பாரதி பற்றிய என் கருத்துக்கு , பெயர் சொல்லாத அனானி நண்பர்கள் நல்ல ஹோம் வொர்க் செய்து விளக்கங்கள் கொடுத்து உள்ளனர்... உண்மையிலேயே இதைப்பற்றி அவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதும் , நல்ல படிப்பாளிகள் என்பதும், உழைப்பாளிகள் என்பதும் , சமுக்க அக்கறை உள்ளவர்கள் என்பதும் தெரிகிறது .. அந்த அளவில் அவர்களுக்கு தலை வணங்கலாம்,. பின்னூட்டத்தை சிலர் படிப்பதில்லை என்பதால், அவர்கள் விளக்கத்தை அப்படியே இந்த பதிவில் தருகிறேன்...( கடைசியில் )..அவர்களது பார்வை என்ன என்பதையும் அனைவரும் அறிவது அவசியம்...
அதற்கு முன் என் விளக்கத்தை சொல்லி விடுகிறேன்.. இல்லை என்றால் அவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுகொள்ளும் அபாயம் உண்டு..
1 "சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்;.....கொஞ்சம் பாரதி உடன் சின்ன மருதுவை திப்புவை ஒப்பிட்டு பாருங்களேன்..
திப்பு போலவோ, மறுத்து போலவோ பாரதி நடந்து கொண்டு இருந்தால், இன்று அவரை கவிஞாக நினைவு வைத்து இருக்க மாட்டோம்.. பாரதி என்ற மாபெரும் மக்கள் தலைவர் இருந்தார் .. அவருக்கு கவிதையும் எழுத தெரியும் என்று ஒரு தலைவராக போற்றபட்டு இருப்பார்...
ஓங்கு பண்பு , ஒடுங்கு பண்பு என இருக்கிறது... எல்லோருக்கும் பல பண்புகள் உண்டு .. அதில் எது ஆதிக்கம் செலுத்தும் பண்பாக இருக்கிறதா அந்த அளவில் அவர் பெயர் நிலைக்கும்...
பாரதி தேச பக்தர், ஆவேசமாக பேசினார் என்பதை விட கவிதைக்காகத்தான் அவர் நினைவு கூறப்படுகிறார்.. கவிதைதான் அவர் முதல் தகுதி..எனவேதான் அவர் மக கவி பாரதி என அழைக்க படுகிறார்...
புரட்சி வீரர் என்றோ, மக்கள் தலைவர் என்றோ அழைக்க படுவதில்லை...
2 "தன் எழுத்தை படித்தவன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற நோக்கமும், தான் மட்டும் தெரியாமல் எதிரி காலில் விழுந்து கிடக்கலாம் என்பதும் காரியவாதிகளின் செயல் அல்லவா.. "
ஓர் ஆங்கில எழுத்தாளர், கவலை படாமல் இருப்பது எப்படி என்ற புகழ் பெற்ற புத்தகம் எழுதினர்.. கடைசியில் கவலையால் தான் இறந்தார்... சுயநலத்தின் மேன்மை என கொள்கை விளக்கம் கொடுத்த ஆங்கில பெண் எழுத்தாளர், கடைசி காலத்தில் அன்புக்காக ஏங்கினார் ...
in search of excellence என்று ஒரு உதகம் வந்தது... உலகில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களை ஆராய்ந்து, அவர்கள் வழிமுறைகளை சொல்லி கொடுத்தது புத்தகம்... இந்த வழி முறையை பயன் படுத்துங்கள்,, நீங்களும் வெல்லலாம் என்றது...
ஒரு வருடம் கழித்து, பிரபல பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியானது... ஒரே வருடத்தில் , அந்த புத்தகம் சிலாகித்த பல நிறுவனகள் நாடு தெருவுக்கு வந்து விட்டன என சொன்னது கட்டுரை...
இதனால் எல்லாம, அந்த புத்தகத்தை எழுதியவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதில்லை... அந்த புத்தகங்கள் இன்னும் பரபரப்பாக விற்பனை ஆகின்றன... உண்மை என நினைத்துதான் எழுதிகிறார்கள்.. அதை சந்தேக பட முடியாது... அந்த புத்தகங்கள், பலருக்கு பயன் அளித்து வருகின்றன என்பதுதான் முக்கியம்....
இன்னும் தெளிவாக சொன்னால், அச்சமில்லை என்று பாடிய பாரதியார் இருட்டில் செல்ல பயப்படும் தன்மை கொண்டவர்...அதானால் என்ன்ன.. அந்த பாடல் நமக்கு தைரியம் அளிக்க்றதே.. அந்த சொல்லின் வீர்யம் , மொழி ஆற்றல் இவைதான் அவரை மகா கவி ஆக்குகிறது...
3 அடுத்து பூணூல் விவகாரம்...
பெரியார் சொன்ன விளக்கம் சரியாக இருக்கலாம்.. அது வேறு பிரச்சினை.,... ஆனால் இப்போது பூணுல் போடுபவர்கள் அப்படி நினைத்தா போடுகிறார்கள் என்பதை அவாளிடம்தான் கேட்க வேண்டும்...எனக்கு தெரிந்த அளவில் ஒரு சம்பிராதாயதக்காக போடுகிறார்கள் என்றே நினைகிறேன். ( அப்படி போட்டு பயன் இருக்கிறதா என அவாள் தான் சொல்ல முடியும்.. எனக்கு தெரிந்து பல வீடுகளில், பிராமணர்களுக்கு வீடு தருவதில்லை... )
அனானி நண்பர்கள் சொல்வதை போல, பாரதி சம்பிரதாயங்களில் ஈடுபாடு மிக்கவர்.. பூணூலை பெருமையாக நினைத்தவர்... அந்த பெருமையை , பிராமண ஜாதி இல்லாத ஒருவருக்கு அணிவித்தது , அவர் அளவில் புரட்சிதானே...
உதாரணமாக இந்த அனானி நண்பர்கள் யார் என தெரியவில்லை... பதில் மட்டுமே பழக்கம்.. பதவில் மட்டும் எ தொடர்பு என்ற நிலையில், அவர்களுக்கு நான் கொடுக்க முடிந்த அதிக பட்ச கவுரவம் , அவர்கள் பின்னூட்டத்துக்கு முக்கியத்த்குவம் கொடுப்பது மட்டும்தான்...
( அவர்களுடன் நேரடி தொடர்பு இருந்தால் அது வேறு விஷயம் )
அதே போல , பாரதியார் பெரிய பணக்காரரகவோ , அமைசராகவோ இருந்து , சும்மா பூணூல் மாட்டி விட்டு இருந்தால் அது போலி தனம்...
அன்று அவர் இருந்த நிலையில், அவரால் கொடுக்க முடிந்த அதிக பட்ச கவுரம் பூணூல் மாட்டி விடுவதுதான்...
****************************************************************************************
சரி,,, இனி வருவது அனானி நண்பர்களின் பார்வை...
************************************************************************
Anonymous said...
"தாம் உயர்வாக நினைக்கும் விஷயம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது என்னத்தைதான் இதில் பார்க்க வேண்டும்'
ஏன் பாரதியார் பூணுலைப்போடுவதை உயர்வாக நினைத்தார்?
”பாரதியை போன்ற கவி உள்ளம் கொண்டவர்களால் அல்ல...”
பாரதியாருக்கு வெறும் கவி உள்ளம் மட்டுமே இருந்ததா? அவர் வெறும் கவிஞரா? அவர் கட்டுரைகளும் வரைந்தார். அவை இலக்கியக்கட்டுரைகள் அல்ல. அனல் பறக்கும் பிரச்சாரப்பீரங்கிகள். வெள்ளைக்க்காரனுக்கு எதிராக இருந்த போது அவன் அவரைத் தேடு தண்டிக்க ஆசைப்பட்டான். மற்ற கட்டுரைகள் இந்துத்வா கட்டுரைகள். படித்துப்பார்த்து விட்டு எழுதவும். அன்று முசுலிம்களும் கிருத்துவர்களும் எதிர்க்கவில்லை. இன்று பாரதி அப்படியெழுதினால், எதிர்ப்பு பலமாக இருந்திருக்கும்!
“உயிருடன் இல்லாத ஒருவர், திட்டினாலும் ஆதரவு கரம் நீட்ட ஆள் இல்லாத ஒருவருடன் மோதுவது நமக்கு எந்த பெருமையும் அளிக்காது”
நமக்கு பெருமை, சிறுமையென்றெல்லாம் இல்லை. பாரதியைப்பற்றி பலரும் பேசுகிறார்கள். உங்களை மாதிரி அவரைத் தூக்கி வைத்து. எனவே உங்களுக்கு பதில் சொல்லும்வண்ணமாக மற்றவர்கள் பேசுகிறார்கள்.
பார்தியார் ஒரு சாதாரணமான் ஆள் அல்ல. அவர் ஒரு வி.ஐ.பி அன்றும் இன்றும். இல்லாவிட்டால் அவரைப்பற்றி இன்று நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?
பொதுமனிதர்கள் இறந்தும் ஊரைக்கெடுப்பார்கள்; அல்லது வளர்ப்பார்கள். எனவே அவர்களைப்பற்றி பேசுவது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று.
“கவிதை , எழுத்து என்பதுதான் பாரதிக்கு தெரிந்த விஷயம்... அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் நடந்து கொண்டதை வைத்து அவரை தவறாக சித்தரிப்பது தவறு... ”
தப்பான கணிப்பு. பாரதியார் அப்பாவிக்கவிஞர் என்று சொல்லி அவரை இழிவுபடுத்துகிறீர்கள். அவர் அக்கால பொதுவாழ்க்கையில் நடைபெற்ற அனைத்து விசயங்களையும் ஆழ்ந்து பார்த்தார்; பொது மேடைகளிலும், தன் இதழ்களிலும் பேசினார்; எழுதினார்.
கொஞ்சம் அவரைப்பற்றி நன்கு தெரிந்து விட்டு எழுதுங்கள்.
”அவரை மகா கவி என போற்றுவது பிடிக்கவில்லை என்றால், அவர் கவிதையில், இன்னென்ன தவறு இருக்கிறது என்று சொல்வதுதான் நியாயமே தவிர...”
மீண்டும் தப்பு. மகா கவி என்று சொல்வது வெறும் இலக்கியத்திற்காக அல்ல. மேலும் பலவிசயங்களுக்காக. பாரதியாரை அதற்காகத்தான் மகா கவியென்கிறார்கள் அவர் பக்தர்கள்.
அந்த விசயங்கள் பிடிக்காத்வர்கள், அவரை ஏன் மகா கவி என்று சொல்ல்வேண்டும் எனக்கேட்கிறார்கள்.
July 22, 2010 1:00 AM
*****************************************************************
Anonymous said...
”வறுமையில் வாடினார் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பது அவரை அசிங்க படுத்துவது ஆகாது... அவரை அந்த நிலையில் வைத்து இருந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்...
”
பாரதியாரின் வாழ்க்கைபற்றி தெரியாமல் எழுதும்போது இப்படித்தான் தப்பு போடுவீர்கள்.
வறுமை பலவகைப்பட்டது. இளமையில் வறுமை. முதுமையில் வறுமை. கல்வி கல்லாமல் வேலை கிடைக்காமல் வறுமை. உடல் தாளாமல் வேலை செய்ய முடியாமல் வறுமை. அளவுக்கு அதிகமாக பிள்ளைகளப்பெற்று அவர்களை வளர்க்க போதிய வருமானம் இல்லாமல் வறுமை.
இதில் எந்த வறுமை பாரதியாருக்கு? அதை நீங்கள் ஆராயின், சமூகத்தின் தவறா/ இல்லை, பாரதியாரின் கொழுப்பா எனத் தெரியவரும்.
கொஞ்சம் படிச்சுட்டு வாரேளா ?
