என்ன எழுதி என்ன டாக்டர் பண்றது... என் மனைவி இப்படி இருக்கறப்ப, என்னால என் எழுத்துக்கு கிடைக்ற பாராட்டை முழுசும் கொண்டாட முடியல.. அவள் மன நோயாளியா இருக்றது ரொம்ப
கஷ்டமா இருக்கு டாக்டர்.. அடுத்த வாரம் எனக்கு ஜனாதிபதி அவார்டு கொடுக்குறாரு... அதை கூட கேன்சல் பன்னிடலாம்னு யோசிக்கிறேன் “
டாக்டர் , எழுத்தாளர் குமரப்பனை பரிவுடன் பார்த்தார்...
“ ஒண்ணும் கவலைப்படாதீங்க... சரி ஆகிடும், கடந்த சில மாதங்களா நல்ல முன்னேற்றம் தெரியுது.. இப்ப அழைச்சுட்டு வந்து இருக்கீங்களா ? “
” ஆமா டாக்டர் ... ”
“ நர்ஸ் .. வெளியே பேஷண்ட் - இவர் மனைவி- வெயிட் செய்றாங்க.. கூட்டி வா “
வள்ளி உள்ளே நுழைந்தாள்.. முகம் வாட்டமாக இருந்தது....
“ வாங்கம்மா..உட்காருங்க “
“ வணக்கம் டாக்டர் “
“ வணக்கம் மா... போன முறையை விட இப்ப பரவாயில்லையா ? “
” பரவாயில்லை டாக்டர் “
” அப்படியா.. சில டெஸ்ட் செய்யணும் ..இது என்ன புத்தகம் ? “
“ என் கணவர் எழுதிய புத்தகம் டாக்டர்.. “
குமரப்பன் முகம் பிரகாசமானது...
“ நல்ல முன்னேற்றம் டாக்டர்.. என் புத்தகத்தை ஐடண்டிஃபை செய்ற அளவுக்கு வந்துட்டா... விட்டா மதிப்புரை எழுதிடுவா போலயே “ குதூகலித்தான்..
டாகடரும் திருப்தியாக புன்னகைத்தார்...
“ பாருங்க மேடம். நல்ல முன்னேற்றம் தெரியுது... தன்னம்பிக்கைதான் முக்கியம்... எல்லாம் சரி ஆகிடும்... சரி மேடம்.... அடுத்த கேள்வி.. இன்சப்ஷன் பேய் படமா.. கனவுகள் பற்றிய படமா”
அவள் திகைத்தாள்... கணவன் முகத்தையும் , டாகடர் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள்...
“ கனவுகள் படம் டாக்டர்.. “
குமரப்பன் உற்சாகத்தில் கைதட்டியே விட்டான்...
டாகடர் திருப்தியுடன் அடுத்த கேள்விக்கு சென்றார்..
“ உங்க கணவரும் , ஓர் இளம்பெண்ணும் தனியா ஒரு ரூம்ல இருக்குறாங்க,,, இருவரில் ஒருவர் மட்டும் பலான படம் பார்க்கணும் என்ற சூழ்நிலை ... யார் பார்த்தால் நல்லது ..? “
அவள் சற்று யோசித்தாள்..
“ என் கணவர் பார்த்தால் நல்லது “
டாக்டர் திடுக்கிட்டார்.. குமரப்பனும் திகைத்தான்...
“ என்ன இப்படி சொல்றீங்க...? அவர் பார்த்து மூடு வந்தால், அந்த பெண்ணுக்கு ஆபத்தாகி விடுமே ? ! “
வள்ளி சொன்னாள்.. “ அந்த பெண் பார்த்து அவளுக்கு மூடு வந்து விட்டால், என் கணவருக்கு ஆபத்தாகி விடுமே ? “
இப்போது டாகடரே கைதட்டி விட்டார்...
“ டாகடர் ..உங்களை நான் ஒரு கேள்வி கேட்கலாமா? “
“ அஃப்கோர்ஸ்..கேளுங்க .கேளுங்க “
“ ஆர் யூ பிரம் கேரளா ? “
“ அட.. எப்படி சரியா சொல்றீங்க “
“ கேரள மக்கள்தான் அறிவாளிகளை மதிக்க தெரிஞ்சவங்க.,,, அதை வச்சுத்தான் சொன்னேன் “
குமரப்பன் முகத்தில் பெருமிதம்...
“ ஒகே மேடம்.. சங்க இலக்கியம் சார்ந்து ஒரு கேள்வி “
”” ஃபூக்கா, லெவி ஸ்ட்ராஸ், தெரிதா , காப்ரியேல் மார்க்கேஸ், மிலோராத் பாவிச் , விட்ஜெண்ஸ்டைன் , அப்படீனு எதாச்சும் கேளுங்க... நடிகர் சங்கம் இருப்பதே வீண்,,அந்த சங்கத்துக்கு
இலக்கியம் வேறா ? “
டாக்டர் செய்வதறியாமல் சில கணங்கள் திகைத்தார்...
” சரி மேடம்.. கடைசியா ஒரு கேள்வி... இது ஒரு மாதிரியான கேள்வி... கோச்சுக்க கூடாது... உங்க ரெஸ்பான்ஸ் பார்ப்பதுதான் இதன் நோக்கம்...
ஒரு புதிர்... இது உடலின் ஒரு பகுதி... உணர்ச்சி நிலையில் சாதாரண நிலையை விட அளவில் பெரிதாகும்... என்ன அது ? “
வள்ளி சற்றே திகைத்தாள்..
