திரு . பத்ரி அவர்களின் வலைபதிவுகளை ரசித்து படிப்பவன் நான்.. அறிவியல் கட்டுரைகளை பாடம் படிப்பது போல , கவனமாக படிக்க கூடியவன்..
அவரரது சமிபத்திய பதிவு ஒன்று , என்ற புரிதலும் இல்லாமல் எழுதப் பட்டிருந்தது அவரை மதிப்பவன் என்ற முறையில் வருத்தப்படுத்தியது..
செம்மொழி மாநாட்டில் பொதுமக்கள் சிலர , அங்கிருந்து இலவசாமாக பொருட்களை சுருட்டி செல்ல ஆர்வமாக இருந்தார்களாம். . சாப்பாட்டை நிறைய வாங்கி வீனடித்தார்கலாம்.. எண்ணற்ற சால்வைகள், மேமண்டோக்களை எடுத்து சென்று விட்டார்களாம்.. ( அதிக பட்சம் 100 ரூபாய் மதிப்பு இருக்கும் என வைத்து கொள்ளுங்கள் )
"செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்." என்று முடித்து இருக்கிறார் அவர்...
தமிழன் பிச்சைகாரனாக இருக்கிறான் என்பது உண்மைதான் என்றாலும், கோபம் நியாயம்தான் என்றாலும், அவர் பிச்சைகாரர்கள் என சும்மா ஜாலிக்காக எடுத்து சென்றவர்களை சொல்வது தவறு... கோடிகணக்கான ரூபாய்களை , ஏழை மக்களின் வரி பணத்தில் இருந்து பிச்சை எடுத்து சாப்பிட்டதுதான்
உண்மையான பிச்சைகாரத்தனம்..
செம்மொழி மாநாட்டு வேண்டும் , வேண்டாம் என மாறு பட்டு கருத்து இருக்கலாம்... ஆனால், வேண்டாம் என கருத்து உள்ள பத்திரிகை கூட, கிடைக்கும் வாய்ப்பு வீணாக கூடாது, விளமபர பணத்தை இழக்க கூடாது என அலைந்ததுதான், சிறப்பு மலர்கள் வெளியிட்டதுதான் பிச்சைகாரத்த்தனம்...
தமிழர்கள் நன்றாக இருந்தால், நல்ல வேலையில் இருந்தால், நல்ல கண்டு பிடுப்புகள் நடந்தால், இயல்பாகவே தமிழ் வளர்ந்து விடும்.. ஆங்கிலத்தை எல்லாம் மாநாடு போட்டா வளர்த்தார்கள்...?
ஆனாலும் தமிழர்கள் கூடும் ஒரு நிகழ்வு நல்லதுதான்... அது தமிழ் அறிஞர்கள் தலைமையில் நடக்க வேண்டும்... அரசு பார்வையாளராக வேண்டுமானால் இருக்கலாம்..தேவையான உதவிகளை செய்து ஒதுங்கி நிற்க வேண்டும்...
இவ்வளவு ஆடம்பரம், செலவு எல்ல்லாம் ஒருவரை பாராட்ட மட்டும்தானே செலவிட பட்டது.... ?
இதை விட பெரிய கூட்டங்களை எல்லாம், சில அமைப்புகள் நடத்தி உள்ளன,, உண்மையில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் கூடுவார்கள்... போலிசார யாரும் இல்லாமலேயே, ஒழுங்குடன் , நேர்த்தியுடன் எல்லாம் நடக்கும்..
இங்கு நடத்தியர்வர்களோ, கலந்து கொண்டவர்களோ, தமிழ் உணர்வுடன் கலந்து கொள்ள வில்லை என்பதால்தான், ஆய்வரங்கை விட , சாப்பாடு இடத்தில் கூட்டம் அலைமோதியது..
வந்த பொது மக்களும், தங்களுக்கு உபகொயம்க எந்த நிகழ்ச்சியும் இல்லாதததால், கையில் கிடைத்தை வாங்கி செல்ல முனைந்தனர்... ( அது கூட இல்லை என்றால், அங்கு வந்து பயன் என்ன ? )
பத்ரி போன்ற நல்லவர்கள் அங்கு சென்று இருக்கவே கூடாது... வந்தவர்களுக்கு , நம் பணம் இப்படி வீணாகிறதே என்ற ஆதங்கத்தில், நடத்துபவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துவோம், என்ற நினைப்பில், கையில் கிடைத்ததை எடுத்து சென்று இருக்கலாம்.. அவர்கள் மனசாட்சி தை தடுக்காது... ஏனென்றால், அவர்களை பொறுத்துவரை, அங்கு நடப்பது ஒரு நியாயமான நிகழ்ச்சி அல்ல..
ஆனாலும், பத்ரி போன்ற நடுநிலையாளர்கள் பாதிக்கபட்டது, இழப்பை சந்த்தித்து வருந்தத்தக்கதுதான்.. அனால், பொது மக்களை மட்டும் குறை கூறி பயன் இல்லை...
புகை வண்டியில் , பல நேரங்களில், முன் பின் தெரியதர்வகளிடம் , நம் உடமையை பார்த்து கொள்ள சொல்லி விட்டு தண்ணீர் குடிக்க செல்வோம்.. நம்பிக்கை அவர்கள் காப்பாற்று வார்கள்..
அடிப்படையில் தமிழர்கள் நல்லவர்கள்...
அனால் மனோதத்துவ அடிப்படையில், நாம் இருக்கும் இடத்தை பொறுத்து நம் மனநிலை மாறும்...
செம்மொழி மாநாட்டுக்கு வரும் போதே, திருட வேண்டும் என யாரும் வந்து இருக்க மாட்டார்கள்... அங்கு இருந்த ஆடம்பர , போலித்தன நிகழ்ச்சியை பார்த்து, நாமும் தவறு செய்யலாம் என்ற உணர்வு தோன்றி இருக்க கூடும்...
இதை வைத்துக்கொண்டு என்ன சாதனை செய்துவிடப் போகிறார்கள் என்று புரியவில்லை. என பாவமாக கேட்கிறார் பத்ரி... ஒன்றும் செய்ய மாட்டர்கள்..குப்பை தொட்டியில் எறிந்து இருப்பார்கள்...அதை வைத்து அவர்கள் ஒன்றும் மாடி வீடு கட்ட போவதில்லை...
எனவே அவர்களை சொல்லி குற்றம் இல்லை... உண்மையிலேயே , திட்டமிட்டு பிச்சை எடுத்தது யார் என்றால், அது பத்திரிக்கைகள்தான்.
ஒரு சம்பவத்தை பார்வையாளனாக இருந்து பார்த்து , மக்களுக்கு ரிபோர்ட் செய்ய வேண்டியவர்கள், தாமும் அந்த ஜோதியில் கலந்து விட்டது, ஒரு மாபெரும்சோகம்
தல ...இந்த பதிவு எழுத முழு தகுதியும் உங்களுக்கு இருக்கு...நீங்க தான் பிச்சைகாரன் ஆச்சே..
ReplyDeleteஅய்யோ ...உங்களை தல -நு விளிததால் நானும் பிச்சைகாரன் ஆகி விட்டேன் ....
பிச்சைக்காரர் சங்கத்தில் இணைந்ததற்கு நன்றி.
ReplyDeleteஅன்பு காட்டுவதில் அரசனாகவும் , தேடுவதில் பிச்சைக்காரனாகவும் இருப்போம் .
இனி நீ தனிக்காட்டு ராஜா அல்ல ! தரணியின் ராஜா
நிச்சயமா சொல்றேன்,நீங்க சொன்னதெல்லாம்
ReplyDeleteநியாயம்தான். நீங்க ஒரு பார்வையாளரா இருந்து
இந்த கருத்தை சொல்லியிருக்கிங்க
உங்க பதிவுன்னா எனக்கு பிடிக்கும் .ஏன்னா
உங்க பதிவை நியாயமானதாகவும்,எதார்த்தமாகவும்
எழுதறீங்க
நன்றி .. பல பயனுள்ள விஷயங்களை , இனி வரும் காலங்களில் பதிவிட முயற்சி செய்கிறேன் . இதற்கு உங்கள் ஆதரவு உந்து சக்தியாக இருப்பதை நன்றியுடன் தெரிவித்துகொள்கிறேன்
ReplyDeletea very nice post ... Keep it up.. N keep al our brains up by ur post...
ReplyDelete