Pages

Monday, July 12, 2010

சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்

john grey ... மென் ஆர் பிரம் மார்ஸ்......வுமன் பிரம் வீனஸ் ... என்ற புத்தகம் எழுதிய இவரை அனைவரும் அறிவோம்... இந்த புத்தகம் பிரபலமாக நம் சாமியார் ஒருவர் தான் காரணமாக இருந்தார் என்பது நம்ப முடிகிறதா ?

இவர் நம் இந்திய சாமியார் ஒருவரின் பக்தர் என அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது...

ஏர் டெக்கான் விமான சேவையை ஆரம்பித்த கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றில் , கோபிநாத் இதை குறிப்பிட்டு இருக்கிறார்..

ஊருக்கெல்லாம் அறிவுரை வழங்கும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு, இந்திய சாமியாரிடம் என்ன தேவை இருக்க முடியும்?

எழுத்தாளர் , நம் சாமியாரை பார்த்தாராம்.. " என்ன வரம் வேண்டும் " சாமியார் கேட்க, எழுத்தாளர் சொன்னாராம்..

என்ன ஆச்சரியம். அடுத்த நாளே அந்த வரம் பலித்து விட்டதாம்...

ஒரு வேளை, இது தற்செயலானது என நினைக்கலாம்..

இன்னொரு வரமும் கேட்டாராம்... அதுவும் பலித்ததாம்...

இந்தியாவில் இருந்த படியே, அயல்நாட்டு சம்பவங்களை ஆட்டுவிக்கும் சாமியார்... அசந்து போன எழுத்தாளர், பக்தராக மாறினாராம்..

அந்த சாமியாருக்கு , லோக்கல் பக்தர்கள் யாரும் இல்லையாம்... எல்லாம் வெளிநாடினர்தானாம்..

அது என்ன வரம்.. சாமியார் பெயர் என்ன , எங்கு இருக்கிறார் என அறிந்து கொள்ள விரும்புபவர்களும், அவரிடம் ஆசி பெற விரும்பும் எழுத்தாளர்களும் , படிக்க வேண்டிய புத்தகம், simplyfly ... by கேபடன் கோபிநாத் ..

************************************************************************************

பொதுவாக இது போன்ற , வெற்றி வரலாறு எழுதுபவர்கள், தனது உழைப்பு, தன்னம்பிக்கை , விடா முயற்சி - இதைத்தான் வலியுறுத்துவார்கள்...

அனால், இந்த புத்தகம் சற்றே மாறுபட்டு, வாய்ப்புகள்தான் மனிதனின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன என்ற உண்மையை அருமையாக சொல்கிறது...இதை சொல்ல அவர் வெட்கப்பட வில்லை...

அதற்காக , வாய்ப்பு மட்டுமே அவர் வெற்றிக்கு காரணம் என்பதில்லை... அவர் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை... வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார்...

ஒரு வேலையில் நிபுணத்துவம் பெற்றால்தான் சாதனை செய்ய முடியும் என்ற மாயையும் உடைக்கயார் இவர்...

விவசாயம், உணவகம், பைக் ஏஜன்சி, ஹெலிகாப்டர், விமானம் என பல துறைகளில் இருந்து பார்த்து இருக்கிறார்...

வாழ்கையை இனிய பயணமாக ஆக்கி கொண்டு இருக்கிறார் கோபிநாத் அவர்கள்...

தண்ணீரை எடுத்து வர கழுதைகளை பயன்படுத்துவது போன்ற புதுமையான ஐடியாக்களுகு சொந்த காரர் இவர்..

சில ஜெயிக்கலாம, சில தோற்கலாம்.. ஆனால் தன்னம்பிக்கை இழக்க கூடாது என்பது இவர் மனநிலை...

ஆனால், தன்னம்பிக்கையால் மட்டும இவர் வெற்றி பெறவில்லை... வாய்ப்புகளும், பலரது உதவிகளும் வெற்றிக்கு காரணம் என்று சொல்லும் நேர்மை, புத்தகத்தின் மதிப்பை உயர்த்துகிறது...

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்...

2 comments:

  1. ஊருக்கெல்லாம் அறிவுரை வழங்கும் ெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு, இந்திய சாமியாரிடம் என்ன தேவை இருக்க முடியும்?

    -- Foreigners have more awareness on external world. But saints have on inner world.

    ReplyDelete
  2. Men are from mars; women are from வீனஸ்
    எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம் பார்வையாளன்,
    பல திருமண தம்பதிகளுக்கு பரிசாக கொடுத்திருக்கிறேன்.
    ஆனால் அவர்களில் பலர் அதை அப்படியே வைத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதில் எனக்கு ஆழப் பதிந்த விஷயம் 'பிறர் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அது மாறும் போது பிரச்னை ஆரம்பம் '
    அதை புரிந்து கொண்டால் பல சிக்கல்கள் விலகும்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]