”உன்னிடம் கொஞ்சம் பேசணும் ”
தீவிரமான முகத்துடன் ரஞ்சன் என் அறைக்குள் வந்ததும் என்னை திகில் சூழ்ந்தது.
அவனுக்கு செய்த துரோகத்துக்கு அவன் என்னை என்ன செய்தாலும் தகும்.
அவனை முதல் முதல் பார்த்தது வட பழனி சிக்னல் அருகில். இரவு நேரம். வார இறுதி. பைக்கில் வந்து கொண்டு இருந்தேன். சாப்ட்வேர் எஞினியர் போல தோற்றம் அளி மூவர் என் முன் பைக்ககிள் சென்று
கொண்டு இருந்தார்கள். உற்சாகமான துள்ளலுடன் சென்ரனர். “ நல்ல சம்பளம்.. நல்ல வேலை .. பசங்க எஞ்சாய் பண்றாங்க” பொறாமையுடன் நினைத்துக் கொண்டேன் .
இருக்கும் வரை இங்கெ துள்ளுவாங்க..அமெரிக்காவில் வேலை கிடைத்தால் பறந்துடுவானுங்க...
சிக்னல் அருகில் போக்குவரத்து போலீஸ் அனைவரையும் மடக்கியது.
டாக்குமண்ட், லைசன்ஸ் , குடித்து இருக்கிறார்களா என்று சோதனை செய்தனர். அவர்கள் அதை பற்றியெல்லம் சட்டை செய்யாமல், காசை விட்டு எறிந்து விட்டு கிளம்ப துடித்தனர்.
என்னை சற்று நக்கலாக பார்த்தது போல தோன்றியது.. என்னிடம் காசும் இல்லை.. லைசன்சும் இல்லை. என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தேன்.
என்னை முறைத்த காவலர், சரி சரி போங்க என்றார். கேள்வி எதுவும் கேட்காமல், ஒன்றும் செக் பண்ணாமல் அனுப்புவது எனக்கு சங்கடமாக இருந்தது..
“ நானும் ரவுடி..என்னையும் கைது பண்ணுங்க “ என்று வடிவேல் பாணியில் மனதில் கெஞ்சினாலும், என்னிடம் எதுவும் பெயராது என்று முடிவெடுது என்னை அனுப்புவதிலேயெ குறியாக இருந்தனர்.
நொந்து நூடுல்சான நான் கிளம்பினேன். சாப்ட்வேர் அணி ஆளுக்கு ஒரு திசையாக பறந்தனர். ஒருவன் மட்டும் என் முன் சென்று கொண்டு இருந்தான்.
திடீரென அவன் பைக்கில் இருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்தது. ஏதாவது விவாகரமான மேட்டரா என ஆவலுடன் பார்த்தேன்.
எதிர்பாராத ஒன்று . கீழே விழுந்தது ஒரு தமிழ் நாவல் . சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே சில குறிப்புகள் “ .. இவனுகெல்லம் எதுக்கு இது என தோன்றினாலும் அவனிடம் அதை கொடுத்து விட மனசாட்சி தூண்டியது...
வளசரவாக்கம் அருகில்தான் அவனை பிடிக்க முடிந்தது...
“ பாஸ்..உங்க புத்தகம் “ கொடுத்தேன்
அவனுக்கு ஆச்சரியம் . இதை கொடுக்க பிரயத்தனப்பட்ட்டது அவன் மனதை தொட்டு விட்டது...
” தமிழின் முதல் பின் நவீனத்துவ நாவல் ..இதை நீங்கள் படிப்பது சந்தோஷம் ..அதான் விரட்டி வந்து கொடுத்தேன் “ என்றேன்..
“இதை பின் நவீனத்துவம் என ஒத்து கொள்ள முடியாது ..” என்று அவன் பேச ஆரம்பித்தான்... எனக்கு பிரமிப்பாக இருந்த்தது... ஆனாலும் பொறாமையும் அதிகரித்தது...
“ என் பேரு ரஞ்சன் “
” குமார் “ இருவரும் கை குலுக்கி அப்போது பிரிந்தோம்..
***********************************************************************************************************
பின் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினோம். அப்போது நான் ஒரு ரூமில் வாடகைக்கு இருந்து வந்தேன். எல்லோரும் சேர்ந்து ஒரு வீடு வாடககிக்கு எடுத்து தங்கினால் , செலவும் குறைவு , வசதியும் அதிகம் என்று
கணக்கிட்டு , ஒரு வீட்டை பிடித்தோம்..
நான் தினமும் ஏழு மணிக்குத்தான் கண் விழிப்பேன்,. அவன் 4.30க்கே எழுந்து , குளித்து தியானம் செய்து, பூஜை வேறு செய்து முடிப்பான்... சாப்ட்வேர் துறையில் இருந்தாலும் , இப்படி ஆச்சாரமாக இருப்பது
எனக்கு அவன் மேல் பொறாமையைத்தான் அதிகரிக்க செய்தது..
