
( i saw statement of Mr. Vaiko in newspaper... this made me to write this..otherwise, this incident would not have been shared )
தேசிய நெடுஞ்சாலையில் , நண்பர்களுடன் பயணித்துக் கொண்டு இருந்தேன்... உற்சாகமாக பேசிக்கொண்டு , அதி வேகமான பயணம்.. நல்ல சாலை..
எங்களை முந்திக்கொண்டு கொண்டு ஒரு சிவப்பு கார் சென்றது.... ஒரு இளைன்ஞர் ஒட்டி செல்ல, ஒரு பெண்ணும் , குழந்தையும் பின் சீட்டில் இருந்தனர்... ( மிக குறைவான நேரம் கவனித்தால், விரிவாக சொல்ல முடியவில்லை)
சிறுது தூரத்தில் , சாலை அடைக்கப்பட்டு இருந்தது... இடது, வலது என்பதை பிரிக்கும் தடுப்பு சுவர் உடைக்கப்படு இருந்ததால், அதன் வழியாக , நாங்கள் வால்;எ புற சாலைக்கு வந்து, பயணத்தை தொடர்ந்தோம்,.,,, wrong ரூட் என்பதால் சற்று மெதுவாக சென்றோம்... மீண்டும் ஒரு இடத்தில, தடுப்பு சுவர் உடைக்க பட்டு இருந்தது . அதன் வழியாக , சரியான ரூட் , இட புற சாலை அடைந்து, பயணத்தை தொடர்த்ந்தோம்... பத்து நிமிடம் நிறுத்தி, ரிலாக்ஸ் செய்த பின் பயணம் தொட்ரந்தது....
சற்று தூரத்தில் , சாலையின் வல புறத்தில், ஏதோ விபத்து.... பார்த்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி...
எங்களை முந்தி சென்ற சிவப்பு காரும் , பேருந்தும் நேருக்கு நேர் மோதல்... அந்த கார் ஓட்டுனர், மீண்டும் இடது புறம் திரும்பும் , பாதையை கவனிக்காததால், வலது புறமே சென்று இருக்கிறார்...
பாவம்... அவர் சரியாக செல்வதாகத்தான் எண்ணி இருப்பார்... எந்த ஒரு அறிவ்வு பலகையும் சாலையில் இல்லை....
கடைசி வினாடி கூட, " நாம் சரியாதானே செல்கிறோம், ஏன் அந்த பேருந்து இப்படி வருகிறது ? " என்றுதான் நினைத்து இருப்பார்
நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்தும் காரும் மோதினால் என்ன ஆகும்...?
சற்று முன் பார்த்த கார் , இப்படி ஒரு விபத்தை சந்தித்த பார்த்தவுடன், எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை, சோகத்தை எழுத்தில் கொண்டு வர முடியவில்லை.... ( புகை படம் எடுக்க என் மனம் என்னை அனுமதிக்கவில்லை... )
ஒரு அறிவிப்பு பலகை , சரியான மாற்று சாலை இன்மை- இதனால், உயிர்கள் பலி....
விபத்துகள் ஏன் ஏற்படுகின்றன என அறிவியல் முறை படி ஆராய்ந்து, விபத்துக்களை தடுக்க வேண்டும்..
திரு வைகோ, ecr சாலை விபத்துக்கள் பற்றியும் , தடுப்பது குறித்தும் இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்...
வரவேற்க வேண்டிய அணுகுமுறை...
பெரும்பாலான விபத்துக்கள் , சாலை சரி இல்லாததால் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது...
ஆதங்கம் மிகுந்த நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
பகிர்ந்து கொண்டது, என் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு...
ReplyDeleteதேவையே இல்லாமல் உயிர்கள் பலியானது ஜீரணிக்க முடியல...
புரிதலுக்கு நன்றி நண்பரே