Friday, June 25, 2010

சினிமா என்பது க்ரியேடிவ் சம்பந்தப்பட்ட கலையா ?


எதிலும் வித்தியாசமான பார்வை கொண்டவர் இவர். .. உண்மை என்பதன் அருகில் இவர் கருத்துக்கள் நம்மை அழைத்து செல்லும்...
இவரை ஆன்மிக வாதிகளும் ஏற்பதில்லை, .. நாத்திகவாதிகளும் ஏற்பதில்லை. ஏன் என்றால், எந்த சட்ட திட்டத்துக்கும் அடங்காதவர் இவர்..

இப்ப்டோது இருக்கும் கார்பரேட் சாமியார்கள் அனைவருக்கும் வழிகாட்டி ஓஷோ தான்.. அந்த ஓஷோவையே நடுங்க வைத்தவர் இவர்.
அவர்தான் யு ஜி கிருஷ்ணமூர்த்தி.
அவரை பற்றி எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நம் பதிவர் நண்பர் சொன்னதில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்... தகவல்கள் திரட்ட ஆரம்பித்தேன்...

அனால், முழுதும் உள்வாங்கி எழுதினால்தான், நேர்மையான எழுத்தாக இருக்கும் என்பதால், அரைகுறையாக எழுத விரும்பவில்லை... எனவேதான் தாமதம் ஆனது...

அவர் என்னதான் சொல்கிறார் என அறிவது அனைவருக்கும் அவசியம் என நினைக்கிறேன்..

**********************************************************************
சினிமா போன்ற துறைகளில் இருப்பது படைபாற்றலே இல்லை என்கிறார் இவர். இதற்கெல்லாம் க்ரியேடிவிடி என்பதே தேவை இல்லை... ஒரு கதை, சுவையான திருப்பம், திடிக்கிடும் முடிவு என்பதை எல்லாம் வருங்காலத்தில் கம்ப்யூட்டரே செய்து விடும் ..
நாளை யாரும் சினிமா பார்க்கா விட்டால், பாட்டு கேட்கா விட்டால், சினிமா எடுக்கவோ , பாட்டெழுதவோ யாரும் முன் வர மாட்டார்கள்.
அதாவது , சினிமா என்பதெல்லாம் ஒரு தொழில் நுட்ப வேலை தான். அந்த அளவுக்கு பாராட்ட வேண்டியதுதான். அதற்காக , கலைஞர்கள், படைப்பாளிகள் என்று சொல்வதெல்லாம் , நம்மை நாமே எமாற்றிகொள்ளும் விஷயம்.

யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்காமல், ஒரு ரோஜா பூக்கிறதே .. அதை போல இயல்பாக பூப்பதுதான் படைப்பாற்றல்.. ஒன்றை அடிப்படையாக வைத்து, பழசின் அடிப்படையில் செய்ய படுவது , கிரியேட்டிவிட்டி அல்ல.

******************************************************
சிந்தனை, வாழ்க்கை, மரணம், தேடல், ஆன்மிக ஏமாற்று வேலை, ஒப்ஷோ, ஜே கே பற்றியெல்லாம் இவரது அதிரடி கருத்துக்கள் , சிந்திக்க வைக்கின்றன..
போக போக ஒவ்வொன்றாக பார்க்கலாம் ...

மீண்டும் சிந்திப்போம் ..

4 comments:

  1. யு.ஜி ஒரு வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர் ..

    அவர் சொன்ன எனக்குப் பிடித்த வரிகள்...

    ஆன்மிகத்தை தேடாதே அதன் வலி கொடுமையானது.. அது தேவைஎன்றால் உன்னைத் தேடிவரும்..
    MAKE MONEY BE HAPPY

    ReplyDelete
  2. ஒரு புதிய சிந்தனாவாதியை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  3. இவரை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
    தொடர்ந்து பதிவிடுங்கள்

    ReplyDelete
  4. படித்து கொண்டே இருக்கிறேன்.. அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா