Thursday, May 20, 2010
அயன்ராண்டும் , ஜேம்ஸ் ஆலனும்- பதிவர் Matangi Mawley யின் சுவையான பார்வை
ஜேம்ஸ் ஆலனின் சிறந்த கட்டுரை ஒன்றை சென்ற பதிவில் பகிர்ந்து கொண்டு இருந்தேன். அதில் சொல்லபட்ட கருத்தை சற்று வித்தியாசமாக அணுகி , பதிவர் " Matangi Mawley " பின்னுட்டம் இட்டு இருந்தார். அவரது பார்வை அருமையாக இருந்தாலும், ஆங்கில எழுத்துகளை பயன் படுத்தி பதிவுடு இருந்ததால், வேகமாக படிக்க முடியவில்லை.. சிந்தனையை தூண்டும் அவரது பார்வை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நான் நினைப்பதால், அதை தமிழ் எழுத்துக்களில் தனி பதிவாக இடுகிறேன்.
*****************************************************************************************
கீழே அவரது கருத்து.. அதற்கும் கீழே எனது கருத்து
*****************************************************************
James allaen says "அறிவாளி என தன்னை கருதும் ஒருவன், தன அறிவை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை.. எனவே இதை யாருக்கும் தர மாட்டேன் என சொன்னால், அவனுக்கு உண்மையில் அறிவு இல்லை என பொருள்.. அப்படியே அவன் அறிவாளியாக இருந்தாலும் கூட, அதை அவன்இழப்பான்"
Matangi Mawley says
இது ஒரு நல்ல பதிவு. இதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எனக்கு இதை பிடித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
1930 களிலும் 40 களிலும் , அயன் ராண்ட் என்ற மிக சிறந்த எழுத்தாளரின் சிந்தனைகள் , ஒரு பெரும் புரட்சியை தூண்டியது. இன்றும் கூட அந்த தாக்கம் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கவனித்தது உண்டு. என் நண்பர்களில் பலர், இவரது புத்தகத்தை படித்து விட்டு, அதே போல வாழ வேண்டும் என மாறி விடுவார்கள்.
இதில் என்ன சிக்கல் என்றால், அயன் ராண்டின் கருத்துக்கள் அப்படியே எடுத்து கொள்ள வேண்டியவை அல்ல. இந்த உலகம் உன் அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு அதை கொடுத்து உன் அறிவின் மேன்மையை குறைத்து கொள்ளாதே, என்ற கருத்து அவரது. - அதாவது உங்கள் பதிவின் ( ஜேம்ஸ் ஆலனின் ) கருத்துக்கு மாறானது.
எனக்கு ராண்ட் என்றால் உயிர். அவரது வரிகளில் மூழ்கி போன காலம் உண்டு. அனால் அதில் எவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் , எதை விட வேண்டும் என்று புரிந்து கொண்டு விட்டேன்.
எனவே உங்கள் பதிவை படிக்கையில், எனது " tranformation " எனக்கு நினைவில் வந்தது.
*******************************************************************************************
"அனால் அதில் எவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் , எதை விட வேண்டும் என்று புரிந்து கொண்டு விட்டேன்."
வெகு அருமை . இந்த பக்குவம் இல்லாததுதான், இன்று நாம் காணும் பல பிரச்சினைகளுக்கும் காரணம். ஒருவரை முழுவதும் எதிர்ப்பது அல்லது முழுது ஆதரிப்பது என்ற எல்லையில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. எதை ஏற்பது என்ற பக்குவம் இருந்தால், ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு புத்தகமும் நமக்கு பயன்மிக்கதாகத்தான் இருக்கும்.
" இந்த உலகம் உன் அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு அதை கொடுத்து உன் அறிவின் மேன்மையை குறைத்து கொள்ளாதே, என்ற கருத்து அவரது. - அதாவது உங்கள் பதிவின் ( ஜேம்ஸ் ஆலனின் ) கருத்துக்கு மாறானது."
அயன் ராண்டின் கருத்து ஓரளவுக்கு உண்மைதான். புரிந்து கொள்ளாதவர்களுக்கு நல்ல விஷயகள் சொல்லியும் பயனில்லையே. கடை விரித்தேன் , கொள்ளவர் இல்லை என வள்ளலார் நொந்து பொய் சொன்னார். பன்றிகளிடம் முத்துக்களை விற்காதே என இயேசுவும் சொன்னார். எனவே, அயன் ராண்ட் சொல்வது சரியானது போலத்தான் தோன்றுகிறது.
"எனவே உங்கள் பதிவை படிக்கையில், எனது " tranformation " எனக்கு நினைவில் வந்தது"
" tranformation " - மிக சரியான வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறார் பதிவர். consistensy is not a virtue என ஜே கிருஷ்ணமுர்த்தி சொன்னது நினைவு வருகிறது.
நிறைய சிந்திக்க வைத்தது அந்த பின்னூட்டம். ஒரு தனி பதிவை , பின்னூட்டமாக தந்ததற்கு நன்றி Matangi Mawley
"
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
May
(14)
- பேசும் பேய்கள்
- பெர்பெக்ட் மர்டர்
- அயன்ராண்டும் , ஜேம்ஸ் ஆலனும்- பதிவர் Matangi Mawl...
- விவசாயியிடம் ஒரு பாடம்
- கனவு "பலி" க்குமா ? - Not a "yellow" magazine story
- என் நாக்கை அடக்கிய நாய் நாக்கு - என் எல் பீ ஓர் அ...
- ஒரு செக்ஸ் கதை - ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )
- பக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்த...
- ரஜினியை ஏமாற்றிய இயக்குனர்
- உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும...
- ஏப்ரலில், என்னை கவர்ந்த டாப் பைவ் புத்தகங்கள்
- To Kill A Mockingbird - தயவு செய்து இது போல தமிழி...
- சார், என் குரு மத்த சாமியார்கள் மாதிரி இல்லை ...ஜே...
- குஷ்பூ வுக்கு நீதி கிடைத்தது... தமிழ் பெண்களுக்கு ...
-
▼
May
(14)
பதிவில் உள்ள வார்த்தைகள் நம் சிந்தனையை எந்த அளவிற்கு தூண்டியதோ இல்லையோ நல்லா இருக்கு என்று மட்டும் சொல்லாமல் தன் மன வெளிபாட்டை சரியாக வெளிபடுத்தி பின்னூட்டம் போட்ட மாதங்கி மிகவும் பாராட்டுக்கு உரியவர் என்றாலும் ஒரு பின்னூட்டத்தை தமிழில் மாற்றி ஒரு பதிவாகவே வெளிஇட்ட நீங்கள் இன்னும் அதிக பாராட்டுக்கு உரியவர் ஆகிவிட்டீர். என்னையும் அந்த பதிவை படிக்க தூண்டிவிட்டீர். இருவருக்கும் நன்றி. நல்ல சிந்தனை.
ReplyDelete:) .. en comment-ai rasiththatharku nanri!
ReplyDeleteJames allaen says "அறிவாளி என தன்னை கருதும் ஒருவன், தன அறிவை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை.. எனவே இதை யாருக்கும் தர மாட்டேன் என சொன்னால், அவனுக்கு உண்மையில் அறிவு இல்லை என பொருள்.. அப்படியே அவன் அறிவாளியாக இருந்தாலும் கூட, அதை அவன்இழப்பான்"
ReplyDelete.... correct!
Best wishes to Matangi Mawley!
சித்ரா மேடம். நீங்க ஜேம்ஸ் ஆலன் சொன்னதை ஆதரிக்கிரீங்களா ? அயன் ராண்ட் சொன்னதையா ?
ReplyDelete