Wednesday, July 14, 2010
அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்டும் , புட்பாலும்
அனந்த புரத்து வீடு படம் ரிலீசுக்கு கிடைத்த கவனம கூட , பி எஸ் எல் வி ராக்கெட் ஏவப்படதுக்கு கிடைக்கவில்லை...
ராக்கெட் என்பது விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்டது ..இதனால் நமக்கு என்ன பலன் என்றே பெரும்பாலோநூர் நினைன்றனர் ( வலை பதிவர்கள் இப்படி நினைக்க வாய்ப்பில்லை )
செயற்கைகோளின் பலன் என்ன, பி எஸ் எல் வி, ஜி எஸ் எல் வி என்றால் என, அதில் இருக்கும் சுவையான தகவல்கள் என்ன, நுணுக்கங்கள் என்ன என்பதையெல்லாம் இன்னொரு முறை பார்க்கலாம்...
என் கவனத்தை கவர்ந்தது, கால் பந்தாட்ட போட்டியில், ஆக்டோபஸ் பெற்ற கவனமும், ராக்கெட் ஏவப்பட்டபோது, ஆலய வழிபாடு செய்யப்பட்டது போதிய கவனம் பெறாததும்தான்...
எப்போதுமே , மனிதனுக்கு தன்னை விட மேலான சக்தியை நம்புவது பிடித்தமான ஒன்று...
( john grey யின் இந்திய சாமியார் பக்தி குறித்து நான் எழுதியதை படித்து இருப்பீர்கள் )
இது போன்ற நம்பிக்கை, இந்தியாவுக்கு மட்டுமே சொந்தம் அல்ல... உலகம் முழுதும் இப்படி நம்பிக்கை இருக்கிறது..
பாமரன் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரிடமும் ஒரு வித நம்பிக்கை இருப்பதை பார்க்கலாம் ( குறிப்பிட்ட பேனாவைத்தான் , சிலர் தேர்வுகளுக்கு எடுத்து செல்வார்கள் )
ஆக்டோபஸ் நம்பிக்கையும், ஆண்டவன் நம்பிக்கையும் ஒன்றா என்பது கேள்வி...
இல்லை... ஆக்டோபஸ் என்பது , சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள், சும்மா ஆருடம் கணிப்பது...
ஆண்டவன் நம்பிக்கை என்பது , சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள், வெற்றிக்காக வேண்டி கொள்வது...
அறிவியலை நம்பாமல் , ஆண்டவனை நம்பலாமா? இது தவறில்லையா ? அடுத்த கேள்வி....
தவறுதான் ....
அறிவியலை நம்பாமல், ஆலய வழிபாடு மட்டும் போதும் .. ராக்கெட் பறந்து விடும் என நினைத்தால் தவறுதான்...
ஆனால், அவர்கள் அப்படி இருந்தது போல தெரியவில்லை... அறிவியலை முழுதும் நம்பி, உழைத்து, பல கணகீ டுகளை செய்து, தயார் நிலையை எட்டியதும், ஆலய வழிப்பட்டு செய்து இருகக ர்கள்..
நமது விஞ்ஞானிகள் , ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட வேண்டுமென்பதற்காக திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கின்றனர். இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் உட்பட பல விஞ்ஞானிகள் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்திருக்கின்றனர். ராக்கெட்டின் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் பாதத்தில் வைத்து சிறப்பு வழிபாடும் நடத்தியிருக்கின்றனர்
ஆலய வழிபாடு செய்ததால்தான் வெற்றி கிடைத்ததா , என நமக்கு தெரியாது... ஆனால், எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற அவர்கள் ஆர்வம் இதில் தெரிகிறது...
ஆலய வழிபாடு செய்தும் தோல்வி அடைந்து இருந்தால், எவ்வளவு கேலிகள் கிண்டல்கள் எழுந்து இருக்கும் என்பதை கணிப்பது சுலபம்தான்..
ஆலய வழிபாது என இல்லாவிட்டாலும், தனக்கு மீறிய ஒரு சக்தியை எல்லோரும் நம்புவதை பார்க்க முடியும்..
அவர் நீண்ட ஆயுள் பெற , இயற்கையை பிரார்த்திக்கிறேன் என ஆசி வழங்கும் நாத்திக தலைவர்கள்,
அருபேராற்றல், நலத்தை வழங்கட்டும் என கூறும், ஆன்மிக வாதிகள்,
குரு அருள், யாகம் வளர்த்தல் என எத்தனையோ இருந்தாலும், எதையும் கேலி செய்து பயன் இல்லை.
மக்களுக்கு நலம் விளைந்தால் சரிதான்...
ஒருவர் எதை நம்புகிறார், எதை நம்பவில்லை என்பது முக்கியம் இல்லை...
என்ன செய்கிறார் என்பதே முக்கியம்..
அந்த வகையில் நமது விஞ்ஞானிகளை பாராட்ட விரும்புகிறேன்
ஸ்பெயின் அணிக்கும் வாழ்த்துக்கள்....
குறைந்த கோல், நிறைந்த வெற்றி என்ற அவர்கள் ஆட்டம் பற்றி நிறைய பேசலாம்...
விரிவாக பிறகு பார்க்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
July
(28)
- தேடினேன் வந்தது
- நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை
- ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??
- அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்
- அவன் அவள் அது U/A
- அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்
- போபால் கொடுரமும், போராட்டமும்
- துப்பார்க்கு துப்பாக்கி....
- பாரதியும் மாற்று பார்வைகளும்
- ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
- பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
- ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா
- பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...
- பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...
- அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...
- காதல் பிசாசே..காதல் பிசாசே..
- சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
- ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
- விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சார...
- matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...
- யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
- பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
- மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
- மைக்ரோ கதைகள்
- செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...
- கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
- தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
- தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்
-
▼
July
(28)
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]