
அந்த குழந்தைக்கு பசி...
அழுது கொண்டு இருந்தது...
உணவூட்ட யாரும் இல்லை....
சாமி சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர் சிலர்...
இந்த பாலை, குழந்தைக்கு கொடுத்திருக்கலாமே...
என்ன மோசமான சமுதாயம்.....
வேதனை பட்டார் கடவுள் மறுப்பாளர்....
புது பட ரிலீஸ்...
கதனாயனுக்கு பால் அபிசேகம் செய்தனர் ரசிகர்...
அடடா..இதை குழந்தைக்கு கொடுத்து இருக்கலாமே...
என்ன மோசமான சமுதாயம்
வேதனை பட்டனர் ஆன்மீக வாதிகள்....
ஆடமபர காரில் வந்து இறங்கினார், கடவுள் மறுப்பு தலிவர்...
குழந்தை பசியால் துடிக்கும் போது கார் சவாரியா..
மோசமான சமுதாயம் ...
கொதித்தனர் ரசிகர் மன்றத்தினர்....
நடுத்தர வர்க்கம் , சமுதாய பார்வை இல்லாமல்
சுயநலமாக இருக்கிறது...
முதலாளிகளை திட்டி அலுத்து போன இடது சாரிகள் அங்கலாய்க்க,
வெட்டி பேச்சு பேசாமல் , இவர்கள் உழைத்தால்
குழந்தை பசி தீரும் ...சமுதாய பார்வை இல்லாதவர்கள்
என்றது நடுத்தர வர்க்கம்
சமுதாயம் என்ன என்றால் என்ன என்று புரியாமல்,
குழந்தை இன்னும் அழுகிறது..
உணவூட்ட யாரும் இல்லை...
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]