Thursday, July 15, 2010

பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வேண்டியது யாருக்கு

" அம்மா... ஸ்கூல , இங்க்லீஷ் கிளாஸ்ல எங்க டீச்சர் எ பி சி சொல்ல சொன்னங்க... யாருக்கும் தெரியல... நான் மட்டும் சரியா சொன்னேன்...
இதுக்கு காரணம் என்னம்மா ? நான் பிறவி மேதையா "

" இல்லை பா.. அதுக்கு காரணம் அவுங்க எல்லாம் சின்ன பசங்க..உனக்கு பதினைஞ்சு வயசு !!! "


முழுமையான வாழ்வு என்பது அந்தந்த வயதுக்கு ஏற்ப வாழ்வது... சின்ன வயதில் சைக்கிள் ஓட்டுவதே சாதனையாக இருந்தது... வாலிப வயதில் விமானம் ஓட்டுவத்துதான் சாதனையாக இருக்க முடியும்... சைக்கில் ஒட்டிய பெருமையை பேசி பயனில்லை..

ஆனால், தமிழ்நாட்டில் இப்படி பட்ட ஆரோகியமான வளர்ச்சி இல்லை..

ஒருவர் அரசியலில் இறங்கி, பதவியில் இருந்து விட்டால், அதே பதவிதான் அவர் வாழ்நாள் லட்சியம் ஆகி விடுகிறது... சாகும் வரை அவர் வாழ்வு பதவியை சுற்றித்தான்...

அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த நிலை கிடையாது... குறிப்பிட்ட வயத்தில் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று வேருதுரையில் திறமையை காட்டுபவர்கள் அநேகம்...

தொழில் துறையில் சாதித்து விட்டு, ஒய்வு பெறுவதும் அங்கெல்லாம் சகஜம்...
இந்தியாவில், ஓய்வு பெறும் அரசியல் வாதியை பார்க்க முடியுமா?

கடைசி மூச்சு வரை பதவி வெறி இருப்பதைத்தான் , ஒரு மனிதனின் மாபெரும் குணமாக தமிழ்நாட்டில் நினைக்கிறோம்.

இந்த மனநிலை இருப்பதால் தான், பாலகுமாரன் போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளர் , எழுத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதை , அவரது தோல்வி என சிலர் பார்க்கிறார்கள்..

அவர் நினைத்தால், பழைய மாதிரி கதைகளை இன்றும் எழுத முடியும்.. ஆனால் அது அவருக்கு பெருமை அளிக்காது...

அந்தா கால கட்டத்தில் அவை சிறப்பானைவைதான்.. ஆனால் , இன்றும் அதையே அவர் எழுத தேவையில்லை...

உடையார் போன்ற நாவலுக்கு அவர் அளித்திருக்கும் உழைப்பு , அந்த நாவல் அடைந்த வெற்றி அவருக்கு அளித்து இருக்கும் நிறைவே அவருக்கு போதுமானதாக இருக்கும்... இனி அவர் எழுதவே தேவை இல்லை.... அவர் வாழ்க்கையே ஒரு அழகிய நாவல்தான்...

ஆனாலும் அவர் எழுதினால் நல்லதுதான்... அது உடையாரை விட சிறப்பனதாக இருக்க வேண்டும்...

அவர் அடைந்த முழ்மையை , நிறைவை, சாகும் வரை பதவிக்காக அலையும் அரசியல் வாதிகள் அடைய முடியாது..

இந்த அரசியல் வாழ்க்கைதான் ( பணம் சம்பாத்தித்தாலும் ) தோல்வியே தவிர, பாலகுமாரன் எழுத்துக்கலுக்கு என்றும் தோல்வி இல்லை
பாலகுமாரனை பாராட்டுவோம்...பதவி வெறி அரசியல்வாதிகளை நினைத்து பரிதபபடுவோம்

2 comments:

  1. நான் எல்லாம் இன்று பொருளியல் சார்ந்த வாழ்வில் செல்வ செழிப்போடும், மன நிறைவோடும் இருக்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் என் கல்லூரி பருவத்தில் படித்த பாலகுமாரணது எழுத்துக்கள் தாம் .

    அவர் நமக்கு (எனக்கு) தேவைக்கு அதிகமாகவே எழுத்தில் வாரி வழங்கி உள்ளார். இனிமேல் எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் அவரின் சுய விருப்பம்.

    என்றென்றும் பாலகுமாரனுக்கு நன்றி கடனுடன்

    ReplyDelete
  2. வந்து சென்றேன் உங்கள் வலைதளத்துக்கு..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா