Sunday, June 13, 2010

தியாகி

கடவுள் இருக்கிறாரா , இல்லையா " என்ற என்னை நோக்கி மையமாக சிரித்த அவர் , ஏன் திடீரென எழுகிறார் என புரியாமல் பார்த்தேன்.

வடபழனி சிக்னலில் நின்ற பஸ்சில தாவி ஏறிய சிலரில் நானும் ஒருவன்,.. நல்ல கூட்டமென்றாலும், சிலர் இறங்கியதால், எனக்கும் அந்த பெரியவருக்கும் சீட் கிடைத்தது..

பெரிய மனிதராக இருந்ததால், அவருக்கேற்ற படி பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். .. அவர் என்னை பார்க்காமல் , இன்னொருவரை பார்த்து எழுந்ததும் எனக்கு போன்றும் புரியவில்லை.. ஓடி போய் சீட் பிடித்து விட்டு, இப்போது ஏன் எழுகிறார்? தெரிந்தவராக இருக்குமோ?

" சார், உக்காருங்க சார் "

" அட பரவா இல்லைங்க "

" சார்.. என்னை விட நீங்க பெரியவரா இருக்கீங்க... நீங்க நின்ன எனக்கு கஷ்டமா இருக்கு " என்று சொல்லி அந்த பெரியவரை உட்கார வைத்தார் இந்த பெரியவர்..

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. இருவருமே வயதானவர்கள்தான்.. சில வருடங்கள் வித்தியாசம் இருக்கலாம்.,.. ஆனால் அவர் காட்டிய மனித நேயத்தை நான் அல்லவா காட்டி இருக்க வேண்டும்? பேசாமல் இருவரையும் உட்கார செய்து விட்டு நான் நின்று கொண்டு வந்திருக்கலாம்..,, நான் ஒரு முடிவுக்கு வருவதற்குள், நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது ...
"
*********************************
மறுநாள் ஒரு கொள்கை முடிவு எடுத்தேன்... ஒரு பலசாலி தன பலத்தை , பலவீனமானவர்களை அன்பாக நடத்துவதன் மூலம் தான் காட்ட வேண்டும் என் என் முன்னாள் குரு சொல்லுவார் ... அந்த குரு இப்போது சிறையில் இருந்து தப்பி விட்டாலும் , என் இதய சிறையில் அவர் இருப்பதால் , அவர் அறிவுரையை செயலில் காட்ட தீர்மானித்தேன் .

திருவல்லிக்கேணி செல்லும் பஸ்ஸில் ஏறியதில் இருந்தே, யாராவது வயதானவர்கள் இருக்கிரார்களா.. என கண்கள் தேடிக்கொண்டு , இருந்தன.. ஓர சீட்டில் அமர்ந்திருந்த இளம்பெண்ணின், கண்களும், மூக்குத்தியும் சற்று நேரம் கண்ணை கைது செய்து அங்கேயே வைத்து விட்டதால், கோடம்பாக்கம் வரும்போதுதான், அந்த பெரியவரை கவனித்தேன்,.. பாவம்.. தள்ளாடிய படி நின்று கொண்டுருந்தார்.. வயதின் தளர்ச்சி...

பெரியவரே..இப்படி உட்க்கருங்க.. என எழுந்து இடம் கொடுத்தேன்.. அதற்குள் சிலர் உட்கார முயன்றனர்.. அவர்களை தடுத்து, பெரியவரை வலுகட்டாயமாக உட்கார வைத்தேன்..
பெரியவருக்கு நன்றி உணர்ச்சியில் வார்த்தை வரவில்லை.. ஏதோ சொல்ல துடித்தார்... " நான் உங்க பையன் - சாரி பேரன் மாதிரி ( இமேஜ் !!! ) .. ரிலாக்ஸா வாங்க "
என்றேன் ..

கையில் இருந்த பிரசாதத்தை கொடுத்தேன்... ஏதோ சொல்ல முயன்று இருமினார் ....
இன்னும் ஜெமினி , மவுன்ட் ரோட் , எல் ஐசி என திருவல்லி கேணி செல்ல நேரம் அதிகம் ஆனாலும் , பெரியவருக்காக தியாகம் செய்தது பெருமையாக இருந்தது .

அதற்குள்,. பயணிக்க l சிலர் , தங்கள் புத்தகங்கள பொருட்களை அவர் மடியில் வைத்து அவரை காவலாளி ஆகினர் ...

அவர் இடத்தில் நான் இருந்து , இ ந்த சுமையை தாங்க விரும்பினேன் ... ஆனால், இருக்கைகள் பல இருந்தாலும் , ஒருவன் ஒரு நேரத்தில் , ஒரு இருக்கை யில்தான் அமர முடியும் என்பது இயற்கையின் அவல சுவை என்ற முன்னாள் குருவின் தத்துவம் , இங்கு சரியாக பொருந்துவதை உணர்ந்தேன் ...

ஜெமினி நிறுத்தத்தில் பஸ் நிற்கும்போது தற்செயலாக அந்த பக்கம் வந்த கண்டக்டர் , பெரியவரை பார்த்து திடுகிட்டார்..
" என்ன பெரியவரே... கடம்பாகத்துல இறங்கணும்னு சொல்லி , ஜெமினி வரை வந்துடீங்களே.. நான் கொஞ்சம் பி சியா இருந்துட்டேன்... தம்பி நீங்க லாவது இறக்கி விட்டு இருக்க கூடாத... கூட்டத்துல இறங்க முடியாது "

மடியில் சுமையுடனும், வாயில் பிரசாத்துடனும்,. பெரியவர் என்ன பார்த்த பரிதாப பார்வையை சந்திக்க முடியாமல் , கண்களை வேறு பக்கம் திருப்பினேன்..

4 comments:

  1. ல்லோரும் தன்னை பார்த்துக் கொள்ளக் கூடிய சக்தியை இயற்க்கை எப்போதும் வழங்குவதில்லை..
    உங்கள் கடமை இயல்பு..
    பெரியவர் உங்களிடம் முன் கூட்டி சொல்லியிருந்தால் நீங்கள் இறக்கி விட்டிருப்பீர்கள்

    ReplyDelete
  2. தங்களின் மனிதநேயத்திற்கு.... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. "தங்களின் மனிதநேயத்திற்கு.... பாராட்டுக்கள். "
    அந்த பெரியவரின் மனித நேயம் மிக மிக பெரிது

    ReplyDelete
  4. நன்று.. பாராட்டுக்கள்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா