வரலாறு என்பது வேறு .. வரலாற்று நாவல் என்பது வேறு .. ( புராணம் என்பது தனி பிரிவு )
இந்த வருடத்தில் , இந்த சம்பவம் நடந்தது என துல்லியமாக சொல்வது வரலாறு..
ஏன் நடந்தது என தன கற்பனையால் இட்டு நிரப்புவது வரலாற்று நாவல்..
வரலாற்று ஆதாரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், சில அடிப்படை பாத்திரங்களை வைத்து , அடிப்படை சம்பவங்களை மாற்றாமல் வைத்து , கதை புனைவதும் வழக்கமாக நடை பெறும் ஒன்றுதான்..
ராமன்- சீதை- ராவணன் என்ற மூன்றை வைத்து பல ராமாயணங்கள் உள்ளன ..
ஏதோ ஒரு நீதியை வலியுறுத்தும் வகையில் அவை இருக்கும்... ஒருவரை நல்லவராக காட்டி, அவரை ரோல் மாடலாக கொள்ளுங்கள் என வலியுறுத்துவது இவற்றின் உத்தேசம்.. இதற்கெல்லாம் ஆதாரம் இல்லை..எனவே எப்படி வேண்டுமாலும் சொல்லலாம்... அனால் சொல்வது மனித சமுகத்துக்கு நல்லதாக இருக்க வேண்டும் )
ஒரு ராமாயணத்தில், சீதை என்பவள், ராவணின் மகள்... ராமனின் போக்கு பிடிக்காமல் , ராவணன் அவளை பிறந்த வீடு அழைத்து செல்கிறான் ..அதன் பின் , ராமன் திருந்தி, தன வீரத்தை நிரூபித்து , அவளை அழைத்து செல்கிறான் என்று வருகிறது...
இன்னொரு ராமாயணத்தில் , ராமனின் போக்கு பிடிக்காமல், தசரதன் , அவனை காதுக்கு நாடு கடத்துகிறார்..
இன்னொரு ராமாயணத்தில் எல்லோருமே நல்லவர்கள்... ராமன் உலக அனுபவம் பெறுவதற்காக, கைகேயி அவனை காட்டுக்கு அனுப்புகிறாள்...
இப்படி எல்லாம் பல இருந்தாலும், அதிகமாக ஏற்று கொள்ள பட்ட ராமயணம, ராமன் ஏக பத்தினி விரதன...சீதை கடத்த படிக்கிறாள்... ராவணன் முழுதும் கெட்டவன் அல்ல... கடை சியில் சீதை மீபு.. தன பின் அக்னி பிரவேசம் என ஒரு கிளைமேக்ஸ் ..அவள் காட்டுக்கு சென்று விடுகிறாள்,,,லவன் குசனை பெறுகிறாள்... என ஒரு க்ளைமேக்ஸ்...
இன்னொரு பார்வையும் உண்டு... ராவணன் மிக நல்லவன்... பல கலைகளில் வல்லவன்... சீதை மேல் காதல் கொண்டு அவளை கடத்துகிறான்... ஆனாலும் அவள் சம்மதம் தான் முக்கியம் என கண்ணியம் காக்கிறான்....
இந்த அ டிப்படையில் , புதிதாக ராமாயணம் சொல்ல நினைத்தது தவறில்லை...
ஆனால், நல்லவன் தோற்றதாக காட்டியது தப்பு... யதார்த்தவாத படங்களில் அப்படி காட்டுவார்கள்... இந்த படத்தில் இப்படி காட்டி இருக்க கூடாது...
இதுதான் தோல்விக்கு காரணம்...
ம்ம்ம்ம்ம்.. இதுல இவ்ளோ இருக்கா???
ReplyDelete//ஒரு ராமாயணத்தில், சீதை என்பவள், ராவணின் மகள்...
ReplyDeleteஇன்னொரு ராமாயணத்தில் , ராமனின் போக்கு பிடிக்காமல், தசரதன் , அவனை காதுக்கு நாடு கடத்துகிறார்..
இன்னொரு ராமாயணத்தில் எல்லோருமே நல்லவர்கள்... ராமன் உலக அனுபவம் பெறுவதற்காக, கைகேயி அவனை காட்டுக்கு அனுப்புகிறாள்...//
இதெல்லாம் எந்த ராமாயணத்துல இருக்கு..யார் எழுதினதுன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
கபிலன் அண்ணே.. உங்க ஆர்வத்துக்கு நன்றி...
ReplyDeleteதசரதன் வேட்டையாட செல்லும் போது , தவறுதலாக ஒரு சிறுவனை கொன்று விடுகிறான் .. அந்த சிறுவன் தன தாய் தந்தயருக்காக ஆற்றில் நீர் எடுக்க வந்தவன்... நீர் எடுத்த சத்தத்தை , யானை என நினைத்து தர்சர்த்தன் , அம்பு எய்து சிறுவனை கொன்று விட்கிறான்
அந்த தாய் - த்னதையினர் தசரதனை சபிக்கின்றனர்... நாங்கள் புத்திர சோகத்தால் வாடுவதைபோல , நீயும் புத்திர சோகத்தால் வாடி , பிறகு சாவாய்..
இப்போது கைகேயி சிந்திக்கிறாள்... எப்படியும் இந்த சாபம் பலிக்க போகிறது... ராமன் இறந்து, அதனால் புத்திர புத்திர சோகத்தை அனுபவிப்பதை விட , அவன் உயிரோடு காட்டில் இருப்பதே மேல் என காட்டுக்கு அனுப்ப வழி செய்கிறாள்... சாபமும் பலிக்கும்,.,, ராமனின் உயிரும் காக்ககபடும் என்ற நல்ல எண்ணம்அவளுக்கு...
இது இடம் பெறுவது ஆனந்த ராமாயணம் என்ற நூலில்...
"ஆனால், நல்லவன் தோற்றதாக காட்டியது தப்பு..."
ReplyDeleteஇதுல நல்லவன் யாரு கெட்டவன் யாரு? ராவணனே நல்லவனாக இருந்தால் கூட அவன் தான் வெற்றி பெற வேண்டும். ( டிஸ்கி:- நான் இன்னும் படம் பார்க்கவில்லை. )