வெட்கத்துடன் “ தெரியலை டாக்டர் “
டாகடர் புன்னகைத்தார் “ கண்ணின் விழி என்பதுதான் சரியான விடை.. நீங்கள் நினைத்தது தவறு.. ஆனாலும் உங்க சிந்தனை சக்தியை பாராட்டுறேன் “
வள்ளி ஒரு வினாடி அவரை பார்த்தாள்...
தன் கணவன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டாள்.. எதையோ தடவிப் பார்த்தாள் .
“ டாகடர் நான் ஒண்ணு கேக்குறேன்.. இவர் பேண்ட்டுக்குள் ஒன்றை இப்போது தொட்டு பார்த்தேன்.. எங்கும் நுழைய கூடியது இது.. இதில் ' பூ ' இருக்கும்... சொரசொரப்புத்தன்மை உண்டு...
சுற்றளவு ரெண்டு இன்ச் இருக்கலாம். அது என்ன ? .’ “
டாகடர் அயர்ந்து விட்டார்... பதில் தெரிந்தாலும் அதை சொல்ல விரும்பவில்லை.. அவள் கணவன் அடித்தாலும் அடித்து விடுவான்...
நாயகன் கமல் ஸ்டைலில் “ தெரியலையேயே.. யே “ என்றார்..
“ ஐந்து ரூபாய் காயின் எனபதுதான் சரியான விடை... நீங்க நினைத்தது தவறு... ஆனாலும் உங்க சிந்தனை சக்தியை பாராட்டுறேன் “
டாகடர் எழுந்து நின்று கைதட்டினார்....
“ குமரப்பன்..உங்க மனைவி என்னையவே மடக்கிட்டாங்க...ஷீ இஸ் ஆல்ரைட் நவ்... உங்க கவலை இனி இல்லை... கொஞ்சம் வெளியெ வெயிட் செய்ங்க... சில அட்வைஸ் சொல்லி அனுப்பிசுடுறேன் “
குமரப்பன் வெளியேறினான்...
“ மேடம்.. வலைபதிவுகளையும் , தமிழ் இலக்கியத்தையும் படிச்சு உங்க கணவர் மன நிலை பாதிக்கப்பட்டுடுச்சு... தமிழ் நாட்டுல எழுத்தை மதிப்பதில்லை, ஊர்ல இருக்குற எல்லா பொண்ணுங்களும்
தன்னையே சைட் அடிக்கிறாங்க... தனக்கு விருது தரப்போறாங்க,, நேரங்கெட்ட நேரத்துல செக்ஸ் ஜோக் சொல்றதுதான் இலக்கியம்... அப்படீனு பல தவ்றான கருத்துக்கள்
அவர் மனசுல பதிஞ்சு போச்சு... இதை நீங்க ஒத்துக்கலைனதும் உங்களுக்கு மன நிலை சரியில்லைனு உங்க மேலயே பழியை போட்டுட்டாரு..
உண்மையில் அவர் மேலதான் பிரச்சினை.. இதற்கு நிவாரனம் அவர் போலவே நீங்களும் பேசறதுதான்.. இப்படி பேசுனாத்தான் அவருக்கு ஆறுதலா இருக்கும்..போக போக சரி ஆயிடுவாரு..
அதுவரைக்கும் அவரு வலைப்பதிவுகள் எதுவும் படிக்காம பார்த்துக்கோங்க.. குறிப்பா pichaikaaran.blogspot.com அப்படீங்கற பிரபல வலைபதிவை படிக்க விடாதீங்க “
ஹா ஹா ஹா நண்பரே மிகவும் அருமையா இருக்கு... உங்களுக்கு மட்டும் எப்படி தான் தோணுதோ ...
ReplyDeleteஎன் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஜெய் ஹிந்த்!
பிரபஞ்ச பெருவெளியின் ஒரு துளியான நம் தேசம் , காலத்தின் மர்ம ஓட்டத்தில் சுதந்திரமாக நடைபோட உரிமை கிடைத்த இந்நாளில் , பெற்ற சுதந்திரத்தை பேணிகாப்போம் என்ற உறுதி மொழியை ,உலக இலக்கியவாதிகள் சார்பில் எடுத்து கொள்வோம்
ReplyDelete” ஃபூக்கா, லெவி ஸ்ட்ராஸ், தெரிதா , காப்ரியேல் மார்க்கேஸ், மிலோராத் பாவிச் , விட்ஜெண்ஸ்டைன்
ReplyDeletehello
Chukhrai,Ken Loach,Terrence Malick-you should add these people also .
"குறிப்பா pichaikaaran.blogspot.com அப்படீங்கற பிரபல வலைபதிவை படிக்க விடாதீங்க “ "
ReplyDeleteUnmaithaan.ha...ha...ha....
என்னது ? உண்மையா ? அப்படியெல்லாம் இல்லை. தாரளமா படிக்கலாம் னு சொல்வீங்கனு எதிர்பார்த்தேன் :-(
ReplyDeleteHello,
ReplyDeleteu r not accepting comments in a right way. u didn't post my previous comment . Why? R u afraid?
Dear anonymous friend. I did not neglect your views . Actually i did not receive anything from you . I am big fan your views and opinions . You are seeing things differently. I kindly request you to see the confirmation message after you press send button .
ReplyDeleteபாஸ் நச்சுன்னு இருக்கு
ReplyDeleteThank you யாசவி
ReplyDelete