மார்க்கெட்டிங் யுத்தங்கள் - புத்தக விமர்சனம்
யுத்தம் என்றாலே, அதை கவனிப்பதில் ஓர் ஆர்வம் ஏற்படும்..
யானை போரை கவனிப்பதை பற்றி வள்ளுவர் அழகாக சொல்லி இருப்பார்...
மார்கெட்டிங் யுத்தங்கள் என்ற புத்தகத்தில், இந்த துறையில் நிபுணரான எஸ்.எல்.வீ மூர்த்தி , மார்க்கெட்டிங் துறையில் நிலவும் யுத்தங்கள் பற்றி விளக்குகிறார்...
சந்தை படுத்துதல் பற்றி , பல ஆங்கில புத்தகங்கள் வந்த போதிலும், தமிழில் குறைவு தான் .... சில புத்தகங்கள் , அப்படியே ஆங்கில புத்தங்களை தழுவி எழுத பட்டு இருப்பதால், நம்மால் அதனுடன் இணைய முடிவதில்லை... சிலர், பொதுவான சில அம்சங்களை கூறுவார்கள்.... ஒரே புத்தகத்தை , மீண்டும் மீண்டும் படிப்பது போல் தோன்றும்....
இந்த புத்தகம் எப்படி இருக்கும், என்ற ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால், ( சிறிய புத்தகம்... எனவே தைரியமாக படிக்க ஆரம்பிக்கலாம் ) , ஆரம்பமே , நம்ம கோயம்பேடு மார்க்கெட்டில் இருப்பதால், களை கட்டுகிறது....
சிறிது ரிலாக்ஸ் ஆன உடன் , மார்க்கெட்டிங் யுத்தத்தில் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் என்ன என்று விவரித்து விட்டு ( என்ன என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்க) , அழகாக கியர் மாற்றி, கோயம்பேட்டில் இருந்து அமெரிக்கா செல்கிறது புத்தகம் ...
பெப்சி - கோக கோலா யுத்தம் பற்றி படிக்கும் போது, குளிர் பானத்தில், இப்படி ஒரு சூடான போரா என தோன்றுகிறது. ...
ஆனால் இதை விட , மனதை கவருவது, நம்ம ஊரில் நடந்த யுத்தங்கள் தான்... சில குளிர் பானங்கள் பிரபலம் ஆவதும், சில மறைந்து போவதும், நாம் பார்த்து இருக்கிறோம், அதற்குள் பல விஷயங்கள் இருக்கின்றன என தெரியும் போது , ஆச்சர்யமாக இருக்கிறது..
அனைத்து விஷயங்களும் புதிதாக இருப்பதால் , ஆர்வத்துடன் படிக்க முடிகிறது...
விளைவுகளை , நாமே நேரடியாக பார்த்து இருக்கிறோம் என்பதால், அதற்கான காரணம் பற்றி தெரியும் போது, நன்றாக உணர்ந்து படிக்க முடிகிறது...
அதிலும் " கிருஸ்ன " குளிர் பான தூள் , விவகாரம் படித்து ரசிக்க வேண்டிய ஒன்று...
இது போன்ற பலவேறு யுக்திகள் , யுத்தங்கள் சுவை ஆக , கூறப்பட்டு இருக்கின்றன....
ஊகிக்க முடியாத, யுக்தியை கையாண்டு யுத்த முடிவில் திருப்பு முனை ஏற்படுத்திய, " கிளீன் " சோப்பு பவுடர் யுத்தம் , நான் மிக ரசித்த ஒன்று.....
மார்க்கெட்டிங் என்றால் என்ன , என்று பாடம் நடத்துவது போல் இல்லாமல், குறுக்கு வழியில், கொடூர வழியில் , தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் தந்திரங்களையும் நூலாசிரியர் புட்டு புட்டு வைக்கிறார்....
மார்க்கெட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்று நீதி போதனை செய்யாமல், எப்படி இருக்கிறது என்று சொல்வது நூலுக்கு ஒரு நடு நிலை பார்வையை தருகிறது....
" காளான், ஆல மரம் ஆனது " " பாரதியாரின் பாஷையில் சொன்னால் , அவரது ஐடியா ஒரு அக்னி குஞ்சு ...விற்பனை காடு தீயாக பரவியது " போன்ற பல இடங்களில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது....
இவ்வளவு நல்ல புத்தகத்தில், proof reader தன பணியை சரியாக
செய்யாமல் தூங்கி விட்டது ஒரு சிறிய குறை... பல பிழைகள் .... எழுத்தின் சுவையில் , பலர் இந்த குறையை கவனிக்க மாட்டார்கள்... பார்த்தாலும், இதை ஒரு குறையாக சொல்ல மாட்டார்கள்.... ஆனால் , ஒரு எக்ஸ் prrod reader என்ற முறையில், அடுத்த பதிப்புகளில் , இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்... அனைத்திலும் கவனமாக தயாரிக்கப்பட்ட இந்த புத்தகத்தில், எழுத்து பிழை விஷயத்தில் , ஒரு அலட்சியம் தெரிவது , வருத்தமாக இருக்கிறது....
பல புத்தகங்களை படித்து விட்டு எழுதுவது என்பது ஒரு வகை.. ஆனால் படிப்புடன், தன் அனுபவத்தையும் சேர்த்து , திரு . மூர்த்தி எழுதியுள்ள இந்த புத்தகம் , தனி தன்மை வாய்ந்தது....
மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு பயன் பட போகும் நூல் என்று , இதை அறிமுக படுத்தி இருக்கிறார்கள்... அது தவறு ...
அமெரிக்க - இராக் யுத்தம் பற்றி, ராணுவ வீரர்கள் மட்டும் படிப்பதில்லை... இந்தியா - பாகிஸ்தான் கிரிகெட் யுத்தம் பற்றி, டெண்டுல்கரும், கவாஸ்கரும் மட்டும் படிப்பதில்லை... எல்லோரும் தான் படிக்கிறார்கள் ( சுவை யாக எழுதப்பட்டு இருந்தால் )
இந்த புத்தகம் , மார்க்கெட்டிங் துறையினருக்கு எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல.... அனைவரும் படிக்க வேண்டிய , நல்ல புத்தகம் இது... அதே சமயம், மார்க்கெட்டிங் துறையினர் நிறய பாடங்களை கற்று கொள்ளலாம் ....
ஒரு விஷயத்தை பற்றி நேரடியான அனுபவம் இல்லாமல் , தனது சொந்த கருத்துக்களை அள்ளி வீசும் , தமிழ் புத்தக நடையில் இருந்து மாறுபட்டு , பல சுவையான , பரவலாக வெளியே தெரியாத, புதிய சம்பவங்களை (இந்திய மற்றும் சர்வதேச தகவல்களை ) , தந்து அனுபவம் மற்றும் ஆழ்ந்த படிப்புடன் ,தொகுத்து அளித்து இருக்கும் , நூல் ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர்....
இரண்டாயிரம் பக்கத்தில் புத்தகம் அடித்து, ஆயிரம் ரூபாய் விலை வைத்து விட்டு, யாரையும் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியாமல் செய்து விட்டு, பிறகு, தமிழ் நாட்டில் , எழுத்துக்கு மதிப்பு இல்லை என பழி போடாமல், அனைவரும் படிக்க கூடிய விலையில் , படிக்க கட்டிய அளவில் புத்தகம் வெளி இட்டு இருக்கும் கிழக்கு பதிப்பகமும் பாராட்டுக்கு உரியது....
மார்க்கெட்டிங் யுத்தங்கள் ***************** சத்து மாத்திரை ( இனிப்பான )
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
March
(16)
- பெரியார் குஷ்பூ சோ
- மலர மறந்த மொட்டுக்கள்
- எல்லா புகழும் இறைவனுக்கா?
- ஒண்ணரை வாரத்தில் கன்னடம் கற்று கொள்வது எப்படி ?ஒர...
- ஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆகும் கார்...வியப...
- ஆண் உடலில் , ஒரு பெண்
- இணைய தமிழை , இழிவு செய்யும் தினமணி
- என் கன்னத்தில் " பளார் " விட்ட எழுத்தாளர் வண்ணநிலவன்
- இதிலுமா இப்படி???
- ஆண்களின் வீக் பாயிண்ட்
- வடிவேலு, ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள்
- மெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா
- வங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள...
- உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி...
- இசைக்கு introdcution
- நித்யானந்தரும், அறிவு ஜீவிகளும்
-
▼
March
(16)
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]