Saturday, March 20, 2010

வடிவேலு, ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள்

"மாயி அண்ணே வந்திருக்கஹ ..நம்ம சொந்தகாரங்க எல்லாம் வந்து இருக்காஹ.. "

வடிவேலு : அதான் , எல்லாம் வந்து இருக்காஹ ல... அப்புறம் ஏன், ஹ ஹ நு கூவிக்கிட்டு இருக்க..பொண்ண வர சொல்லுய்யா

மின்னல் ஜோக் எதனை முறை பார்த்தாலும் சிரிப்பு வரும்... அதை விட அதிகமாக , நமது ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள் காமெடி செய்கிறார்கள்...

பகுத்தறிவு நண்பர்கள் , கடவுள் இல்லை என்று தான் , திட்ட வட்டமாக கண்டு பிடித்து விட்டர்களே... இன்னும் ஏன், ஒரு இல்லாத விஷயத்தை பற்றி..ஹ ஹ நு கூவி கொண்டு இருக்கிறார்கள் என புரியவில்லை....

தனி மனித பிரச்னை , சமுதாய பிரச்னை எவ்வளவோ இருக்கின்றதே...

ஆன்மீகநண்பர்கள், கடவுள் இருப்பதை பார்த்து விட்டார்கள் அல்லவா? பிறகு ஏன், கடவுளை பற்றி எழுதி , நேர்டஹை வீண் அடிக்கிறார்கள்....

கடவுள் என ஒருவர் இருந்தால், அவர் எல்லாம் தெரிந்தவ்ரகதான் , இருக்க முடியும்,.,,, இவர்கள் தயவு , அவருக்கு எதற்கு?

ஆகா, இரு சாராருமே, கடவுளை மறந்தால், கடவுளை மாற, மனிதனை நினை என்று சொன்ன பெரியாரும் மகிழ்வார்...

கடவுள் என ஒருவர் இருந்தால் , அவரும் மகிழ்வார் ....

5 comments:

  1. பரிமள ராசன்.March 20, 2010 at 5:59 AM

    வணக்கம் தோழர்,கடவுள் இல்லை இல்லை என்று கூறுவது கடவுளுக்காக அல்ல.அது கடவுள் என்று கல்லையும்,கடவுள்தன்மையுடையவன் என்று காமுகர்களையும்,காமுக,கொலைகார பார்ப்பனர்களையும் இனியும் நம்பாதீர்கள் என்று என் இன மக்களுக்கு இழிவை துடையுங்கள் என்பதற்காக சொல்லுவது.இந்தகடவுள் நம்பிக்கை(மூடநம்பிக்கை),சாமியாரின் மீது நம்பிக்கை(சாமியார் என்றாலே போலிதான்,இதில் போலிசாமியார் எல்லாம் இல்லை)இருக்கும்வரை கடவுள் மறுப்பு பரப்புரை அவசியமான ஒன்று.

    ReplyDelete
  2. தங்கள் கருத்தை தலை வணங்கி ஏற்கிறேன், தோழர் பரிமள ராசன்....
    நான் சொல்வது, கடவுள் பிரச்சினையை தவிர மற்ற பிரச்சினையும் உள்ளனவே.... கடவுள் மறுப்பு என்பது, மற்றவற்றை மறக்க செய்ய கூடாது அல்லவா

    இன்னொன்று... எதுவும் அறியாத ஒரு சிறுவனிடம், தண்ணி அடிக்காதே,,,, தண்ணி அடிக்காதே என தினமும் சொல்லி வந்தால் , அவனுக்கு தண்ணி மேல் ஒரு ஆர்வம் ஏற்பட தொடங்கும்...
    அது போல், இல்லாத ஒரு விஷயத்தை பற்றி தொடர்ந்து பேசினால், அதன் மேல் ஈர்ப்பு ஏற்பட தொடங்க வாய்ப்பு இருக்குறதே....
    மற்ற படி, உங்கள் நோக்கம் உயர்ந்தது என்பதை ஏற்கிறேன்.....

    ReplyDelete
  3. ////
    வணக்கம் தோழர்,கடவுள் இல்லை இல்லை என்று கூறுவது கடவுளுக்காக அல்ல.அது கடவுள் என்று கல்லையும்,கடவுள்தன்மையுடையவன் என்று காமுகர்களையும்,காமுக,கொலைகார பார்ப்பனர்களையும் இனியும் நம்பாதீர்கள் என்று என் இன மக்களுக்கு இழிவை துடையுங்கள் என்பதற்காக சொல்லுவது.இந்தகடவுள் நம்பிக்கை(மூடநம்பிக்கை),சாமியாரின் மீது நம்பிக்கை(சாமியார் என்றாலே போலிதான்,இதில் போலிசாமியார் எல்லாம் இல்லை)இருக்கும்வரை கடவுள் மறுப்பு பரப்புரை அவசியமான ஒன்று.

    ///

    இதுவே என் கருத்து

    ReplyDelete
  4. எல்லோரும் கடவுள் மறுப்பை மட்டுமே பிடித்து தொங்குவதில்லை

    உங்கள் கருத்தும் சரி

    ////
    இன்னொன்று... எதுவும் அறியாத ஒரு சிறுவனிடம், தண்ணி அடிக்காதே,,,, தண்ணி அடிக்காதே என தினமும் சொல்லி வந்தால் , அவனுக்கு தண்ணி மேல் ஒரு ஆர்வம் ஏற்பட தொடங்கும்...
    ///

    எங்க வீட்டுல தண்ணி அடிப்பவன் அயோக்கியன் முட்டாள் என் சொல்லி வளர்த்தார்கள்

    இது சரிதானே??

    ReplyDelete
  5. ""எங்க வீட்டுல தண்ணி அடிப்பவன் அயோக்கியன் முட்டாள் என் சொல்லி வளர்த்தார்கள்""

    எங்க வீட்லயும் அப்படித்தான் சொல்லி வளர்த்தார்கள்.... அதனால் , அதன் மேல் ஈர்ப்பு ஏறபட்டது...
    ஹி ஹி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா