Pages
▼
Monday, March 29, 2010
எல்லா புகழும் இறைவனுக்கா?
இசை புயல் ரகுமான், விருது பெரும் போது, எல்லா புகழும் இறைவனுக்கே, என சொல்லும் பொது, அட,, திமிர் இல்லாமல் பேசுகிறாரே..என்ன எளிமை என வியக்கிறோம்..
சுப்பர் ஸ்டார் ரஜினி வெற்றி பெரும் போது, எல்லாம் கடவுள் செயல் என்று சொன்னால், அவர் தன்னடக்கம் நம்மை வியக்க வைக்கிறது...
அதே போல் சிலர், தன்னம்பிக்கை , பாசிடிவ் திங்கிங் இருந்தால் , வெற்றி பேரல்லாம் என சொல்லும் போது, நம் மக்கள் கஷ்ட படுவதற்கு காரணம், தன்னம்பிக்கை இல்லாதது தான் , என நினைக்றோம்...
கிளாடவேல் எழுதியுள்ள outliers என்ற புத்தகம், நம் மனதை சற்று அசைத்து பார்கிறது....
நீ ஜெயித்தால், அதற்கு நீ மட்டும் காரணம் இல்லை... உனக்கு முன்னாள், பலர் கஷ்டப்பட்டு உண்டாக்கி வாய்த்த சமூக சூழலும் ஒரு காரணம் என்கிறர் இவர்...
உதாரணமாக , இன்று ஆன்மீகம் பேசும் பலர், பெரியார் போன்ற தலைவர்கள், சாதியை எதித்து போராடி இருக்க விட்டால், இன்று ஆன்மீகம் பேசும் அளவுக்கு படித்து இருக்க முடியாது...
அதேபோல, ஆன்மீக துறையில், அரசியலில், பலர் போராடி இருக்கலாம்...
அதை எல்லாம் மறந்து விட்டு, இறைவன்தான் எல்லாம் கொடுத்தார், என்று சொல்வது, சற்று பொருத்தம் இல்லாதது போல தோன்றுகிறது...
இடது சாரி அமைப்பினர், எதாவது போராட்டம் நடத்தினால், ஏன் இடைஞ்சல் செய்கிறார்கள் என எரிச்சல் ஏற்படுகிறது... அனால் இது போன்ற போராட்ங்கள் நமக்கு மறைமுகமாக நன்மை செய்கிறது என்பதை நாம் உணர்வதில்லை....
சமீபத்தில் திருச்சியில் , சென்னை செல்ல ஒரு பேருந்தில் அமர்ந்து இருந்தேன்... கொளுத்தும் வெய்யில்... சினிமா, ஷாபிங் போன்ற , அந்த வயதுக்கு உரிய வேலைகளை விட்டு விட்டு, ஒரு இளம் பெண், ( தோழர் என்று சொல்ல வேண்டுமோ ?? ) ஒரு சமுதாய விழிபுன்ரவு பத்திரிகையை கையில் வைத்த படி, சில விழிப்புணர்வு கருத்துக்களை கூறினார்... இவரை போன்றவர்களால் தான் , சமுதாய மாற்றம் ஏற்படுகிறதே தவிர, அறிவு ஜீவிகளாலோ, ஆன்மீக வாதிகளாலோ அல்ல. ..
அதே போல, ஒருவர் கஷ்டபடுகிறார் என்றால், அதற்கு காரணம் , தன்னம்பிக்கை இல்லாதது, உழைப்பு இல்லாதது என்பது மட்டும் அல்ல....
இளைய ராஜாவுக்கும் , மணி ரத்னதுக்கும் பிரச்சினை ஏற்படாவிட்டால், ஒரு ரகுமான் வந்து இருக்க முடியாது , என்பதும் ஒரு உண்மையே...
ஆக, எல்லா புகழும் இறைவனுக்கே என்பது ஒரு மாயை...
எல்லா புகழும் , நமக்காக உழைப்பவருக்கே, நமக்கு உழைபவருகே.. இந்த உணர்வு இருந்தால், கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரும் மகிழ்வார் என தோன்றுகிறது
அதெல்லாம் ஒப்புக்கு சொல்றதுங்க... ரகுமான் ரெண்டாவது தடவை பரிசு பெற்றப்போ, "எல்லாப் புகழும் மீண்டும் இறைவனுக்கே" அப்படின்னு சொன்னார்: இங்கே யாரை இறைவன்னு சொல்றார்? அவரும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் கூடினவருதான்னு நினைக்கிறேன்: அவங்க தன்னடக்கத்துக்காக சொன்னதை நம்பி நாம மோசம் போயிடக் கூடாது...
ReplyDeleteகடின உழைப்பு, தன்னம்பிக்கை மட்டும் வெற்றிக்கு போதாது நு நினைக்றேன்.... ஜெயிச்சவங்க, அப்படி நினைக்கலாம்...
ReplyDeleteநான் அந்த சாமியை கும்பிட்டதால் ஜெயிச்சேன்... என் உழைப்பல , என் தன்னம்பிக்கையால ஜெயிச்சேன்...
இது எல்லாம் கொஞ்சம் தான் உண்மை... பலர் உழைப்பு, பலர் நல்ல எண்ணம் இதெல்லாம் ஒரு வெற்றிக்கு பின் இருக்கு...
ஆனா, வெற்றி போதையில அது தெரிவதில்லை ..
இதை ஆராய்ந்து எழுதிய புத்தகம் தான், outliers
அதைக் கொஞ்சம் ஆராய்ஞ்சு எழுதினா நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்குவோமில்ல?
ReplyDeleteஅதுக்கும் பதிலு, "யோவ்! புக்கை வாங்கிப் படி"ன்னு சொல்லாதீங்கண்ணொவ்!
அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் , தல...
ReplyDeleteஅப்பா கூடிய சீக்கிரம் "Outliers" குறித்த ஒரு விரிவுப் பார்வை வரும்னு சொல்லுங்க.
ReplyDeleteதமிழ் கூறும் நல்லுலகம் அதை எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கு, மறுத்துராதீங்க!
கண்டிப்பா வரும்...
ReplyDelete> அதுக்கு முன்னாடி , கொஞ்சம் இதை யோசிச்சு வைங்க...
>
> அந்த சாமிய கும்பிட்டேன்.. பெரிய ஆள் ஆயிட்டேன் நு > சிலர் பேட்டி > கொடுக்குறாங்க... எல்லா புகழும் இறைவனுக்கே > அப்படீன்னு > தன்னடக்கத்தோட பேட்டி > கொடுக்றங்க ...
> அப்படீன, அதே சாமிய > கும்புட்ற பலர் ஏன் > கஷ்ட படறாங்க ..
>
> சாமி எல்லாம் > சும்மா... > தன்னம்பிக்கை, > பாசிடிவ் திங்கிங் > இருந்தா, வானத்தை
> தொடலாம், அப்படீநு > சிலர் பாடம் > நடத்துறாங்க.. > இன்னிக்கு அதுவே ஒரு
> மதம் ஆகி போச்சு....
> அப்படி பார்த்தா, நம்ம > ஊர்ல கஷ்ட படர ஏழைங்க > எல்லாம், தன்னம்பிக்கை
> , உழைப்பு, இதெல்லாம் > இல்லாமாதான் , கஷ்ட > படறாங்கள?
>
> உண்மையில் வெற்றி > எப்படி அடயபடுது? > வெற்றியாலர்லின் பொது
> தன்மை என்ன?
>
> அந்த பொது தனமை எல்லாராலும் அடைய > முடியும்... ஆனா, அதில்
> பல நடை முறை சிக்கல் இருக்கு.... அது என்ன?
இதெல்லாம் நம்ம > அன்றாட வாழ்வுக்கு > எப்படி உதவும்...
யோசிச்சு வைங்க...
அருமையான அறிமுகம்.
ReplyDeleteஇது குறித்த ஆழ்ந்த விரிவுரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
jing jing
ReplyDelete