
சொல்லும் விதத்தில் சொன்னால் , உலகம் உங்கள் பேச்சை கேட்கும் என்கிறார் வள்ளுவர்...
ஒரு உதாரணம் பார்க்கலாம்...
நான் குடிகாரன் அல்ல... அவ்வப்போது சுவை பார்ப்பவன்... அதை பெரிய தவறாக நினைத்து இல்லை... உடல் நலம் கெடும் என சிலர் சொன்னதை அறிவு ஏற்றது.. ஆனாலும் , எப்போதவதுதானே என்று சமாதனம் செய்து கொள்வேன்...
ஆனாலும், சக பதிவரின் பதிவு ஒன்று என்னை கொஞ்சம் மிரட்டி விட்டது... பாவம் , புண்ணியம் என்றெல்லாம் பேசாமலும். உடல் நல கெடுதி என பொதுப்படையாக பேசாமலும், குடித்தால் என உறுப்பு கெடும் என படம் போட்டு விளக்கியது சற்று பயம் ஏற்படுத்தியது....
விளையாட்டுக்கு கூட குடிக்க கூடாது என முடிவு எடுத்தேன்..
இந்நிலையில், சென்ற வாரம் ஒரு திருமண நிகழ்ச்சி... முடிந்ததும் வழக்கம் போல உ பா விருந்து.... மற்றவர் மனதை புண் படுத்த வேண்டாம் - நமக்காக இல்லை,,, அவர்களுக்காக ஜோதியில் கலக்கலாம் என நினைத்தாலும், ஒரு மன சித்திரம் , என்னை தடுத்து... அந்த மனசித்திரம் தான் பதிவின் நோக்கம்,,,
உடல் உறுப்பை குடி பாதிக்கும் என பதிவர் எழுதினர் அல்லவா? அந்த உறுப்பை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்...
கல்லீரல் சொல்வது போல அமைந்துள்ளது
" அதும் பேரு கணயம் உங்களை எப்போவாவது பெரிய நாய் ஏதாவது தொரத்தி இருக்குதா. இல்லைனா அடுத்த தடவை தொரத்தும் போது பாருங்க. அதோட நாக்கு மாதிரி தான் அழகா இருப்பா என் தங்கச்சி. குட்டியா 85gm எடையில இருந்தாலும் ஒரு நாளைக்கு 900 gm இன்சுலின் உற்பத்தி செய்வா. அவள் வேலை செய்றதில்ல ஏதாவது தடங்கல் வந்தா அவ்வளவு தான் உங்களுக்கு சர்க்கரை வியாதி தான் "
அந்த நாக்கு வர்ணனை என் மனதில் சித்திரமாக பதிந்து விட்டது.... ( மற்ற அறிவியல் விளக்கங்கள் நினைவு இல்லை ...)
இவ்வளவு அழகான உறுப்பை, நாசம் செய்வது தவறல்லவா என்றுதான் முதலில் தோன்றியது... உடல் நலம் கெடும் எனப்தெல்லாம் பிறகுதான் தோன்றியது....
ஆகா, அந்த தினத்தில் குடியை தவிர்த்தேன்,,, ஆகவே நீங்களும் குடிக்காதீர்கள் என்று சொல்வதற்கு அல்ல இந்த பதிவு ( குடிக்காவிட்டால் நல்லது என்பது வேறு விஷயம் )
ஒரு விஷயத்தை எப்படி சொல்கிறோம்.,... யாரிடம் சொல்கிறோம் என்பது முக்கியம்...
மக்களில் சில வகை...
உணர்வு பூர்வமானவர்கள் : எனக்கு ஏனோ தவறா தோணுது... சரி இல்ல்லைன்னு உணரிகிற்றேன் என்பது போல பேசுபவர்கள்...
எதையும் உணர்வு பூர்வமாக அணுகுபவர்கள் இவர்கள்...
இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேசினால், நம் கருத்தை அவர்களிடம் கொண்டு செல்வது எளிது...
சப்தரீதியானவர்கள் : அதுதான் சரின்னு உள்ளே பட்சி சொல்லுது.... உள்ளே மணி அடிக்குது என்பது போல பேசுபவர்கள்...
இது போன்ற வார்த்தைகளை இவர்களிடம் பயன் படுத்த வேண்டும்...
காட்சி பூர்வமானவர்கள் : மன சித்திரங்களாக சிந்திப்பவர்கள்;... நான் இந்த வகையை சென்ர்த்வன் என்பதால்தான் , அந்த நாய் நாக்கு , என் நாக்கை அடக்க முடிந்தது...
என் எல் பீ என்ற முறைதான்,.இப்படி மனிதர்களை பிரிக்கிறது.. இதை பற்றி விரிவான பதிவு , விரைவில் .....
அருமை நன்பரே
ReplyDeleteதங்களின் பயத்தை பகிர்ந்துகொண்டதற்க்கு நன்றி
என் எல் பி ஆங்கிலத்தில் கூறுக
நன்றி பார்வையாளன். நல்ல விஷயத்தை எடுத்து சொன்னதற்கு இந்த நன்றி. வாயிலிருந்து வார்த்தை வெளியே வந்து விட்டாலே அது பேசியவனுக்கு சொந்தமில்லை. பொதுச் சொத்து. நன்றி.
ReplyDeleteInteresting post. :-)
ReplyDelete" என் எல் பி ஆங்கிலத்தில் கூறுக "
ReplyDeleteNeuro-linguistic programming (NLP)
Chitra said... "Interesting post. :-)
ReplyDeletethank u so much