Tuesday, July 6, 2010

பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்

பாரத் பந்த் என்று நடந்தாலும் நடந்தது... நமக்கு பயங்கர குழப்பம்...

பந்த் நடத்துவது சட்ட விரோதம் என ஆளும் கட்சியாக இருந்த போது அறிவுரை சொன்ன , அ தி மு க வினர், கடை அடைத்து ஒத்துழைப்பு தாங்க அன்ன்னச்சி என சில இடங்களில் பவ்யமாகவும் , கடையை அடிடா சோமாறி என சில இடங்களில் கொள்கை பிடிப்புடனும் , அடைப்புக்கு போராடினர்..

பந்த் நடத்துவது ஜனநாயக உரிமை என சொன்னவர்கள், இதனால் இத்தனை கோடி நஷ்டம் என செய்தி தருகின்றனர்... அப்படி என்றால், மற்ற நாட்களில் இவ்வளவு கோடி லாபம் கிடைக்கிறதா... அதெல்லாம் எங்கே போகிறது என நமக்கு குழப்பம்..

பந்த் என்பது சரியா தவறா என்பதே குழப்பமாக இருக்க, இது வெற்றியா தோல்வியா என இன்னொரு குழப்பம்..

பந்த் வெற்றி என தினமணி செய்தி ( தேசிய அளவில் வெற்றியாம் .. தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லையாம்..ஆனாலும் ஓரளவு ஆதரவு இருந்ததாம் )


பந்த் பிசு பிசுப்பு... ஆனால் பத்தாயிரம் கோடி இழப்பு - தினமலர்

பந்த் தோல்வி என , படங்களுடன் தின தந்தி செய்தி... தேசிய அளவில் எப்படி என்ற செய்தி இல்லை...

ஆங்கில இதழ்கள் பந்த் வெற்றி என்கின்றன ..

ஒரு சம்பவத்தை எத்தனை விதமாக ரிபோர்ட் செய்கிறார்கள் என்று பார்த்தல் ஆச்சர்யமாக இருக்கிறது...


இந்த பிரச்சினை போதாது என்று , அண்ணா திமுக சரியாக ஒத்துழைக்க வில்லை என தோழர்கள் ஆதங்கப்பட்டு இருக்கின்றனர்..

காங்கிரஸ் கூட்டணி வாய்ப்பை கெடுக்க விரும்பாமல், அ தி மு க பட்டும் படாமல் நடந்து கொண்டு இருக்கலாம்..

சரி..பந்த் வெற்றியா ..இல்லையா டிராவா ..

யாருக்கு வெற்றி...



வெற்றி பெற்றோர்...

தி மு க... தமிழநாட்டில் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொண்டது...

அண்ணா திமுக ... காங்கிரசையும் பகைக்காமல், அதே சமயம் ஆளும் கட்சியையும் எதிர்த்த சாமர்த்தியம்

கம்யூனிஸ்ட் ---- தமது ஏரியாவில் , யாரையும் நம்பாமல் வெற்றி பெற்ற தில்..

காங்கிரஸ் --- என்ன நடந்தாலும் தன நிலையில் இறங்கிவராத, " மன உறுதி "

பி ஜே பி - தம் மாநிலங்களில் அடைப்பை வெற்றி பெற செய்தது ..




தோல்வி அடைந்தோர் ...........................


பொதுமக்கள் ----- இந்த அடைப்பால் , விலைவாசி குறையவில்லை.. ஒரு நாள் வருமான இழப்புதான் கிடைத்த பலன்

1 comment:

  1. அதான் இத்தனை எம்எல்ஏ அப்புறம் எம்பின்னு ஒரு கட்சிக்கு இறுக்குதுல்ல, அதை வச்சிக்கிட்டு பாராளுமன்றத்திலையோ இல்லை சட்ட மன்றத்திலையோ அவை நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க செய்து தங்கள் எதிர்ப்பை காட்டலாம். அதை விட்டுட்டு பொது மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா