Thursday, September 30, 2010

அதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக்கும் மத்தகம் (ஜெயமோகன் குறுநாவல் )


சிறுகதையை விட நாவல்தான் எனக்கு பிடிக்கும்.. அதனால்தான் ஜெயமோகனின் ஊமைசெந்நாய் என்ற சிறுகதை தொகுப்பை ரொம்ப நாளாக படிக்கவில்லை..
ஆனால் இன்று இரவு புத்தகத்தை எடுத்தேன். சும்மா புரட்டி பார்க்கலாம் என பார்த்து மத்தகம் என்ற குறு நாவல் படிக்க ஆரம்பித்தேன்.. கொஞ்ச நேர பொழுது போக்கு என்பதே என் நோக்கம்.
ஆனால், நான் படித்த்தில் முக்கியமான ஆக்கம் இது என படிக்கும் போதே புரிந்த்த்து.. படித்து முடித்த்தும் அது ஏற்படுத்திய தாக்கம்தான், நடு நிசி 12 க்கு இதை எழுத வைத்த்து..
ஒரு நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை இது உண்டாக்கியது..
ஆசான் என்பவர் யானைப்ப்பாகன்.. அவருக்கு கீழ் இருப்பவர்கள் அருணாசலம் , பரமன் , சுப்புக்கண் ஆகியோர்..
கேசவன் என்பது யானையின் பெயர்.. ஒரு ராஜ்ஜியத்தின் ஆதரவே அதர்கு இருக்கிரது , தம்புரானின் நட்பு இருப்பதால் அது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானலும் செய்யலாம், அதை கேட்பார் யாரும் இல்லை.. தம்புரானைதவிர யாரும் அந்த யானை மேல் ஏற முடியாது.
தம்புரானும் யானையும் கொண்டுள்ள நட்பு சாதாரணமானது அல்ல.. ஒரு கட்ட்த்தில் தன்னை கட்டியிருந்த இரும்பு சங்கிலிகளையே அறுத்து கொண்டு , தம்புரானை பார்க்க செல்கிறது..அதை தேட , யானை பாகன் அப்டும் பாடு தனிக்கதை..
தன் உயிரையே பனயம் வைத்து ஆசானை காத்தவன் பரமன்.. அவன் தந்தையும் பாகந்தான்.,..யானையால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட்தும் அவன் அம்ம இன்னொருவனுடன் சேர்ந்து கொள்ள , பரமன் அனாதை ஆகி கஷ்டப்பட்டு , இந்த நிலைக்கு வந்து இருக்கிறான்.
அருணாச்சலத்தை மிரட்டி, அவன் காதலியை அடைகிறான். பதிலுக்கு அருனாசலம் மிரட்டும்போது அவனை கொன்று , யானை மேல் பழியை போட , அதை நம்பும் ஆசான் யானையை விட்டு விலகுகிறார்..
ஒரு அழகியை அடைய, பொது பணத்தை திருடிய பரமன், அதை காட்டி மிரட்டபடும் பொது கொலை செய்கிறான்
இதற்கிடையில் தம்புரான் உடல் நலிவுற , அடுத்து வந்தவர் யானையை விரும்பவில்லை..

அருணாச்சலம் இறந்த்தும் , அவனது மனைவியை தன் ஆதிக்கதுக்குள் கொண்டு வருகிறான் பரமன்..

இது வரை படிக்கும்போது, பரம்னுக்கு பெரிய தண்டனை கிடைக்க போகிறது – கேசவன் யானை அவனை கொல்ல போகிறது என நினைப்போம்..
ஆனால் கிளைமேக்ஸ் வாழ்க்கையை பற்றிய ஒரு பாடம் எடுக்கிரது.. காதல், அதிகாரம், காம்ம் என்பதை பற்றியெல்லாம் யோசிக்க வைக்கிறது..
அதிகாரம் எனப்து காம்ம் போன்ற போதை.. ஆனால் அது எப்போது எப்படி கைமாறும் என யாருக்கும் தெரியாது..
கெட்ட்து செய்பவனுக்கு , கெட்ட்து நடக்கும் என்ர கணக்கெல்லாம் இல்லை..
யார் எப்படி மாறுவார்கள் என்பதும் புதிர்தான்.. உயிரை பணயம் வைத்த பரமன், ஒரு கட்ட்ட்த்தில் துரோகியாக மாறுவது, அதிகார உச்சியில் இருந்த கேசவன் யானை பொறாமை தீயால் பீடிக்கப்படுவது, இன்னொரு யானையை தாக்குவது, வலுவான அந்த யானை பெருந்தன்மையாக கேசவனை மன்னிப்பது, இனி தனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில், கேசவன் யானை பரமன ஆதிக்கத்துக்கு உட்படுவது, பரமனை கொல்ல முயன்ற அருனாசலத்தின் மனைவி, வேரு வழியின்றி பரமனை சரணடைவது என வாழ்வின் அபத்தங்களை , யதார்த்த்தை சொல்கிறது நாவல்..
ஒட்டுமொத்த உலக வரலாறை படித்து முடித்த உணர்வு ஏற்பட்ட்து..
சாதாரனமாக படிப்பவர்களுக்கு , காதல் கற்பு , விசுவாசம் எல்லாம் கிண்டல் செய்யப்பட்து போல தோன்றலாம்.
வரலாறு படித்தவர்கள், அரசியலை கவனிப்பவர்கள், வாழ்வை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த குறு நாவல் நல்ல அனுபவ்மாக இருக்கும்...

இந்த தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகள் பற்றிய என் பார்வை , இரண்டொரு நாட்களில் ...
ஊமைச்செந்நாய்
ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம்

ரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் அல்ல )


சர்ச்சை எதிலும் சிக்காத ஓர் எழுத்தாள்ர் எஸ்.ரா. சினிமாவில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்.

Wednesday, September 29, 2010

எந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் ?- அலசல் ரிப்போர்ட்


எந்திரன் படம் ஆரம்பத்தில் இருந்து பாசிடிவாகவும் , நெகடிவாகவும் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன..

ஆனால் ஒரு முக்கியமானா விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை..

எந்திரன் படம் ஓடுவதை பொறுத்து , படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் லாபமோ , நஷ்டமோ அடைவார்கள்..ஆனால் படத்தில் சம்பந்தப்படாதவர்களில் , இந்த படம் மூலம் யாருக்கு அதிக பலன் கிடைக்கும் என்ற கோணத்தில் யாரும் ஆராயவில்லை என்பது நம் கவனத்துக்கு வந்தது...
இனிமேலு சும்மா இருக்க கூடாது என களத்தில் இறங்கி செய்த அறிவியல்பூர்வ ஆராய்ச்சியின் முடிவு - இதோ உங்கள் பார்வைக்கு..
*************************************************************************

எந்திரன் மூலம் பயனடைவது யார் ?

4. பதிவர்கள்.

எழுதுவதற்கு ஒரு மேட்டர் கிடைத்தது என்ற அளவில் லாபம்தான். சினிமா செய்தி, ஷூட்டிங் நிலவரம், இசை விமர்சனம், சினிமா விமர்சனம், படம் வெற்றியா என்றெல்லாம் அலசலாம் . பதிவிடலாம்..என்ன்று இவர்கள் பலனடைகிறார்கள்..
ஆனால் இதற்கெல்லாம் சொந்த காசை செலவிட வேண்டி இருக்கும்.. உழைப்பும் தேவை...
எனவே கஷ்டமும் உண்டு, லாபமும் உண்டு என்ற அளவில்தான் பலன் இருக்கும்
பயன் சதவிகிதம் : 65 %



3பத்திரிகைகள்

திட்டி எழுதினாலும் விற்பனை..பாராட்டி எழுதினாலும் விற்பனை என பயனடைகிறார்கள்..
ஆனால் முன்பு போல அதிகம் லாபம் கிடைக்காது.. நெட், தொலைகாட்சி என பல போட்டி வந்து விட்டதால், இப்போது யாரும் பத்திரிகளை மட்டும் நம்பி இருப்பதில்லை... பயன் அடையும் வாய்ப்பு மங்கும்
பயன் சதவிகிதம் : 72 %

2தொலைகாட்சிகள்

நல்ல வேட்டைதான்... பாடல்கள், காட்சிகள் என நிகழ்சிகள் நடத்தலாம்.. ஆனால் சன் டி வி யின் படம் என்பதால் , மற்ற சானல்கள் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க முடியும்...

பயன் சதவிகிதம் : 70 %




1 சமூக சிந்தனையாளர்கள்..

நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சினைக்கும் எந்திரன் தான் காரணம் என ஆய்வு கட்டுரை எழுதலாம்... இந்திய பொருளாதாரம் நாசமாக போனதற்கு, ஏழைகள் கஷ்டப்படுவதற்கு, சினிமா உருப்படமால் போனத்ர்க்லு என எல்லாவற்றுக்கும் எந்திரன் தான் காரணம் என ஆதாரத்துடன் நிருபிக்கலாம் ..படம் பார்க்க வேண்டும் , செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை..
செலவு இல்லை ..பலன் உண்டு..
பயன் சதவிகிதம் : 100 %

எனவே எந்திரன் மூலம் அதிகம் பயன் பெறுவது சிந்தனையாளர்கள் தான் ..



எனவே , ஒரு சிந்தனையாளர் பார்வையில் எந்திரன் குறித்து கட்டுரை தீட்டி பயன் பெறுமாறு, அனைத்து பதிவர்களையும் கேட்டு கொள்கிறோம்..

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : pichaikaaran.blogspot.com

Tuesday, September 28, 2010

அயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைமேக்ஸ் 30ந்தேதி

அயோத்தி பிரச்சினையை இழுத்து கொண்டே போவதில் அர்த்தம் இல்லை.
மசூதியா , கோவிலா என முப்பதாம் தேதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வட மா நிலங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இன்று நேற்றல்ல. பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பிரச்சினையில் இருக்கும் இடம்தான் இது. இப்போது கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது..
கிளைமேக்ஸ் வேண்டாம் என நினைத்தவர்களும் அதிகம் பேர் உண்டு. அவர்கள் தீர்ப்புக்கு தடைவரும் என எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்புக்கு இனி வேலையில்லை..

ரமேஷ் சந்திர திர்பாதி என்பவர் , தீர்ப்பு ஒத்தி போடப்பட வேண்டும்,கோர்ட்டுக்கு வெளியே பேசி முடிக்க முயல வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதன் மேல் விசாரணை நடந்த்து..
கோர்ட்டுக்கு வெளியே முடித்து கொண்டால் நல்லத்துதான். அதற்காக சும்மா ஒத்தி போட்டுகொண்டே இருக்க முடியாது என்று முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் வந்து விட்ட்து. ஒரு நீதிபதி ஓய்வு பெற போகிரார் எனப்தால், உடனடியாக தீர்ப்பை வழங்குமாறு ஸ்பெஷல் பெஞ்சுக்கு கோர்ட் உத்தரவிட்ட்து..
சம்பந்தப்பட்டவர்கள் தீர்ப்பு உடனடியாக வருவதை வரவேற்கின்றனர். தீர்ப்புவந்தால் சமூக அமைதி குலையும் என பயந்தால் எந்த தீர்ர்ப்புமே வர முடியாது என அவர்கள் வாத்திற்கு வெற்றி கிடைதுள்ளது..
எனவே அலஹாபாத் உயர் நீதிமன்றம் , முப்பதாம் தேதி ( வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க இருக்கிறது..
எந்த தீர்ப்பு வந்தாலும் பிரச்சினை தீரப்போவதில்லை. அப்பீல் எல்லாம் இருக்கும்.. எனவே இப்போது பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்து கொளவதே அரசின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்...

சாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்தகம்



நாவல், சிறுகதை என்றெல்லாம் புனைவு எழுத்தைத்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள். சுயசரிதை பாணியிலான எழுத்துக்கள் அலுப்பூட்டகூடியவை என ஜெயமோகன் கூட ஒரு முறை கூறி இருக்கிறார்.

ஆனால் நிகழ்தல்- அனுபவ குறிப்புகள் என்ற ஜெயமோகனது நூலை படித்து முடிக்கையில், புனைவை விட இது போன்ற கட்டுரைகள்தான் சுவையாக இருப்பதாக தோன்றுகிரது.

உண்மையில் இந்த புத்தகத்தை அனுபவ குறிப்புகள் என்று சொல்லிவிட முடியாது.. அதாவ்து இது வெறும் தகவல் தொகுப்பு அல்ல. அவரது அனுபவங்களை அப்படியே தராமால் , சிறுகதை நடையில் தந்துள்ளார். சிறுகதையும், தன் வரலாறும் கலந்த ஒரு வித்தியாசமான – விறு விறு நடையில் புத்தகம் இருக்கிறது..

அவரது குழந்தை பருவமத்தில் தொடங்கி, கடைசியில் அழிவு என்பதை பற்றி பேசி முடிக்கும்போது ஒரு நாவல் போன்ற அழுத்தையும் தருகிறது..

நான் அங்கு போனேன் ,,அதை பார்த்தேன் என்ற சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல், ஒவ்வொன்றையும் எப்படி கவனித்தார், ஒரு விஷயம் நடக்கும் போது நம மனனிலை என்ன என்றெல்லாம் விவரிக்கும்போது அது நம் அனுபவமாக மாறி விடுகிறது.

ஆறு மாத குழைந்தையாக இருக்கும்போது , தன் முதல் நினைவு தொடங்குவதாக , ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.

அதன் பின் அவரது அம்மாவின் தற்கொலை பற்றி அறியும்போது அதிர்ச்சி..

முரட்டுத்தனமான தந்தை , அவரது பாசம் , நேசம் ,தன் மகன் பத்திய சாப்பாடு சாப்பிடும்போது தான் மட்டும் மீன் குழம்பு சாப்பிடாத தன்மை என்றெல்லம் படிக்கும் போது மனிதம் என்பதின் மீதே ஒரு பிரமிப்பு உண்டாகிறது..

தங்கை பற்ரி, அண்னனை பற்ரியெல்லாம் எழுதுகிறார், ஒவ்வொரு சின்ன விஷ்யம் பற்றியும்..

நாம் இந்த அளவு உன்னிப்பாக வாழ்க்கையை வாழ்கிறோமோ என்ற கேள்வி எழுகிரது..

அண்ணனின் படிப்பறிவை ஜாலியாக கிண்டல் செய்துள்லது நல்ல நகைசுவை.

எதற்கெடுத்தாலும் பாய்ந்து அடிப்பது அண்னனுக்கு பழக்க்மாக இருந்தது. அண்ணனுக்கு பிடித்த நடிகர் விஜய்காந்த் தான். அவரைபோலவே சண்டையில் சீறுவார்.. துறை அதிகாரியை தாக்கி, வேலை நீக்கம் செய்யப்பட்டு , அல்லாடியபோதுதான் அது அவ்வலவு சிறந்த வழி இல்லையோ என்ற ஐயம் அண்ணனுக்கு ஏற்பட்டது..



திடீரென அண்ணன் கூப்பிட்டார். “ டேய், உனக்கு ரெண்டு லட்சம் பணம் கிடைத்து இருக்கிறது என பேப்பரில் போட்டு இருக்கிறதாமே ? “ இவர் எங்கே பேப்பர் படித்தார் என எண்ணி “ யார் சொன்னது என்றேன் ..




பள்ளிகாலத்தில் அவரது மகன் சந்தித்த கஷ்டங்களை மறைக்காமல் எழுதி இருப்பது பெரிய விஷயம்.. மக்கு மாணவன் என ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பெற்றொரின் ஆதரவால் தலை நிமிர்வது ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய விச்யம..

ஆனால் துறவிகளால் நடத்தபடும் பள்ளிகளில் தான் அடக்கு முறை அதிகம் என்ற அவர் பார்வை சரியல்ல.

நானும் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் பள்ளியில் படித்தவன் தான்., அங்கே அன்பு மட்டுமே இருக்கும். கண்டுப்பும் இருக்கும் , நேசமும் இருக்கும்..

பணக்கார பள்ளிகளில் வேண்டுமனால் அவர் சொல்லும் நிலை இருக்கலாம்..

சுந்தரராமசாமி, அசோகமிதிரன் , காந்தீயம் , கோமல் சு

வாமினாதன்ஜாதா தற்கொலை ,காதல் என்று ஆழமான விஷ்யங்களும் உண்டு.

ஏ டி எம் கதவை திறக்க தெரியாமல், கதவு கண்ணாடியை உடைத்த காமெடி மேட்டரும் உண்டு. கிளுகிளுப்பு மேட்டர்கலும் உண்டு.

திருக்குறள் பற்றிய பார்வை திருக்குறள் மேல் புதிய காதலையே உண்டாக்கியது.

வாழ்வின் ஒரு மோசமான நேரத்தில், சாராயகடையை நாடி செல்வதும் அங்கு தயக்கி நிற்பதும் சினிமா போன்ற அருமையான காட்சியமைப்பு.

இதை படித்து முடித்த பின், நமக்கு தோன்றுவது, வாழ்க்கை என்பது சிறு சிறு விஷயங்களால் ஆனது. எனவே ஒவ்வொன்ரையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதுதான்.

உயிரமை பதிப்பகம் – ஜெயமோகன் காம்பினேஷனில் இது போல பல புத்தகங்களை எதிர்பார்க்கிறேன் .



நிகழ்தல் – அனுபவகுறிப்புகள்

ஜெயமோகன்

உயிர்மை பதிப்பகம்

Sunday, September 26, 2010

மைக்ரோ கதைகள்

உழைப்பின் முடிவில்....


சுரங்கத்தில் இறங்கி வேலை செய்யும்போது திடீர் மண் சரிவு. தனியாக மாட்டிக்கொண்டான் ரவி.
மீட்பு பணி தொடங்கியது. உணவுப்பொருட்கள் அவ்வபோது அனுப்ப முடிந்த்து, சிறிய துளை மூலம்.
ஆனால் ஆளை மீட்க நேரம் ஆனது.. மணிக்கணக்கில், நாட்கணக்கில் – மாதக்கணக்கில் நேரம் ஆகி கடைசியில் மீட்டனர்.
அவ்வளவு காலம் பொழுதை கழிக்க , ஒரு விஷ்யத்தை கண்டுபிடித்தான் ரவி.
ஒரு ஈயை பிடித்து , அது தன் சொல்படி கேட்க பழக்கினான். டான்ஸ் ஆடும், குட்டிக்கரணம் போடும், ஓடு , பற, நில் என்ற கட்டளைகளுகு கட்டுப்படும்..
“ இதை காட்டி அனைவரையும் அசத்த வேண்டும் “ அந்த ஈயை வெகு பத்திரமாக எடுத்து வந்தான்..
அவனை உயிருடன் மீண்ட்தை பாராட்ட விருந்து நிகழ்ச்சி நடந்த்து.
அந்த ஈயை டீ கிளாஸ் விளிம்பில் நடனமாட வைத்தான். யாரிடம் காட்டலாம்..
உணவு பரிமாறுபவனிடம் பெருமிதமாக காட்டினான்.
பரிமாறுபவன் பார்த்தான்.
“ சாரி, சார்..கவனமாக இருந்தும் சில ஈக்கள் வந்து விடுகின்றன .”
ஈயை தட்டி கொன்று விட்டு போனான் அவன். “ உங்களுக்கு வேறு டீ கொண்டு வறேன் “



மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா, தம்பி பயலே

அவர்கள் மனித மாமிசம் தின்பவர்கள். தந்தையும் மனிதனும் வேட்டைக்கு கிளம்பினர்.
ஒரு ஆளை பார்த்தனர்.
“ அப்பா.. இவனை முடித்து விடலாம் “
“ அட போடா..வெறும் எலும்புதான்.. கறி இல்லை “ அப்பா அலுத்துக்கொண்டார்.
இன்னொரு பெரியவர், நல்ல குண்டு , நடந்து வந்தார்.
“ நம்ம டின்னர் ரெடி டாடி “
“ டேய், இவனை தின்னா கொழுப்பு சத்துதான் சேரும். இதயத்துக்கு ஆபத்து “
பையன் நொந்து விட்டான்..
சிறிது நேரத்தில் அழகான பெண் ஒருத்தி- குண்டும் அல்ல ஒல்லியும் அல்ல- அசைந்து அசைந்து நடந்து வந்தாள்..
” சரியான் உணவு ” பையன் உற்சாகமாக கத்தினான்
” பொறுமை..பொறுமை.. இவளை தூக்கி செல்வோம்.. ஆனால் சாப்பிட கூடாது.. அதற்கு பதிலாக , உன் அம்மாவை இன்று சாப்பிடலாம் “


வங்கி

அந்த வங்கியை பல காலம் பார்து வருகிறான்.. ஒரு வாடிக்கையாளராக பலமுறை உள்ளே போய் இருக்கிறான். இன்றுதான் வாடிக்கையாளராக இல்லாமல் நுழைய வேண்டியிருக்கிறது...
துப்பாக்கியை தொட்டுப் பார்த்து கொண்டான்.
“ எல்லாம் நல்ல படியாக முடியுமா “ டென்ஷனாக இருந்த்து..
“கொள்ளை முயற்சியில் ஈடுப்ட்டவர்கள் சுட்டு கொலை “ செய்தி நினைவுக்கு வந்த்து..
மீண்டும் துப்பாக்கியை தொட்டு பார்த்தபடி வங்கியை நோக்கி நடந்தான்.
“ சார், வங்கி காவலுக்கு புதுசா நியமிக்கப்பட்டவன் நான்,.இதோ அந்த ஆர்டர் “ காட்டினான்.

Saturday, September 25, 2010

சினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா , புத்தி பெரிதா ?

கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பது விடை இல்லாத கேள்வி. ஏன் என்றால் கடவுள் என்று எதை சொல்கிறோம் என்ப்தை பொருத்த விஷயம் இது..

 

மைனா படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த்தது.

பிரபு சாலமன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கமல் வெளியிட இயக்குனர் பாலா பெற்றுக் கொண்டார்.

பாடல் ஆசிரியர் யுக பாரதி பேசும் போது பண்புடன் பேசினார்.. இயக்குனர் கிறிஸ்தவ மத நம்பிக்கை உள்ளவர். எனவே அவர் உணர்வுகளை மதிக்கும் வகையில் “ பிரபு சாலமனை கர்த்தர் கைவிடுவதும் இல்லை.. அவரை விட்டு விலகுவதும் இல்லை “ என்றார்.

அதன் பின் பேசிய பாலா “ நான் அதிகம் பேச வேண்டாம் என நினைத்தேன்..  ஆனால் யுக பாரதியின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.. புத்தி உள்ளவனை எந்த சாமியும் ஆசிர்வதிக்க வேண்டியதில்லை… “ ” என்று நாத்திகம் பேசி விட்டு சென்றார்.

நம்மை பொருத்தவரை,  கிறிஸ்தவ நம்பிக்கையையும் , எல்லா மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும்..ஒருவர் கடவுள் இல்லை என நினைத்தால் அந்த உணர்வையும் மதிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் ஒரு நம்பிக்கையாளர் இன்னொரு நம்பிக்கையாளரை குறை சொலவது தவறு.

புத்தி உள்ளவனுக்கு கடவுள் ஆசி தேவை இல்லை என்கிறாரே..அப்படி என்றால் புத்தி இருக்கும் எல்லோரும் ஜெயித்து விடுகிறார்களா.. உழைக்கும் அனைவரும் ஜெயிப்பது கிடையாது… தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் , உழைப்பு, படிப்பு என அனைதும் இருந்தும் , கஷ்டத்தில் வாழ்பவர்கள் அனேகம்..

எனவே ஒருவர் ஜெயிக்கிறார் என்றால் கண்ணுக்கு தெரியாத பல விஷ்யங்கள் அதன் பின் இருக்கின்றன.. இதை சுருக்கமாக கடவுள் ஆசி என சிலர் சொல்லலாம்.. 

outliers என்ற புத்தகத்தில் இது விரிவாக அலசப்பட்டுள்ளது.. வெற்றிக்கு பின் இருக்கும் காரணங்கள் என்னென்ன என ஆராய்கிறது புத்தகம்..

ஒருவர் புத்திசாலியாக பிறப்பதே கடவுளின் ஆசிதான்..எனவே புத்திசாலிக்கு கடவுள் ஆசி தேவை இல்லை என சொல்வது தவறு என்பதும் ஒரு கோணம்.

பாலாவுக்கு பின் பேசிய பிரபு சாலமன் “ தேங்க்யூ ஜீஸஸ் “ என பேச்சை துவக்கினார்.. “ தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் “ என பாலாவிடம் விளையாட்டாக கூற அரங்கில் பலத்த கைதட்டல்..

கடைசியில் பேசிய கமல் , தெளிவாகவும் ஆனால் யாருக்கும் புரியாத படியும் தன் பாணியில் பேசினார்..

கல்லை பார்த்தால் கடவுள் தெரியாது..கடவுளை பார்த்தால் கல் தெரியாது .. கல் தெரியாவிட்டால் தடுக்கி விழுந்து விடுவோம் . எனவே பகுத்தறிவு அவசியம் அன்றார்..

 

கடவுளை நம்பிகிறோமா இல்லையா என்பதோ பிரச்சினை இல்லை… நமது உழைப்பும் , புத்திசாலித்தனமும் கூட இரண்டாம் பட்சம்தான்…

உழைப்பு என்பது போட்டியில் இறங்க அடிப்படை தகுதி.. ஆனால் இறுதி வெற்றியை நிர்ணயிப்பது பல விஷ்யங்கள்.. இதை கடவுள் எனவும் சொல்லலாம் … அல்லது அறிவியல் பூர்வ காரணங்களை அடுக்கலாம்..

வெற்றி பெற்றதும் தான் மட்டுமே- தன் புத்தி மட்டுமே- வெற்றிக்கு காரணம் என நினைப்பது தவறு..

Friday, September 24, 2010

அய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆரம்பம்

அயோத்தி பிரச்சினையில் இன்று தீர்ப்பு வர இருந்தது..

வந்து இருந்தால் , இந்நேரம் பெரிய கலவரம் வெடித்து இருக்கும் . எந்த தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து இருந்தாலும் , கலவரம் உறுதி...

ஆனாலும் தமிழ் நாட்டில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.. மத பிரச்சினையில் வாடா மானிலங்கள பாதிக்கப்பட்ட அளவுக்கு , வரலாற்று ரீதியாக தமிழ்நாடு பாதிக்கப்படதில்லை.. எனவேதான் இந்த பிரச்சினையின் தீவிரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை...

ஆனால் வட மாநிலங்க்லின் நிலை வேறு.. அவர்கள் வலி, வேதனை, காயங்கள் எல்லாம் மறக்க கூடியவை அல்ல . எல்லா தரப்புமே வேதனையை சுமக்கும் நிலை..

இந்த நிலையில், கோர்ட்டுக்கு வெளியே பிரசினையை தீர்க்க சிலர் முயற்சியை ஆரம்பித்து உள்ளனர்... வேறு வழியில்லை... நல்லொதொரு தீர்வுக்கு இருதரப்பும் முன் வர வேண்டும்... அரசியல்வாதிலை நம்பி பயனில்லை.. கோர்ட் சொல்லும் தீர்ப்பை உணர்வு பூர்வமாக இருப்பவர்கள் ஏற்பார்களா என்பதும் சந்தேகம்..
வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் ஒய்வு பெற இருக்கிறார்.. அகவே அடுத்த வாரம் திருப்பு வர வில்லை என்றால், புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட பின்தான் தீர்ப்பு வரும்.. அதற்கு மிக அதிக காலம் ஆகும் ..

இந்த நிலையில் முஸ்லிம் சட்ட வாரிய துணை தலைவர் மவுலான சாதிக், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும என நம்பிக்கை தெரிவுத்துள்ளார்.. அதற்காக சில முயற்சிகளையும் அவர் துவக்கி இருக்கிறார்.
அவருக்கு ஆதரவு இருந்தாலும், பேசி தீர்க்கும் காலம் கடந்து விட்டது என நினைப்பவர்களும் இரு தரப்பிலும் இருக்கிறார்கள்..

இது வரை பேச்சுவார்த்தை எதுவும் முழு மனதுடன் நடக்கவில்லை.. இனிமேலாவது பெரும்பாலானோர் ஆதரவுடன் பேச்சுக்கள் நடந்தால், நிச்சயம் நல்ல தீர்வு பிறக்கும் என்கின்றனர் பேச்சு வார்த்தை விரும்பிகள்.
பேச்சுவார்த்தையின் அனைத்து சாத்தியங்களையும் பார்த்து விட்டு , கடைசியில்தான் கோர்ட்டுக்கு போக வேண்டும்... இன்னும் உண்மையான பேச்சு தொடங்கவே இல்லைஎ என்பது இவர்கள் வருத்தம்..

லக்னோவில் அனைவர் கவனமும் குவிந்துள்ளது... இருபத்து எட்டாம் தேதி கோர்ட் கூடும் போது , இது நம்பிக்கை சார்ந்த விஷயம் .. கோர்ட்டுக்கு வெளியில்தான் முடிவெடுக்க வேண்டும் என சொல்பவர்களின் கைதான் ஓங்கும் வாய்ப்பு அதிகம்..

தீர்ப்பு அப்போது வரவில்லை என்றால் , இனி எப்போதுமே தீர்ப்புக்கு அவசியம் இல்லாத நிலைதான் உருவாகும் .. அப்படியே அவசியம் இருந்தாலும் , நீதிபதி ஒய்வு பெறுவதால், தீர்ப்பு வர வெகு காலம் காத்து இருக்க வேண்டும்..

Thursday, September 23, 2010

அயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்

நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது, புதிய பிரச்சினையாக அயோத்தி பிரச்சினை.. பழைய பிரச்சினைதான் என்றாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரப்போகிறது என பரபரப்பு கிளம்பியது..
என்ன தீர்ப்பு வந்தாலும் தொல்லைதான் ... மத்திய அரசு சார்பில் விளம்பரங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன,

அமைதியை காக்க , லத்திகள் வாங்க ஆர்டர் !!!!!

தொலைகாட்சி சானல்கள் எல்லாம் நிபுணர்கள் துணையுடன் தயராக இருந்தன..

வியாபாரிகள் டென்ஷனாக இருந்தனர்...

தென் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவுதான்.. ஆனாலும் ரெண்டு நாள் விடுமுறை கிடைக்கும் என்ற கனவில் பள்ளி மாணவர்கள் இருந்தனர்..
இந்த நிலையில், நாளை வருவதாக இருந்த தீர்ப்பு , ஒரு வாரம் தள்ளி போடப்பட்டுள்ளது..

அடுத்த வாரம் தீர்ப்பு. லெட் அஸ் வெயிட் அண்ட் சி

Wednesday, September 22, 2010

தமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில படங்கள்

தமிழை கொலை செய்தே தீருவோம் என எல்லோரும் செயல்பட்டாலும் , ம நகராட்சியே இப்படி செய்வது நல்ல நகைச்சுவைதான்.
நல்லவேலை... சென்னையை தென்னை என எழுதாமல் விட்டார்களே.. அப்படியும் எங்காவது இருக்க கூடும்,, இருந்தால் அதையும் படம் பிடித்து அப்லோட் செய்வேன்,,
தொலைக்காட்சிகளில் சிலர் தமிழை குதறுவதை காண சகிக்காமல் இவர்களே கருணை கொலை செய்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது


சரி... சில தமிழ் கொலைகள் உங்கள் பார்வைக்கு...



காய்கணிகள், கண்ணெ உனக்கு



தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி





தொலைக்காட்சியில் தமிழை கொலை செய்யும் அறிவிப்ப்பாளர்கள் பற்றியும் சினிமாவில் தமிழ் உச்சரிப்பு கொலை பற்றியும் நடிகர் ஒருவர் கிண்டல் செய்வதை டிவியில் கண்டுகளித்தேன்.

” நடிகருக்கு என்ன ஒரு தமிழ் அக்கறை !! “ என்று வியந்த என்னை அலட்சியமாக பார்த்தான் என் நண்பன்..

” இவர்கள் கொலை செய்வதை விட , பொறுப்பில் இருப்பவர்கள் கொலை செய்வதுதான் அதிகம்.. வெளியில் சென்று பார்.. நாட்டு நடப்பு தெரியும் “ என்றான்.

அவன் சும்மா மிகைப்படுத்துகிறான் என நினைத்த படி வெளியே கிளம்பினேன்.

சென்னை மா நகராட்சி ஆங்காங்கு கைவண்ணம் காட்டி இருக்கும் சுவரோவியங்கள் கண்ணை கவர்ந்தன..

அதை பார்த்த்தும் அதிர்ச்சி… தமிழை படுகொலை செய்து இருந்தார்கள்..

ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை… ஒன்று விடாமல் அனைத்திலும் , ஏதோ வேண்டுதல் போல , தமிழை குதறி எடுத்து இருந்தார்கள்..

தமிழை இப்படி அலட்சியமாக கையாளலாமா? மிகவும் வருத்தமாகஇருந்தது!



இதோ, அந்த தமிழ் கொளை உங்கல் பார்வைக்கு…..

1.கண்ணியாகுமரி


2.சிற்ப்பங்கள்

3 ஜல்லிகட்டுகாளை அடுக்குதல்


4உங்கலுக்கு உப்பிடும்

Sunday, September 19, 2010

வாசித்ததில் நேசித்த ஐந்து ….

 

 

 

1. அந்தThyagaraja-Bhagavathar-reel-2 காலத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜ பாகவதர்..

கடைசிகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார்..

கண்பார்வை வேறு பாதிக்கப்பட்டது.. அந்த நிலையில் சத்ய சாய் பாபாவை சந்த்தித்தார்… அவரை ஆசிர்வதித்தார் பாபா..

பாபாவை பார்க்க விரும்பினார் பாகவதர்..  ஆனால் கர்ம விதிப்படி கண்பார்வை இன்றி கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும்..

ஆனாலும் அவர் ஆசையை நிறைவேற்றினார் பாபா..  கண்குளிர பாபாவை தரிசித்தார் பாகவதர்..  அந்த அறையில் இருக்கும் வரை கண் தெளிவாக தெரிந்தது..

வெளியே வந்ததும் மீண்டும் பார்வை போய் விட்டது.. ஆனாலும் சிறிது நேர தரிசனம் பாகவதருக்கு ஆறுதலாகவும் , அபூர்வ நிகழ்வாகவும் அமைந்தது…

sathya-sai-baba

2. தனது குருவிடம் ஆசி வாங்க சென்றார் மன்னர்.. 

குரு மன்னரை பார்த்து பேச ஆரம்பித்தார்..

“ உன் பெற்றோர்கள் இறப்பார்கள்… நீ சாவாய்.. உன் மகன்கள் மரணமடைவார்கள்.. உன் பேரன் , பேத்திகள் சாவார்கள் “

சொல்லிவிட்டு தியானத்தை தொடர்ந்தார்..

மன்னர் மிகவும் வருத்தமடைந்தார்..  ஆசி கேட்டால் , சாபம் வழங்கிவிட்டாரே!!!

சோகமாக அமர்ந்து இருந்தார்..  குரு கண்விழித்து பார்த்தார்..

“ ஏன் சோகமாக இருக்கிறாய் ? “

“ ஆசி கேட்டால் , சாவதைபற்றி பேசிகிறார்களே !! “

“ அட மூடா.. சாவு என்பது இயல்பானது.. நான் சொன்னது இயல்பான வாழ்க்கை பற்றிதான்..

முதலில் உன் பெற்றொர் வயதானதும் இயற்கை மரணம் அடைவார்கள்.. உன் காலம் முடிந்த்ததும் நீ, அதன் பின் மகன் , அதன் பின் பேரன் என இயல்பான வரிசையில் மரணம் அடைவது நல்லதுதானே.. நீ இருக்கும் போதே உன் பேரன் கொல்லப்பட்டால் அதுதான் கஷ்டம்..

உனக்கு அப்படி நடக்காது என ஆசிதான் வழங்கினேன் ”

என்றார்..

balakumaran

3. எழுத்தாளர் என்பவர் மற்றவர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும்.. அப்போதுதான் மற்றவர்களின் கோணத்தையும் பிரதிபலிக்கமுடியும்..

ஜெயமோகன் ஒரு கூட்டத்தில் பேசும்போது “ உதாரணமாக சமீபத்தில் சுஜாதா,பாலகுமாரன் இருவரைப்பற்றியும் நான் எழுதிய விமர்சனக்குறிப்புகளுக்கு வந்த எதிர்வினைகளில் அந்த மனநிலையையே கண்டேன். அவர் எழுத்தாளரல்ல, அவர் மட்டுமே எழுத்தாளர் என்றார்கள் “ என்று பேசியுள்ளார்..

 

பாலகுமாரன் பற்றி ஜெயமோகன் தளத்தில் நடந்த  விவாதத்தில், balakumaran is not a writer.. he is the writer  என்று நாம் எழுதியதை நினைவு வைத்து பேசியது பாராட்டுக்குரியது…

கருத்தை ஏற்காவிட்டாலும், கருத்தை கணக்கில் வைத்து கொண்ட அவரது விழிப்புணர்வு  , பாரபட்சமற்ற தன்மை வரவேற்கத்தக்கது

 

4. பாலைவனத்தில் செல்லும் எனக்கு ஒரு சோலைவனம் போன்ற ஆறுதலை தருபவர் நயன் தாரா- பிரபு தேவா Nayantara 

5.

காற்று ஒரு போதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை.

காற்றில் அலைக்கழியும் வண்ணத்து பூச்சிகள் , காலில்

காட்டை தூக்கிகொண்டு அலைகின்றன.

வெட்ட வெளியில்

ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக்கொண்டு இருக்கிறான்.

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை

மற்றும் சில ஆடுகளை ..

    - தேவதச்சன்

Friday, September 17, 2010

அனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே

 

ஒரு விஷயத்தை பற்றிய கருத்து , அந்த விஷயத்தை புதிதாக பார்ப்பதை தடை செய்யும் என்கிறார் ஜெ கிருஷ்ணமூர்த்தி..

க்டவுள் இருக்கிறாரா இல்லையா என்பதில் மட்டுமல்ல , ஒரு மலரின் அழகை ரசிப்பதிலும் கூட , முன்கூட்டியே ஒரு கருத்து இருப்பது தெளிவான பார்வை தடுக்கும் என்கிறார்

************************************************************************************************************

அனுபவம் என்பது வேறு.. அனுபவித்தல் என்பது வேறு. நமது அனுபவங்கள் புதிதாக அனுபவிப்பதை தடை செய்கின்றன. மோசமான அனுபவம் அல்ல்து இனிதான அனுபவம் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. இரண்டுமே இடையூறுதான்.

அனுபவம் என்பது காலத்தின் பிடியில் உள்ளது., அனுபவம் முடிந்து போனது. இறந்த கால்ம். நிகழ்காலத்திற்கேற்ப இது உயிர் பெறுகிறது. வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் நிகழ்வது. இது அனுபவம் அல்ல.

அனுபவத்தின் நிழல் நிகழ்காலத்தில் விழுவதால், அனுபவித்தல் என்பது முழுமையாக இல்லாமல் அனுபவம் ஆகிறது.

அனுபவங்களால் ஆனதுதான் மனம். எனவே இது எதையும் அனுபவிக்க முடியாது.  தொடர்ச்சி எதுவும் இல்லாமல் ஒரு விஷ்யத்தை புதிதாக பார்க்கும் தன்மை மனதுக்கு இல்லை. அனுபவம் இல்லாத இடத்தில்தான் அனுபவித்தல் நிகழும்..

மனம் தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தான கற்பனை செய்து அதைத்தான் பார்க்கும். மனம் செயல்படுபவதை நிறுத்தினால்தான் தெரியாத ஒன்றை பார்க்க முடியும்..

அனுபவத்தின் வெளிப்பாடுதான் சிந்தனை. இது நினைவு சார்ந்தது. சிந்தனை இருக்கும்வரை அனுபவித்தல் இருக்காது.

சரி, அனுபவத்தை எப்படி துறப்பது? இப்படி துறக்க நினைப்பதே , துறக்க முடியாமல் செய்து விடும்.

துறக்கவேண்டும் என்பது ஓர் ஆசைதான். ஆசையற்ற அமைதியான நிலையே அனுபவித்தலுக்கு அவசியம்… ஆனால் மனம் அந்த நிலையை அடைய பேராசை படுகிறது… தான் அனுபவித்ததை அனுபவமாக மாற்றபார்க்கிறது. எனவே அனுபவம் அதை அனுபவித்தவர் என்ற இருமை நிலை தோன்றுகிறது..

ஒன்றை முழுமையாக அனுபவிக்கும்போது அங்கு அனுபவிப்பனோ , அனுபவிக்கபடும் பொருளோ இருக்காது… அனுபவிதல் மட்டுமே நிகழும். நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ண்ம் இருக்காது..சிந்தனை இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும். ஒரு விண்மீனை பார்த்தால் , அதன் அழகை முழுதும் ரசிப்போம், நான் அதை ரசிக்கிறேன் என்ற எண்ணம் இல்லாத நிலையில் அனுபவம், அனுபவிப்பவன் என்ற இருமை இல்லை.

இந்த நிலையை அடைய எந்த வழிமுறையும் இல்லை. முயற்சி செய்து அடையவும் முடியாது .

காலம் கடந்த அமைதியை , நான் என்ற எண்ணம் மறையும்போதுதான் அடைய முடியும்…

Thursday, September 16, 2010

பதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….

 

பதிவுலகில் நண்பர்கள் கிடைப்பதும் இயல்பான ஒன்று. அதன் பின் பூசல் ஏற்படுவதும்,  இருதரப்பும் பழைய ஆதாரங்களை காட்டுவதும் , கடைசியில் ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிப்பதும் இயல்பு.

இந்த இயல்பை பயன்படுத்தி சில பிரபலபங்கள் மன்னிப்பு கேட்டால் எப்படி இருக்கும்…

 

மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் ;

நேரம் கெட்ட நேரத்தில் , பெண்புலி, கண்ணம்மா என்றெல்லாம் வசசம் எழுதி கொல்வதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

புரட்சிதலைவி

இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு , கொடனாடு செல்வதற்க்காக மன்னிப்பு

புரட்சிகலைஞர் 

எப்படியும் ஒரு கட்சியுடன் கூட்டு சேரப்போகிறேன். அதுவரை சும்மா தனித்து போட்டி என உதார் விடுவதற்காக மன்னிப்பு

 

சாரு நிவேதிதா..

மற்றவரை திட்டுவதால் மட்டுமே, மற்றவர் பெயரை சொல்வதால் மட்டுமே  தான் ஒரு எழுத்தாளன் என நிரூபிக்க முயல்வதற்காக மன்னிப்பு

ஜெயமோகன்

தன்னைத்தவிர வேறு யாரும் எழுத்தாளன் இல்லை என சொல்வதற்காக மன்னிப்பு.

 

விவேக்

சிரிப்பு வராத காமெடி சீனில்  நடிப்பதற்காக

 

கமல்ஹாசன்

மேக் அப் போடுவதுதான் நடிப்பு என மக்களை நம்பவைத்ததற்காக….

 

ரஜினி

கல்யாணத்துக்கு கூப்பிடாததற்காக …..

 

சோனியா

பிரதமரை டம்மியாக்கியதற்காக …

Wednesday, September 15, 2010

ஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்

 

சில நாட்களுக்கு முன், நான் முன்பு வேலை செய்த நிறுவனம் வழியாக செல்ல நேர்ந்தது. அது இயந்திர பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 

அதன் தற்போதைய நிலையை பார்த்து அதிர்ந்தேன், அது தன் இயக்கத்தை நிறுத்தி இருந்த்து. காவலுக்காக ஒருவர் மட்டும் இருந்தார். அதை விற்க முயற்சி நடப்பதாக சொன்னார்.

பல பணிகளை செய்த இடம், நடந்த இடம், சண்டை இட்ட இடம், கொண்டாட்டங்கள் நடந்த இடம், பல சாதனைகள் செய்த இடம், முக்கிய வாடிக்கையாளர்களை சந்தித்த இடம் என ஒவ்வொன்றாக தொட்டு பார்த்தேன்.. மனதில் இனம் புரியாத சோகத்துடன் வெளியே வந்தேன்..

சுந்தர ராமசாயின் புளியமரதின் கதையை படித்து முடித்த பின்னும் அப்படி ஓர் உணர்வு தோன்றியது..

சமூக சீர்திருதம், ஆன்மீக பிரச்சாரம், நாத்திக பிரச்சாரம் , தனிமனித சாகசம் என்பதெற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு சாட்சியாக அனைத்தயும் பார்க்கும் நோக்கில் நாவல் அருமையாக உள்ளது. 

ஒரு புளிய மரத்தை சாட்சியாக வைத்து அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் கதை..  அந்த புளியமரத்தை நாம் சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கிறோம்.

அதன் மர்மங்கள், அதன் இளமைக்காலம், அதன் வசந்த காலம் , அதன் வீழ்ச்சி என அனைத்தையும் பார்க்கும்போது எதற்குமே அர்த்தம் இல்லை என தோன்றுகிறது. ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்தவை என்றும் தோன்றுகிறது.

  புளியமரத்தை சுற்றி வாழும் ஊர், ஊரின் அடையாளமாக புளிய மரம் இருஜ்தல், சிறிது சிறிதாக நகரமயமாதல், இயற்கை அழிக்கப்படுதல், அரசியலுக்க்காக புளியமரத்தையே அழிக்க துணிதல், புளியமரம் தெய்வமாதல், அது அழிக்கப்படுதல், அழிக்க முயன்றோரும் காக்க முயன்றோரும் அழிதல் என படிக்கும் போது புளியமரம் ஒரு குறியீடு மட்டும்தான் என புரிகிறது…

இடையறாத விளையாடுதான் உண்மை. தனி மனிதனோ, இடங்களோ , இந்த உலகமோ கூட எந்த முக்கியத்துவமும் அற்றவை…

இரு பலசாலிகள் நடதும் போரில் , சம்பந்தமே இல்லாமல் ஒரு முதியவர் இருவரையும் மீறி வெல்வதும் , ஆனால் அந்த வெற்றி அவருக்கு பயன் இல்லாமல் இருப்பதும் வாழ்வின் அபத்தங்களில் ஒன்று.

தத்துவ நாவலை போல தோன்றும் இந்த நாவல் . மிக சுவையாக எழுதப்பட்டுள்ளது…

முன் ஒரு முறை மரம் வெட்டப்பட வேண்டிய நிலையில், கிளையை மட்டும் இழந்து தன்னை காத்து கொள்கிறது. பல்லி வாலை இழந்து தன்னை காப்பது போல என்பது போன்ற வார்த்தை பிரயோயங்கள் அபாரம்..

ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்கலாம். நாவலில் ஓர் எழுத்துகூட அனாவசியமாக இல்லை..  செதுக்கி இருக்கிறார் சு . ரா..

 

சு ரா என்ற பெயரை முதலில் கேட்டது, அவரின் ஒரு கமெண்ட் மூலம்தான்.. “ முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். மூன்றாம் தர எழுத்தாலர்கள் , சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் ” என ஒரு முறை சொன்னார்..

அப்போது பாலகுமாரன் பரபரப்பாக எழுதி குவித்த நேரம், நான் பாலாவின் ரசிகன் என்பதால், சுரா மேல் கோபம்.

அதனால் அவரை படிக்கவேயில்லை..

எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை சொல்லலாம். நாம் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் எழுத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்ற ஞானோதயம் இப்போதுதான் ஏற்பட்டு , அனைவரையும் படிக்கிறேன். அந்த வகையில் இப்போதாவது படித்தேனே என மகிழும்படி இருந்த்து நாவல்..

காதர் , தாமு , ஆசான், மகராஜா என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர் . யாரும்    நாவல் முழுதும் வரவில்லை என்ற போதிலும்…   இன்னும் கொஞ்ச நேரம் வரமாட்டார்களா என ஏங்க சேயும் வகையில் அனைவரும் சுவையாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

வட்டார பாஷை – இனிது இனிது…..  suraa

புளியமரத்தின் கதை – அனைவரும் படிக்க வேண்டிய கதை..

 

பின்குறிப்பு – இதை படித்து நான் ஏன் வருத்தப்பட்டேன்? நல்ல புத்தகம் படிக்க நேர்ந்தால், உடனடியாக அதன் ஆசியருடன் பேசி அல்லது எழுதி பாராட்டுவது என் இயல்பு. இந்த நாவல் ஆசியருடன் பேச அதிர்ஷ்டம் இல்லாததை நினைது உண்மையில் வருந்தினேன்…

Tuesday, September 14, 2010

நல்லதும் கெட்டதும் ……

 

’அமுதாவுக்கு விபத்தா ? “  கணேஷ் அதிர்ந்தான்.

திருமணம் நிச்சயம் ஆகி , அடுத்த வாரம் திருமணம் ..  நெட் மூலம் ஏற்பாடான திருமணம் இது..ஜாதகம் சம்பிராதயங்கள் அனைத்துக்கும் உட்பட்டு எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தன.

நிச்சயம் ஆனதில் இருந்து தினமும் மணிக்கணக்கில் அரட்டை. ஆற்றோட்டத்தை பார்த்து ரசிப்பதை போல அவள் பேசுவதை ரசிப்பான்.

என்ன ஆச்சு ?

“ ஒரு நண்பருக்கு பத்திரிக்கை கொடுக்க இரு சக்கர வாகனத்தில் சென்றாளாம்.. லாரி மோதி விட்டதாம் “

****************************************************************************

மருத்துவமனை… எல்லோரும் கூடி இருந்தனர்.  உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை..

ஆனால்….

ஆனால்..

வலது கையை காப்பாற்ற முடியவில்லை..

சோர்வுடன் படுத்து இருந்தாள்..  குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது..

கைபிடிக்க வேண்டிய நேரத்தில் கை இப்படி ஆகி விட்டதே…

உறவுக்கார பெரியவர் அருகில் வந்தார்..

“ இந்த நிலைல கல்யாணம் எப்படி? நிறுத்திடலாமா ? என்று மெதுவான குரலில் கேட்டார்.

 

கணேஷ் அவரை பார்த்தான்.. தீர்க்கமான குரலில் சொன்னான்..

” இந்த நிலைல அவ எனக்கு சரியான வாழ்க்கை துணையா இருக்க முடியாது.. நிறுத்திடுங்க “
சொல்லி விட்டு மின்னலாக வெளியேறினான் கணேஷ்.

*******************************************
நினைவு திரும்பியதும் அவள் கேட்ட முதல் கேள்வி , “ அவர் என்னை பார்க்க வந்தாரா ? “

பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அம்மா.

கவிதை , கதை என அழகான கைஎழுத்தில் எழுதிகுவிக்கும் அவளுக்கு இந்த நிலைமையா…

இதில் திருமணம் வேறு நின்றுவிட்டது,

******************************************

காயங்கள் ஆறியதும் சிலிர்த்து எழுந்தாள் அமுதா. எழுதுவது சிரமமாக இருந்தாலும் கம்ப்ய்ட்டர் மூலம் டைப் செய்வது , சில பிரத்யேக ஏற்பாடுகளுடன் சாத்தியமானது..

யாரையும் நம்பி நான் பிறக்கவில்லை ….
முன்னைவிட அதிகமாக எழுதி குவிக்க ஆரம்பித்தாள்..

“ நல்ல வேளை.. திருமனம் நின்றது… இல்லை என்றால் எழுத நேரம் கிடைத்து இருக்காது “ நினைத்து கொன்டாள்…

திருமணத்துக்கு பலர் முன்வந்தும்கூட நேரமின்மையால் ஒத்தி போட்டு வந்தாள்..
ஒரு நாவலுக்கு மாநில அளவில் பரிசு கிடைத்தது….

நிருபர் கேட்டார்…  “உங்கள் வெற்றிக்கு ஏதாவது ஒரு காரணம்தான் சொல்ல வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள் “
“ அவதான் என மனைவி .. என்னை பொறுத்தவரை திருமனம் எப்போதோ முடிந்து விட்டது..  நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. “

**********************************************************
திருமணம் முடிந்தது…

சில நாட்களிலேயே ஒரு விஷயத்தை அவள் உணர்ந்தாள்..

கனேஷ் அவள் மேல் காட்டுவது பரிதாபம்தான்.. அன்பல்ல…

தன்னை பெரிய ஆள் என காட்டிக்கொள்ள , இந்த விபத்தை பயன்படுத்தி கொள்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்..

தன் பெருந்தன்மையை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதி , பரிசும் வென்றான்..

பரிசளிப்பு விழவுக்கு அவளையும் அழைத்தான்..

மறுத்துவிட்டாள்.. அங்கேயும் அவளை காட்சி பொருளாகத்தான் பயன்படுத்துவான்..

அவளை முழுக்க முழுக்க தன்னை சார்ந்து இருக்கும்படி பார்த்துகொண்டான் அவன்..

“ ஏன் தேவை இல்லாம ஸ்ட்ரைன் செஞ்சுக்ற.. பேசாம உட்கார்ந்து டீ வி பாரு “

எழுதுவது என்பதெல்லாம் அவளை பொறுத்தவரை பழங்கதையாகி விட்டது.

************************************

நீண்ட நாள் கழித்து அமுதாவை பார்க்க வந்த தோழி  சங்கீதா திகைத்து போய் பார்த்தாள்.

பழைய அமுதாவா இது… அந்த துறுதுறுப்பு,  நகைச்சுவை மிளிரும் பேச்சு எல்லாம் எங்கே.

முகம் முழுதும் ஏதோ இனம் புரியாத சோகம்..

“ என்னடி இப்படி இருக்க….
வீட்ல எல்லா வசதியும் இருக்கு,, அப்புறம் ஏன் சோகமா இருக்க,? உன் வாழ்க்கைல எதையாவது மாத்தணும்னு நினைக்கிறியா..  விபத்தையே நினைச்சு சோகமா இருக்கியா.. இல்லை அதை விட சோகமானது ஏதாச்சும் இருக்கா  ? “

 

” என் திருமணம் “ அவள் அமைதியாக சொன்னாள் ….

Monday, September 13, 2010

அமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..

 

நம்ம ஊர் அரசியல்வாதிகளும் , அரசியல்வாதிகளின் குணங்களை கொண்ட அறிவுஜீவிகளும், அவ்வப்போது தாம் மனதளவில் ஒரு முஸ்லிம் என உதார் விடுவது வழக்கம்.

முஸ்லிம் மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்கள் எதுவும் தெரியாமல் சும்மா ஒரு முற்போக்கு முத்திரைக்காகத்தான் இந்த உதார்.

கோடம்பாக்கத்தில் ஒரு இஸ்லாமியர் கடையில் ஒரு மருந்து வாங்கினேன் ( அது ஒரு நாட்டு மருந்து கடை ) .. ஒரு வாரம் கழித்து இன்னொன்று வாங்க வேண்டி இருந்தது… அதே கடைக்கு சென்றேன்.

கடைக்கார  இஸ்லாமிய பெரியவர் என்னை சரியாக அடையாளம் கண்டு விட்டார்.. ” சார்., போன வாரம் வந்து வாங்கிட்டு போனீங்கல்ல? “ என புன்னகைத்தார்..

நான் அவரை மறந்து விட்டேன் என்பதால் மையமாக புன்னகைத்தேன்.

” போன முறை நூறு ரூபாய் கொடுத்துட்டு , சில்லறை வாங்காம போயிட்டீங்க. நான் உங்களுக்கு அறுபது ரூபாஇ தரணும்.. தனியா எடுத்து வச்சுருக்றேன் “ என்றபடி கொடுத்தார்..

அவர் நினைவு வைத்து தருவது ஆச்சரியமாக இருந்த்து..

” ஒரு முஸ்லிம் யார் காசுக்கும் ஆசைப்பட மாட்டான். ஒரு வேளை இன்னிக்கு நீங்க வரலைனா, இந்த காசை வேற தர்ம வழிக்கு கொடுத்து இருப்பேன்” என்றார்..

அதன் பின் எனக்கு தேவையானதை வாங்கிவிட்டு வந்தேன்.. இது சிறிய உதாரணம்..  

நம்ம உதார் அரசியல்வாதிகள், தாம் மனதளவில் முஸ்லிம் என உதார் விடுவதன் மூலம் முஸ்லீம் மதத்துக்கு பெருமை என நினைக்கிறார்கள்.. தான் ஒரு முஸ்லிம் என சொல்லிக்கொள்ள வேண்டுமானால் எந்த அளவு தகுதி தேவை என அவர்களுக்கு புரியவில்லை…

 

ஆனால் முஸ்லிம் என சொல்லிக்கொண்டால் மைனாரிட்டி ஓட்டு கிடைக்கும் என்பது இவர்கள் கணக்கு. முற்போக்கு முகமூடி கிடைக்கும் என்பது அறிவுஜீவிகள் கணக்கு,

 

நம்ம ஊரில் இப்படி என்றால் அமெரிக்காவில் வேறுவிதமான கணக்குகள்..

ஒபாமா கிறிஸ்தவரா , முஸ்லிமா என அங்கே பஞ்சாயத்து.. ஒரு நல்ல கிறிஸ்தவ்ராக இருந்தாலும் நல்லதுதான் . நல்ல முஸ்லிமாக இருந்தாலும் நல்லதுதான்..

ஆனால் முஸ்லிமாக இருப்பது தவறு என்ற கோனத்தில், அவர்  ஒரு முஸ்லிம் என குற்றம் சாட்டுவது போல சிலர் ஆரம்பித்துள்ளனர்..

முதலில் இதை கண்டு கொள்ளாத வெள்ளை மாளிகை , இது பெரிய பிரச்சினையாக ஆவதை உணர்ந்து திடுக்கிட்டது..

அங்கு நடந்த ஒரு கருத்து கணிப்பு, 20 % அமெரிக்கர்கள் ஒபாமா ஒரு முஸ்லிம் என நினைப்பதாக சொல்லி இருக்கின்றனர்..

அவர் தந்தை முஸ்லிம்…  போரக் ஹுசேன் ஒபாமா என்பது அவர் முழு பெயர்.. எனவே ஒபாமா ஒரு முஸ்லிம் என்று சிலர் கூற ஆரம்பித்துல்லனர்..

அது பழைய கதை..இப்போது அவர் பெயரில் ஹுசேன் இல்லை என்கின்ரனர் சிலர்

“ அவர் ஒரு கிறிஸ்த்வர்.. தினமும் கிறிஸ்தவ முரைப்படி பிரேயர் செய்கிறார் “ என விளக்கம் அளிதுள்ளார் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்..

 

ஆனால் இதெல்லாம் தனி மனித விவகாரம்.. எல்லா மதமும் அதனளவில் சிறந்தவைதான்.

நானெல்லாம் தினமும் பைபிள் படிக்கிறேன். இஸ்லாமிய நூல்களிலும் ஆர்வம் உண்டு…  இந்து மத தத்துவங்களிலும் ஈடுபாடு உண்டு.. ( பெரியார் சொல்வதிலும் ஈர்ப்பு உண்டு )

எதாவது ஒன்றயாவது உருப்படியாக கடைபிடித்தால் கூட பெரிய விஷயம் என்றே தோன்றுகிறது.

முன்னாள் அத்பர் புஷ் அதிகாரபூர்வமாக கிறிஸ்தவர் .,.. ஆனால் அவர் கிறிஸ்தவ நெறிமுறைகள் படி நடந்தாரா என்பது கேள்விகுறிதான்..

 

உலகில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே மதம்தான்…  அதிகாரம் என்ற மதம்…

Sunday, September 12, 2010

முப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப்படி?

 

”அந்த துரோகி மஞ்சுவை இன்னிக்கு எக்மோர்ல பார்த்தேண்டா “

ரவி சொன்னதை கேட்டு திடுக்கிட்டேன். அவள் இங்கு வந்து விட்டாளா. அவளை உருகி உருகி காதலித்தானே!  கடைசி நேரத்தில் மறுத்து விட்டாளே. திருமணம் ஆகிவிட்டதா?

அவனே தொடர்ந்தான் .

“ என்னை மறுத்து விட்டு இன்னொருத்தனை கல்யாணம் செஞ்சுகிட்டா போல.. அவன் கூடத்தான் வந்து இருந்தா. என்னை அவ கவனிக்கல “

“ விடுடா ..எப்படியோ நல்லா இருந்தா சரி.. கணவன் எப்படி இருந்தான் “

“ சின்ன பையன்தான்.. ஆனால் முடி எல்லாம் கொட்டி போய் இருந்தது.. முகம் எல்லாம் தழும்புகள். விழு புண் போல..  நீல கண்கள் .  என்னை மறுத்துவிட்டு அவனை எதை வைச்சு ஏத்திக்கிட்டானு கேட்கணும்டா”

“ கேட்டு என்ன ஆகபோகுது…  வேலையை பாரு “ என்றேன்..

அத்தோடு அதை மறந்தேன். ஆனால் எதை மறக்க நினைக்கிறோமோ அதுதான் மறக்க முடியாமல் போகும். மறு நாள் வேலைக்கு செல்லும் வழியில் ஒரு டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது.

ஒரு உணவகத்தில் நுழைந்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டு அமர்ந்திருந்த ஒரு பெண் என் கவனத்தை கவர்ந்தாள். அட.. மஞ்சு…  அவள் கணவன் கைகழுவ போய் இருக்கான் போல..

அவளை நெருங்கினேன். என்னை பார்த்ததும் பிரகாசமானாள்.

“ அண்ணா.. நல்லா இருக்கீங்களா?  வேலையெல்லாம் எப்படி இருக்கு ” என அரைகுறை தமிழில் அன்பாக பேசினாள். இவள் எப்படி ரவிக்கு துரோகம் செய்தாள். புரியவில்லை..

ரவியை பற்றி அவள் கேட்கவில்லை என்றாலும் நான் ஆரம்பித்தேன்.

“ ரவி வந்து..  “

“ அண்ணா.. அந்த துரோகியை நான் மறந்துட்டேன்..  ஆனால் நீங்க எனக்கு எப்பவும் அண்ணன்தான் .. வீட்டுக்கு வாங்க “ என்று சொல்லிகொண்டிருந்தபோது , அவள் கணவன் வந்து விட்டான்..

“ இவர்தான் என் கணவன்… இவர் உடன்பிறவா அண்ணன் “ அறிமுகம் செய்தாள்.

“ நமஸ்காரா .. “  என்றவனை பார்த்தேன்.  முடி முழுதும் கொட்டி இருந்தது, முகம் எல்லாம் விழுப்புண்கள். நீல நிற கண்கள் ..

சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள்.

****************************************************************************************************************

நானும் ரவியும் ஒரே கிராமம்தான். தோட்டம் , தோட்ட வேலை, எப்பவாச்சும் சினிமா , முத்தாலம்மன் கோயில் விழா என வாழ்க்கை அமைதியாக சென்றது..

ஆனால் மழையினமை, முதலாளி வீட்டில் பிரச்சினை போன்ற்வை தோட்ட வேலைக்கு முற்றுப்ப்புள்ளி வைத்தன.

வேறு வேலை தேட வேண்டும் என்ற நிலையில்தான், பெங்களூரில் இருந்து வந்து இருந்த பக்கத்து வீட்டு வேலன் அங்கு வருமாறு சொன்னான்.

“ சாப்பாடு போட்டு சம்பளமும் தருவாய்ங்க. பக்கத்துலேயே தங்கிக்கலாம். சூப்பர் டாக்கீஸ் இல்லைனா சிக்பேட் விஜயலக்ஷ்மில படம்.. ஜாலியா இருக்கும்டா “ என அன்பாக அழைக்கவே , பெங்களூருக்கு செல்லும் லாரியில் ஏறினோம் .

******************************************************************************************

வேலை பழகிவிட்டது…  ராகி முத்தே , சவ் சவ் பாத், சித்திரான்னம் எல்லாம் கூட பழகிவிட்டது.

ரவிக்கு கூடுதலாக ஒன்றும் பழகிவிட்டது.. பக்கத்து வீட்டு மஞ்சம்மா..  17 வயதுக்குள்தான் இருக்கும்.

“ தமிழ் கத்துக்கொடுக்க சொன்னாள்..அப்படியே பழகிட்டாள்..ஹி ஹி “ என்றான்.

“ தமிழ் சொல்லித்தர அளவுக்கு உனக்கு கன்னடா தெரியுமா “ என்றேன் கிண்டலாக…

“ என்ன பெரிய கன்னடா.. பா வுக்கு பதில் ஹ போட்டால் போதும்..  ஹாலுனா பாலு… ஹூவுன பூவு..  எல்லாம் தெரியும்டா “ என்றான்.

ஆனால் அவனுக்கு கன்னடம் தெரியாது. அவளுக்கு தமிழ் தெரியாது. ஆனால் காதலை எப்படியோ புரிந்து கொண்டு பழகி வந்தார்கள்.

எனக்கு கன்னடம் கொஞ்சம் தெரியும் என்பதால் என்னிடம் பேசினாள். “ அண்ணா, அவரை உண்மையா காதலிக்கிறேன். எங்க வீட்ல ஓ கே சொல்லிட்டாங்க.. அவர் வீட்ல இருந்து வந்து பேச சொல்லுங்க. “

நானே இருந்து முடித்து வைக்கத்தான் விருப்பம்.. ஆனால் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்த்து.  ரவியின் தந்தையை பார்த்து பேசினேன்.

“ தம்பி.. நீ சொல்றதெல்லாம் ஓகே . ஆனால் இது உண்மையான காதலானு தெரியல…  அவங்க பெற்றோர் சம்மதம் கூட ரெண்டாம்பட்சம்தான்.  அந்த பொண்ணு உறுதியா இருக்காளானு பார்க்கணும் “ என்றார்..

அவரை உடனடியாக பெங்களூர் அனுப்பி வைத்தேன்,

*************************************************************************************

கொஞ்ச நாள் கழித்துதான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். வேலை அதிகம்..

அவளிடம் இவர் கேட்டபோது அவள் திருமனத்துக்கு மறுத்து விட்டதாக அறிந்தேன்.

“ கல்யாணத்துல ஆர்வம் இல்லைனு சொல்லிட்டாப்பா.. ” என்றார்..

என்னால் நம்ப முடியவில்லை… 

”நீயே கேளு…  ” என்றபடி செல்போனில் பதிவு செய்த உரையாடலை ஆன் செய்தார் .

தந்தை : யாருக்கும் பயப்படாதே… உனக்கு தோணுவதை சொல்லு.. அவன் கூட ஜாலியா பழகினது வேறு.. திருமணம் செய்ய சம்மதமா?

அவள் : இல்லை  ..இல்லை..இல்லை.முடியாது

தந்தை ; நாங்க உன்னை நல்லா பார்த்துக்குவோம்… யோசிது சொல்லு.. சம்மதமா?

அவள்   : இல்லை இல்லை…

தந்தை : வரதட்ச்னை எதுவும் வேண்டாம். நாங்களே உனக்கு வேண்டியதை செய்வோம்

அவள் : எனக்கு எத்வும் வேண்டாம். இங்கிருந்து போங்க

எனக்கே அதிர்சியக இருந்தது…  ரவிக்கு அதைவிட அதிர்ச்சி… 

” துரோகி “

***************************************************************************************************************

ஆனால் இன்றைய சம்பவம் என்னை குழப்பியது.. அவள் ஏன் ரவியை துரோகி என்கிறாள்..

ரவியின் தந்தை வந்து இருந்தார்.. நல்லதாக போயிற்று

“ சார்.. அன்னிக்கு பெங்களூர் போனீங்க,, நான் அப்ப இல்ல… ரவியும் வேலைக்கு போய்ட்டான் . அவள் கூட என்ன பேசனீங்க.. எப்படி பேசனீங்க,, “

“ ஆமா.. அவ கூட தனியா பேச விரும்புனேன்… ஆனா கன்னடத்துல பேச முடியல.. நல்ல வேலையா , கடைக்கார பையன் வந்து ஹெல்ப் செஞ்சான் .. அவன் ட்ரான்ஸ்லேட் செஞ்சான் “

எனக்கு ஏதோ உறுத்தியது..

”அந்த செல்போன் ஒலிப்பதிவை திரும்ப போடுங்க.”

உன்னிப்பாக கவனித்தேன்

தந்தை : யாருக்கும் பயப்படாதே… உனக்கு தோணுவதை சொல்லு.. அவன் கூட ஜாலியா பழகினது வேறு.. திருமணம் செய்ய சம்மதமா?