July 22, 2010 1:04 AM
*******************************************************************
Anonymous said...
அய்யா... நான் எழுதிய மறுமொழியில் பகத் ஐயும் வறுமையில் வாழ்ந்த ஒருவராகத்தான் சித்தரித்திருக்கிறேன். ஒருவர் வறுமையில் பிச்சை எடுத்தார் என்பதற்காக ஒருவர் மாற்று குறைந்து விடுவாரா அல்லது திருடினால் மாற்று குறைந்து விடுவாரா.
அப்படி திருடுவதற்கு ஒப்பான செயல்தான் பாரதி இழைத்த தவறு. மக்களை போராட தூண்டி விடும் எழுத்தை எழுதி விட்டு தான் மட்டும் எதிரிக்கு முதுகுசொறியும் வேலை செய்பவனை எப்படி எடை போட வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருப்பவர்களைத்தான் மக்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த சாதாரண மனித பண்பு கூட இல்லாத ஒருவரை எப்படி மகாகவி என்றெல்லாம் சொல்ல முடியும்.
சின்னமருது பற்றி ....""சின்னமருது எளியவர்; செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795 இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்குக் கடவுளின் அருள் கிட்டவேண்டும் என மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன்... மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை, எதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை'' என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தனது நூலில் குறிப்பிடுகின்றான். பாவம் அவனுக்கு மருதிருவரின் திருச்சி பிரகடனத்தின் ஆங்கில மொழியாக்கம் கிடைத்திருக்காது. அதில் வெல்ஷ் துரையின் கேள்விக்கு தனது அரசியலால் பதில் சொல்லியிருப்பான் சின்ன மருது. சரண்டையலாம் எனச் சொன்ன உதவியாளனின் முகத்தில் காறி உமிழ்வான் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த திப்பு.
கொஞ்சம் பாரதி உடன் சின்ன மருதுவை திப்புவை ஒப்பிட்டு பாருங்களேன். அதோடு பாரதியின் படித்தவன் பாதகம் செய்தால் ஐயோ... என்ற வரிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். அப்புறம் வழிமுறைதான் கொள்கையை தீர்மானிக்கிறதா... கொள்கை வழிமுறையை தீர்மானிக்கிறதா...
வேறுபட்ட ஆயுதம் என்ற வழிமுறையை விட ஒன்றுபட வேண்டிய அரசியல் முதன்மையானது இல்லையா..
தன் எழுத்தை படித்தவன் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற நோக்கமும், தான் மட்டும் தெரியாமல் எதிரி காலில் விழுந்து கிடக்கலாம் என்பதும் காரியவாதிகளின் செயல் அல்லவா.. அதாவுது நீங்கள் சொல்லும் அரசியல்வாதிகள் செயல் போல பாரதியின் செயல் உள்ளதே..
கவிஞன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவனை வறுமையில் வாட விட்ட சமூகம் வெட்கப்பட வேண்டும் என்பதும், அவனது கவிதையால் புரட்சியாளனாக மாறியவன் மாத்திரம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஜனநாயகம் போல தெரியவில்லையே..
பூணூல் பற்றி பெரியார் சொன்னது உங்களுக்கு புரியவில்லையா... அதாவது பூணூல் போடுவது எதற்கு சம்ம் என்றால், தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாத்திரம் கதவில் <>இது பத்தினிகள் வாழும் வீடு<>என எழுதி வைப்பதற்கு சம்ம் என்பார் பெரியார். பாரதி அந்தப் பையனுக்கு பூணூல் மாட்டியதன் மூலம் மற்ற சிறுவர்களின் தாயின் ஒழுக்கத்தை மனுவின் பெயரால் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்.
அதெல்லாம் இருக்கட்டும். கட்ட பொம்மனை பாடாத பாரதி, மருதுவை பாடாத பாரதி எட்டப்பன் குல வம்ச வரலாறு எழுத முன்வந்த ரகசியம் என்ன•. அதற்காக அவர் எழுதிய கடிதம் படித்து விட்டு வந்து பேசவும்.
அப்புறம் அவரு கவிஞரு மட்டும்தான் என சொல்வது தவறு. காங்கிரசு இயக்கத்தில் தீவிரவாதிகள் பிரிவின் சார்பாக மாநாட்டுக்கு போனவர்தான் அவர். தாம்ப்ராஸ் மாநாட்டுக்கும் போனவர் என்பது வேறு விசயம். ஒரு கவிஞருக்கு பூணூல் மாட்டுவதும், தாம்ப்ராஸ் மாநாட்டுக்கு போவதும் தனிமனித உரிமை என்றே எடுத்து கொள்வோம்.
மென்ஷ்விக் புரட்சியை ஆதரித்து ரசிய சோசலிச புரட்சியை எதிர்த்தும் தனது கவிதையில் எழுதியவன் பாரதி என்பதை முற்போக்காளர்கள் தமது அணிகளுக்கு எடுத்து ஆதாரம் தருவது இல்லையா..
?
July 22, 2010 3:11 AM
*****************************************************************
Anonymous said...
நான் அனானி 1 AM.
மேலும் ஒன்றைக்குறிப்பிடலாம்.
பாரதியின் இந்துத்வா கொள்கைகளின் ஒன்று வருணாஷ்ரம். அதை அவர் கடுமையாக ஆதரித்து எழுதினார். அது இந்துமதக் கொள்கையின் தூண்களுள் ஒன்று என்றார். அது நாட்டுக்கு நன்மை. அதன்படி பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) மூன்று முறை தவறாமல் வேதமோதினால், மாதம் மும்மாரி பெய்யும் என்றார்.
ஜாதிகள் வேறு; வருணங்கள் வேறு. என்றார். பூனைக்கதையில் வருணாசிரமக்கொள்கையை வெளிப்படுத்தி, மக்களும் வெவ்வேறாகத்தான் பிறக்கிறார்கள்; ஆனால் சண்டை போடாமல் வாழ்வோம் என்றார். அவர் சொல்வது யாதெனில், பிராமணன் பிராமணாகவிருந்து வேதமோதவேண்டும், செட்டி வியாபாரம்; சத்திரன் போர்க்குணம், சூத்திரன் மற்றவருக்கு ஏவல் செய்பவன் என்னும் வருணக்கொளகையை வைத்தே பூனைக்கவிதை எழுதினார்.
இவ்வளவும் செய்து விட்டு:
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றார்.
ஒரு தலித்துக்கு பூணுல் போடுகிறேன் என்று செய்து, பாப்பாவுக்கு சாதிகள் இல்லையென்று சொல்லிவிட்டு,
தான் தன் மகளுக்கு சுத்தமான ஆச்சார பிராமணக்குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்துக் கட்டிவைத்தார்.
பெண்ணடிமைத்தனத்தை வெறுப்பது போல எழுதி, பெண்கள் ஆண்கள் சொற்கேட்டு நடக்கவேண்டும் என்னும் இந்து மரபைப் போற்றினார்.
போலீஸ் தேடிவந்த போது புதுச்சேரிக்கு சென்று விட்டார் (ஓடிவிட்டார் என்று நான் எழுதவில்லை. நீங்கள் கோபப்ப்டுவீர்கள்). அப்பத்திரிக்கையின் பங்குதாரை பிடித்து அரசு தண்டனை வழங்கியது. தன் குற்றத்திற்காக ஒரு அப்பாவி தண்டனை வாங்குகிறானே என்று மனசாட்சி குத்தவில்லை. சவுகரியமாக புதுச்சேரி வாழ்க்கை. அங்கே குயில் பாட்டும், பாஞசாலி சபதமும் எழுத, இங்கே அவரிடத்தில் இன்னொருவன் சிறைத்தண்டனை அனுபவிக்கிறான். இவர் ‘அச்சமில்லை..அச்சமில்லை’ என்றும் பாட்டெழுதினார்.
தன் மனைவியையும் மக்களையும் தவிக்கவிட்டுவிட்டு காசிக்கு யாரிடமும் சொல்லாமல் போய்விட்டார். கிடைத்த வேலைகளை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, தான் தோன்றித்தனாமாக வாழ்ந்த கட்டிய மனைவியையும் பெற்ற மக்களையும் பட்டினி போட்டார்.
பாரதி ஒரு நல்ல மனிதன் அல்ல. நல்ல கவிஞன் என்று சொன்னால் போதும்.
ஒடுங்கு பண்பு தவறான வழிகாட்டினால் பின்பற்றுபவனின் தவறுதான் காரணம் என்ற நியாயம் உங்களுக்கே அநியாயமாக தெரியவில்லையா. அவன் கவிஞன் அவன் எழுத்தை விமர்சி அவனது அரசியலை விமர்சிக்காதே என்பது கலை கலைக்காகவே என்று வாதிடும் மனிதர்களின் கூற்றல்லவா.. கலையும் இலக்கியமும் சமூகத்தில் இருந்துதானே தோன்றியது. வானத்தில் இருந்து யாரும் அறியாத நடு ஜாமத்தில் கவிதைக் கடவுள் பாரதியின மூளையில் குதித்து எழுத வைத்த ஒன்று இல்லையே.. இந்த மனிதனின் ஒடுங்கு பண்பு தேசியம் என்றால் எதற்காக அவன் தேசிய கவி என அழைக்கப்படுகிறான். வேண்டுமானால் தேச துரோக கவிஞன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஒரு மனிதனின் சாரம் அவனது சமூக நடவடிக்கைகளால் மாத்திரம்தான் அளவிடல் வேண்டும். ஒரு போராளி தனது சொந்த வாழ்க்கையில் தவறிழைத்தாலும், ஒரு எளிய விவசாயி தவறிழைத்தாலும தவறுக்கு தண்டனை ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். ஒரு கவிஞன் பொறுக்கித்தனம் செய்யும் நோக்கில் பெண்களிடம் நடந்து கொண்டால் அந்த பொறுக்கித்தனத்திற்கு ஒடுங்கு பண்பு எனப் பெயரிட்டு அவனை எந்த நீதிமன்றமும் விடுவித்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா..
ReplyDeleteபடைப்பை படைத்தவுடன் படைப்பாளி இறந்து விடுவான் என்றும் படைப்பை படிவப்பவன் தலையெழுத்திற்கெல்லாம் படைப்பாளி பொறுப்பு அல்ல என்றால், எழுதுவது எதற்காக என்ற குறைந்த பட்ச புரிதல் கூட கேள்விக்கு உள்ளாகிறது. டைரி எழுதியிருந்தால் பாரதி பற்றி நமக்கு என்ன இருக்கிறது. விடுதலை போன்ற அரசியல் சொற்களை எல்லாம் பேசிவிட்டு பொழுதுபோகாமல்பேசினேன் என்று மக்களிடம் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. எட்டப்பனிடமும், ஆங்கிலேயரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன•. ஒருவேளை அவரது கவிதா அனுபவத்தை அவர்கள்தான்பெற்றிருப்பார்களோ...
புரட்சி என்பது சமூகம் சார்ந்த ஒன்று. என்னளவில் புரட்சி என்று எனக்கு பிடித்த ஆனால் சமூகத்திற்கு தீங்கான ஒன்றை நான் செய்ய கூடாது இல்லையா.. பாரதி செய்த ஒன்று அதுதானே... தவறை சாமானியன் செய்தால் தவறில்லை என்ற கோணம் பற்றி உங்களுக்கு கூச்சமாக இல்லையா.. சாதாரண நபர் என்று நான் சொல்லவில்லை. நீங்கள்தான் சொல்லி இருக்கின்றீர்கள்.
?
//அன்று அவர் இருந்த நிலையில், அவரால் கொடுக்க முடிந்த அதிக பட்ச கவுரம் பூணூல் மாட்டி விடுவதுதான்...//
ReplyDeleteபூணுல் அணிந்தால் கவுரம் என்பது பாரதியின் பார்வையாக இருக்கலாம். உங்கள் பார்வையும் அதுவா?
ஒரு தலித்துக்கு பூணுல் போட்டுவிடுவதை விட அவனை ஒரு வேலை செய்யும் திறனை (professional skill) கொடுத்தால் அது அவனை மட்டுமல்ல; அவன் சந்ததியினரையும் உயர்த்தும். அதைத்தான் மிசுனோரிகள் செய்தார்கள். இன்று இந்து அமைப்புக்களும் செய்கின்றன. இந்து அமைப்புகள் பூணுல் போட்டு தலித்துகள் கவுரம் பெறலாம் எனச்சொல்லவில்லை.
எல்லாவற்றையும் விட சிறந்தது: ‘ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்’ எனச்சொன்ன பாரதி, அதற்காக என்ன செய்தார்? மிசுனோரிகளைப்பாராட்டினாரா? அல்ல, அவர்கள் செய்கிறார்கள், நீங்கள் ஏன் செய்யவில்லை என இந்து அமைப்புகளை உசுப்பினாரா? இல்லை..இல்லை. பூணுலைபோட்டார்.
அவர் இருந்த நிலையில், இதைவிட பலவிடயங்களை தலித்துகளுக்கு அவர் செய்திருக்கலாம். செய்யவில்லை. பாடல்கள் கூட அவர்களுக்காக எழுதவில்லை. எழுதிய பாடல்கள் வருணாசிரமத்தை உயர்த்தித்தான் பிடித்தன.
//இதனால் எல்லாம, அந்த புத்தகத்தை எழுதியவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதில்லை... அந்த புத்தகங்கள் இன்னும் பரபரப்பாக விற்பனை ஆகின்றன... உண்மை என நினைத்துதான் எழுதிகிறார்கள்.. அதை சந்தேக பட முடியாது... அந்த புத்தகங்கள், பலருக்கு பயன் அளித்து வருகின்றன என்பதுதான் முக்கியம்....
ReplyDeleteஇன்னும் தெளிவாக சொன்னால், அச்சமில்லை என்று பாடிய பாரதியார் இருட்டில் செல்ல பயப்படும் தன்மை கொண்டவர்...அதானால் என்ன்ன.. அந்த பாடல் நமக்கு தைரியம் அளிக்க்றதே.. அந்த சொல்லின் வீர்யம் , மொழி ஆற்றல் இவைதான் அவரை மகா கவி ஆக்குகிறது//
பாரதி சாதாரண மனிதரல்ல. அப்படியே அவரிந்தாலும், அப்படியே நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டாலும், பொதுப்பாரவை என்ன? பள்ளிகளிலும் வ்லைபதிவுகளிலும் அவர் எப்படி சித்தரிக்க்ப்படுகிறார்? மாமனிதராக..மாகவியாக...
எனவே, அவரின் பிம்பமும் அவரின் வாழ்க்கையும் வேறாக இருக்கும்போது அதிர்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.
அவரை பாமரமனிதனை எடைபோடும் அளவுக்கோலை வைத்து பார்த்தல் சரியா?
ஒரு பிரபல நடிகன் சிகரட்டு பிடித்தால், அது அவனை ஹீரோவாக்கப்பார்ப்பவர்களையும் பாதிக்கும்.
ஒரு பாமரன் பிடித்தால், அவன் குடும்பத்தை மட்டுமே பாதிக்கும். I mean the impact.
ஒரு பிரபல நடிகை பல ஆண்களுடன் தொடர்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் கற்பைப்பற்றியோ, எப்படி நல்ல மனைவியாக வாழவேண்டும் என்றோ கதைத்தால், எப்படி இருக்கும்?
எனவே உங்களது வாதம் எழுத்து வேறு, எழுத்தாளர் வேறு என்பதென்னவோ ஒரு பாமர எழுத்தாளனுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம்.
மாமனிதன், மாகவி எனப்பார்க்கப்படும் பாரதிக்கு ஒத்துவராது.