Pages

Thursday, July 29, 2010

அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்

" என்னை இந்த பூனை குட்டியா மாத்திடுங்க "

சாமியார் சற்றே ஆச்சர்யத்துடன் என்னை பார்த்தார்... என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னவர் , இப்படி நான் கேட்பேன் என எதிர்பார்க்கவில்லை...

நான் அப்படி கேட்டதில் ஒரு காரணம் இருக்கிறது..

நான் உண்டு ,,என் படிப்பு உண்டு என இருக்கும் பையன் நான்... நல்லவன்..நாணயமானவன்.. நன்றாக படிக்க கூடியவன்.. என் வகுப்பில் எல்லா தேர்வுகளிலும் முதல் ரேங் நான்தான்...

பக்கத்து வீட்டுக்கு , ஷைலஜா குடி வந்ததில் இருந்துதான் எனக்குள் பல ரசாயான மாற்றங்கள்... அவள் பேச்சும், ஸ்டைலும், அவள் நடையும், இடையும்.ஹ்ம்ம்.... என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை... என்னை விட பெரியவள்... கல்லூரி மாணவி..

காதலித்து திருமணம் செய்யும் சாத்தியம் இல்லாமல் போனது வருத்தம்தான்..

ஒரு நாள் அவள் வீட்டுக்கு போய் இருந்தேன்... வீட்டில் யாரும் இல்லை...

" வெய்ட் பண்ணு ரவி..இதோ வந்துடறேன் " ருமில் இருந்து குரல் கேட்டது..

சற்று நேரத்தில் வெளியே வந்தாள்.. அப்போதுதான் குளித்து விட்டு , புதிய ஆடை அணிந்து இருந்தாள்.
இந்த டிரச்லையே இப்படி இருக்காளே.. இது இல்லாட்டி... எனக்குள் சிந்தனை தறி கேட்டு ஓடியது..

அப்போதுதான் என் கண்கள் அவளது வளர்ப்பு பிராணியான பூனை மேல் படிந்தது..

பொதுவாக பூனையை யாரும் வளர்க்க மாட்டார்கள்... அது சொன்ன பேச்சு கேட்காது... சுதந்திரமான போக்கு கொண்டது..

இவள் வித்தியாசமக இருக்கிறாள்... பூனை மேல் எனக்கு பொறாமை ஏற்பட்டது..

இவ்வளவு நேரம் பூனையும் உள்ளேதான் இருந்தது... அதாவது அவள் டிரஸ் மாற்றும் போது அந்த பூனை பார்த்து இருக்கும்..
ஹ்ம்ம்...
அந்த பூனையாக நான் இருந்திருக்க கூடாதா...

" அப்பாவை பார்க்க வந்தேன் " நான்..

" கொஞ்சம் வெய்ட் பண்ணு ,. வந்துடுவார்... " சொல்லிவிட்டு டிவி பார்த்ததில் எனக்கு வருத்தம் இல்லை... ஆனால் அப்போது அவள் மடியில் இருந்த பூனை மேல்தான் எனக்கு வருத்தம்..அதுவும் அவள் அதை அன்போடு கட்டி பிடித்தபோது, அதன் முகம் உராய்ந்த இடங்கள்... எனக்கு வயிறு எரிந்தது...


****************************
எப்போதும் பைக்கில் செல்லும் நான் அன்று நடந்து சென்றேன்... சாலை ஓரத்தில் ஒரு பெரியவர் மயங்கி கிடந்தார்... ஏதோ தானி பார்ட்டி என யாரும் கண்டு கொள்ள வில்லை..
எனக்கு பாவமாக இருந்தது...தண்ணிர் கொடுத்து எழ செய்தேன்...

மெதுவாக கண் திறந்தார்... கையில் இருந்த பிஸ்கட்டை கொடுத்தேன்.. நல்ல பசி போல...

சாப்பிட்டார்...

"உண்டி கொடுத்தவர்கள், உயிர் கொடுத்தவர்கள் போல... தம்பி உனக்கு நன்றி... நான் இமயமலைல இருந்து வர்றேன்... உனக்கு என்ன வேணுமோ கேளு தர்றேன் "என்றார்..

" சாபாட்டுகீ வழி இல்ல்லதவர் என்ன தர முடியும் " நினைத்து கொண்டேன்..

என் நினைப்பை புரிந்து கொண்டது போல பேசினார் " என் சக்தி எனக்கு பயன்படாது.. என்ன வேணுமோ கேள் ..என்னால் தர முடியும்..மந்திர சக்திகள் என்னுள் நிரம்பி உள்ளன " என்றார்...

எனக்குள் நம்பிக்கை வந்தது..சரி கேட்டு பார்ப்போம்... கிடைத்தல் நல்லது..இல்லைனா நஷ்டம் ஒன்னும் இல்லை...

" சாமி .என்னை பக்கத்து வீட்டு பூனையா ஒரு நாள் மட்டும் மாத்துங்க " என்றேன்..

அப்படியே ஆகட்டும்... ஒரு நாள் நீ பூனை ஆவாய்.. அந்த பூனை உன் உருவில் ஒரு நாள் இருக்கும் " என்றார்..

***************************************************************
திடீரென சிறிய உருவம் ஆனது சற்று சங்கடமாக இருந்தது..ஆனால் பழகி விட்டது... தாவி குதித்து ஓடுவது உற்சாகமாக இருந்தது... பழக்க தோஷத்தில் என் வீட்டுக்குள் நுழைய இருந்தேன்... பூனை வடிவில் இருக்கும் வரை எனக்கு வீடு எதுவும் இல்லை... ஷைலஜா வீட்டில்தான் ஓரளவுக்கு உரிமை உண்டு என புரிந்தது.. அவள் வீட்டுக்குள் பாய்ந்தேன்......

என்னை வாரி தூக்கியவள், என் மூக்கை திருகி கொஞ்சினாள்.. எனக்கு கஷ்டமாக இருந்தது... சீலம்..இந்த பிள்ட்ல பால் இருக்கு ,,.,"குடிசுகிட்டு இரு... நான் குளிச்சுட்டு வர்றேன்... "

அறைகதவை சாத்தி விட்டு , அட்டாச்ட் பாத் ரூமுக்குள் நுழைந்தாள்.. பாத்ரும் கதவை சாத்தவில்லை... அனாலும் உள்ளே பார்க்க முடியவில்லை

ஒவ்வொரு ஆடையாக கழட்டி ஹன்கரில் மாட்டுவதை பார்க்க முடிந்தது..... ஆனாலும் அவளை பார்க்க முடியவில்லை.. குளிக்க ஆரம்பித்தாள்..

திடீரென உள்ளே புகுந்தேன்...

"இங்கே ஏன் வந்தாய் " இவள பேச்சை கேட்க எனக்கு நேரம் இல்லை... அங்கிருந்த எலியை கவ்வி கொண்டு வெளியே வந்தேன்...

சிறிது நேரத்தில் வெளியே வந்த அவள், எலியை எடுத்து வெளியே தூக்கி எறிந்தாள்... எனக்கு பயங்கர கோபம்...

அவள் ஆடை மாற்ற ஆரம்பித்தாள்.. என் கவலை முழுதும், எலி மேலேதான் இருந்தது...

சற்று நேரத்தில் என்னை தூக்கி கொண்டு வெளியே வந்தாள்...

எதிர் வீட்டு பையன் ரவி காத்து இருந்தான்.. அப்பாவை பார்க்கணும் என்றான்...

கொஞ்சம் வெய்ட் பண்ணு என்றாவாறு டி வீ யை ஆன் செய்தாள்..

ரவியை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன்... அவன் கையில் அழகான பெண் பூனை.. எனக்கு ஜிவ் என ஏறியது... என் உணர்ச்சியை புரிந்து கொள்ளாத ஷைலஜா , என்னை தன மடியில் வைத்து கட்டி பிடித்து கொண்டாள்..
எனக்கு பயங்கர எரிச்சல்.. சரியான வில்லி என தோன்றியது...இவளிடம் இருந்து தப்பி ஓடி அந்த பூனையுடன் ஓடி பிடித்து விளையாட என் ஆன்மா துடித்தது..

ரவிப்பயல் என்னை ஏன் பொறாமையோடு முறைக்கிறான் என எனக்கு சற்றும் புரியவில்லை....

12 comments:

  1. அருமையா எழுதறிங்க தல........

    ReplyDelete
  2. கதை எழுத நல்லா வருது பார்வையாளன்
    ஒரு சின்ன நாட் .
    கதை அழகா உருவேறுகிறது தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. It is nice to get appreciated by a short story master

    ReplyDelete
  4. அருமையா எழுதுறீங்க. கொஞ்ச நாள் முன்பாகத்தான் உங்க வலைப்பக்கத்திற்கு அறிமுகமானேன். படித்த ஒன்றிரண்டு கட்டுரைகளில், உங்களது எளிய நடை பிடித்து எல்லா கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். அழகாக சொல்ல வந்தததை சுருக்கமா சொல்லும் கலை உங்களுக்கு நன்றாக வருகிறது. நிறைய எழுத வேண்டும் நீங்கள். முக்கியமாக சிறுகதைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். பிரசுரிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். வாழ்த்துகள்.

    நான்..

    ReplyDelete
  5. கதை நல்லாயிருக்குங்க... :-)

    ReplyDelete
  6. "அழகாக சொல்ல வந்தததை சுருக்கமா சொல்லும் கலை உங்களுக்கு நன்றாக வருகிறது.."

    thank u.. இன்னும் நன்றாக எழுத, தமிழை மெருகூட்ட முயல்வேன்

    ரோஸ்விக் said...

    கதை நல்லாயிருக்குங்க... :-)
    July 30, 2010 5:05 PM
    மங்களூர் சிவா said...

    nice
    :)))



    thank uuuuu

    ReplyDelete
  7. அன்பின் பார்வையாளன்
    கதை நன்கு உள்ளது - ரவி என்ன யாருமே முறைக்கத்தான் செய்வார்கள்
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]