

செய்தியும் , சிந்தனையும்
யார் யாருக்கோ பதி பக்தி இல்லை என ஜெயலலிதா அம்மையார் பேசுகிறாரே....!! எம் ஜி யார் உடல் நலம் குன்றியள நிலையில், இவர் பதி பக்தியுடன் நடந்து கொண்டாரா ? கணவன் உடல் நலம் குன்றினால், உடல் நலம் மேம்பட , மனைவி பிரார்த்தனை செய்வாள்... உடல் நலம் பெற போராடுவாள்.... அனால் அம்மயார், எம் ஜி ஆருக்கு எதிராக ராஜீவுக்கு கடிதம் எழுதினார்.. இதுவா பதி பக்தி - மாண்பு மிகு முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேச்சு
புரட்சி தலைவியும், புரட்சி தலைவரும் திருமனம் ஆகி குடும்பம் நடத்தினார்கள? சொல்லவே இல்லை??!!!
கார் ஒன்று நிலை தடுமாறி, மின் கம்பத்தின் மீது மோதியது... பார்த்தவர்கள் பதறினர்.. தீ பிடிக்க போகிறது என பயந்தனர்..அனால் அப்போது மின்சாரம் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்..
தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு , வாழ்த்துக்கள்...
மிருகவதை தடை சட்டத்தால், மிருகங்களை வைத்து படம் எடுக்க முடியவில்லை.. ராம நாராயணன் வருத்தம்..
குழந்ந்தை வதை தடை சட்டம் இல்லை... அவர்களை கொடுமை படுத்தி படம் எடுங்கள்..தடை இல்லை...
*****************************************
இன்றைய சிந்தனை
" கடவுளுக்கு பிடித்தது எது ""
" பிரார்த்தனை... "
" பிடிக்காதது ? "
" மற்ற மனிதர்களை வார்த்தைகளால் , செய்கையால் துன்புறுத்துவது "
" கடவுளை தூற்றுவது தான் , கடவளுக்கு பிடிக்காது என்றல்லவா நான் நினைத்தேன் "
" கடவுளை தூற்றினாலும் கூட, அவரரிடம் எப்போது வேண்டுமாலும் மன்னிப்பு கேட்டு கொள்ளலாம்... அவர் எங்கும் இருப்பவர்.. ஆனால், ஒரு மனிதனை காயபடுத்தி விட்டால், மன்னிப்பு கேட்பது கடினம்.. நாளை அவன் எங்கு இருக்கிறான், நாம் எங்கு இருப்போம் என யாருக்கும் தெரியாது..மீண்டும் சந்திப்போமா என்பதும்தெரியாது"
நல்ல விசயம். பயனுள்ள பகிர்வு.
ReplyDelete