ஒரு நாள் என்னிடம் கொஞ்சம் சீரியசாக வந்தாள்.. " எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டங்க... என் அப்பா கன்னட காரர்..அம்மா தமிழ்... எனக்கு மாப்பிள்ளை கன்னட கார பாக்குராங்க என்றாள்...

" இதை ஏன் இவ்வளவு சோகமா சொல்றா " எனக்கு புரியவில்லை...

" நம்ம லவ் ஜெயிக்கணும் ராஜா... என்ன செய்றதுன்னு தெரியல "

எனக்கு சிரிப்பு வந்தது... நான் எப்ப இவளை லவ் பண்ணேன்.. இப்படி நினச்சுதான் பழகுறாள ?

ஆனால் மறுக்க விரும்பவில்லை..எப்படியும் ஒரு மாசத்துல பெங்களூர் விட்டு கிளம்ப போறோம்..அது வரை இந்த காதலை தொடர்வோம்... பிறகு எதாவது சொல்லி , சோக வசனம் பேசி , விடை பெறுவோம்... என் எண்ணம் சிறகடித்து...

நான் காமுகன் அல்ல... பெண் வெறியனும் அல்ல... ஒரு மாதத்துக்கு , ஒரு நட்பு தொடரட்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது... அதை முறிக்க விரும்பவில்லை...

அதன் பின், பல இடங்கள் அவளுடன்... பல சுவையான சம்பவங்கள்.... ஆனாலும் , அவள் மேல் காதல் என எதுவும் இல்லை... என்ன கதை சொல்லி , விடை பெறுவது என்பதைத்தான் யோசிப்பேன்...

" ராஜ,.,, வீட்ல ஒவ்வொரு கதய சொல்லி, வர்ற மாபிளைங்கள தட்டி கழிக்றேன்.... சீக்கிரம் வந்து பொண்ணு கேளுங்க.. ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா போராடி தானே ஆகணும் " என்பாள் அவள்,,, கொஞ்சம் பொறு என்பேன் நான்...
" அவள் வீட்டு விருப்படியே யாராவது மனது கொண்டால், நம் வேலை மிச்சம் :" என நினைத்து கொள்வேன் நான்..

பெங்களூர் வேலை முடியும் நேரம் வந்து கொண்டே இருந்தது...
அப்போதுதான் அவளது போன்... அவள் அம்மா , அவள் பக்கத்துக்கு தமிழ் பையனை சிபாரிசு செய்ததும், அப்பா அதை மூர்க்கமாக மறுத்ததும், அம்மா உறவுக்கே அந்த எதிர்ப்பு என்ரால், காதலுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என அவள் உணர்ந்ததும் தனி கதை...

அவள் உறவை துண்டிப்பது பற்றி யோசிதேனே தவிர, அதற்கு அப்புறம் என்ன என யோசித்ததே இல்லை... அவள் இல்லாத உலகம் எப்படி இறக்கும் என கற்பனை செய்தது கூட இல்லை...

அவள் என்னுள் ஒரு பகுதியாகவே மாறி விட்டதை இப்போது தான் உணர்ந்தேன்....

இனி நானாக போன் செய்ய முடியாது.. அவள் விருபத்துக்கு மாறாக அவளுடன் பேச கூடாது... அவளாக பேசினால்..? " ப்ளீஸ் பேசு... உனக்காக உயிரையும் தருகிறேன் " மனதுக்குள் கெஞ்சினேன்...

என்ன இருந்தாலும் நான் செய்தது ஒரு வகை துரோகம்... மனதில் காதல் இல்லாமல், சும்மா போக்கு காட்டி வந்து இருக்கிறேன்... இப்போது அவள் பிரிய விரும்பும்போது, எனக்குள் காதல்....
அவளை பிரிவதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும... அவள் நேசித்தது ஒரு தவறான ஆளை... இப்போது அவளை விரும்பும் "நான் " , வேறு ஆள்... எனக்காக அவள் எந்த தியாகத்தையும் , போராட்டத்தையும் செய்யாமல், ஒரு சராசரி வாழ்வை வாழ்வதே சிறந்தது....

மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்தேன்..

போன் அடித்தது...
என்னால் நம்ப முடியவில்லை...
அழைத்தது அவள்தான்...

எதற்கு அழைக்கிறாள்... முடிவை மாற்றி கொண்டா ளா ? ... என்னுடன் சேர விரும்பிகிரா ளா ? ... அவள் சேர விரும்பினால் , நான் என்ன முடிவு எடுப்பது ?

எதுவும் அடுத்த சில மணி துளிகளில் தெரிந்து விடும்... எதுவாக இருந்தாலும், இந்த சில மணி துளிகளை, என் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது என தோன்றியது

Monday, March 29, 2010

எல்லா புகழும் இறைவனுக்கா?


இசை புயல் ரகுமான், விருது பெரும் போது, எல்லா புகழும் இறைவனுக்கே, என சொல்லும் பொது, அட,, திமிர் இல்லாமல் பேசுகிறாரே..என்ன எளிமை என வியக்கிறோம்..

சுப்பர் ஸ்டார் ரஜினி வெற்றி பெரும் போது, எல்லாம் கடவுள் செயல் என்று சொன்னால், அவர் தன்னடக்கம் நம்மை வியக்க வைக்கிறது...

அதே போல் சிலர், தன்னம்பிக்கை , பாசிடிவ் திங்கிங் இருந்தால் , வெற்றி பேரல்லாம் என சொல்லும் போது, நம் மக்கள் கஷ்ட படுவதற்கு காரணம், தன்னம்பிக்கை இல்லாதது தான் , என நினைக்றோம்...

கிளாடவேல் எழுதியுள்ள outliers என்ற புத்தகம், நம் மனதை சற்று அசைத்து பார்கிறது....

நீ ஜெயித்தால், அதற்கு நீ மட்டும் காரணம் இல்லை... உனக்கு முன்னாள், பலர் கஷ்டப்பட்டு உண்டாக்கி வாய்த்த சமூக சூழலும் ஒரு காரணம் என்கிறர் இவர்...

உதாரணமாக , இன்று ஆன்மீகம் பேசும் பலர், பெரியார் போன்ற தலைவர்கள், சாதியை எதித்து போராடி இருக்க விட்டால், இன்று ஆன்மீகம் பேசும் அளவுக்கு படித்து இருக்க முடியாது...

அதேபோல, ஆன்மீக துறையில், அரசியலில், பலர் போராடி இருக்கலாம்...

அதை எல்லாம் மறந்து விட்டு, இறைவன்தான் எல்லாம் கொடுத்தார், என்று சொல்வது, சற்று பொருத்தம் இல்லாதது போல தோன்றுகிறது...

இடது சாரி அமைப்பினர், எதாவது போராட்டம் நடத்தினால், ஏன் இடைஞ்சல் செய்கிறார்கள் என எரிச்சல் ஏற்படுகிறது... அனால் இது போன்ற போராட்ங்கள் நமக்கு மறைமுகமாக நன்மை செய்கிறது என்பதை நாம் உணர்வதில்லை....

சமீபத்தில் திருச்சியில் , சென்னை செல்ல ஒரு பேருந்தில் அமர்ந்து இருந்தேன்... கொளுத்தும் வெய்யில்... சினிமா, ஷாபிங் போன்ற , அந்த வயதுக்கு உரிய வேலைகளை விட்டு விட்டு, ஒரு இளம் பெண், ( தோழர் என்று சொல்ல வேண்டுமோ ?? ) ஒரு சமுதாய விழிபுன்ரவு பத்திரிகையை கையில் வைத்த படி, சில விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார்... இவரை போன்றவர்களால் தான் , சமுதாய மாற்றம் ஏற்படுகிறதே தவிர, அறிவு ஜீவிகளாலோ, ஆன்மீக வாதிகளாலோ அல்ல. ..

அதே போல, ஒருவர் கஷ்டபடுகிறார் என்றால், அதற்கு காரணம் , தன்னம்பிக்கை இல்லாதது, உழைப்பு இல்லாதது என்பது மட்டும் அல்ல....

இளைய ராஜாவுக்கும் , மணி ரத்னதுக்கும் பிரச்சினை ஏற்படாவிட்டால், ஒரு ரகுமான் வந்து இருக்க முடியாது , என்பதும் ஒரு உண்மையே...

ஆக, எல்லா புகழும் இறைவனுக்கே என்பது ஒரு மாயை...

எல்லா புகழும் , நமக்காக உழைப்பவருக்கே, நமக்கு உழைபவருகே.. இந்த உணர்வு இருந்தால், கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரும் மகிழ்வார் என தோன்றுகிறது

Saturday, March 27, 2010

ஒண்ணரை வாரத்தில் கன்னடம் கற்று கொள்வது எப்படி ?ஒரு இலக்கிய வாதியின் நாள் குறிப்பு

சக தமிழன் என்ற முறையில், குரல் கொடுப்பது , என் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என நான் அப்போது நினைக்கவில்லை..
வழக்கம் டி சாப்பிட அந்த கடைக்கு சென்ற போதுதான் அவனை பார்த்தேன்.... கடை பையனுடன் சண்டை போட்டு கொண்டு இருந்தான்... " அட...தமிழனா " என எனக்கு உற்சாகமாக இருந்தது... பெங்களூரில் எனக்கு தமிழ் நண்பர்கள் யாரும் இல்லாததால் , பேச்சு துணைக்கு ஒரு ஆள் கிடைத்த உற்சாகம் எனக்கு...

கடை பையனுடன் அவனுக்கு இருந்த மொழி பிரச்சினையை, தலை இட்டு தீர்த்து வைத்தேன்...வழக்கமா அங்கு இருக்கும் தமிழ் பைய்யன் லீவு போல...

நானும் தமிழ்தான் பாஸ்.. போன வாரம்தான், இங்கே வேலை கிடைச்சு வந்தேன்..லாட்ஜ்ல தங்கி இருக்கேன்..ரூம் தேடிகிட்டு இருக்கேன்... என தன சுய வரலாறு சொன்னான்...

பெங்கலோர்ரில் வேலை என்றால், நம் மக்கள் சாப்ட் வேர் என்றுதான் நினைகிறார்கள்... ஆனால், மற்ற துறைகளில், அதுவும் சிறிய நிருவனகளில், புதிதாக வேலைக்கு சேர்பவர்களின் பிரச்சினை பலருக்கு தெரிவதில்லை... ரூம் முதல் உணவு வரை நாம் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்...

நான் ஒரு வீட்டின் , கீழ் போஷனில் தங்கி இருந்தேன்... " உங்களுக்கு பிரச்சினை இல்லை என்றால், என் ரூமுலயே தங்கிகொங்க " என்ற என் அழைப்பை அவன் ஏற்று கொண்டான்...

" ஊர் நல்ல தான் இருக்கு... மொழிதான் பிடி படல... "முத்தே"ங்ராய்ங்க்க ... "சவ் சவ் பாத்"ங்ராய்ங்க்க ..ஒன்னும் புரியல மாமு என்றான் அவன்... வேலை இடத்தில பல பிரச்சினைகள்... சாப்ட் வேர் மாதிரி இங்கிலிஷை வைத்து காலம் தள்ள முடியாது... ஒரு முடிவெடுத்து, முப்பது நாளில் கன்னடம் என்ற புத்தகம் வாங்கினோம்... படித்ததும் , ஓரளவு தன்னம்பிக்கை ஏற்பட்டது...

பல்லவில நல்ல படம் போட்டு இருக்க்காய்ங்க்க...போலம்ட மச்சான் என்ற அவன் அழைப்பை மறுக்க முடியாமல் சென்றேன்... எப்படி போறது... ரெண்டு பேருக்கும் ரூட் தெரியாது...
கன்னட அறிவை காட்டும் உத்தேசத்துடன், ஒரு கடை காரரை அணுகினேன்,,, " பல்லவி தியேட்டர் ஹொகு பேக்கு... சினிமா... எல்லி .. எப்படி போகணும்...விச் பஸ்.. ஆட்டோ " என தெளிவாக கேட்டேன்... அவர் சிறிது யோசித்து விட்டு என் நபனிடம் சொன்னார்.. " தம்பி என்ன மொழி பேசறாரு..எனக்கு தமிழ் கன்னடம், தெலுங்கு எல்லாம் தெர்யும்..இவர் பேசறதை கொஞ்சம் மொழி பெயர்த்து சொல்லுங்க "

புத்தக கன்னடம் உதவாது என புரிந்து கொண்ட நாங்கள், நேரடியாக கற்று கொள்ள முடிவு செய்தோம்... வீட்டு ஓனர் மகள், எங்களோடு அவபோது தமிழ் கலந்த கன்னடம் பேசுவாள்... அவளை அணுகி, ஒரு மாதம் , கன்னடம் கற்று தர வேண்டு கொள் விடுத்தோம்... சில பேச்சு வார்த்தைகளுக்கு பின் , தினமும் கற்று தர முடிவானது...

என்னதான் கற்று கொண்டாலும், என்னால் இயல்பாக கன்னடம் பேச முடியவில்லை... மற்றவர்கள் பேசும் போது ஆச்சரியாமாக இருக்கும்.... என் நண்பன், ஆர்வமாக கற்று கொண்டான்... சில சமயம் , நீண்ட நேரம் கூட ஆவலுடன் இருந்து ஊக்கமாக கற்று கொண்டான்... நான் விரைவில் முடித்து கொள்வேன்...

ஒரு நாள் இரவு படுத்து இருந்தேன்... " மச்சான்.. ஒரு முக்கியமான மேட்டர்... அந்த கன்னட சொல்லி தர்ற பொண்ணு..." என ஆரம்பித்தான்... " டேய் ..தூங்கு...எப்ப பார்த்தாலும் கன்னடம தான... எனக்க தமிழ் போதும் " எரிச்சலுடன் சொல்லி தூங்கி விட்டேன்...

மறு நாள் காலை... அவன் ரூமில் இல்லை... அவன் சாமன்களும் இல்லை.. எனக்கு ஆச்சரியாமாக இருந்தது.... மேஜையில் ஒரு லெட்டெர் இருந்தது..வந்து பார்த்துக்கலாம் என நினைத்த படி வெளியே வந்தேன்...

வீட்டு ஓனர் வீடு பர பரப்பாக இருந்தது... அவர் மகளை காணவில்லையாம்....

எனக்கு திக் என இருந்தது.... அட பாவி... இதை தான் நேத்து சொல்ல பார்த்தியா ....
வீடு ஓனர் என்னிடம் வந்தார்... விஷயம் எனக்கு தெரிய கூடாது என நினைத்தாரோ என்னவோ.. சகஜமாக பேசினார்.. " நல்ல இருக்கியாப....உன் சிநேகித எல்லி " என சாதாரநமாக கேட்டார்...

என் பயத்தை காட்டி கொள்ளாமல் நானும பேசினேன்... 'அவனு அலசூர் ஹோகிதனே சார்.. சார், நன்கே சென்னயல்லி கலச சிக்கிதே... " அட... பயத்தில் கன்னட பேச வருகிறதே என ஆச்சர்யத்துடன்., சென்னையில் வேலை கிடைத்து இருப்பதாவும், ரூமை காலி செய்வதாகவும் சொன்னேன்....

அவருக்கு எங்கள் மேல் எந்த சந்தேகம் இல்லை என்பதால், எந்த பிரச்சினையும் இல்லாமல், ரூமை காலி செய்து தப்பித்தேன்...

இன்று நன்றாக கன்னட பேசுகிறேன்... ஆபாச மாக எழுதி, கன்னட இலக்கிய புரட்சி செய்யும் அளவுக்கு அறிவு ஜீவி ஆகி விட்டாலும் , அன்று பேசிய என் முதல் கன்னட வார்த்தைகளை என்றும் மறக்க முடியாது... ஒன்ன்னரை வாரத்தில் கன்னட சொல்லி கொடுத்த அந்த பெண்ணையும் மறக்க முடியாது...

