Wednesday, July 14, 2010

காதல் பிசாசே..காதல் பிசாசே..

நான் குமாரை பார்த்து இருக்க கூடாது...

அவன் தான் காதலிக்கும் பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்க கூடாது...

சிறிது நேரம் பேசி விட்டு பிரிந்து விட்டோம்... ஆனால் , அப்போது ஆரம்பித்த என் பிளாஷ் பாக் சிந்தனைகள் இன்னும் ஓயவில்லை..

நானும் , சாந்தியும் காதலித்த கால கட்டங்கள்..மறக்க நினைத்து எல்லாம், நினைவு கடலில் இருந்து , விழித்து எழ தொடங்கின...

பேச ஆரம்பித்தால், நேரம் போவது தெரியாமல்பேசி கொண்டு இருப்போம்... என் நான்கு வயது பயனின் மழலையில் அதை எல்லாம் மறக்க நினைத்த போது மீண்டும் அவள் நினைவுகள்..

அவளது ரசனை..செல்ல சீண்டல்... காதல் கவிதைகள் .... இலக்கிய விவாதங்கள்....

எனது உயிர் சுவாசமாக இருந்தாள் அவள்...

அவள் இப்போது இல்லை என்ற உண்மையை என்னால் ஏற்க முடியவில்லை... அவளை திருமணம் செய்து கொண்டு இலக்கியம் போல குடும்பம் அமைக்க நாங்கள் எவ்வளவு திட்டம் இட்டு இருப்போம்...

என்னை புரிந்து கொண்டவளாக, அறி தோழியாக இருப்பாள் என்றெல்லாம் நினைத்து , கனவு கோட்டை இருந்தேனே...

அவள் ஒரு போதும் இனி மீண்டும் வர முடியாது....

காதலித்த கால கட்டத்தில் நானும் சாந்தியும் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், அத கீழ் அவள் எழுதி இருந்த கவிதையையும் ரசிக்க ஆரம்பித்தேன்..

பழைய நினவுலகில் மூழ்கித்தனே , நிகழ்கால வெறுமையை மறக்க முடியும்.!!!!

திடீரென அருகில் யாரோ வருவது போல இருந்தது..

அட.,. என் மனைவி...

திடுகிட்டேன்...

கையில் போட்டோவுடனும், கவித்தையுடனும் இருப்பதை பார்த்து விட்டாள்

" காலங்காத்தால, அதை வச்சுக்கிட்டு என்ன செய்றீங்க... பொய் கத்திரி காய் வாங்கிட்டு வாங்க... மசமச நு உட்கார்ந்து கிட்டு இருக்காதீங்க... எனக்கு வந்து வைச்சீங்க பாருங்க... கடவுளைத்தான் குறம் சொல்லணும் "

என் மனைவி சாந்தி , அர்சசனை செய்து வெட்டு, தன் வேலையை பார்க்க சென்றாள்...
போகும் போது, நானும் அவளும் , காதலித்த களத்தில் எடுத்த புகைப்படத்தை அலட்சியம்க , மேஜையில் தூக்கி போட்டாள்

காதலித்த பெண்ணையே திருமணம் செய்து இருந்தாலும், காதலித்த காலத்தில் இருந்த அந்த சாந்தி இப்போது இல்லை என்ற யதார்த்தத்தை சுமந்த படி கத்திரிக்காய் வாங்க கிளம்பினேன்.,..


*********************

3 comments:

  1. சத்தியமான வார்த்தைகள்.
    காதல் தோற்க வேண்டும் என்றால் காதலித்தவரை(ளை) மணக்க வேண்டும்

    ReplyDelete
  2. நல்ல கதை மற்றும் நடை. முடிவு கொஞ்சம் முன்னாடியே ஊகம் செய்யக்கூடியதாக இருந்தது. இருந்தாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை...

    ReplyDelete
  3. You shoula be a practical (Business man)...
    Read also...

    http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா