Saturday, April 17, 2010

தகுதி இல்லாத என் பதிவு




கும்மிடிபூண்டியில் பதிவர் சந்திப்பு- முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்


கும்மிடிபூண்டி யில் இருந்து சென்னை வந்து கொண்டு இருந்தேன்,,, நல்ல வெயில்.... குளிர் பானம் அருந்த , கடையை தேடியவாறு, முன்னேறிக்கொண்டு இருந்தேன்..

வழியில் ஒரு டாஸ்மாக் என்னை கொஞ்சம் கவனி என்று அழைத்தது... சரி..என பரிதாபப்பட்டு நுழைந்தேன்....

சீசன் டைம் என்பதால், கிங் பிஷர் உள்ளிட்ட எந்த பிராண்டும் இல்லை... புதிதாக ஏதோ ஒன்றை காட்டினார்கள்... பரவிய்ல்லை சார்..நல்லா இருக்கும் என்று சிபாரிசு செய்தனர் பக்கத்தில் இருந்த இரு வாடிக்கையாளர்கள்...

சிட் டிஷ் போன்றவை வாங்கிவீடு பார்த்தால், சில்லறை பிரச்னை... மூன்று ரூபாய் கொடுத்து உதவினார்னக் அவர்கள்... அவர்களை அபோதுதான் முதன் முறையா பார்கிறேன்.... ஆனாலும் உதவுய்கிறாக்கள் என்ற நட்புணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தேன்...

அதில் ஒருவர் , வலை பதிவு எல்லாம் படிக்கிறார் என அறிந்தேன் ..எப்போதாவது பின்னூட்டம் இடுவாராம்...

அப்படி பார்த்தால் , அது ஒரு வலை பதிவர் சந்திப்பா என நினைத்து கொண்டேன்... நெடுஞ்சாலையில், லேசான போதையில் வண்டி ஓட்டுவது போன்ற சுகம் வேறு எதிலும் இல்லை என்று அந்த சந்திப்பில் தீர்மானம் நிறைவேற்றி சபை கலைந்தது..
ஒரு முறை அப்படி இலேசாக தண்ணி அடித்து விட்டு ஒட்டி பாருங்கள்... அதை வார்த்தைகளால் விளக்க முடியாது....
****************************************

இதை பதிவேற்றம் செய்வதற்குள் திடுக்கிடும் திருப்பம்... நானும் , இன்னொரு நண்பரும், இரவு நேரம், திருமழிசை யில் இருந்து ஆவடி சென்று கொண்டு இருந்தோம்,,இருவரும் சற்று அதிகாமான போதையில் இருந்தோம்....

அவன் ஓட்டினான்,,, எதிரே ஒரு பள்ளம்... அவன் திரும்பி ஏதோ பேசினான்,,, அவன் பள்ளத்தை கவனித்து விட்டன என நான் நினைத்தேன்..இல்லை... அதில், விழுந்து இருவருகுக் லேசான அடி..வேகம் குறைவு, வேறு வாகனங்கள் இல்லை என்பது எங்களை சிறிய காயத்துடன் காப்பற்றியது....

***************************

தண்ணி அடிப்பது தவறல்ல... அனால், தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்று அறிவுரை கூற எனக்கு வயதில்லை..தகுதி இல்லை... ஆனாலும் சொல்கிறேன்... வேண்டாம் இந்த பழக்கம்..

**(*****

இதை படித்து ஒருவராவது திருந்த வேண்டும் அல்லவா..ஆம் ஒருவர் திருந்தி விட்டார்..இனி அவர் குடித்து விட்டு வண்டி ஓட்ட மாட்டார்..*
***********
அவர் நான் தான் ...

பதிவேற்றம் செய்யாத அந்த பதிவு, பதிவேற்றம் செய்ய தகுதி அட்ட்றது என்பதை இயற்கை அல்லது இறை எனக்கு உணர்த்தியது , நான் மறக்க முடியாத இயற்கையின் லீலை

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா