Pages

Saturday, June 12, 2010

மனிதனுக்கு , குரு அவசியமா ?

அந்த சாமியார் , என் கால் வலியை குணமாக்கினார்.. எனவே அவரை கடவுளாக நம்ப ஆரம்பித்தேன்... பிறகு தொலைகாட்சியில் அவரை தப்பாக காட்டினார்கள்.. அவரை தவறானவர் என உணர்ந்தேன் என்று சொல்பவர்களை பார்க்கிறோம்..
குரு என யாரும் தேவை இல்லை... நீயே உனக்கு குரு.. நீ தெளிவாக இருந்தால் ,எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்... என்கிறார் ஜே கிருஷ்ணமுர்த்தி...

இந்த நிலையில், குரு கீதை என்ற நூலை படிக்க வய்ய்ப்பு கிடைத்தது..

பகவத் கீதை தெரியும்? குரு கீதை?

சிலருக்கு தெரிந்து இருக்கலாம்.. ஆனால் எனக்கு புதுதாக இருந்தது..

பகவத் கீதை என்பது, அர்ஜுனனுக்கும், கிரிஷ்ணருக்கும இடையேயான உரையாடல்.. அர்ஜுனின் கேள்விகள்.. கிருஷ்ணர் பதில்கள்.

குரு கீதையை பொறுத்த வற்றை, இது பார்வதிக்கும், சிவனுக்கும் இடையேயான உரையாடல்.. பார்வதி கேள்விகள், சிவன் பதில்கள்..

ஒரு குரு என்பவர் வாழ்க்கைக்கு அவசியம் என்கிறது நூல்...

கடவுளின் கோபத்துக்கு ஆளானால், குரு காப்பார்... குருவின் கோபத்துக்கு ஆளானால், யாரும் காக்க முடியாது என்பது இதில் உள்ள ஒரு பஞ்ச்...

பணம் வேண்டும், கால் வலி சரியாக வேண்டும் என்பதெற்கெல்லாம் குருவை தேடினால், தவறான ஆட்களிடம் சிக்குவாய்.. அது குருவின் தவறு அல்ல.. உன் தவறு..

உன் தேடல் சரியாக இருக்கும் பட்சத்தில், சரியான குரு அமைவார்... அவர்வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்... கட்சி மாறுவது போல , ஒரு குருவ்டம் இருந்து இன்னொரு குரு என சென்றால், சாகும் வரை உனக்கு விமோசனம் இல்லை என்கிறது குரு கீதை...

மேலும் நிறைய இருக்கிறது... பல விரிவுரைகள் இருக்கின்றன.. நான் படித்த புத்தகம் நன்றாக இருந்தது... சில தியான முறைகளும் நன்றாக உள்ளளன... மைசூரிலிருந்து ஒரு தமிழ் புத்தகம்...

அதை எல்லாம் விளக்கி சொல்லி , ஆன்மிக பிரச்சாரம் செய்வது என நோக்கம் அல்ல... படித்ததை பகிர்ந்து கொண்டேன் .. அவ்வளவுதான்... இது ஒரு பார்வை மட்டுமே... மாற்று பார்வைகளை அடுத்த பதிவுகளில் விவாதிப்போம்...

6 comments:

  1. குரு கீதை அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆன்மிகம், பக்தி இரண்டுமே மிரட்டிப் பணிய வைப்பவை..
    குரு மாறுதல் ஒன்றும் தவறில்லை ..
    என்னைக் கேட்டால் பயிற்சிகளுக்கு மட்டுமே குரு தேவை ..
    ஆன்மிகம் ஒரு மிகப் பெரிய வலி,, அது தேவைப் பட்டால் உன்னை தேர்வு செய்துகொள்ளும்
    அதுவரை make money be happy ..

    ReplyDelete
  3. " என்னைக் கேட்டால் பயிற்சிகளுக்கு மட்டுமே குரு தேவை .."

    i love your integruty and hoensty. one must true to himself/herself ..
    u r true to urslef

    ReplyDelete
  4. //உன் தேடல் சரியாக இருக்கும் பட்சத்தில், சரியான குரு அமைவார்...//

    100% _/

    ReplyDelete
  5. உன் தேடல் சரியாக இருக்கும் பட்சத்தில், சரியான குரு அமைவார்... அவர்வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்... கட்சி மாறுவது போல , ஒரு குருவ்டம் இருந்து இன்னொரு குரு என சென்றால், சாகும் வரை உனக்கு விமோசனம் இல்லை என்கிறது குரு கீதை...


    ... nice.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]