என்னதான் நல்ல கருத்துக்களை சொன்னாலும், மதம் என்ற விஷயம், நமக்கு நன்மையை விட தீமைகளைத்தான் தந்து இருக்கிறது என்பது வரலாறு... மதத்தில் தவறில்லை, அதை பின்பற்றுபவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என சமாதானம் சொன்னாலும், மத கலவரங்கள், கொலைகள் என்பதெல்லாம் கண் முன் தெர்யும் சாட்சியங்கள்..
மதம் ,ஆன்மீகம் என்பது தவறு .. ஆனால் , , ஒரு இயக்கம், ஒரு கட்சி ஒரு சித்தந்தம் நல்லது செய்யும் என்பது வேறு சிலரின் முடிவு... இதி சரியா என்று அலசுகிறார் , ஜே கிருஷ்ண முர்த்தி ...
******************************************
செய்தி தாள்களிலும் , பத்திரிகைகளிலும் ( தற்போது பதிவிகளிலும் :-) ) அரசியல் செய்திகள் தாம் அதிக இடம் பிடிக்கின்றன.. வெளி சூழ்நிலைதான் நம் வாழ்வை தீர்மானிப்பதாக தோன்றுகிறது..
பதவி, கொடி போன்றவை முக்கியம் ஆகி, வாழ்க்கை என்பதை பின்னுக்கு தள்ளி விட்டன..
ஒரு இயக்கம , கட்சி அல்லது சமுக சீர்திருத்த நடவடிக்களில் ஈடுபட்டு நம்மை மறப்பது, வாழ்க்கை என்பதை புரிந்து கொள்வதை விட எளிது...
நம் அன்றாட வாழ்வின் வெறுமையில் இருந்து - ஆன்மிகம் அல்லது சமுக நடவடிக்கையில் ஈடுபட்டு- கௌரவமாக தப்பித்து செல்கிறோம்...
நம் இதயம் சிறிதாக இருந்தாலும், உலக அரசியல், உலக புரட்சி , ஆன்மிக புரட்சி என்றெல்லாம் பேச முடியும்...
நமது அமைதி அற்ற மனம், எதாவது ஒரு சித்தந்தில் ஈடுபடுவதன் மூலம் அமைதி அடிகிறது ( ஆத்திகன், நாத்திகன், வலது சாரி, இடது சாரி , கட்சிகள் :-) )
நாம் எப்படி இருகிறோம அதுதான் சமுதாயம் ஆகிறது... நாம் சமுதாயத்தை மாற்றி அமைப்பதன் மூலம் மாற்றம் கொண்டு வர நினைக்கிறோம்...
ஒரு விளைவுக்கான காரணம் என்ன என்பதை மறந்து, விளைவுகளை பற்றி மட்டுமே நாம் யோசிக்கிறோம்..
ஆன்மிகமோ, பொருளாதார சித்தாதங்களோ, இயக்கங்களோ ஒரு போதும் நம் வாழ்வை மாற்றி அமைக்காது...
இதெல்லாம் வெறும் பொழுது போக்குதான்...
ஆழமான , முழுமையான விழிப்புணர்வுதான், வாழ்வின் அழகை நமக்கு உணர்த்தும்...
( ஒவ்வொரு மனிதனும், நல்லவனாக மாறி விட்டால், ஒட்டு மொத்த சமுதாயமே நல்ல சமுதாயம் ஆகி விடும் அல்லவா.. நாம் ஒரு கொள்கையை , சித்தந்ததை வைத்து கொண்டு மற்றவர் திருந்த வேண்டும் என்று எதிர் பார்ப்பது அபத்தம்,.,, ஏனென்றால், அவர் நாம் திருந்த வேண்டும் என எதிர் பார்க்கிறார்
"ஆழமான , முழுமையான விழிப்புணர்வுதான், வாழ்வின் அழகை நமக்கு உணர்த்தும்..."
ReplyDeleteஎப்ப காசு வாங்கிட்டு ஒட்டுபோடவும், சாமியார்கள் பின்னாடி திரியவும்
ஆரம்பிச்சாச்சோ இனி அவ்வளவுதான் .......
சூப்பரா சொன்னிங்க பாஸ்..
ReplyDeleteசாமியார் பின்னாடி திரியறதும், சீர்திருத்த கோஷ்டிகள் பின்னால திரியிறதும் ஒண்ணுதான் என்பதை, ஒரே வரில சொல்லி முடிசுட்டிங்க...