Friday, July 2, 2010

கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்

செமொழி மாநாட்டுக்கு அடுத்த படியாக ,இன்று பலரும் கம்யூனிசம் , முதலாளித்துவம் என பேசிகிறார்கள்.. இதெல்லாம் என்ன என குழப்பமாக இருப்பதால், இதை பற்றிய எளிய சிந்தனை... விரிவானதோ, முழுமையானதோ அல்ல...
***********************************************************************

உலகில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் முதலாளித்துவம்தான். அதை ஒழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது ஒரு பார்வை..

கம்யூனிசம் என்றாலே கொடூரம்தான். சர்வாதிகாரம்தான். ஹிட்லரால் கொல்ல பட்டவர்களை விட , கம்யூனிச ஆட்சியில் கொல்ல பட்டவர்கள் அதிகம் என்கின்றனர் சிலர்..

எல்லோரும் வேலை செய்ங்க... உங்க தகுதிக்கான வேலை , கொடுக்கப்படும். .. உங்களுக்கு எவ்வளவு தேவையோ , அது நிர்ணயிக்கப்பட்டு , அரசே உங்களுக்கு வழங்கும்.. வீடு , மருத்துவ வசதி என எல்லாமே அரசு பார்த்து கொள்ளும்... அரசே தொழில் நடத்தும் என்பதால், முதலாளிகள் - தொழிலாளிகள் என்ற பேதம் வராது.
இதனால் , ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை நீங்கும்.. எல்லோரும் ஒன்றுதான்...

நல்லதுதானே என தோன்றுகிறது...

அம்பானியும் நானும் ஒன்றுதான் என்றால் சந்தோஷம்தானே...

அனால், ரொம்ப சந்தோஷ படதே என்கின்றனர் இன்னொரு தரப்பினர்..

அம்பானியும் நீயும் மட்டும் ஒன்றல்ல... வேலை பார்க்காமல் பொறுப்பில்லாமல் சுற்றி திரியும் உன் நண்பனும் நீயும் கூட , ஒரே இடத்தில் வைக்க படுவீர்கள்.. திறமைகேற்ப ஊதியம், உழைப்புகேற்ப ஊதியம் என்பதெல்லாம் அடிபட்டு போய், தேவைகேற்ப ஊதியம் என வந்து விடுவதால், ஊக்கத்துடன் உழைப்பவர்கள் முட்டாளாகி விடுவார்கள்... உழைப்பு மழுங்கி விடும்... முன்னேற்றம் பாதிக்கப்படும் என்கிறார்கள் இவர்கள்..

தேவைகேற்ப ஊதியம் - யாருக்கு எவ்வளவு தேவை என்பதை நிர்ணயிக்கும் இடத்தில் இருப்பவர்கள், முதலாளிகள் போல மாறி விடுவார்கள் என எச்சரிக்கிறார்கள் இவர்கள்...

சரி... அப்படி என்றால் நீங்கள் என்ன வழி முறையை பரிந்துரைக்கிறீர்கள் என்றால் அவர்கள் குழப்புகிறார்கள்..

நியாமான வழியில் உழை... போட்டியிடு ... முன்னேறு.... அரசு எந்த விதத்திலிம் தலையிடாது...

இப்படி செய்தால், புதிய தொழில்கள் பெருகும்... நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.... திறமை அடிப்படையில், உழைப்பு அடிப்படையில் அனைவருக்கும் சம்பளம் கிடைக்கும்... எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கிறார்கள்..

சரி.. பன்னாட்டு நிறுவனத்துடன், ஏழை விவசாயி எப்படி போட்டியிட்டு ஜெயிக்க முடியும்?
திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட , அடித்தட்டு மக்கள் சாக வேண்டியதுதான..
பலவீன மாணவர்கள் வாழ வழியில்லையா?
காசு சம்பாதிப்பதுதான் , நோக்கம் என்றால், கிராம பகுதிகளில் , பேருந்து இயக்க யாரும் முன் வர மாட்டார்களே என்றெல்லாம் கேட்டால் இவர்கள் பதில் சொல்வதில்லை..

உண்மையில் , அவரவர் சொல்வது அவரரர் தரப்பில் கொள்கை அளவில் சரியாக இருந்தாலும், நடை முறையில் இரண்டுமே இல்லை என்பதுதான் உண்மை...

உதாரணமாக, ஒரு கிராமத்தில் சிலர் பசு மாடுகள் வைத்து இருக்கிறார்கள் என வைத்து கொள்வோம்..