அந்த நண்பன், லெட்டரை எடுத்து வர மறந்து விட்டதால், அதில் என்னதான் எழுதி இருந்தான், என இது வரை தெரியவில்லை

ஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆகும் கார்...வியப்பூட்டும் புத்தகம்

ஓர் உண்மை சம்பவம்...ஒருவர் புதிதாக ஒரு கார் வாங்கினார்.. சில நாட்களிலேயே , தயாரிப்பு நிறுவனத்துக்கு புகாருடன் வந்தார்..
" கார் நல்லாதான் இருக்கு.. ஆனா ஒரு பிரச்னை.. இந்த காரை எடுத்து போய், சாகலேட் , பிஸ்தா ஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆக மறுக்கிறது... வெனிலா ஐஸ் கிரீம் வாங்கினால் மட்டும் ஸ்டார்ட் ஆகிறது "
நிறுவனத்தாரால் இதை நம்ப முடியவில்லை... எதாவது சாமியாரின் திருவிளையாடலா அல்லது வாடிக்கையாளர் இலக்கியவாதியா அல்லது பாமரத்தனமாக உளறுகிறார என்றெல்லாம் அன்வசியாமாக குழம்பாமல், உண்மையை ஆராய்ந்தார்கள்... அவர்கள் கண்டுபித்த லாஜிகலான உண்மை , நாம் சற்றும் எதிர் பாராதது...

இது போன்ற பல சுவையான தகவல்கள், ஆலோசனைகள் , என விற்பனை துறையில் வெற்றி கோடி கட்ட விரும்புவோருக்கு பயன் படும் வகையில் எழுதப் பட்டுள்ள புத்தகம் தான் ... நம்பர் ஒன சேல்ஸ் மேன் என்ற இந்த புத்தகம்

இந்த துறையில் வல்லுனர்கள் பலர் இருக்கலாம்... திறமையாக எழுத தெரிந்தவர்களும் பலர் இருக்கலாம்..

அனால், நிபுணத்துவமும் , எழுதும் ஒரு சேர பெற்றவர்கள் , வெகு சிலர்தான் ...அந்த ஒரு சிலரில் ஒருவரான, சோம வள்ளியப்பன் இதை எழுதி படைத்தது இருக்கிறார்...

விற்பனை துறையில் இருக்கும் சிலருக்கு கூட அந்த துறையில் பெரிய ஈர்ப்பு இருப்பதில்லை.. அவர்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்...
பாட்டா நிறுவன முதலாளி, தன வர்த்தக அட்டையில், தன்னை முதலாளி என்றோ டைரக்டர் என்றோ குறிப்பிட மாட்டார்.. சீனியர் சேல்ஸ் பர்சன் என குறிப்பிட்டு கொள்வார்.. என்பதை அறியும் போது, இந்த துறை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்ர்வம் ஏற்படுகிறது..
எல்லா பொருளையும் ஒரே மாதிரி விற்க முடியாது... விற்கவும் கூடாது, என்பதை தெளிவாக புரிய வைக்கிறார் நூலாசிரியர்..

செயற்கையான தமிழ் எழுதாமல், இயல்பாக நம்முடன் உரையாடுவது போல் எழுதப்பட்டு இருப்பதால், நூலுடன் ஒன்றி படிக்க முடிகிறது...
வாய்ப்புள்ள வாடிக்கையாளர் ( வாவா) என்ற சொல் அமைப்பு அருமை... இயல்பான தமிழ்..

வாடிக்கையாளரை எப்படி அணுகுவது, பொருளை எப்படி அறிமுகம் செய்வது மறுப்பை எப்படி சமாளிப்பது, எப்படி விறபனை முடிப்பது போன்ற எல்லா அம்சங்களையும் ஆழமாக அலசி உள்ளார் வள்ளியப்பன்...
வர்த்தக அட்டையை எப்படி கொடுப்பது , என்பதை படிக்கும்போது, இதில் கூட மேட்டர் இருக்கிறதா என அசந்து போகிறோம்..
இது போன்ற பல நுணுக்கமான தகவல்கள் நிரம்பி உள்ளன..
மேலோட்டமாக எழுதப் படாமல் , ஆழமாக எழுதப்பட்டு இருப்பதால், பல முறை படிக்க வேண்டி இருக்கிறது..

பெரும்பாலும் இன்சூரன்ஸ் துறையை மட்டும் உதாரணமாக காட்டி எழுதப் பட்டுள்ளது ஒரு சிறிய குறை... ஆனாலும் அவற்றில் இருந்தும் கற்று கொள்ள முடியும் என்பதால், அதை பொருட் படுத்த வேண்டியது இல்லை...நமக்கு ஏற்றவாறு , மாற்றி கொள்ளும் பொறுப்பை நாமே ஏற்று கொள்ள வேண்டியது தான்..
பொதுவாக , எழுத்தாளரின் தொடர்பு விபரங்கள் , புத்தகத்தில் இருக்காது... இதில் , நாம் தொடர்பு கொள்ள வசதியாக , நூலாசிரியரின் மின் அஞ்சல் முகவரி கொடுத்து இருப்பது, வாசகரின் கருத்துக்கு அவர் கொடுக்கும் மதிப்பை மட்டும் அல்ல, தொடர்பு கொள்ளும் கலை என்பதை போதிக்க , இவர் தான் தகுதியானவர் என்ற எண்ணத்தையும் உறுதி படுத்திகிறது...

சில நல்ல திரை படங்களை, திரை அரங்குகளின் குறைகளால் , ரசிக்க முடியாமல் போய் விடும்... சில நல்ல எழுத்தாளர்களின், எழுத்துகளும், புத்தக வடிவமைப்பு குறைகளால், பாதிப்பு அடைய வாய்ப்புண்டு... ஆனால் இந்த புத்தகம், சிறப்பாக வடிவமைக்க பட்டுள்ளது..

விற்பனை ஆர்வம், புரிந்துணர்வு என்பதை விளக்கும், 2 X 2 matrix கட்டம் மட்டும், சிறிதாக அச்சிட பட்டு இருப்பதால், முழு இம்பக்ட் கிடைக்கவில்லை... வேகமாக படிக்கும் , சிலருக்கு அது புரிய வில்லை. நிறுத்தி
படித்தால்தான் புரிகிறது... proof reader .. கொஞ்சம் கவனிங்க, ப்ளீஸ்

பின் இணைப்பு
மிகவும் உபயோகம் உள்ளது... பத்து கட்டளைகளும் அருமை...

ஒரு துறையில் ஆர்வம் ஏற்பட வைக்க எழுதுவது, அறிமுகம் கொடுக்க எழுதுவது ஒரு வகை...இந்த புத்தகம், ஒரு துறையில் நிபுணத்துவம் பெற எழுதப்பட்டு , அதில் வெற்றியும் பெற்றுள்ளது..
விற்பனை துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டும்..
கல்லூரி மாணவர்கள், வேலை தேடுபவர்கள், கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும்...
மற்ற துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது இல்லை... ஆனால், படித்தால் சுவையாக இருக்கும்... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்..
விற்பனை என்பது ஒரு கலை, விரபனயாளர்கள் ஒரு விதத்தில் , கலைஞர்கள் என்ற எண்ணத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துவதுடன், இந்த துறைக்கே உரிய வித்தைகளை, அழகு தமிழில் , இனிமையாக போதிக்கிறது...

வாழ்கையில் வெற்றி பெற நினைபவர்கள், இளைஞர்கள் , இந்த புத்தகத்தை , தவற விட்டு விட கூடாது...
மொத்தத்தில் , இந்த புத்தகம் , சர்வ தேச தரத்தில் எழுப்பட்ட , ஒரு தமிழ் நூல்...

இந்த புத்தகத்தை வாங்க விரும்புபவர்களின் வசதிக்காக , கீழ் காணும் இணைப்பை தருகிறேன்
http://nhm.in/shop/978-81-8493-165-5.html

Thursday, March 25, 2010

ஆண் உடலில் , ஒரு பெண்

மங்கையராக பிறப்பதற்கு மாபெரும் தவம் செய்ய வேண்டும் என்பார்கள்...

அனால் , அப்படி எல்லாம் தவம் செய்து , யாரும் பெண்ணாகவோ , ஆணாகவோ பிறப்பதாக தெரியவில்லை.... எல்லாம் வல்ல இயற்கையாலோ, அல்லது எல்லாம் வல்ல இறை அருளாலோ தான் அப்படி பிறப்பதாக பொதுவாக நம்புகிறார்கள்... எக்ஸ் , ஒய் தான் நிர்ணயிக்கிறது என்கிறது அறிவியல்...

இதை எல்லாம் மீறி, ஒரு பெண் என்ற நிலையை அடைவதற்கு, ஒரு பெண்நாக பிறப்பதற்கு, நம்மை போன்ற ஒரு சக உயிர் மேற்கொண்ட மாபெரும் தவம் தான், மாபெரும் போராட்டம் தான், நான் வித்யா என்ற புத்தகம்... வித்யா என்ற பெண் எழுதி உள்ளார்...
(
பிறக்கும் போதும் இவர் பெண் தான்... ஆனால், ஆண் என்ற உடலில் இவர் பிறந்து விட்டார்.... இது இயற்கை செய்த தவறா, இறை செய்த தவறா, - தெரியவில்லை... ஆனால் தண்டனை இவருக்கு தான்...

கேலி, கிண்டல் , அவதூறு, சிலசமயம் அடி, உதை,,, அவ்வபோது சில நல்லவர்களின் சந்திப்பு - இதுதான் இவர் வாழ்க்கையாக இருந்தது....

அரவாணிகளுக்கு , யாரும் ஒரு நல்ல வேலை கொடுப்பதில்லை... எனவே அவர்கள், பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழில் என செல்கிறார்கள்...

உடனே நாம் என்ன நினக்கிறோம்,... இந்த அரவாணிகள் எல்லாம் மோசம்பா ... மோசமான தொழில் செய்பவர்கள்.. கொஞ்சம் தள்ளியே இருப்போம்...

இப்படி நாம் நினைப்பதால், நாம் அவர்களுக்கு வேலை கொடுபதில்லை... வேலை கிடைக்காததால், அவர்கள், பிச்சை பாலியல் தொழில்...

என்ன ஒரு விஷ சக்கரம் பாருங்கள்

இத்தனை கஷ்டத்திலும், தன் சுயமரியாதையை இழக்கத கண்ணியம், இவரை உயர்த்தி காட்டுகிறது....

நம்மை போன்ற சக மனிதர்கள், கொஞ்சம் அன்பு , கொஞ்சம் விழுப்புணர்வு கொண்டு இருந்தால், இந்த துயர்கள் அவசியம் இல்லாமல் போய் இருக்கும்.... ஆகா, நாமும் இந்த துயருக்கு காரணம் என்று புரியும் போது , தலை குனிகிறோம்...

சில இல்லகிய வாதிகள், ,அறிவி ஜீவிகள் இதை எழுதி இருந்தால், பாலியல் பார்வையில் எழுதி, உலக இலக்கியம் படைத்தது இருப்பார்கள்...
இவர், சக அரவாணிகள் கண்ணியத்தையும் பாதிக்காத வகையில், சமூக அக்கறை உடன் எழுதி உள்ளார்...

அரவாணியாக பிறப்பது, என்ற இந்த விஷயத்தில், முறையான வழிகாட்டுதல் , தெளிவு , புரிதல் இல்லாதது தான் பல பிரச்சினைகளுக்கு காரணம்... இந்த புத்தகம , அரவாணிகள் உலகத்தை அறிமுகம் செய்து வைகிறது... அவர்கள் சார்பான வேதனை புரிகிறது....

ஆனால்,. புத்தகம் டாகுமென்ரி போல் இருக்கும் என யாரும் நினைக்க வேண்டாம்... சீராக எழுத பட்டுள்ளது... நூல் ஆசிரியர் , மொழி ஆர்வம் மிக்கவர் என்பதால், நல்ல நடையில் , புத்தகம் உள்ளது...இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும், நேர்மறை தொனியில் அவர் வாழ்க்கையை அணுகும் விதம்தான் இந்த நூலின் தனி சிறப்பு
முழுதும் சோகம் என்று இல்லாமல், அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்கள், அன்பான் சீண்டல், நடு ரீதியான கேலிகள் என யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது

ஆபரஷன் நடப்பதை விளக்கும் இடம், நம் உடலையும் மனதயும் பதற வைகிறது....

அரவாணியாக பிறக்காத ஒருவர், சந்தர்ப சூழ்நிலையால், மன ரீதியாக பாதிக்க பட்டு, தன்னை ஒரு அரவாணி என கருதி கொண்டு, ஆபரேஷன் வரை சென்றால், எவ்வளவு விபரீதம்?

சற்று வித்யாவின் அப்பாவை நினைத்து பார்போம்.. தனது மகன், ஆசையுடன்,கனவுடன் வளர்த்த மகன், திடீர் என ஒரு நாள் , நான் ஒரு பெண் என கூறினால் அவருக்கு எப்படி இருந்து இருக்கும்...

இதை பற்றிய விழிப்புணர்வே , இன்றைய உடனடி தேவை... தன்னை , பெண் என உணரும்போது, உடனடியாக, தைரியமாக, பெரியவர்களிடம் சொல்லும் அளவுக்கு , பெரியவர்களிடம் விழிப்புணர்வு தேவை...
அறிவு பூர்வமாக அணுகப்பட்டு, மன ரீதியான சிகிச்சை அல்லது உடல் ரீதியான , பால் மற்று சிகிச்சை பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டு, அவர்களை அன்கீக்கரம் செய்வதே, நம்மை போன்ற சக மனிதர்கள், இயபலான வாழ்கை நடத்த உதவும்

கண்டிப்பாக ஒவ்வொருவரும் இதை படிக்க வேண்டும், ... பொழுது போக்குக்காக அல்ல.... சமுகத்தின் பழுதை நீக்குவதற்காக....

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Wednesday, March 24, 2010

இணைய தமிழை , இழிவு செய்யும் தினமணி

இணைய எழுத்துக்கள், தமிழை சிதைக்கின்றன.... இனைய எழுத்தாளர்கள் , தங்களுக்குள் சண்டை இட்டு கொள்வதால் சமூக அமைதி கெடுகிறது....
இப்படி எல்லாம் எழுதி , தமாஷ் செய்து இருக்கிறது தினமணி நாளிதழ் ( இன்றய செய்தி தாளில் )

காணொளி.... இடுகைகள், பதிவுகள் முகப்பு .. புறவய வாதம் போன்ற எண்ணற்ற தமிழ் சொற்களை இன்று இணையத்தில் தான் பார்க்க முடிகிறது... அச்சு ஊடக தமிழ் , தமிழகவா இருக்கிறது?

தினமணி மனசாட்சியுடன் செயல் பட்டு இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது....

சங்க இலக்கியம், இசை, நவீன இலக்கியம், வரலாறு, அறிவியல், தொழில் நுட்பம் என எதை பற்ற்யும் இனையதில் அழகு தமிழில் விளக்கம் பெற முடிக்கிறது...

அச்சு ஊடகங்களில், சினிமா மற்றும் அரசியல் தவிர வேறு என்ன இருக்கிறது?

உண்மையில் அச்சு ஊடகங்களுக்கு தான் கட்டு பாடு தேவை...

என் கன்னத்தில் " பளார் " விட்ட எழுத்தாளர் வண்ணநிலவன்

சில பழங்குடி இனங்களில், இன்னும் கம்ப்யூட்டரையே பார்த்திராத மக்கள் உண்டு... அதனால் அவர்கள் வாழ்கையில் மகிழ்ச்சி குறைந்து விடுமா என்றால் இல்லை.... எளிய வாழ்விலும் முழுமை உண்டு... மன்னிக்கவும், ..எளிய வாழ்வில்தான் முழுமை உண்டு...

ஒரு சிறிய நாடு... அங்கு வாழும் மக்கள்... அவர்களின் பிறப்பு, இறப்பு, காதல், காமம்.,மரணம்.... ஒருவருக்கொருவர் உதவி கொள்கிறார்கள்... வெறுப்பும் உண்டு... என்ன செய்தாலும், எதில் ஈடு பட்டாலும், மனதில், ஒரு வெறுமை..எப்போதாவது சந்தோசம்...

"ஏதோ ஒன்று" அவர்களை பரவச படுத்துகிறது.... ( ஆனமிகம், கட்சி, ஏதாவது இசம் என்று வைத்து கொள்ளுங்கள்) அது தங்கள் எல்லா துயரங்களையும் தீர்த்து விடும் என நம்புகிறார்கள்.... அந்த ஏதோ ஒன்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள்..

இது என்ன ஒட்டு மொத்த மனித இனத்தை ஆராய்ச்சி செய்யும் , தத்துவ நூலா என வியப்பு ஏற்படுகிறது அல்லவா ?

அதுதான் கிடையாது.... ஒரு சிறிய நாடு என்பதை ஒரு சிறிய தெரு என்றும் ஏதோ ஒன்று என்பதை மழை என்றும் வைத்து கொண்டால், அதுதான் , வண்ண நிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு ....

************************************************************************


ஊரில் உள்ள எல்லா தெருக்களையும் இந்த புது மணல் எப்படி நிறைத்து விடுகிறது ? "சிறு வயதில் அம்மாவிடம் கேட்டால்
சாமிதான் போடறார்.. வேற யார் போடுவார்கள் "


இதை எல்லாம் படிக்கும் போது, எளிமை , குழைந்ததனம் போன்ற விஷயங்களை நாம் இழந்து விட்டோம் என்பது புரிக்றது....

ஒரு எளிய மனம் எதையும் நம்பும்.... எதையும் நேசிக்கும்... ரசிக்கும்..ஆனால், ஒரு கன்னிங் mind , எதனாலும் திருப்தி அடையாது... .என்று நம்மை யோசிக்க வைக்கின்றன இந்த வரிகள்...

பிலோமி கதாபாத்திரம் , அடையும் ஒரு வித கிளு கிளு தன்மையை அனைவரும் புருந்து கொள்ள முடியும்... நுட்மாக செதுக்க பட்டுள்ள பாத்திர படைப்பு..

சாம்சன் அண்ணன் , எஸ்தர் சித்தி செய்யும் விசித்திரமான காட்சியை , அற்புத மேரி எதிர்பாராமல் பார்ப்பதும் , அதன் பின் , அவள் நடவடிக்கயில் ஏற்படும் மாற்றங்களும் , மன தத்துவ ரீதியில் சொல்ல பட்டுள்ளது...



எஸ்தர் சித்தியை மோசமானவளாக காட்டமல், அது அவள் இயல்பு என்று ஜஸ்ட் லைக் தட் சொல்லி சொல்வதை ரசிக்க முடிகிறது... எந்த இடத்திலும், கதாசிரியர் , நீதி போதனை செய்யவில்லை... நடப்பதை அப்படியே சொல்கிறார்...

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இயல்பு உண்டு , ஒவ்வொரு நாளும் தனித்தன்மை வாய்ந்தது என்று விளக்கும் இடத்திலும், வெயில் காலம் ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு மாதிரி இருக்கும்... ஒரே இடத்தில கூட, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் ( அதாவது , அப்படி தோன்றும் ) என சொல்லும் இடத்திலும், நுட்பமான பார்வை தெரிகிறது...



ஞாயிற்று கிழமை , ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி போனாலும், சாம்சனுக்கு கிடைக்கும் பொழு போக்கு , கொஞ்சம் பொறாமை பட வைத்தாலும், அவனுக்கு என்று ஒரு திறமை இருப்பதும், பொறுப்பற்ற குடிகாரன், திடீரென ஒழுக்கம் நிறைந்தவனாக ( தற்காலிகமாக ) மாறுவதும், நாம் அன்றாடம் காணும் வாழ்வியல் எதார்த்தம் தான்... முழுமையாக நல்லவனும் இல்லை... முழுமையாக கெட்டவனும் இல்லை...

ஜீனோவின் வழியாக, ஒரு இளம் பெண்ணின் , நுட்மான மன உணர்வு காட்டபடுகிறது....

பொதுவாக ஒரு கதை , ஒரு இடத்தில தொடங்கி, ஒரு முழுமை யை நோக்கி செல்லும்... இதில், ஒவ்வொரு இடமும் முழுமையாக இருப்பதால், ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்க முடிகிறது.. குழப்பம் அற்ற தெளிவான நடை...

ஒரு கதாபாத்திரம், அவருக்கு ஏற்படும் பிரச்னை , அதற்கு எப்படி தீர்வு காண்கிறார் , என்ற முறையில் எழுதகி இருந்தால், அந்த தீர்வை தெரிந்து கொண்ட பின், அந்த புத்தகத்தை எறிந்து விடலாம்... அல்லது, நீதி போதனை , தத்துவ விளக்கம் , என்றெல்லாம் இருந்தால், அது சிலருக்கு மட்டுமே பிடிக்கும்...

ஆனால் , இந்த நாவல், எல்லோர்ருக்கும், அவரவர் அனுபவம் படிப்பு அனுபவம், சார்ந்து , ஒவ்வொரு அர்த்தத்தை தரும் என்பதால், இது ஒரு முக்கியமான நாவல்...

" . அவர்கள் மழைக்கு அடிமையாக இருந்தார்கள்...இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசையா திடீர் என குணம் அடைந்து விடுவார் என நம்பினாள் " என்ற முடிவு வரிகளை படிக்கும் போது, நாம் எந்த விஷயத்துக்கு அடிமையாக இருக்கிறோம்? என யோசித்தேன்.... இருதயத்து டீச்சர் போல, இப்படி வெளிபடையாக நம்பாவிட்டாலும், உள்ளோர பல நம்பிக்கைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம்...

"விமலா விம்மினாள் .. படிமம்,,, தொன்மம்... பிரான்ஸ் கதாசிரியர்.. உலக இலக்கியம் ஆண் குறி, யோனி, " என்றெல்லாம் படித்து, தமிழ் நாவலையே ஒதுக்கி வைத்து பல ஆண்டுகள் ஆகி விட்டன,,,, அப்படி பட்ட என்னயே, தமிழிலும் , நுட்பமான உணர்வுகளை தொட முட்யும் என , என் கன்னத்தில் அடித்தது போல் , இந்த நாவல் மூலம் சொல்லி இருக்கிறார் , வண்ணநிலவன்...

ரெய்னீஸ் ஐயர் தெரு _ சீரான பாதை கொண்ட , நுட்பமான தெரு
*****************************************************************************

வெளியீடு கிழக்கு பதிப்பகம்.... நாவல் அருமை... வடிவமைப்பு அருமை... நோக்கம் அருமை... நிறைந்து இருக்கும் ஏழு பிழைகள் கொடுமை... கொடுமை... கொடுமை.... இதனால், சில வட்டார ( புது )வார்த்தைகளை படிக்கும் போது, உண்மையில் அதுதான் வார்த்தையா, அல்லது எழுத்து பிழையா என்று குழம்ப வேண்டி இருக்கிறது .. கொஞ்சம் விழித்து கொண்டு பிழை திருத்துங்கள் , proof reader சார்

Monday, March 22, 2010

இதிலுமா இப்படி???

எதிலும் பொய்மை...

எதிலும் கலப்படம்....

போலிகளின் , ராஜாங்கம்

வெறுத்து போனேன்...

மனதை சாந்த படுத்த

டாஸ் மாக் சென்றேன்..

புல் அடித்தும் போதை இல்லை..

அட
அதிலும் கலப்படம்...
போலி சரக்கு

Saturday, March 20, 2010

ஆண்களின் வீக் பாயிண்ட்

இரவு வீடு திரும்ப நேரமாகி விட்டது.... நடக்கும் அலுப்பு தெரியாமல் இருக்க, ஒரு நமீதா பாடல் ஒன்றை , மனதில் ஓட விட்டபடி, அந்த பிராதன சாலை வழி வந்து கொண்டு இருந்தேன்...
பகலில், பர பரப்பாக இருக்கும் சாலை, இரவில் அமைதியாக இருந்தது... திடீர் என கை வளையல் குலுங்கும் சத்தம்.... அட என ஆர்வத்துடன் பார்த்தல், ஒரு பெண் நிற்பது தெரிந்தது.... சாலை ஓரத்தில் நின்ற அந்த பெண், என்னை கண்டதும் மீண்டும் , வளையல் சப்தம் எழுப்பினாள்... பவுடர், லிப் ஸ்டிக், இரவு எல்லாம் சேர்ந்து அவள் யார், எதற்காக அழைக்கிறாள் என புரிய வைத்தது...
அனால், அவரை பார்த்து எனக்கு பால் உணர்சி ஏறபடவில்லை.... பாவம் என தோன்றியது....
பண கஷ்டம், அவரை அந்த குளிரில் இப்படி கஷ்ட பட வைகிறது..... என்னிடம் அவர் எதிர் பார்ப்பது சுகம் அல்ல... சிறிது பணம்.... இப்படி கஷ்ட படுபவர் கள் பலர்... கஷ்டதிருக்கு ஆட்படுதியவர்கள், ஆண்களாகத்தான் இருக்க முடியும்...
அவர்களுக்கு தேவை , நமது பரிவு... ஆதரவு....

ஆனால், சுகத்திற்காக , பொழுது போக்கிற்காக இப்படி செய்பவர்களும் இருக்கிறர்கள்... அவர்கள், இப்படி குளிர் கஷ்ட படுவதில்லை... எ சி கார், பங்களா என அசத்து வார்கள்...
சும்மா ஒரு கிளு கிளுப்பாக இதை செய்பவர்களும் இருக்கிறார்கள்....
ஊர் சுற்றி விட்டு, குஜால் செய்து விட்டு , பிறகு டா டா காட்டி செல்வது இன்னொரு ரகம்...

அவர்களில் ஒரு பெண்,, அவளது தோழியிடம் கேட்பதாக , இந்த தமிழ் பாடல்... கொஞ்சம் படித்து பாருங்கள்..

உன்னையோர் உண்மை கேட்பேன்.. உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவார்கள் , எனக்குமோர் இன்பம் நல்கி
பொன்னையும் கொடுத்து , பாத போதினில் வீழ்வதேனோ....

- விவேக சிந்தாமணி

சுகத்துக்கு ஆசை பட்டுத்தான் நான் இதை செய்கிறேன்... என்னைதிருப்தியும் படுத்தி,
இ சி ஆர் , ஹோட்டல் என்றெல்லாம் செலவும் செய்து, என் காலடியில் விழுந்து கிடக்கிறார்களே.. இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.... ஆராய்ந்து பதில் சொல் ..
என்பதுதான் பாடல்....

உண்மையான காதல் என்பது வேறு.... ஆனால் சும்மா ஊர் சுத்துவதில்., இரு பாலருக்கும் தான் குஜால்... இதில் ஆண் மட்டும் என் செலவழிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை இந்த பாடல் , தூண்டுகிறது.....


சரி, இந்த பாடலுக்கு பதில் என்ன? பதில் பாடல் இருக்கிறது... ஆனால் அது அன்ன்மிக, பகுத்தறிவு, பெண் உரிமை , ஆண் உரிமை, என எல்லா தரப்பையும் கோப படுத்தும் என்பதால், அதை நீங்களே தேடி படிக்குமாறு கேட்டு கொள்கிறேன் ...

வடிவேலு, ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள்

"மாயி அண்ணே வந்திருக்கஹ ..நம்ம சொந்தகாரங்க எல்லாம் வந்து இருக்காஹ.. "

வடிவேலு : அதான் , எல்லாம் வந்து இருக்காஹ ல... அப்புறம் ஏன், ஹ ஹ நு கூவிக்கிட்டு இருக்க..பொண்ண வர சொல்லுய்யா

மின்னல் ஜோக் எதனை முறை பார்த்தாலும் சிரிப்பு வரும்... அதை விட அதிகமாக , நமது ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள் காமெடி செய்கிறார்கள்...

பகுத்தறிவு நண்பர்கள் , கடவுள் இல்லை என்று தான் , திட்ட வட்டமாக கண்டு பிடித்து விட்டர்களே... இன்னும் ஏன், ஒரு இல்லாத விஷயத்தை பற்றி..ஹ ஹ நு கூவி கொண்டு இருக்கிறார்கள் என புரியவில்லை....

தனி மனித பிரச்னை , சமுதாய பிரச்னை எவ்வளவோ இருக்கின்றதே...

ஆன்மீகநண்பர்கள், கடவுள் இருப்பதை பார்த்து விட்டார்கள் அல்லவா? பிறகு ஏன், கடவுளை பற்றி எழுதி , நேர்டஹை வீண் அடிக்கிறார்கள்....

கடவுள் என ஒருவர் இருந்தால், அவர் எல்லாம் தெரிந்தவ்ரகதான் , இருக்க முடியும்,.,,, இவர்கள் தயவு , அவருக்கு எதற்கு?

ஆகா, இரு சாராருமே, கடவுளை மறந்தால், கடவுளை மாற, மனிதனை நினை என்று சொன்ன பெரியாரும் மகிழ்வார்...

கடவுள் என ஒருவர் இருந்தால் , அவரும் மகிழ்வார் ....

Friday, March 19, 2010

மெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா

எல்லோரும் ஆன்மீகம் ஆன்மீகம் என பேசுவதால் , எனக்கு அதன் மேல் ஒரு வித ஆர்வம் ஏற்பட தொடங்கியது... குறிப்பாக, பகுத்தறிவு வலை பதிவுகள் தான் , சாமிகளை பற்றி அதிகம் பேசி , என் ஆன்மீக வெறியை தூண்டி விட்டன...

ஆன்மீக தத்துவம் பற்றி அறிய , ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் தான் சிறந்தவர் என ஒருவர் வழி காட்டினார் ....

அவர் சொன்ன எழுத்தாளரின் வலை பக்கத்துக்கு சென்றேன்... தத்துவ தரிசனம் , படிவங்கள், தொன்மங்கள் என படித்து கொண்டு இருந்தவன் , என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.... சரி... இதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கில்லை என புரிந்து கொண்டு, ஒரு புத்தகம் படித்தேன்..அதில், குண்டலினி சக்தி, முக்தி , மந்திரம் என்றெல்லாம் விளக்கி, தியானம் செய்ய சொன்னார்கள்...
இதுதான் மேட்டரா , என சந்தோஷ பட்ட நான் , அடுத்த நாள் அதி காலை , மெரீனா கிளம்பினேன்...

புத்தகத்தில் சொன்ன படி, தியானம செய்ய தொடங்கிய, பத்து நிமிஷத்திலேயே, நெற்றியில் சிவப்பு ஒழி தோன்றியது...ஆச்சர்யத்துடன் கவனித்தேன், .. அது ஒரு சின்ன பையன், விளையாட்டாக அடித்த டார்ச் லைட் என தெரிந்ததும் சற்று வருத்தம்....
சிறிது நேரத்தில், முதுகு தண்டில், குண்டலினி சக்தி வேலை செய்ய ஆரம்பித்தது... ஏதோ ஒரு , சொல்லுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி, மூலாதாரத்தில் இருந்து புறப்பட்டு, மேல் நோக்கி நகர ஆரம்பித்தது....
யாரோ தலையை தொடுவது போல் இருந்தது....

" என்ன தம்பி... முதுகுல ஏதோ பூச்சி ஊருது.. கவனிக்காம தூங்குறீங்களே " ஒரு பெரியவர் விழிப்புணரவு ஏற்படுத்தினார் ...
வெறுப்புடன் எழுந்து, படகில் உட்கார சென்ற நான் , திடுக்கிட்டு நின்றேன்....
என் கண்ணை என்னாலேயே, நம்ப முடியவில்லை... சுவாமி நித்யானந்தர் , ஒரு துணை நடிகை யுடன் , ஏதோ சுவையாக பேசி கொண்டு இருந்தார்.... சற்று முன்பே வராமல் போய் விட்டோமே , என ஏமாற்றமாக இருந்தாலும், இவர் எப்படி, போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு இங்கே வந்தார், என குழப்பமாக இருந்தது...
என் நண்பன் ஜேம்சுக்கு போன் போட்டேன்.... அவனுக்கு இது போன்ற விஷயங்களில் அனுபவம் அதிகம்... அவன் எனக்கு ஒரு ஹிந்தி நடிகை போன் நம்பர் தந்தான்....

நடிகைக்கு போன் போட்டேன்.... "சாமி என் கூட , வட இந்தியாவில் பத்திரமா இருக்கார்... இப்ப பார்க்க முடியாது " என்றார் நடிகை.... :"அவரை , சென்னையில் பர்த்து கொண்டுதான் இருக்கிறேன் " என்றேன் நான்....

"அதுதான் சாமியின் மகிமை" என்று சொல்லி லைனை கட் செய்தார் நடிகை..பணிவிடை செய்யும் அவசரம்....

நித்தி வட இந்தியாவில் இருக்கும் போது, இங்கே எப்படி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார் ..ஒரு வேலை பிரமை யோ என நினைத்தேன்.... ஆனால், அங்கு வந்து விட்ட , ஜேம்சும் அவர் நித்தி தான் என உறுதி படுத்தினான்....

ஒரு வித பரவச நிலை யோடு , ஆட்டோவில் ஏறினோம்.... வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்டதால் , அவரையும் ஏற்றி கொண்டோம்....
வீடு வந்தது..... காசு எதுவும் வேண்டாம் என்றார் ஆட்டோ ட்ரைவர்... அப்போதுதான் , டிரைவர் முகத்தை பார்த்தேன்.... அட .... அவரும் நித்தி தான்...
ஆட்டோ வேகமாக புறப்பட்டு சென்றது..... அந்த இடத்தில இறங்க வேண்டிய பெண் , இறங்காமலே சென்று விட்டதை தாமத மாகத்தான் உணர்ந்தேன்..

Thursday, March 18, 2010

வங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள் - தூள் கிளப்பும் புத்தகம்

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - புத்தக விமர்சனம்

யுத்தம் என்றாலே, அதை கவனிப்பதில் ஓர் ஆர்வம் ஏற்படும்..


யானை போரை கவனிப்பதை பற்றி வள்ளுவர் அழகாக சொல்லி இருப்பார்...

மார்கெட்டிங் யுத்தங்கள் என்ற புத்தகத்தில், இந்த துறையில் நிபுணரான எஸ்.எல்.வீ மூர்த்தி , மார்க்கெட்டிங் துறையில் நிலவும் யுத்தங்கள் பற்றி விளக்குகிறார்...

சந்தை படுத்துதல் பற்றி , பல ஆங்கில புத்தகங்கள் வந்த போதிலும், தமிழில் குறைவு தான் .... சில புத்தகங்கள் , அப்படியே ஆங்கில புத்தங்களை தழுவி எழுத பட்டு இருப்பதால், நம்மால் அதனுடன் இணைய முடிவதில்லை... சிலர், பொதுவான சில அம்சங்களை கூறுவார்கள்.... ஒரே புத்தகத்தை , மீண்டும் மீண்டும் படிப்பது போல் தோன்றும்....

இந்த புத்தகம் எப்படி இருக்கும், என்ற ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால், ( சிறிய புத்தகம்... எனவே தைரியமாக படிக்க ஆரம்பிக்கலாம் ) , ஆரம்பமே , நம்ம கோயம்பேடு மார்க்கெட்டில் இருப்பதால், களை கட்டுகிறது....
சிறிது ரிலாக்ஸ் ஆன உடன் , மார்க்கெட்டிங் யுத்தத்தில் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் என்ன என்று விவரித்து விட்டு ( என்ன என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்க) , அழகாக கியர் மாற்றி, கோயம்பேட்டில் இருந்து அமெரிக்கா செல்கிறது புத்தகம் ...

பெப்சி - கோக கோலா யுத்தம் பற்றி படிக்கும் போது, குளிர் பானத்தில், இப்படி ஒரு சூடான போரா என தோன்றுகிறது. ...

ஆனால் இதை விட , மனதை கவருவது, நம்ம ஊரில் நடந்த யுத்தங்கள் தான்... சில குளிர் பானங்கள் பிரபலம் ஆவதும், சில மறைந்து போவதும், நாம் பார்த்து இருக்கிறோம், அதற்குள் பல விஷயங்கள் இருக்கின்றன என தெரியும் போது , ஆச்சர்யமாக இருக்கிறது..
அனைத்து விஷயங்களும் புதிதாக இருப்பதால் , ஆர்வத்துடன் படிக்க முடிகிறது...
விளைவுகளை , நாமே நேரடியாக பார்த்து இருக்கிறோம் என்பதால், அதற்கான காரணம் பற்றி தெரியும் போது, நன்றாக உணர்ந்து படிக்க முடிகிறது...

அதிலும் " கிருஸ்ன " குளிர் பான தூள் , விவகாரம் படித்து ரசிக்க வேண்டிய ஒன்று...

இது போன்ற பலவேறு யுக்திகள் , யுத்தங்கள் சுவை ஆக , கூறப்பட்டு இருக்கின்றன....

ஊகிக்க முடியாத, யுக்தியை கையாண்டு யுத்த முடிவில் திருப்பு முனை ஏற்படுத்திய, " கிளீன் " சோப்பு பவுடர் யுத்தம் , நான் மிக ரசித்த ஒன்று.....

மார்க்கெட்டிங் என்றால் என்ன , என்று பாடம் நடத்துவது போல் இல்லாமல், குறுக்கு வழியில், கொடூர வழியில் , தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் தந்திரங்களையும் நூலாசிரியர் புட்டு புட்டு வைக்கிறார்....

மார்க்கெட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்று நீதி போதனை செய்யாமல், எப்படி இருக்கிறது என்று சொல்வது நூலுக்கு ஒரு நடு நிலை பார்வையை தருகிறது....

" காளான், ஆல மரம் ஆனது " " பாரதியாரின் பாஷையில் சொன்னால் , அவரது ஐடியா ஒரு அக்னி குஞ்சு ...விற்பனை காடு தீயாக பரவியது " போன்ற பல இடங்களில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது....

இவ்வளவு நல்ல புத்தகத்தில், proof reader தன பணியை சரியாக
செய்யாமல் தூங்கி விட்டது ஒரு சிறிய குறை... பல பிழைகள் .... எழுத்தின் சுவையில் , பலர் இந்த குறையை கவனிக்க மாட்டார்கள்... பார்த்தாலும், இதை ஒரு குறையாக சொல்ல மாட்டார்கள்.... ஆனால் , ஒரு எக்ஸ் prrod reader என்ற முறையில், அடுத்த பதிப்புகளில் , இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்... அனைத்திலும் கவனமாக தயாரிக்கப்பட்ட இந்த புத்தகத்தில், எழுத்து பிழை விஷயத்தில் , ஒரு அலட்சியம் தெரிவது , வருத்தமாக இருக்கிறது....

பல புத்தகங்களை படித்து விட்டு எழுதுவது என்பது ஒரு வகை.. ஆனால் படிப்புடன், தன் அனுபவத்தையும் சேர்த்து , திரு . மூர்த்தி எழுதியுள்ள இந்த புத்தகம் , தனி தன்மை வாய்ந்தது....
மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு பயன் பட போகும் நூல் என்று , இதை அறிமுக படுத்தி இருக்கிறார்கள்... அது தவறு ...
அமெரிக்க - இராக் யுத்தம் பற்றி, ராணுவ வீரர்கள் மட்டும் படிப்பதில்லை... இந்தியா - பாகிஸ்தான் கிரிகெட் யுத்தம் பற்றி, டெண்டுல்கரும், கவாஸ்கரும் மட்டும் படிப்பதில்லை... எல்லோரும் தான் படிக்கிறார்கள் ( சுவை யாக எழுதப்பட்டு இருந்தால் )
இந்த புத்தகம் , மார்க்கெட்டிங் துறையினருக்கு எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல.... அனைவரும் படிக்க வேண்டிய , நல்ல புத்தகம் இது... அதே சமயம், மார்க்கெட்டிங் துறையினர் நிறய பாடங்களை கற்று கொள்ளலாம் ....
ஒரு விஷயத்தை பற்றி நேரடியான அனுபவம் இல்லாமல் , தனது சொந்த கருத்துக்களை அள்ளி வீசும் , தமிழ் புத்தக நடையில் இருந்து மாறுபட்டு , பல சுவையான , பரவலாக வெளியே தெரியாத, புதிய சம்பவங்களை (இந்திய மற்றும் சர்வதேச தகவல்களை ) , தந்து அனுபவம் மற்றும் ஆழ்ந்த படிப்புடன் ,தொகுத்து அளித்து இருக்கும் , நூல் ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர்....
இரண்டாயிரம் பக்கத்தில் புத்தகம் அடித்து, ஆயிரம் ரூபாய் விலை வைத்து விட்டு, யாரையும் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியாமல் செய்து விட்டு, பிறகு, தமிழ் நாட்டில் , எழுத்துக்கு மதிப்பு இல்லை என பழி போடாமல், அனைவரும் படிக்க கூடிய விலையில் , படிக்க கட்டிய அளவில் புத்தகம் வெளி இட்டு இருக்கும் கிழக்கு பதிப்பகமும் பாராட்டுக்கு உரியது....

மார்க்கெட்டிங் யுத்தங்கள் ***************** சத்து மாத்திரை ( இனிப்பான )

Sunday, March 14, 2010

உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி...

உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி...

அரிந்தம் சௌத்ரி யின் இந்த புத்தகம், சுய முன்னேற்ற வகைய சார்ந்தது...

பேரார்வம், நேர்மறை சக்தி, விடாமுயற்சி, தேசபக்தி போன்ற ஒன்பது விஷயங்கள் , வாழ்வை தீர்மானிக்கின்றன என்கிறார்...
பல எடுத்துகாட்டுகள் கொடுக்கபட்டு உள்ளன.... சில முன்பே படித்தது தான்...

படித்தே தீர வேண்டிய புத்தகம் என்று சொல்ல முடியாது...


உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டு பிடி - காரம் குறைவு

Friday, March 12, 2010

இசைக்கு introdcution

கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்(ஒரு பாமரனின் பார்வையில்)

சில புத்தகங்கள் , சாப்பாடு போன்றவை... தினமும் தேவை படும்,,, சில, மரத்தடி போன்றவை... சோர்வான நேரங்களில் , ரிலாக்ஸ் செய்ய பயன் படும்... ஒரு முறை மட்டும் சுவைக்க தகுந்தவை , மறந்தும் கூட படிக்க கூடாதவை என்றெல்லாம் பல வகை புத்தகங்கள் உண்டு...

கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் , என்ற புத்தகம் எப்படி? ( எழுதி இருப்பவர் : டாக்டர் .மகாதேவன் ரமேஷ்)

பத்து நாளில் பிரெஞ்சு , ஒரு நாளில் பரத நாட்டியம் என்ற வரிசையில் , இதுவும் ஒன்றா , என்று படிக்க ஆரம்பித்தால், ஒரு சுவையான நாவல் போல , விறுவிறுப்பாக செல்கிறது..

படிப்பவர்களை,ஒரே வாரத்தில், சங்கீத மேதைகள் ஆக்கும் உத்தேசம் இல்லாமல், இசையின் அடிப்படையை , ஜாலியாக பகிர்ந்து வகையில், இதன் நடை அமைந்துள்ளது....

நுனி புல் மேயாமலும் , அதே சமயம் , ஏற்கனவே இசை தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் ,ஆராய்ச்சி கட்டுரை மாதிரி இல்லாமலும் , சரியான வகையில் , எழுதபட்டுள்ளது ...

ஸ்தாயி என்பதை விளக்கி இருக்கும் இடம் அபாரம்...

அதேபோல , வேதியியலில் இருக்கும் தனிம அட்டவணை போல் , ராக அட்டவணை இருப்பது , “அட” என ஆச்சர்யபடுத்துகிறது...

புத்தகம் முழுதும் இழையோடி இருக்கும் , நகைச்சுவை உணர்ச்சி , படிப்பதை இனிமையான அனுபவம் ஆக்குகிறது ...
மொழி பெயர்ப்பு , இயல்பாக அமைத்துள்ளது நான் பெரும்பாலும், மொழி பெயர்ப்புகளை படிப்பதில்லை... மூலத்தின் சுவை /உயிர் , மொழி பெயர்ப்பில் இருக்காது என்பது என் எண்ணம் ....

அனால் இந்த புத்தகம், அந்த எண்ணத்தை மாற்றி இருக்கிறது.... பல முறை இந்த புத்தகத்தை படித்து விட்டேன்,..தமிழ் என்பதால், வெகு வேகமாக ரிவைஸ் செய்ய முடிக்றது.... தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள், தயவு செய்து, ஆங்கிலத்தில் படிப்பதை விட, தமிழில் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் . ..

சரியான தமிழ் வார்த்தை, சரியான தமிழ் சொற்றொடர் என , வெகு அருமையாக உள்ளது...

கொச்சை நடை அல்லது கறார் நடை ( கொட்டை வடிநீர் , மட்டை அடி விளயாட்டு ) என்ற இரண்டு எல்லைகளை தவிர்த்து, சரியான முறையில் எழுதப் பட்டுள்ளது

.. மொழி பெயர்ப்பாளர் பற்றி , ஒரு வரியில் , அறிமுகம் கொடுத்து இருக்கலாம் ....

படங்கள் இடம் பெற செய்து இருக்கலாம்... கர்நாடக இசையில் அமைந்த சில பாடல்களை , ஒவ்வொரு வரியாக விளக்கி கூறி இருக்கலாம் என்று தோன்றினாலும், அது புத்தகத்தின் அளவை அதிகரித்து, படிப்பதை கடினம் ஆக்கி இருக்க கூடும் என்றும் தோன்றுகிறது

சிறிய புத்தகம் என்பதால், ரிவைஸ் செய்வது எளிதாக உள்ளது...
சில முறை படித்த பின், கலை சொற்கள் மனதில் பதிந்து விடுகின்றன... இனிமேல் , இசை பற்றிய கட்டுரையோ, புத்தகங்களோ படிக்க நேர்ந்தால், அவற்றை புரிந்து கொள்ள முடியும்....


இதை படிக்கும் எவரும், விரிவான புத்தகம் ஒன்றை படிக்கவோ அல்லது இசையை கேட்கவோ , நிச்சயம் விரும்புவார்கள்... இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி...
இதே அணி , இரண்டாம் பாகம் , விரிவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்...
மொத்தத்தில், இந்த புத்தகம் , இசையை இனிமையாக அறிமுகம் செய்து வைக்கிறது....
மீண்டும் மீண்டும் படித்து, மனதில், நன்றாக உள்வாங்கி கொள்ள வேண்டிய புத்தகம் .(அதற்கு ஏற்றார் போல், எளிமையாக அமைக்கபட்டுள்ளது )

வெறும் பொழுது போக்குக்காகவும் படிக்கலாம் ....
இசைபற்றி தெரிந்து கொள்ளவும் படிக்கலாம் ......

கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் ******* இனிய அறிமுகம்


வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

நித்யானந்தரும், அறிவு ஜீவிகளும்

சொல்பவர் முக்கியமில்லை...அவர் என்ன சொல்கிறார் என்பதை மட்டும், எந்த முன் அனுமானங்களும் இல்லாமல் கவனியுங்கள் .... உங்கள் மேல் அதிகாரம் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள் ...

இதெல்லாம் ஜே.கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகள்....

உலகிலேயே , தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர் அவர்தான் என் தோன்றுகிறது....

கடவுள் இல்லை என நம்புபவர்களும் , கடவுள் இருப்பதாக நம்புபவர்களும் , அவர் கருத்துக்களை தமக்கு ஏற்ற வகையில் புரிந்து கொள்கிறார்கள்...

இது ஒரு புறம் இருக்க, நித்யானந்தரை கடவுள் அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் , இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்தவுடன் , தூற்றுவது , உலகம் என்றும் மாறாது என்பதை உணர்த்துகிறது...

அவரிடம் நல்ல விஷயங்கள் கற்று கொண்டு இருந்திருகலாம் ... அவர் உங்கள் நோயை குண படுத்தி இருக்கலாம். அதற்காக அவரை கடவுள் என்று கொண்டாடி இருக்கவும் தேவை இல்லை... இப்படி தூற்றவும் தேவை இல்லை...
ஊருக்கெல்லாம் அறிவுரை சொல்லும் அறிவு ஜீவிகளும் கூட இப்படி நடந்து கொள்வது, வேடிக்கையாக இருக்கிறது

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா