
தன அழகாலும் , கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அசின், தனக்கு நகைச்சுவு உணர்வும் உண்டு என்பதை நிருபித்து இருக்கிறார்.
இலங்கை செல்ல கூடாது என பலரும் தடுத்த போது, போயே தீருவேன் என்று சொல்லி விட்டு போய் விட்டு ராஜபக்ஷே மனைவியுடன் போட்டோ எடுத்து கொண்டார்,,,..
நடிகர்கள் போவதை எதிர்த்தவர்கள் கூட, நம் கிரிக்கட் அணி அங்கு போவதை எதிர்க்கவும் இல்லை... அட்லீஸ்ட் அந்த மேட்ச்களை பார்க்காமலும் இல்லை... நன்றாக பார்த்து ரசித்தார்கள்.. அது வேறு பிரச்சினை..அதை விடுங்கள்..
இந்த நிலையில், அசின் நடிகர் சங்க முடிவுக்கு கட்டுபடுவேன் என பேட்டி கொடுத்து இருந்தார்,, எனக்கு பயங்கர ஆச்சர்யம்... நடிகர் சங்கம் இனியல் இலங்கை செல்ல கூடாது என சொல்லி விட்டால், கிடைக்கும் பணத்தை புறக்கணித்து விட்டு போகாமல் இருந்து விடுவாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்.
நடிகர் சங்கம் என்ன சொன்னது..எதற்கு இவர் கட்டுப்பட போகிறார் என பார்த்ததும்தான், அவரது நகைசுவை உணர்ச்சி புரிந்தது..
இலங்கை செல்லும் நடிகர்களை மிரட்ட கூடாது என நடிகர் சங்கம் சொல்லி இருக்கிறது..இதற்குதான் இவர் கட்டுப்பட போகிறார்,,,..
அதாவது இனிமேல் யாரவது இலங்கை சென்றால், அசின் அவர்களை மிரட்ட மாட்டார்... ( அவரையும் யாரும் மிரட்ட கூடாது )
அட ஆண்டவா... ( அட இயற்கையே ... அட அருட்பெருன்ஜோதியே.. அட அருட்பெராற்றலே )
நல்லா நடிக்கிறான்கப்பா எல்லோரும் இதிலையாச்சும் நடிங்க
ReplyDelete