கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம்(ஒரு பாமரனின் பார்வையில்)
சில புத்தகங்கள் , சாப்பாடு போன்றவை... தினமும் தேவை படும்,,, சில, மரத்தடி போன்றவை... சோர்வான நேரங்களில் , ரிலாக்ஸ் செய்ய பயன் படும்... ஒரு முறை மட்டும் சுவைக்க தகுந்தவை , மறந்தும் கூட படிக்க கூடாதவை என்றெல்லாம் பல வகை புத்தகங்கள் உண்டு...
கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் , என்ற புத்தகம் எப்படி? ( எழுதி இருப்பவர் : டாக்டர் .மகாதேவன் ரமேஷ்)
பத்து நாளில் பிரெஞ்சு , ஒரு நாளில் பரத நாட்டியம் என்ற வரிசையில் , இதுவும் ஒன்றா , என்று படிக்க ஆரம்பித்தால், ஒரு சுவையான நாவல் போல , விறுவிறுப்பாக செல்கிறது..
படிப்பவர்களை,ஒரே வாரத்தில், சங்கீத மேதைகள் ஆக்கும் உத்தேசம் இல்லாமல், இசையின் அடிப்படையை , ஜாலியாக பகிர்ந்து வகையில், இதன் நடை அமைந்துள்ளது....
நுனி புல் மேயாமலும் , அதே சமயம் , ஏற்கனவே இசை தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் ,ஆராய்ச்சி கட்டுரை மாதிரி இல்லாமலும் , சரியான வகையில் , எழுதபட்டுள்ளது ...
ஸ்தாயி என்பதை விளக்கி இருக்கும் இடம் அபாரம்...
அதேபோல , வேதியியலில் இருக்கும் தனிம அட்டவணை போல் , ராக அட்டவணை இருப்பது , “அட” என ஆச்சர்யபடுத்துகிறது...
புத்தகம் முழுதும் இழையோடி இருக்கும் , நகைச்சுவை உணர்ச்சி , படிப்பதை இனிமையான அனுபவம் ஆக்குகிறது ...
மொழி பெயர்ப்பு , இயல்பாக அமைத்துள்ளது நான் பெரும்பாலும், மொழி பெயர்ப்புகளை படிப்பதில்லை... மூலத்தின் சுவை /உயிர் , மொழி பெயர்ப்பில் இருக்காது என்பது என் எண்ணம் ....
அனால் இந்த புத்தகம், அந்த எண்ணத்தை மாற்றி இருக்கிறது.... பல முறை இந்த புத்தகத்தை படித்து விட்டேன்,..தமிழ் என்பதால், வெகு வேகமாக ரிவைஸ் செய்ய முடிக்றது.... தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள், தயவு செய்து, ஆங்கிலத்தில் படிப்பதை விட, தமிழில் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம் . ..
சரியான தமிழ் வார்த்தை, சரியான தமிழ் சொற்றொடர் என , வெகு அருமையாக உள்ளது...
கொச்சை நடை அல்லது கறார் நடை ( கொட்டை வடிநீர் , மட்டை அடி விளயாட்டு ) என்ற இரண்டு எல்லைகளை தவிர்த்து, சரியான முறையில் எழுதப் பட்டுள்ளது
.. மொழி பெயர்ப்பாளர் பற்றி , ஒரு வரியில் , அறிமுகம் கொடுத்து இருக்கலாம் ....
படங்கள் இடம் பெற செய்து இருக்கலாம்... கர்நாடக இசையில் அமைந்த சில பாடல்களை , ஒவ்வொரு வரியாக விளக்கி கூறி இருக்கலாம் என்று தோன்றினாலும், அது புத்தகத்தின் அளவை அதிகரித்து, படிப்பதை கடினம் ஆக்கி இருக்க கூடும் என்றும் தோன்றுகிறது
சிறிய புத்தகம் என்பதால், ரிவைஸ் செய்வது எளிதாக உள்ளது...
சில முறை படித்த பின், கலை சொற்கள் மனதில் பதிந்து விடுகின்றன... இனிமேல் , இசை பற்றிய கட்டுரையோ, புத்தகங்களோ படிக்க நேர்ந்தால், அவற்றை புரிந்து கொள்ள முடியும்....
இதை படிக்கும் எவரும், விரிவான புத்தகம் ஒன்றை படிக்கவோ அல்லது இசையை கேட்கவோ , நிச்சயம் விரும்புவார்கள்... இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி...
இதே அணி , இரண்டாம் பாகம் , விரிவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்...
மொத்தத்தில், இந்த புத்தகம் , இசையை இனிமையாக அறிமுகம் செய்து வைக்கிறது....
மீண்டும் மீண்டும் படித்து, மனதில், நன்றாக உள்வாங்கி கொள்ள வேண்டிய புத்தகம் .(அதற்கு ஏற்றார் போல், எளிமையாக அமைக்கபட்டுள்ளது )
வெறும் பொழுது போக்குக்காகவும் படிக்கலாம் ....
இசைபற்றி தெரிந்து கொள்ளவும் படிக்கலாம் ......
கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் ******* இனிய அறிமுகம்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
இது இப்புத்தகத்துக்கு வந்த முதல் விமர்சனம். நன்றிகள்! இது உங்களுக்கு உபயோகமாக இருந்ததில் மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteநன்றி
கிரிதரன் ராஜகோபாலன்
http://beyondwords.typepad.com