அவரவர் திறமையை பொறுத்து, மாட்டை பராமரிக்கும் தன்மையை வைத்து, பால் கறந்து சம்பாத்தித்து கொள்ளலாம். என்பது முதலாளித்துவம்.. எல்லோரும், அதிக பால் உற்பத்தி செய்ய ஊக்கத்துடன் உழைப்பார்கள் என்பது ப்ளஸ்.ஆனால், மாடு வாங்கும் வசதி இல்லாதவர்கள், பால் வாங்க காசு இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள்..

எல்லா பாலையும் , கிராம நிர்வாகத்துக்கு கொடுத்து விடுங்கள்... அவர்கள், யாருக்கு என்ன தேவையோ அதை பிரித்து கொடுப்பார்கள் என்பது , கம்யூனிசம்...

ஏழை , பணக்காரன் என்ற வேறு பாடு இல்லாமல் , அனைவருக்கும் பால் கிடைக்கும் என்பது ப்ளஸ்

இப்படி செய்தால், மாட்டை நல்லபடியாக கவனத்து, அதிக பால் கறக்கும் ஆர்வம் குறையும் எம்பது ஒரு பிரசினை... நிர்வாகம் சுரண்டல் வேலையை ஆரம்பிக்கும் என்பது மாபெரும் பிரசஈனை...

பாலை பரித்தி கொண்டு, மாட்டையும், அதை வளர்ப்பவனை யும் கொன்று விடு என் பது பாசிசம்...

இதில் எந்த அ னுகூலமும் யாருக்கும் இல்லை... ஆனால் , இதுதான் , நடந்து வருகிறது...

12 comments:

  1. இந்த பசு மாடு, பால் காரக்குறது வேற எங்கயோ படிச்ச ஞாபகம். ஆனால் அதுல இருந்த எழுத்து நடை சுவாரஸ்யம் இந்த குறிப்பில் இல்லை. மற்ற படி சொல்ல வந்த கருத்துக்கு உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  2. // வேற எங்கயோ படிச்ச ஞாபகம்//
    பாக்யா, கேள்வி ‍பதில்

    //இதுதான் , நடந்து வருகிறது...//
    :(

    ReplyDelete
  3. ஓடிஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிபாடி...... இத அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா ருசிக்கும்

    ReplyDelete
  4. சேலம்ஆனந்த்July 2, 2010 at 3:19 AM

    ஓடிஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...... இத அடுத்தவன் சொன்னா கசக்கும் கொஞ்சம் அனுபவம் இருந்தா ருசிக்கும்

    ReplyDelete
  5. நல்ல பதிவு நன்றி!
    ஒரு சின்ன சந்தேகம்,
    சோஷலிசம், கம்யூனிசம் ரெண்டும் ஒரே சித்தாந்தமா? வெவ்வேறானதா?

    ReplyDelete
  6. நல்ல பதிவு நன்றி!
    ஒரு சின்ன சந்தேகம்,
    சோஷலிசம், கம்யூனிசம் ரெண்டும் ஒரே சித்தாந்தமா? வெவ்வேறானதா?

    ReplyDelete
  7. தமிழ் மீரான் சார் , அடிப்படை இலக்கு ஒன்றுதான் .
    சோஷலிசம் என்பது பொருளாதாரம் சார்ந்தது. கம்யீனிசம் என்பது பொருளாதாரம் ,அரசியல் , சமூகம் எல்லாம் சார்ந்தது. நேரு விரும்பியது, சோசலிச இந்தியா. கம்யூனிச நாடு அல்ல

    ReplyDelete
  8. தமிழ் மீரான் சார் , அடிப்படை இலக்கு ஒன்றுதான் .
    சோஷலிசம் என்பது பொருளாதாரம் சார்ந்தது. கம்யீனிசம் என்பது பொருளாதாரம் ,அரசியல் , சமூகம் எல்லாம் சார்ந்தது. நேரு விரும்பியது, சோசலிச இந்தியா. கம்யூனிச இநதியா அல்ல

    ReplyDelete
  9. தமிழ் மீரான் சார் , அடிப்படை இலக்கு ஒன்றுதான் .
    சோஷலிசம் என்பது பொருளாதாரம் சார்ந்தது. கம்யீனிசம் என்பது பொருளாதாரம் ,அரசியல் , சமூகம் எல்லாம் சார்ந்தது. நேரு விரும்பியது, சோசலிச இந்தியா. கம்யூனிச இநதியா அல்ல

    ReplyDelete
  10. அய்யா அறிவு கொழுந்தே சோசியலிசம் என்றால் என்ன? கம்யுனிசம் என்றால் என்ன ?என்பது உனக்கே தெரியவில்லை.நீ இதைப்பற்றி எழுதி விட்டாய்.

    ReplyDelete
  11. Japan China Thailand are developed countries in Asia. They awere not colonised by British. India had been occupied by foreiners for 1000 years.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா