நேற்று மாலை, பேருந்து நிறுத்தத்தில் சண்டை..என்ன வென்று பார்த்தால், பேருந்து ஜன்னல் வழியாக யாரோ எச்ஹில் துப்பியது ஒருவர் மேல் பட்டுவிட்டது... அதுதான் பிரச்சினை...
படித்தார், ப்னபானவர் போன்ற தோற்றம் உடைய ஒருவரும், அழுக்காடை அணிந்த பாமரர் போன்ற ஒருவருக்கும் சண்டை..
பாவம்... விலை உயர்ந்த ஆடை அணிந்து ஏதோ முக்கியமான வேலைக்கு செல்பவர் மேல் வெற்றிலை எச்சிலை துப்பி விட்டார் என நினைத்தேன்..அனால் கறை ஏதும் தெரியவில்லை..பிறகுதான் தெரிந்தது... துப்பியவர் , படித்த கனவான் என்று..
ஆனால் அவர் மேல் எனக்கு வருத்தம் இல்லை.. அவரது ஆசிரியர்கள் மீதும் , பெற்றோர்கள் மீதும்தான் வருத்தம்...
ஜிட்டு கிரூஷ்ணமூர்த்தி சொல்வார் ... நமது பிரச்சினை மாணவர்களும் குழந்தைகளும் அல்ல... பெற்றோகளும் ஆசிரியர்களும்தான் ...
நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளி... சின்ன வயதிலே பண்பை கற்று தருவார்கள்.. கண்ட இடத்தில் எச்சில் துப்ப கூடாது, சாபஈடும்போது கை முழுக்க பட கூடாது, விசில் ல் அடிக்க கூடாது போல பலவற்றை சொல்வார்கள்..
அங்கு பணியாற்றிய சிஸ்டர்கள் , மாதர் ஆகியோர் கல்வியுடன் , பண்பையும், அனுபடன் சேர்த்து போதித்தார்கள்..... அவர்கள் நினைத்து இறந்தால், அன்பாலே என்னை மத மாற்றம் செய்து இருக்க முடியும்... ஆனால் ஒரு போதும் அப்படி செய்தது இல்லை..
அதானேலேயே எனக்கு பைபிள் மீது ஈடுபாடு ஏற்பட்டது... என் கிறிஸ்தவ நண்பர்களை விட இன்று பைபிள் நன்றாக தெரியும்....
இன்றும் கூட என்னால் பொது இடத்தில் எச்சில் துப்ப முடியாது.... மற்றவர்களை மரியாதை குறைவாக பேச முடியாது என்பதற்கு அவர்களுடன் கற்ற பாடம்தான் காரணம்...
அன்று அவர்கள் கண்டிப்பாக இருந்ததை நினைத்து இன்று பெருமையாக இருக்கிறது..இன்றும் கூட பழைய ஆசிரியர்களை பார்த்தால் , உரிய மரியாதை கொடுப்பது என் வழக்கம்...
ஆகவே, ஒழுக்க குறைவான செயல்களை பார்த்தால் எனக்கு தோன்றுவது, ஆசியர்கள் சரியில்லை என்பதே...
ஒழுக்கம் என்றால், நம் தமிழ் மக்களுக்கு ஆண்-பெண் உறவு பற்றி மட்டுமே ஞாபகம் வரும்..
அது மட்டும் ஒழுக்கம் அல்ல... கண்ட இடத்தில் குப்பை போடாமல் இருப்பது, எச்சில் துப்பாமல் இருப்பது, தண்ணி அடித்து விட்டு வண்டி ஒட்டாமல் இருப்பது, செல் போனில் பேசிக்கொண்டே பைக் ஒட்டாமல் இருப்பது என நிறைய இருக்கிறது..
பாதிக்கப்பட்டதை பார்த்தால், இதை எழுத தோன்றியது...
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
July
(28)
- தேடினேன் வந்தது
- நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை
- ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??
- அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்
- அவன் அவள் அது U/A
- அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்
- போபால் கொடுரமும், போராட்டமும்
- துப்பார்க்கு துப்பாக்கி....
- பாரதியும் மாற்று பார்வைகளும்
- ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
- பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
- ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா
- பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...
- பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...
- அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...
- காதல் பிசாசே..காதல் பிசாசே..
- சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
- ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
- விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சார...
- matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...
- யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
- பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
- மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
- மைக்ரோ கதைகள்
- செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...
- கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
- தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
- தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்
-
▼
July
(28)
padikkum idam mukkiam all nanabre..enna karkirom enbathe mukkiyam
ReplyDeleteஒழுக்கம் விழுப்பம் தரலால் -----------------------------------
ReplyDeleteபகிர்விற்கு நன்றிங்க..
ReplyDelete