Tuesday, July 6, 2010
யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
நேற்று அலுவலகம் சென்ற எனக்கு ஆச்சர்யம்.. லீவே எடுக்காத என் நண்பன் வரவில்லை...
இன்றுதான் காரணம் தெரிந்தது..
" ராவணன் படம் பார்க்கணும் போல இருந்துச்சுடா மச்சான் .. அதான், நம்ம மக்களோட போயிட்டு வந்தேன் " என்றான்.
"அதான் போன வாரமே பார்துட்டியேடா ? "
" ஆமாண்டா,,ஆனாலும் இன்னொரு முறை பார்க்கணும் போல இருந்துச்சு "
ராவணன் படத்தை குப்பை என உலகமே சொல்லும் போது கூட , அதை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரயமாக இருந்தாலும், இது இயல்புதான் என் புரிந்தது.. ரசனை பல விதமாக இருக்கலாம்.. அது அவரவர் விருப்பம்...
ராவணன் படத்தை ரசிப்பவர்கள் குறைவு என்பதால், அதன் ரசிகர்களை ஆராயும் ஆவல் எனக்குள் எழுந்தது... உங்களுக்கும் ஓர் ஆவல் இருக்கும்..இதை கூட ரசிக்கிறார்களா ?
ஆமா ..அதை உண்மையிலேயே ரசித்து பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்... அவர்கள் குறைவு என்பதால், அவர்களின் பொது தன்மையை வைத்து, யாருகேல்லாம் இந்த படம் பிடிக்கிறது என பட்டியல் இடுவது எளிது... இதோ அந்த பட்டியல்..
யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடித்து இருக்கிறது ?
* வெளிப்படையான ஆபாசம் இருப்பதை விரும்பாதவர்கள்..
* பார்த்ததும் காதல், கதாநாயகி மலையில் இருந்து குத்திதால் கூட சாகாமல் இருப்பது போன்ற சினிமத்தனங்கள் வேண்டும்.ஆனாலும் அது அறிய் ஜீவி முகமூடி அணிந்து இருக்க வேண்டும் என்ற பாமர மனப்பான்மை கொண்டவர்கள்..
* வினோதமான சப்தங்கள் எழுப்புவதுதான் நடிப்பு என நினைப்பவர்கள்.. அதை கடைசியில் கதாநாயகி செய்து காட்டுவது, நடிப்பின் உன்னதம் என மனம் நெகிழ்பவர்கள்.
* இசை, ஒளிப்பதிவு - இவை மட்டுமே சிறந்த படத்தின் இலக்கணம் என நினைப்பவர்கள்..
* யாரை இழிவு படுத்துகிறது என்ற வராலாற்று காரணங்களையோ, மற்ற நாட்டு நடப்புகலையோ அறியாத சுக வாசிகள்.
* இலக்கணத்துக்குள் இருக்கும் எல்லை மீறாத கதையை விரும்பும் நல்லவர்கள்.
* கதாநாயகன் என்றால் அழகாக , மென்மையாக, சற்றே பெண்மை தனத்துடன் இருக்க வேண்டும்,அவனே வெல்ல வேண்டும் என விரும்பும் மெல்லிய இதயம் படைத்தவர்கள்.
* காட்டுக்குள் மாட்டி கொள்ளும் திருமனான கதாநாயகன் , அங்கு யாரவது ஒரு பெண் அன்பு காட்டினால், அவளுடன் காதல் கொண்டால் ஏற்க முடியும்.. ( இப்படி பல படங்கள் வந்துள்ளன ) .. ஆனால் ஒரு பெண் அப்படி காதல் கொள்ள கூடாது ..அப்படி இருந்தாலும் அது மறை முகமாக ( இந்த படம் போல ) காட்டப்பட வேண்டும் என விரும்பும் சிந்தனைவாதிகள்.
* ஒருவனை உயர்த்தி காட்ட வேண்டுமானால் அவன் தங்கை கற்பழிக்கப்பட்ட வேண்டும் என்ற தமிழ் சினிமா விதியை மீறாத கதை அம்சத்தை விரும்பும் கதா ரசிகர்கள்..
* நல்ல படத்துக்கு இலக்கணம் , அது பிளாப் ஆவதுதான் என நினைப்பவர்கள்.
இவர்களுக்கு எல்லாம் இந்த படம் பிடித்து இருக்கிறது...
அதை தவறு என்று சொல்வது நியாயம் அல்ல... ரசனை என்பது ஆளாளுக்கு மாறக் கூடியது...
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
July
(28)
- தேடினேன் வந்தது
- நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை
- ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??
- அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்
- அவன் அவள் அது U/A
- அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்
- போபால் கொடுரமும், போராட்டமும்
- துப்பார்க்கு துப்பாக்கி....
- பாரதியும் மாற்று பார்வைகளும்
- ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
- பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
- ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா
- பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...
- பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...
- அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...
- காதல் பிசாசே..காதல் பிசாசே..
- சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
- ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
- விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சார...
- matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...
- யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
- பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
- மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
- மைக்ரோ கதைகள்
- செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...
- கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
- தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
- தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்
-
▼
July
(28)
:)))
ReplyDeleteரசனை என்பது ஆளாளுக்கு மாறக் கூடியது..
ReplyDeleteஇந்த பார்ப்பன சிந்தனை செயல்களைக்கொண்ட பருப்புகளுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை என்றால் கூட மத்தவங்க இப்படிதான்
ReplyDeleteஎன்று நினைக்கிற உன்னைப்போல ஆள்களுக்கல்லாம் இந்த படம் சுத்தமாக பிடிக்காது தான்.
சிந்தனைப் புளி...
ReplyDeletewow! என்ன ஒரு பரந்த மனப்பான்மை!
ReplyDelete//அதை தவறு என்று சொல்வது நியாயம் அல்ல... ரசனை // என்ற உங்கள் வார்த்தைகள் உண்மையில் உங்களின் தரக்குறைவான மனப்பான்மையை தான் காட்டுகிறது. பாவம். இதையும் இவர்கள் ரசிக்கிறார்கள். கேவலமான மனித பிறவிகள். போகட்டும் விடுங்கள் என்ற மனோபாவமே உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.
உங்களுக்கும் If you are not with us, you are against us என்ற ஜார்ஜ் புஷ்-க்கும் என்ன வித்யாசம்?
உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று பட்டியலிட மட்டுமே உங்களுக்கு உரிமை இருக்கிறது. மற்றவர்களுக்கு ஏன் பிடித்திருக்ககூடும் என்று பட்டியலிட அல்ல.
நண்பர் ரவி அவர்களே , படத்தின் குறைகளை சுட்டிக் காட்டுவதுதான் என் நோக்கம் . ரசித்தவர்களை புண்படுத்தி விட கூடாது என கவனமாக இருந்தும் , தவறான தொனி வந்திருந்தால் வருந்துகிறேன்.
ReplyDeleteoru pataippai thavaru entru solla enna thaguthi ullavar yar?
ReplyDeleteரவியின் பின்னூட்டம் அருமை. வழி மொழிகின்றேன்.
ReplyDeleteயாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கவில்லை?
ReplyDelete> இயற்க்கையின் அழகை ரசிக்க தெரியதவர்கள்.
> கவிதையாய் வழ்க்கையை வாழ தெரியதவர்கள்.
> இசையை ரசிக்க தெரியாதவர்கள்.
> வெளிப்படையான ஆபாசம் இருப்பதை விரும்புபவர்கள்.
> கதாநாயகன் இறந்துபோனால் மனம் தாழ்ந்து போரவர்கள்.
> பழமைவாதிகள்
ஐ வழிமொழியிங்க் ரவி...
ReplyDelete