Pages

Wednesday, April 7, 2010

AR ரகுமான் நன்றி மறந்தாரா? outliers அலசல்




எல்லா புகழும் இறைவனுக்கே.... ar ரகுமான் ( நான் மற்றவர்களை விட பெரிய இடம் அடைய , இறைவன்தான் காரணம் )
தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் , வானையும் வளைக்கலாம்- வைரமுத்து
( நான் பாடல் ஆசிரியர் ஆனதுக்கு காரணம் , என் தனம்பிக்கை , என் உழயுப்பு, என் திறமை )
சில மொக்கை பதிவராக, மொக்கை புத்தகம் வெளியிட்டு , தமிழ் தாயை இழிவு படுத்தி விட்டனர் _ பதவி உயர்வு பெற்ற சில பதிவர்கள் ( நாங்கள் எழுதுவதுதான் நல்ல எழுத்து ..அதன் காரணமாகத்தான் எங்களுக்கு எழுது துறையில் பதவி உயர்வு கிடைத்துள்ளது)

புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனை ஆவது , தன்னம்பிக்கையும் ஆன்மீகமும்தான்- செய்தி ( கடவுளும், தன்னம்பிக்கையும் தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன )

**********************************************************

பெரிய மனிதர்களின் வாழ்கை வரலாறை படித்தால், எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதை காணலாம்... இளமையில் தும்பம், தன்னமிக்கயுடன் உழைப்பு, பின் வெற்றி..( சிலருக்கு கடவுளோ அல்லது மகானோ உதவி இருப்பார்கள் )

படிக்கும் பொது நமக்கு ஒரு கேள்வி வரும்... அதே கடவுளை நம்பும் பலர் . கஷ்டபடுவது ஏன்.... தன்னம்பிக்கை , திறமை உழஈபு எல்லாம் கொண்ட சில விவசாயிகள் சாப்பாடுக்கு கூட கஷ்டப்பட்டு தற்கொலை செய்வது ஏன்.... அவர்களிடம் பொய், கனவு கான் ..இந்திய வல்லரசு ஆகி விட்டது என சொல்ல முடியுமா....

இதற்கெல்லாம் பதில் தருகிறது OUTLIERS .....

மால்கம் கிளாட்வெல் நன்கு ஆராய்ந்து தெளிவாக எழுதி உள்ளார்...

வெற்றிக்கு காரணம் , உழைப்பு, தனம்பிக்கை , திறமை மட்டும் அல்ல , என பல ஆதாரங்களை காட்டி விளக்கி ஆச்சர்ய படுத்திகிறார்....

நாம் பிறக்கும் மாதம் கூட நமது வெற்றியில் பங்கு வகிக்கிறது என அவர் சொல்லும் போது , ஜோசியம் போல தோன்றுகிறது... அனால், அது எப்படி என விளையாட்டு அணியை காட்டி விளக்கும்போது, அவர் பார்வை வியக்க வைகிறது...

பிறந்த ஆண்டு, நமது குடும்ப சூழ்நிலை , வரலாற்று காரணங்கள் என பல விஷயங்கள் நமது வெற்றியை நிர்ணயிகின்றன....
பில் கேட்ஸ் சாதித்தார் என்றால், சிறு வயதில் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைத்தன... அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்ததால்தான் அது சாத்தியம் ஆனது... அவர் பிறந்த கால கட்டமும் சாதகமாக அமைந்த்தது.... ஒரு இருபது வருடம் முன்பு பிறந்து இருந்தால் , கதை வேறு..

அனால், அவர் வெற்றிக்கு காரணம் என்ன அவரிடம் கேட்டல் என்ன சொல்வார்? எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் என்றா சொல்லுவார் ?
தன்னம்பிக்கை , உழைப்பு என்றுதான் சொல்லுவார்...

இன்னொரு உதாரணம்... நீங்கள் பெரிய வேலை ஒன்றுக்கு வினபித்து இருக்கிறிர்கள்.... நிறுவனத்தில் இருந்து நியமன உத்தரவு வருகிறது... அதை வாங்கிய, கல்வி அறிவு இல்லாத உங்கள் தாயார் அது என்ன என்று தெரியாமல், உங்களிடம் சொல்ல மறந்து விடுகிர்ரர்... உங்கள் வாழ்கை அதனால் திசை மாறி விடும் அல்லவா...

அவர் புத்தகத்தில் இதை சொல்லவில்லை.. இதை விட பயங்கரமான உதாரணங்களை தருகிறார்...
சரியான வாய்ப்பு இல்லாமல் , நாம் இழந்த மேதைகள் , அறிவாளிகள் பலர் உள்ளனர்... அறிவை விட, சந்தர்ப்பங்கள் தான் நம்மை உருவாக்கின்றன...

நெல்லை கிராமத்தில் பிறந்த ஒரு ஏழை சிறுவன், சமூகத்துடன் கொள்ளும் தொடர்புக்கும், நகரத்தில், பிறந்த ஒரு சிறுவன் சமொகத்துடன் கொள்ளும் தொடர்புக்கும் வேறு பாடு இருக்கும் ..அது அவர்கள் வாழ்க்கையை வேறு வேறு திசையில் செலுத்தும்...

இவ்வளவு எழதும் ஆசிரியர், தான் ஒரு நல்ல நிலை அடைய, வரலாற்றும் காரணங்கள் , முன்பு பலர் செய்த தியாகங்கள் தாம் காரணம் என நன்றியுடன் சொல்வது நம்மை நெகிழ வைக்கிறது.. நம்மில் எதனை பேர் இப்படி இருக்கிரோம்ம்...
தனிப்பட்ட சிலர் செய்த உதவியையும் அவர் குறப்பிட தவறவில்லை..

these were histories gifts to my family- and if it had been extended to others , how many more would now live a life of fulfilment , in a beatiful house high on a hill?
என்று அவர் முடிக்கும் போது லேசாக கண்கள் கலங்குவது போல் இருக்கிறது...

மணிரதனதிற்கும் இளைய ராஜாவுக்கும் பிரச்சினை வராவிட்டால், ரகுமானுக்கு ரோஜா வாய்ப்பு கிடைத்தி இருக்குமா... அதனால்தானே அவர் இந்தியா முழுதும் அறிமுகம் ஆனார்...?
மணி இல்லாவிட்டாலும், வேறு படத்தில் அறிமுகம் ஆகி இருக்க கூடும்... ஆனால் ரோஜாவில் கிடைத்த பரவலான அறிமுகம் கிடைத்து இருக்குமா... ? அப்போது ஏற்பட்டு இருந்த, மின் அணு புரட்சியும், இசை துறைக்கு சாதகமாக இருந்தது என்பதை மறக்க கூடாது....
ரகுமானின் தந்தை இசை துறையில் இருந்ததும், ஒரு advatage .. சிறு வயதில் இருந்தே , இசையில் தயார் ஆக இது பயன் பட்டது ..இந்த வாய்ப்பு பலருக்கு கிடைக்காது

ஆனால் அவர் இதை எல்லாம் ஒப்பு கொள்ள மாட்டார்... அதே சமயம் , அவர் தன்னக்கம் மிக்கவர் என்பாதால், என் உழைப்புதான் என் முன்னேற்றத்திற்கு காரணம் என சொல்லாமல் , இறைவன்தான் காரணம் என்கிறார்....

பலரும் இதே பாணியில் நடந்து கொள்ள காரணம் , அவர்கள் நன்றி மறந்தவர்கள் என்பது அல்ல....
இதை எல்லாம் ஆராய நேரம் இல்லாதவர்கள் என்பதுதான் காரணம்...

நம் வெற்றிக்கு, பலரும் மறைமுகமாக உதவி இருக்கலாம்..அதே போல நம்மை விட கில்லாடிகளும் , வாய்ப்பு இல்லாமல் , கஷ்டபட்டுகொண்டு இருக்கலாம்...

ஒரு சின்ன உதாரணம்... நீங்கள் ஒரு மீட்டிங் செல்கிறீர்கள்... வாகனம் பழுதாகி விட்டது... யாரோ ஒருவர் தா வண்டியில் உங்களை கூடி வந்து விடுகிறார்... சிறுது நேரத்தில் அவர் முகம் மறந்து விடும்... கடவுள்தான் , எனை கொண்டு வந்து சேர்த்தார் என சொல்லலாம்..என் positive மெண்டல் attitute தான் கொண்டு வந்து சேர்த்தது என் சொல்லலாம்...
ஆனால் இந்த புத்தகம் படித்தவுடன் அப்படி இருக்க மாட்டிர்கள்....

7 comments:

  1. உபயோகமான பதிவு- இருந்தாலும் ஒரு கேள்வி:

    வெற்றிக்கு காரணம் , உழைப்பு, தனம்பிக்கை , திறமை, பிறந்த ஆண்டு, நமது குடும்ப சூழ்நிலை , வரலாற்று காரணங்கள்...என்று பல காரணங்கள் இருப்பதாக உங்கள் உரையைப் படித்தவுடன் தோன்றுகிறது- இதில் சில நம் கட்டுப்பாட்டில் உள்ளன, சில நம் கையில் இல்லை.

    இந்தப் புத்தகத்தை "எப்படி ஜெயித்தார்கள்?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா அல்லது, "எதனால் ஜெயிக்க முடிந்தது?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா?

    நன்றி- இதுபோல் இன்னும் பல சிறப்பான பதிவுகள் இட வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பிறக்கும் மாதம் கூட வெற்றியை தீர்மானிக்கறது என்கிறார் இவர்.. ஆடியில பிறக்க கூடாது,,, கார்திகைய்ள பிறந்தா நல்லது என்றெல்லாம் நம் ஊரில் சொல்வார்களே ..கிட்டத்தட்ட அது போல... ஆனால் அவர் ஆய்வு அடிப்படையில் சொல்கிறார்.ஜோசிய அடிப்படையில் அல்ல..

    உங்கள் கேள்வி நல்ல கேள்வி சார்... ஒரு பிரபல வார இதழில், ஒரு தவறாக இந்த புத்தகத்தை அணுகி இருந்தார்கள்... மற்ற தன்னம்பிக்கை புத்தக வரிசையில், இதையும் சேர்ப்பது போல இருந்தது... " மற்றவர்களை விட அதிகம் உழைத்தால் , முன்னேறலாம் என புத்தகம் சொல்கிறது..நீங்களும் தினம் உழையுங்கள்.,, பில் கேட்ஸ் ஆகி விடலாம்..உன்னால் முடியும் தம்பி " என " உற்சாக " படுத்தி இருந்தது...

    சிந்தி..பணக்காரன் ஆகு என்ற புத்தகம், பல லட்சம் விற்பனை ஆனது,.,,, அதனால் பல லட்சம் பணக்காரர்கள் உண்டாகி விட்டார்களா என்ன ?

    நம் வெற்றியில் பலருக்கு பங்கு இருக்கிறது,,, ஆனால் நாம் அதை ஒப்பு கொள்வதில்லை என்பதுதான் புத்தகத்தின் செய்தி...

    பெரிய வெற்றி பெற்றவர்கள் என்று அல்ல... அன்றாட வாழ்விலும் நாம் இப்படித்தான் நடந்து கொள்கிறோம் என்பது , சற்று யோசித்தால் புரியும்...

    எப்படி வெற்றி பெற்றார் என ஒருவரை மட்டும் ஆராய்ந்து , அவரை ஹீரோ ஆக்காமல் , வெற்றி என்பதையே ஆராய்ந்து இருப்பதுதான் இதன்

    ReplyDelete
  3. " எப்படி ஜெயித்தார்கள்?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா அல்லது, "எதனால் ஜெயிக்க முடிந்தது?" என்ற கேள்வியுடன் அணுகுவது சரியாக இருக்குமா? "

    நல்ல கேள்வி சார் ..

    எப்படி ஜெயிப்பது என்று பல தன்னம்பிக்கை புத்தகங்கள் வருது இல்லையா... அந்த கேள்வியுடன் , இதை படிக்க கூடாது சார் . வெற்றினா என்ன என்ற கேள்வியுடன் படித்தால், படித்து முடித்தவுடன், ஜெயிச்சவர்கள் எல்லாம் நம்மை விட கில்லாடிகளும் இல்லை... தோத்தவன் எல்லாம், நம்மை விட முட்டாள்கள் இல்லை என்பது தெரியும் சார்... ..

    பெரியோரை வியத்தலும் இலமே .. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - நம்ம மக்கள் அப்பவே சொல்லிடாங்க..

    ஆனால், இந்த புத்தகம் மற்ற எந்த தன்னம்பிக்கை புத்தகங்களை விட, நமக்கு ரொம்ப உதவும்... குடும்பத்துல... வேலை செய்ற இடத்துல... என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆசை... ஆனா , ரொம்ப மொக்கை போட விரும்பல...

    ReplyDelete
  4. உங்க பின்னூட்டத்துக்கு இணையா என்னால எழுத முடியல. காரணம் நான் இன்னும் அந்த புத்தகத்தைப் படிக்கல.
    இருந்தாலும் இந்த புத்தகத்துல இருந்து சொல்வதற்கான விஷயங்கள் உங்களிடம் நிறைய இருக்கு என்று நினைக்கிறேன்.
    அவகாசப்படும்போது, நேரம் காலம் சந்தர்ப்பம் சரியா அமைந்து வரும்போது, இது காட்டிய பாடங்களை பகிர்ந்துக்குவீங்கன்னு எதிபார்க்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. கண்டிப்பா படிங்க, சார்... தன்னம்பிக்கை , உழைப்பு இருந்தால் , யார் வேண்டுமமனாலும், சிகரத்தை தொடலாம் என சொல்லும் , ஊக்க மாத்திரை புத்தகம் அல்ல இது..

    அதே சமயம், உழைக்காம சும்மா இருந்த போதும்,,, வாய்ப்பு, நேரம் , காலம் வந்தால், நீயும் பெரிய ஆள் ஆயிடலாம்... என்றும் சொல்லவில்லை...

    ஒரு நடுநிலை பார்வையை தருகிறது , இந்த புத்தகம்...

    ReplyDelete
  6. ""பில் கேட்ஸ் சாதித்தார் என்றால், சிறு வயதில் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைத்தன... அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்ததால்தான் அது சாத்தியம் ஆனது... அவர் பிறந்த கால கட்டமும் சாதகமாக அமைந்த்தது.... ஒரு இருபது வருடம் முன்பு பிறந்து இருந்தால் , கதை வேறு..""

    ஹா ஹா !!! படு முட்டாள்தனமான சிந்தனைகள்... வரலாறுகளை மாற்றி யோசிப்பது அபத்தமானது... அவை நமக்கு வழிகாட்டிகள்

    நண்பர்களே,, கடவுள் தான் எல்லாம்,, கடவுளை மீறி எதுவும் நடக்காது.... ஏதாவது விபத்து, நோய் என நமக்கும் வரும்போது மனிதனை மீறிய ஒரு சக்தி இருப்பது நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி !!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]