
" எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்குப்பா "
நடுங்கி கொண்டே , ரத்த வெள்ளத்தில் கிடந்த நாயை பார்த்தாள் மஞ்சுளா..
லாரியில் நாய் அடிபடுவது சர்வ சாதாரணம்.. ஆனால், இந்த சம்பவத்தை அப்படி எடுத்து கொள்ள அவளால் முடியவில்லை.. என்னாலும்....
"கொஞ்ச நாளா என் கனவுகள் அப்படியே பலிக்குது... எங்கப்பா, கால் அடிபடும் நு சொன்னேன்.. அப்படியே ஆச்சு... பல்லாவரத்துல விபத்து கனவு வந்துச்சு... பலிசுச்சு..அவ்வளவு ஏன்.. சுறா படத்துல விஜய் போட்டு வர்ற டிரஸ் கூட கனவுல வந்தது.. சொன்னா யாரும் நம்பள... அதான், நாய் கனவை நிருபிக்க உங்களை கூட்டி வந்தேன் ..நீங்களே பாருங்க "
அவளது அழகு முகம் வியர்த்து இருந்தது .. " பாருடா செல்லம்... அடுத்த வாரம் நம்ம கல்யாணம் ..கண்டதை நினைத்து குழம்பாதே... ஒரு நிமிடத்துக்கு லட்சம் எண்ணங்கள் நம் மனதில் உதிக்கிறது.. இதுதான் கனவா வருது.. ஒரு லட்சத்துல, ஏதோ ஒன்னு தற்செயலா ஒத்து போகும்/... மிச்சம், 99 ,999 பலிக்காது.. இதுதான் உண்மை என்றேன் "
" எப்படி வேணா இருக்கட்டும்... ஆனா நாளைக்கு நான் கண்ட கனவு பலிக்க கூடாது... தேனாம்பேட்டை ல விபத்து நடந்து ஒரு பொண்ணு சாகர மாதிரி என் கனவு "
" எந்த இடம்... பொண்ணோட அடையாளம ? "
" ஜெமினி மேம்பாலம் எரதக்கு முன்னாடி- அண்ணா சாலை- அந்த பொண்ணு மஞ்சள் ஆடை உடுத்தி இருந்தா... மதியம் ஒண்ணுல இருந்து இறந்து மணிக்குள் ..ப்ளிஸ் ப... அவளை காப்பத்தனும் "
**************************************
அவள் சொன்னது பைத்தியகார தனமாக இருந்தது... ஆனாலும் காதலி.. எதாவது செய்து அவளை அசத்த நினைத்தேன்...
" சார், மதியன் ஒண்ணுல இருந்து ரெண்டு வரை, மஞ்சள் டிரஸ் போட்டுட்டு யாரும் ஜெமினி முதல், அறிவாலயம் வரை போக கூடாது... கதீட்ரல் ரோடு வழியாவோ, தி நகர் வழியவோ போகட்டும்... முக்கியமான ஒரு தகவல் கிடைச்சு இருக்கு..அப்புறமா விளக்றேன்... என்ன பிரச்சினை வந்தாலும் நான் சமாளிக்றேன் "
என் அப்பா செல்வாக்கான ஆள் ( மு க அழகிரிக்கு தெரிந்தவர் ) என்பதால், போக்குவரத்து காவல்துறை ஒப்பு கொண்டது...
நானும் அவளும் அடிக்கும் வெயிலில், சாலையை கவனித்து கொண்டு இருந்தோம்..மஞ்சள் மலர்கள் திட்டி கொண்டே மாற்று பதில் சென்றன... என் மஞ்சு என்று வெள்ளை ஆடையில் பளிச் என இருந்தாள்... ஆனால் ரசிக்க எனக்கு மனம் இல்லை... கொஞ்சம் பைத்திய காரதனமாக இருந்தது...
ஒன்று... ஒன்று ஐந்து... நேரம் நகர்ந்தது..
ஹே அங்கே பாரு... காரில் ஒரு பெண் பின் சீட்டில் மஞ்சள் ஆடை அமர்ந்து சென்றாள்... காவல்துறை கவனிக்க வில்லை...
ஜெமினி பாலத்தில் எரிய பின்தான் , மஞ்சு முகத்தில் உயிர் வந்தது....
