ஜேம்ஸ் ஆலனின் கட்டுரை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ( அடைப்பு குறிக்குள் நம்ம சொந்த கருத்து )
*******************************************
தனி மனித மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் ஆற்றல் மிக்க தூண்டு விசை , உறுதி எடுத்து கொள்ளல் அல்லது சபதம் செய்தல் என்ற விஷயம் ( இனி தண்ணி அடிக்க மாட்டேன். தினமும் படிப்பேன், தினமும் எழுதுவேன் என்பது போல ) ..
இது இல்லாமல் பெரிய விஷயங்கள் எதுவும் சாதிக்க முடியாது. உறுதிமொழி இல்லாத வாழ்க்கை , நோக்கம் இல்லாத ஒன்று.. நோக்கம் இல்லாத ஒரு வாழ்க்கை சிறப்பானதாக அமையாது.. தெளிவாகவும் , கவனமாகவும் தயாரிக்கப்பட்ட உறுதி மொழி இல்லாமல், வாழக்கையில் முன்னேற முடியாது..
தவறான விஷயங்களுக்கும் உறுதி மொழி எடுக்க முடியும் என்றாலும் ( அவனை அவமானப்படுத்தாமல் விட மாடேன் என்பது போல ) நல்ல விஷயகளை செய்பவர்களுக்குதான் உறுதி மொழி, உற்ற நண்பனாக இருக்கிறது.. எனவே இதை நல்ல விஷயங்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை மட்டும் சொல்ல போகிறேன் ( நாளையில் இருந்து தினமும் தண்ணி அடிப்பேன் என யாரும் உறுதி மொழி எடுத்து கொள்வதில்லை . பெரும்பாலும் நல்ல விஷயங்களுகுதான் இது பயன்படுகிறது )
ஒருவன் ஒரு உறுதி , சபதம் எடுத்து கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம்,.? தற்போதைய நிலை அவனுக்கு பிடிக்க வில்லை. தனது குணத்தையும், வாழ்வையும் தீர்மானிக்கும் , மனம் என்ற விஷயத்தில் இருந்து, சிறந்த ஒன்றை எதிர்பார்க்கிறான்.அதற்கான பொறுப்பை வேறு யாரிடமும் கொடுக்காமல் தானே பொறுப்பை ஏற்க முடிவு செய்து விட்டான் என அர்த்தம். . அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் , சிறப்பான நிலையை அடைந்தேதீருவான்.
பெரிய ஞானிகளின் சாதனைகளை பார்த்தோம் என்றால் அதற்கு பின் அவர்கள் சபதம் இருக்கும்.
சிறந்த பாதை ஒன்றில் நடக்க தீர்மானித்ததும், பல பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனாலும் , சோதனை எனும் இருளை கிழிக்கும் ஒலிகீற்றாக நம் லட்சிய தீபம்ஒளிர்ந்து வழி காட்டும்
ஒரு சபதம் என்பது வெறும் ஆசை அல்ல. ஒரு நல்ல நோக்கத்தை அடைய, எது வந்தாலும் பின் வாங்காமல் போராடுவேன் என்ற உறுதியான தீர்மானம் தான் உண்மையான உறுதி மொழி. . இதை கவனமாக உருவாக்க வேண்டும்.
அரைகுறை மனத்துடன் செய்யப்படும் சபதம் , சபதமே அன்று. கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே , இது உடைந்து விடும் ( சீக்கிரம் எ ந்திரிக்கனும்னுதான் நினைச்சேன்..ஆனா, குளிர் அதிகம் ,.,அதான் ஒரு நாள் வேண்டாம்னு னு இழுத்து போர்த்தி தூங்கிட்டேன் )
ஒரு சபதத்தை உருவாக்க பொறுமையுடன் செயல்பட வேண்டும் . அவசரம் கூடாது. என்ன பிரச்சினைகள் வர கூடும் என யோசிக்க வேண்டும். அதற்கு தயராக வேண்டும். என்ன சபதம் செய்கிறோம் என முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் , பயமோ சந்தேகமோ இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு , அதற்கு பின் உறுதி எடுத்து கொண்டால், கண்டிப்பாக தன லட்சியத்தை அடைந்தே தீருவான்.
அவசர சபதம் , ஆடி போய் விடும் ..
தாக்கு பிடிக்கும் தந்திரத்தை, மனமே நீ கற்று கொள்..
உயர்ந்த சபதம் ஒன்றை எடுத்து கொண்ட மறு கணமே , அதற்கு சவால்கள் துவங்கும். சோதனை ஆரம்பிக்கும். வாய்ப்புகள் தேடிவரும் . ( சும்மா இருக்கும் போது கூட , வாரத்துக்கு ஒரு நாள் தண்ணி அடித்து , நிம்மதியாக இருப்போம். தண்ணி அடிக்க மாட்டேன் என சபதம் செய்தவுடன் தான், தண்ணி அடிக்க பல அழைப்புகள் தேடி வர ஆரம்பிக்கும் ) இந்த சவால்களை சந்திக்க முடியாமல், சபதத்தை கை விட்டோர் பலர்.,
ஆனால், இந்த சவால்கள் நமக்கு தேவையான ஒன்றுதான், இவை நம் எதிரி அல்ல .. நண்பர்கள்தான் என புரிந்து கொள்ள வேண்டும்.
சபதத்தின் இயல்பு என்ன ? திடீரென ஓட ஆரம்பிக்கும், நீரோட்டம் அல்ல.. ஏற்கனவே , ஒரு திசையில் ஓடி வீணாகும் நீரோட்டடத்தை, நமக்கு தேவையான திசையில், பாதை அமைத்து திருப்பி விடுவது போன்றது.
பழைய பாதையை அடைத்து, புதிய பாதை அமைத்தாலும், நீர் அந்த அடைப்பை உடைத்து , பழைய பாதையிலேயே செல்ல முயலும். மண் சுவர்களை உடைக்க அது முயலும். நாம் பொறுமையாக மண் சுவர்களை வலுப் படுத்தி, நீரை, புதிய நீரோட்டத்திற்கு , பழக்க வேண்டும்..
அதன் பின், சுவர்களை உடைக்க பயன் பட்ட நீரின் விசை, இன்னிசையுடன் ஓடி நமக்கு பயன் தர ஆரம்பிக்கும். இதுதான் இயற்கை விதி. இதுதான் மனதிலும் செயல் படுகிறது.
தன இஷ்டம் போல செயல் பட்ட மனதை,. ஒரு நல்ல விஷயம் நோக்கி திருப்பி விடும் போது, அது திமிறத்தான் செய்யும். இது இயல்பான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மண் சுவறை வலுபடுத்தி, தண்ணீரை கட்டுக்குள் கொண்டு வந்தது போல, மனதை வலுப்படுத்தி, தன லட்சியம் நோக்கி மனதை செயல்பட செய்ய வேண்டும்.
ஆற்றல் மிக்க எண்ணங்கள், தவறான திசையில் ஓடி வீணானது. இனி நல்ல திசையில் ஓடி, இன்னிசை தரும்.
வாழ்வில் முன்னேற விரும்பும் ஒருவன் , பிறரை முன்னேற்ற விரும்பும் ஒருவன், சுய சோதனைகள் செய்து கொள்ளட்டும். சபதம் எடுக்கட்டும். அந்த சபதத்திற்கு உண்மையாக இருக்கட்டும். அவனுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்தே தீரும். எவ்வளவு தவறு செய்து இருந்தாலும்,இலக்கு இல்லாமல் இருந்து இருந்தாலும், ஒருவன் உயர்ந்த நிலையை அடைய விரும்பிவிட்டால், அவனுக்கு பிரபஞ்ச விதி பாதுகாப்பாக இருந்து, அவனை வெற்றி அடைய வைத்து விடும் .. தளராத சபதம் முன், தடைகள் தூள் தூளாகும்..
உங்கள் கருத்துக்களுடன்(கமென்ட்) கட்டுரை அருமையாக இருக்குதுங்க. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி மேடம். ,,என் கனவுல ஜேம்ஸ் ஆலன் வந்தார்னா , உங்க நன்றியை அவர் கிட்ட சொல்லிடறேன்..
ReplyDeleteone of the best postings in 2010
ReplyDeletecheer dude.
thank u , boss
ReplyDeletekeep it up
ReplyDelete