Pages

Friday, July 2, 2010

தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.

செம்மொழி மாநாடு முடிந்தாலும், அதை பற்றி நடுநிலையாக கருத்து கூற யாருக்கும் தகுதி இல்லாமல் போய் விட்டதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது..

அனைத்து பத்திரிகைகளுக்கும , அரசு தரும் விளம்பரம் தேவை.. கட்சியினர் தரும் விளம்பரங்கள் தேவை..

எனவே அவர்கள் , அதற்கு எதிராக எதுவும் பேச முடியாத சூழ்நிலை..

சிலர் அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார்கள்.. இப்போது நடந்து முடிந்த பின், அதை குறை சொல்வதும், அவ்வளவாக எடுபடாது.. அவர்கள் , கோரிதான் சொல்வார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே...

ஆடம்பரமான நிகழ்ச்சியை பார்த்து , வியப்படையும் பொது ஜனங்கள் கூட , அதில் வியப்பதற்கு எதுவும் இல்லை... அவர்கள் பணம் தான் இப்படி ஆடம்பரமாக செலவிட படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள்... அங்கு செல்வதையே பெருமையாக நினைக்கும் அவர்களை போலவே , பதிவுலகமும் நினைத்து விட்டதால், அவர்களிடமும் , நேர்மையான பார்வையை எதிர் பார்க்க முடியாது...

ஆனாலும் ஒரு சில பதிவர்கள் மட்டும் நேர்மையான விமர்சனத்தை வழங்கி வருகின்றனர்.

பத்திரிக்கைகள் எல்லாம் நம்பக தன்மையை இழந்து விட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக இருப்பது பதிவுலக்ம்தான்...

இவர்களும், அங்கு கிடைக்கும் சின்ன , சின்ன தற்காலிக சலுகைக்கு மயங்கினால், தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.

9 comments:

  1. உண்மை, உண்மை, உண்மை.

    ReplyDelete
  2. vetkathudan oppukolla vendum...

    ReplyDelete
  3. பத்திரிக்கைகள் எல்லாம் நம்பக தன்மையை இழந்து விட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக இருப்பது பதிவுலக்ம்தான்...
    ////
    உண்மைதான்......

    ReplyDelete
  4. ஊடகத்திலே சிறந்தது இனிமேல் பதிவுலகம்தான் இணையதளம் ,என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவு உண்மையை ஆணி அடித்தாற்போல் வெளியிடுகிறது.

    ReplyDelete
  5. தாக்குங்கதல, நாங்க கூட இருக்கோம்.

    ReplyDelete
  6. பதிவுலகம் மேல் உங்கள் நம்பிக்கைப் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தமிழை, இனி பதிவுலகமே காப்பாற்றும்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]