*******************************************************************************************************************
“ நம்ம காதல் உண்மைதான்.. ஆனால் வாழ்க்கையில் சில சமரசங்கள் செஞ்சுதான் ஆகனும்... உங்க இத்யம் உங்க இத்யம் பெருசுதான்.. ஆனால் எங்க அப்பா , நல்ல சம்பளத்துல வேலை பார்க்குற மாப்பிலையை
பார்த்துடார் “
ரோஜா சொல்வதை கலக்கமாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
ப்ணம்தான் வாழ்க்கை ..
இதுதான் வீட்ல பார்த்து இருக்குற மாப்பிள்ளை யோட போட்டோ “
போட்டாவை பார்த்து அதிர்ந்தேன் . ரஞ்சன் ....
அவன் மேல் இருந்து வந்த பொறாமை , கொலை வெறியாகவே மாறியது...
*************************************************************************************************************************
அவன் முன் போலவே பழகி வந்தான். நாண் இருக்கும் வீட்டுக்கு அடிகடி வருவான். விவாதிபோம்.. ஆனால் அவன் வீட்டுக்கு நான் எப்போதாவது ஒரு முறைதான் போவேன்..
ஒரு நாள் மாலை அவசரமாக வந்தான்.. “ மச்சான் .. அவசரமா மீட்டிங் இருக்கு ... என் வீட்ல இந்த பெட்டியை கொடுத்துடு... நான் வர லேட் ஆகும் நு சொல்லிடு... வீட்ல போன் பிராப்ளம் ..பேச முடியல
“
ஒகே”
வீட்டில் அவன் மனைவி ரோஜா வரவேற்றாள்...
“ இந்த பெட்டியை கொடுக்க சொன்னான் “ கொடுத்தேன்..
“ அவர் எங்கே ? “
” வீக் எண்ட் பார்ட்டி “ குறுக்கு புத்தி வேலை செய்தது
அவள் முகம் மாறியது...
“ அவர் ட்ரின்க்ஸ் எடுத்துக்குவாரா “
“ எப்பவும் இல்லை./..சில சமயம் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்ரபோ மட்டும் “
அவள் அதிர்ந்தாள்
“ சந்தோஷம்னா “
“ இதெல்லாம் உனக்கு- சாரி - உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்னு நினச்சு உளறிட்டேன்... சாரி “ பறந்தேன்..
**************************************************************************************************************************
அவனுக்கு எதிரான ஆயுதம் சிக்கிய மகிழ்ச்சியில் திளத்தேன்.. அவ்வப்போது , இல்லாதது பொல்லாதது சொல்லி குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்தினேன்..
ஆனால் என்னதான் சோகமாக இருந்தாலும் , குடிக்க மறுத்து விட்டான்.. நான் மட்டும் தனியாக குடித்து அவன் வேதனையை கொண்டாடினேன்..
அவன் போகும்போது டைரியை விட்டு சென்றதை லேட்டாகத்தான் பார்த்தேன்.
என்ன எழுதி இருக்கிறான்.. ?
ஒன்றும் சுவையாக இல்லை,,, நன்பர்களை பற்றி எழுதி இருந்தது சற்று சுவையாக இருந்தது... குறிப்பாக , சக நண்பம் பிரேம் ஆனந்துடன் செய்த கலாட்டாக்கள்..
திடீரென எனக்கு ஐடியா தோன்றியது...
பிரெம் ஆனந்தை , டைரி முழுதும் பிரேமா பிரேமா என குறிப்பிட்டிருந்தான (தொடரும
Tuesday, August 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
August
(14)
- எந்திரன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்,,ஹீரோ யாருப்பா? ரஜ...
- அடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக...
- பாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ?
- பாலகுமாரன் உடையாரா ?
- இலக்கியப் பிழை -அடல்ட்ஸ் ஒன்லி
- "அதை" விழுங்கிய சிறுவனும் , அப்பாவி தமிழ் எழுத்தாள...
- கடவுள் ஏன் கல்லானான் ?
- வாத்ஸ்யாயனருக்கே வயாகரா விற்பனையா - inception, இலக...
- கால் சைசும், ** சைசும்---- இன்சப்ஷன் அக்கப்போர்
- INCEPTION உண்மையான ஒரு விமர்சனம்
- ஆங்கில பட விமர்சனமும், எழுத்தாளர்களின் அவஸ்தையும் ...
- aunty யின் காம வெறியும் , பாண்டியின் இலக்கிய வெறிய...
- துரோகி 2 (தொடரச்சி )
- துரோகி 1
-
▼
August
(14)
கதை சூப்பர்! தொடர்ந்து அசத்துங்க!
ReplyDeleteசீக்கிரம் தொடருங்க நண்பா...
ReplyDeleteம்..நல்லாருக்கு சீக்கிரம் தொடருங்க
ReplyDeleteIntersting...
ReplyDelete