" ஹே.. இன்னும் கவனமா இருக்கணும்... என்னதான் கவனமா இருந்தாலும், சிலரை தடுக்க முடியல... அந்த பலகை சும்மா தான் இருக்கு, பெயிண்ட் வாங்கி வந்து, அதுல எழுதி வைப்போம்..மஞ்சள் ஆடையினரே... இன்று மட்டும் இப்பக்கம் வராதீர்" என்றாள் ..
" சரி வா " அவளை அழைத்து கொண்டு அவள் வண்டியில் பறந்தோம்... காவலர்கள் மேல் நம்பிக்கை இருந்தது...
ஒன்று முப்பது... செல் போனில் விசாரித்தோம்..பிரச்சினை இல்லை ...
மஞ்சள் வண்ணம் வாங்கி கொண்டேன் ..உன் எண்ணம் போல மஞ்சள் வண்ணம் " என் பேச்சை ரசிக்கவில்லை... "சீக்கிரம் வாங்க..."
அவளே வண்டியை ஓட்டினாள்.. சாரி .. பறந்தாள்...
: மெதுவா போ... இனிமே எழுதி என்ன ஆக போகுது... விபத்து எதுவும் நடக்கல... நீ சொன்ன நேரம் முடிய போகுது...
அவள் கேட்கவில்லை... அறிவாலயத்தை கடந்து , ஜெமினி பாலம் நோக்கி விரைந்தோம்..
" ஹே ..பார்த்து போ "
தேனாம்பேட்டை அருகே, தேவையில்லாமல் ஒரு சிக்னல் விளக்கு இருக்கிறது... சும்மா சிவப்பு விளக்கு எரியும்.... ஆனால் நிற்க தேவையில்லை... " ஸ்லோ பண்ணாதே .. போய்கிட்டே இரு "
திடீரென சிவப்பு விளக்கு எரிய, முன்னால் சென்ற மஞ்சள் ஆடை பெண் , சட் என ப்ரேக் போட்டாள்..( அந்த இடத்துக்கு முதல் முறை வருகிறாள் போலும் )
எங்கள் வண்டி தடால் என மோத , தூக்கி எறிய பட்டேன்...
காலில் அடி.. சமாளித்து எழுந்து வந்தேன்... அந்த மஞ்சள் ஆடை பெண் எப்படி வந்தாள்? கட்சி நேரத்தில் நாங்களே மோதி விட்டோமே..
ஓடினேன்... அந்த மஞ்சள் ஆடை பெண், சிறிய காயத்துடன் எழுந்து நிற்பதை பார்த்ததும்தான், உயிர் வந்தது... இரண்டு மணி... அப்படா... கண்டம் முடிந்தது..
" மஞ்சு ... உன் கனவு பலிக்கல... மஞ்சள் ஆடை பொண்ணு தப்பிச்சுட்டா " சொல்லி கொண்டே மஞ்சுளாவை தேடினேன்...
எங்கே அவள்?
கூட்டதை விளக்கி பார்த்தேன்.. ரத்த வெள்ளத்தில் என் மஞ்சுளா... தலையில் அடி... உயிரற்ற அவள் உடலில் இருந்த வெள்ளை ஆடை, மஞ்சள் பெயின்ட் கொட்டி, மஞ்சளாக மாறி இருந்தது...
*********************
பாவமாக இருந்தது - கதையாக இருந்தாலும். நல்லா எழுதி இருக்கீங்க.
ReplyDeleteகதை அருமையாக இருக்கு
ReplyDeleteஆனா ஏதோ ஆங்கில த்ரில்லர் படத்துல பாத்தா போலவே இருக்கு,தொடருங்கள்
கதை அருமையாக இருக்கு
ReplyDeleteஆனா ஏதோ ஆங்கில த்ரில்லர் படத்துல பாத்தா போலவே இருக்கு,தொடருங்கள்
இதை குமுதம் ஒரு பக்க கதைக்கு அனுப்புங்க பார்வையாளன், கதை நல்லா இருக்கு
ReplyDeletegood
ReplyDeleteactullay there are lot of unwanted signals in needless places and absense of signal in needful places are found in many parts of chennai..
ReplyDeleteChitra , jillthanni, நாய்க்குட்டி மனசு, sadagopan --
ReplyDeletethank u so much
உறுப்பினராகுங்கள். பரிசினை வெல்லுங்கள்!
ReplyDelete