மொழிபெயர்ப்பாளர் : என்னவோ ஆசை பட்டு ரெண்டு பேரும் பழகிட்டீங்க..  திருமனம் சாத்தியம் இல்லை.. வேற ஆள்கூட நானே கல்யானம் செஞ்சு வைக்கிறேன்.. சரியா ?

அவள் : இல்லை,..இல்லை  ..முடியாது…

தந்தை ; நாங்க உன்னை நல்லா பார்த்துக்குவோம்… யோசிது சொல்லு.. சம்மதமா?

மொழிபெயர்ப்பாளர் : காசு வேனும்னா கொடுக்கிறோம்.. சம்மதமா…

அவள்   : இல்லை இல்லை…

தந்தை : வரதட்ச்னை எதுவும் வேண்டாம். நாங்களே உனக்கு வேண்டியதை செய்வோம்

மொழிபெயர்ப்பாளர் : அவனுக்கு இப்ப உன்னை பிடிக்கலை..காசு வாங்க்கிக்க

அவள் : எனக்கு எத்வும் வேண்டாம். இங்கிருந்து போங்க

 

கேட்டதும் எனக்கு ரத்தம் கொதித்தது…

அடடா…  தீர விசாரிக்காமல் போனோமே..  அந்த மொழிபெயர்ப்பாலனை சும்மா விட கூடாது..

“ அந்த கடைப்பயன் வேலை பார்க்கும் கடை நம்பர் கொடுங்க’

அவசரமாக போன் செய்தேன்…

ரவியின் தந்தையை பேச சொன்னேன்..

“ அவன் இப்ப வேலைல இல்லையாம்பா”

சட் என போனை வாங்கி நான் பேசினேன்..

“ அவன் எங்கெ போனான் “

“ தெரியல.. நல்ல பையந்தான்.. திடீர்னு ஓடி போய்ட்டான்.. பாவம் தாழ்வு மனப்பானமை “

” தாழ்வு மனப்பன்மையா..  ஏன் ? “

“ சின்ன வயசுலயே முடி எல்லாம் கொட்டி போச்சு.. முகம் முழுதும் தழும்பு வேற..  என்ன இருந்தாலும் அவனோட நீல கண்களை மறக்க முடியாது “

**************************************************************

Friday, September 10, 2010

பதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ் ஒன்லி

shakeela_1019_f4 பதிவுலகம் என்பதே பணக்காரர்களின் பண்ணை வீடுதான். மென் பொருள் கில்லாடிகளும் , பணக்கார வீட்டு பிள்ளைகளும் இதில் பொழுது போக்குகிறார்கள். ஆனால் நான் எல்லாம் பதிவுலகில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தமிழ் தாய்க்கு சேவை செய்ய வேண்டும், இந்தியாவை வல்லரசு ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் .

இந்த சூழ் நிலையில் நான் எழுதுவதால் யாரவது பதிவர் சந்திப்பு என அழைத்தால் உடனடியாக ஆஜர் ஆகி விடுவது என் வழக்கம் . அழைக்க கூட வேண்டாம், விஷயம் கேள்விப்பட்டாலே அங்கு ஆஜராகி விடுவேன்.

அதற்கு காரணம் சமகால கவிதைகளில் காணபடும் படிமங்களை விவாதிக்கவோ , பின் நவீனத்துவத்தை பற்றி ஆராயவோ, வில்லியம் பர்ரோஸ் , அல்-கூப்ஸ் அல்-ஹஃபி , பாப்லோ நெரூதா , விக்தோர் ஹாரா ஆகியோரைப்பற்றி பேசவோ  அல்ல. யாரையாவது சந்த்திதால் டீ வாங்கி தருவார்களே என்பதற்காக.

இப்படி  நான் இருந்தாலும் இன்னும் பல ஊர்களுக்கு என்னை யாரும் அழைத்து செல்லவில்லை. என்ன செய்வது என இருப்பதை வைத்து மேனேஜ் செய்து வருகிறேன். அது இல்லாட்டி இது என்பது என் பாலிசி. அதிகம் அலட்டினால் ஆபத்து என்பதை இந்த கதை மூலம் தெரிந்து கொண்டேன்,

***********************************************************************************************8

ஒரு சிறுவன்  மீது ஒரு கற்பழிப்பு கேஸ் நடந்தது. கோர்ட்டில் அந்த பையனின் வக்கீல் அவன் மேட்டரை கையில் பிடித்துக்கொண்டு, நீதிபதியிடம் அய்யா இந்த தம்மாதூண்டு மேட்டரை வைத்து கொண்டா கற்பழிப்பு பண்ண முடியும்ன்னு வாதம் பண்ணி கொண்டு இருந்தாள்.  இந்த பையன் வக்கீலிடம் சொன்னான் : ”மேடம் மெதுவா பண்ணுங்க. இல்லை என்றால் நம் கேஸ் தோத்து போய் விடும்.”

******************************************************************************************

இருந்தாலும் என் எழுத்து சேவையை பாராடி சிலர் விருந்து வைப்பதுண்டு . இப்படி நண்பன் ஆனவன் தான் கில்மா ராஜன். ஆள் பல கில்மா வேலைகளில் கில்லாடி. அவன் எனக்கு பல உதவிகள் செய்து இருக்கிறான். என்ன உதவி ? சொல்கிறேன்.

அவன் செய்த உதவி எப்படிப்பட்டது என்றால் அவன் டீ வாங்கி தந்து இருக்கிறான். அவனை சந்திதபோது தன் அறைக்கு அழைத்து சென்றான். உனக்கு தரபோகும் டீ யில் வழக்கமாக பயன்படுத்தப்படும் மாட்டுப்பால் இருக்காது என்றான். எனக்கு தூக்கிவாரிபோட்டது. அப்படியென்றால் வேறு என்ன பால்? அவனோ கில்மா பேர்வழி . திகிலுடனும் ஆவலுடனும் அவனை பார்த்தேன்.

அவன் தெருவில் இருந்த வீனாகிப்போன சில செடிகளை பறித்து வந்தான். அதன் இலைகளை கிள்ளினால் பால் போன்ற திரவம் வடிந்தது. அதை பயன்படுத்தி டீ ரெடி செய்தான் அவன்.

“ அட பிச்சைக்கார நாயே “ என மனதில் நினைத்தாலும், பசி வெட்கத்தை வென்றது . அதை குடித்து தொலைத்து விட்டு வந்தேன். இந்த டெக்னிக்கை அன்றுதான் முதலில் பார்த்தேன்.

அன்று ஆரம்பித்தது தலைவலி.. தினமும் போன் செய்து , அன்று சாப்பிட்ட டீ எப்படி இருந்தது என கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பித்தான். இல்லை என்றால் மிஸ்ஸ்ட் கால் கொடுப்பான். நான் பேசினாலும் அதே புராணம் பாடுவான்.

தம்பி, ஒருவனை டார்ச்சர் செய்ய வேண்டுமானால், சொந்த காசில் போன் செய்து டார்ச்சர் செய். மிஸ்ட் கால் கொடுத்து அவன் காசில் அவனுக்கே சூனியம் வைப்பது அயோக்கியத்தனம் .

இவனை மாதிரி ஆட்களை எல்லாம் என்னோடு ஏன் கூட்டு சேர்க்கிறாய் ஆண்டவா என முறையிட்டேன்.. 

ஆனால் என் முறையிட்டை கடவுள் கேட்கவில்லை.

சில முறையீடுகள்  நிராகரிக்கப்பட காரணங்கள் இருக்கலாம் , இந்த பின்வரும் சம்பவத்தை போல.. 

ஒருவர் ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பம் நிராகரிக்கப்ட்டது . அவர் யார் என நீங்களே கண்டு பிடித்து கொள்ளுங்கள்.

*******************************************************************************************************************

ஊதிய உயர்வு கோரும் மனு:

அனுப்புனர் : ******

பொருள்   : ஊதிய உயர்வு

அன்புள்ள ஐயா,

கீழ்காணும் காரனங்களால் ஊதிய உயர்வு தேவை

1. நான் உட்கார்ந்து பொழுதைக் கழிக்காமல், உடல் உழைப்பு செய்கிறேன்.

2. சமயங்களில் யாரையும் எதிர்பார்க்காமல் நானே பணியை முடிப்பேன்.

3எல்லோரும் தண்ணீ போட்டு விட்டு ஆடுவார்கள். நான் ஆடிவிட்டுதான் தன்ணீ பொடுவேன்
4. நான் மிக ஆழமான இடத்தில் வேலை செய்கிறேன்.
5. நான் தலைகுப்புற நுழைந்து வேலை செய்யவேண்டியுள்ளது.
6. எனக்கு வாரவிடுமுறையோ, பண்டிகை விடுமுறையோ வேறு பொது விடுமுறையோ கிடையாது.
7. நான் எப்போதும் ஈரமாக உள்ள சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டியுள்ளது.
8. நான் வேலை செய்யுமிடம் எப்போதும் இருட்டாகவும் காற்றோட்டமில்லாமலும் தான் இருக்கும்.
9. நான் மிக வெப்பமான பகுதியில் வேலை செய்கிறேன்.
10. நான் பணிபுரியும் இடம் தொற்றுவியாதிகள் எளிதில் பரவக் கூடிய இடம்.
11. சிலநாட்களில் இருமுறை மும்முறைகூடப் பணிசெய்ய அழைக்கப் படுகிறேன்.

இவற்றை கருத்தில் கொண்டு எனக்கு கணிசமாக ஊதிய உயர்வு வழங்கவும்.
தங்கள் உண்மையான ஊழியன்
***********.
*****************************************************

அன்புள்ள மனுதாரருக்கு ,

ஊதிய உயர்வு மனு நிராகரிக்கப் படுகிறது. ஏனெனில்:
1. நீ என்றைக்கும் தொடர்ந்து எட்டு மணி நேரம் பணியில் இருப்பதில்லை.
2. சிறிது நேரம் பணிசெய்தபின் துவண்டு படுத்துக் கொள்கிறாய். பிறகு உன்னை பலத்த முயற்சிக்குப் பிறகுதான் பணிக்குத் தயார்செய்ய முடிகிறது.
3. நீ எல்லா நேரத்திலும் நிர்வாகம் தரும் வேலையைச் செய்வதில்லை. சில சமயம் இங்கு உன் பணிக்காக அர்ப்பணிக்க வேண்டிய உழைப்பையும் சக்தியையும் ஏதோ கைத்தொழில் செய்து அல்லது வேறு கம்பெனிகளில் ரகசியமாகப் பணிசெய்து விரயமாக்குகிறாய் என அறிகிறோம்
4. உனக்காக நிர்ணயிக்கப் பட்ட பணியிடம் தவிர வேறு இடங்களுக்கும் — அந்த இடங்கள் எச்சில், அல்லது மலம் படர்ந்த பகுதிகளாயினும் அல்லது மலைப்பிரதேசமாயினும் — அவ்வப்போது சென்றுவர விரும்புகிறாய்.
5. நீ பல நேரங்களில் சுயமுயற்சியுடன் பணி செய்யாமல், உன்னைத் தட்டிகொடுத்து தாஜா செய்தால் தான் வேலைக்குத் தயாராகிறாய்.
6. நீ வேலைசெய்த இடத்தை பணிமுடிந்ததும் சுத்தமாக விடாமல், சளி போல எதையோ சிந்திவிட்டு வெளியேறுகிறாய்.
7. பணிசெய்யும் எல்லா நேரங்களிலும் தொழிலுக்குரிய ஹெல்மெட் அணிதல் போன்ற பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை.
8. சில நேரங்களில் பாதிவேலை செய்யும்போதே மெல்லக் கழட்டிக்கொண்டு போய்விடுகிறாய்
9. நிர்வாகம் எதிர்பார்க்கும் 65 வயது வரையில் நீ பணியிலிருப்பாயா, அல்லது இயலாமை ஒய்வு பெற்றுக் கொள்வாயா என்பது நிச்சயமில்லை. ஏனெனில் இப்போதே தேவைப்படும்போதுதொடர்ந்து இரண்டு ஷிஃப்ட் பணிசெய்ய இயலாமல் சோர்ந்துவிடுகிறாய்..
10. எப்போது வேலைக்கு வரும்போதும் பணிமுடிந்து போகும்போதும் என்னவோ இரண்டு கனமான பைகளை தூக்கிக்கொண்டு திரிகிறாய் – அவற்றுள் என்ன மர்மம் பொதிந்துள்ளதோ என ஐயம் எழுகிறது.
இந்த காரணங்களால் இந்த ஊதிய உயர்வு மனு நிராகரிக்கப் படுகிறது.

ஒப்பம் , நிர்வாகி

*****************************************************************************************************************

இதே போல என் முறையீட்டையும் கடவுள் நிராகரித்து விட்டார். அதே கில்மா ராஜனிடம் உதவி கேட்க வேண்டிய நிலை வந்தது..

அன்று ரூமில் தனியாக இருந்தேன். பலான படம் பார்த்து விட்டு ஒரு பதிவிடலாம் என நினைத்தேன். இலக்கிய பணியும் முடியும். என் பணியும் முடியும் என்று ஆசை.

ஆசைப்பட்டதில் தவறில்லை. ஆனால் நானே போய் சி டி வாங்கி இருந்திருக்க வேண்டும். அங்குதான் விதி விளையாடியது.

கடைக்கு போக சோம்பல் . எனவே கில்மாவிடம் சொல்லி சி டி வாங்கி வர சொன்னேன். அப்போது பிடித்தது சனி.

இதோ கடைக்கு போகிறேன். இதோ வாங்கி விட்டேன். இதோ என் டி வியில் போட்டு செக் செய்கிறேன். முதல் காட்சி. அடேங்கப்பா… பெரிய்ய்ய்ய்ய ……    வீடு. அதற்குள் என ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தான். அட பாவி. இதை கேட்டால் படம் பார்க்கும் எஃபக்ட் இப்போதே கிடைத்து விடுமே.. படம் பார்க்கும் தேவையே இல்லாமல் போய் விடுமே என்ற என் தவிப்பை அவன் உணரவில்லை.

கடைசியில் ஒரு பையில் போட்டு எடுத்து வந்தான். என்னிடம் கொடுத்துவிட்டு, இதில் என்ன இருக்கிறது என்பது ரகசியம். யாரிடமும் சொல்ல வேண்டாம். அடித்து கூட கெட்பார்கள். சொல்லிவிட வேண்டாம் என எச்சரித்தான்.

ஐயா, சி டி என்பது பார்ப்பதற்காகத்தான் .இது என்ன ரகசியம். எனக்கு பயங்க்ரகோபம்..

அதன் பின் படம் பார்த்து பதிவும் எழுதினேன். எப்போதும்  படம் பார்த்து பதிவு எழுதினால் , படத்துக்கு பைனான்ஸ் செய்பவர்களுக்கு நன்றி சொல்வது வழக்கம். ஆனால் அந்த பதிவில் கிறக்கத்தில் இருந்த்ததால் அவன் பெயரை எழுதவில்லை.

அதை படித்து விட்டு குறுன்செய்தி அனுப்பினான். “ I am exremly hurt. more than me ms.shakeela. anyway all the worst “ இதை படித்து விட்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவன் புண்பட்டால் நியாயம். ஷகீலா ஏன் புண்பட்டார். பெரிய மனது உடையவராயிற்றே அவர்,

அவனுக்கு போன் போட்டேன். அவ்வலவுதான். ஓ ஓ ஓ ஓ ஓ என ஒப்பாரி வைக்க ஆரம்பித்தான். திடுக்கிட்டு போனேன். கொஞ்ச நேரத்தில் பாலன்ஸ் இல்லாமல் லைன் கட்டாகி விட்டது. அந்த ஒப்பாரிக்கு இடையில் அவன் சொன்ன விஷயம் இதுதான்.

அவன் பெயரை பதிவில் எழுதாததால் ஷக்கீலா மனம் உடைந்து விட்டாராம்.

பாருங்கள். தேவையில்லாமல் ஷக்கீலாவை இதில் இழுக்கிறான். அவர் என் பதிவை படித்து விட்டு இவனிடம் அழுதாராம். இதை நான் நம்ப வேண்டாம்.

இப்படி பட்டவர்கள் இருப்பதால்தான் பதிவுலகம் கண்ணிர் வடிக்கிறது.

ஆனால் இதை கண்டித்து எழுதினால் என்னை திட்டுகிறார்கள்.

அன்று ஒருவர் என்னிடம் வந்தார் .. சொந்தமாக வலை பூ வைத்து இருக்கிறீர்களாமே என்றார்.

ஆமாம் என்றேன் பெருமையாக..

ஒரு முழம் எவ்வளவு என்றார் அவர். அது என்ன மல்லி பூ வா?

இப்படிப்பட்டவர்களை திட்டாமல் கொஞ்சவா முடியும்..

இன்னொருவர் வந்து பத்திரம் எழுதிதாருங்கள் என ஊரில் இருந்து புறப்பட்டு வந்து விட்டார்.

பத்திர பதிவருக்கும், வலைப்பதிவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்..

ஏற்கன்வே பதிவுலகம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிரது. இதில் இப்படிப்பட்ட்வர்கள் வேறு வந்து சேர்ந்தால் இலக்கியம் என்ன ஆவது?

எழுத்தாளன் என்றால் இளித்த்வாயன் என நினைக்கிறார்கள்..

*********************************************************************************************************************

ஒரு நாள் ராத்திரி அவள்  வீட்டுக்கு வெளியே காத்து
வாங்க வந்தாள். அரையிருட்டில், நாலடி உயரத்தில் ஒரு கோரமான உருவத்தை கண்டாள். “நீ பூதம் தானே? ” என்று கேட்டாள். பூதமும் ஆமாம் என்று ஒப்புக் கொண்டது. “உன்னை நான் பார்த்துட்டேன், எனக்கு மூணு வரம் வேணும்! ” “சரி, கேளுங்கள் எஜமானியே” என்றது பூதம்.
அவளும் யோசித்து “மொதல்ல எனக்கு ஒரு அரண்மனை வேணும்” என்றாள். பூதம் “அப்படியே ஆகட்டும் எஜமானியே” என்றது. “அடுத்து 10 கோடி ரூபாய் பணம் வேணும்” என்றாள். பூதம் “அப்படியே ஆகட்டும் எஜமானியே” என்றது. “மூணாவது எனக்கு அம்பது ஏக்கர் நிலம் வேணும்” என்றாள். பூதம் “அப்படியே
ஆகட்டும் எஜமானியே, ஆனால் ஒரு விஷயம், இந்த ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றால், இன்று இரவு முழுதும் என்னுடன் நீங்கள் இனபமாக இருக்க வேண்டும் ” என்றது.
அவளும்  கிடைக்கப் போகும் வரங்களுக்காக ஒப்புக் கொண்டாள். பூதம் ராத்திரி முழுசும். அனுபவைத்து  விடியற்காலையில் அந்த குள்ள உருவம் அவளை எழுப்பியது.
அது “உன் வயசு என்ன ?” என்ன கேட்டது. அவள், “எனக்கு 27 வயசு ஆச்சு ” என்றாள்.

“27வயசாச்சு, இன்னுமா பூதம், பேய்ன்னு எல்லாம் நம்பறே!”

எவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்

பழைய தமிழ் நூல்களை படித்தால் , அந்த காலத்திலேயெ எப்படி எல்லாம் சிந்தித்து இருக்கிறார்கள் என ஆச்சர்யமாக இருக்கும். மற்ற பல நாடுகள் உருவாகி இருக்கவே இல்லாத நிலையில், தமிழன் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறான். சிந்தித்து இருக்கிறான் என்பதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.

காதல் பாடல்கள் ஒருவகை.. அதிலும் இயற்கை வர்ணனைகளும் போட்டி போட்டு வரும்.

தத்துவ சிந்தனைகள் நிரம்பிய பாட்லகள் ஒருவகை..

போர் தான் வீரம், சக தமிழனை கொல்வதுதான் வீரம் என நினைத்த அரசர் ஒரு பக்கம் .. அதை போற்ருவோர் ஒரு பக்கம். போர் வேண்டாம் என சொல்லுவோர் ஒரு பக்கம் என பல பர்வைகளை தரும் நூல் புற நானூறு. அதில் முத்தாய்ப்பாக திகழ்வதுதான் கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடல். அவர் சோதிட நிபுணர் என்பதும், இந்த பாடலில் விதியின் வலிமையை கூறுகிறார் என்பதும், இதை புரிந்து கொள்ளாமல் , நாத்திக வாதிகள் இந்த பாடலை பயன் படுத்தி விட்டு , பின் அசடு வழிந்தனர் என்பதும் இங்கு தேவையில்லாத இடைசெருகல். ஆனால் உண்மையான நாத்திக பாடல்களும் தமிழில் உண்டு.

 

இந்த பாடல் விதியை மட்டும் சொல்லவில்லை. தன்னம்பிக்கை, யாரையும் பொருட்படுத்தாதே , சரி என படுவதை செய் என்று தைரியப்படுத்துதல், யாரையும் அற்பமாக நினைக்காதே என்று வழினடத்தல், தோல்வியை கண்டு துவளாதே என்று ஊக்குவித்தல், வெற்றியில் ஆடாதே என எச்சரிக்கை என பெரிய நூலையே , ஒரே பாடலில் சொல்லி இருக்கிறார் தலைவர்..

ஆனால் நல்லது செய்தால் சொர்க்கம் போவாய் என்றெல்லாம் சொல்ல முடியாது.  வாழ்க்கை அதன் போக்கில்தான் நடக்கும் . நீ நினைத்து எதுவும் மாறாது என்றும் நடைமுரையை கூறுகிறார்..

இதோ அந்த பாடல்..

 

யாவரும் ஊரே , யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்

இனிது என மகிழ்தன்றும் இலமே முனிவின்

இன்னாது என்றலும் இலமே மின்னொடு

வானம் தண் துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

 

எல்லாம் நம்ம ஊருதான், எல்லாம் சொந்த காரங்கதான்.. நமக்கு நல்லதோ கெட்டதோ .. நம்மதான் அதற்கு காரணம். இறப்புக்கு பயப்படாதே ..அது எப்போதும் இருப்பதுதான். அதே சமயம் வழ்க்கைதான் இனிதுனு நினைத்து , அதிலேயே சிக்கி கொள்ளாதே.. துனபம் வந்தா துவண்டும் போகாதே..ஆற்று வெள்ளத்தில் செல்லும் படகு ஆற்றின் போக்கின் செல்வது போல , வாழ்வு விதிப்படி செல்கிரது. இதில் எந்த ஏக்கமும் வேண்டாம் . எந்த சச்சரவும் வேண்டாம்.

ஒருத்த்ன் பெரிய ஆளா இருக்கிறான் என்றால், அவன் நேரம் நல்லா இருக்குனு அர்த்தம் . எனவே பெரிய ஆள்னு மிரள வேண்டாம். நாளைக்கே அவன் பிச்சைக்காரன் ஆகிவிட கூடும்..

ஒருத்தன் நம்மை விட கீழ் நிலைல இருக்கானா , அவனை இளக்காரமா பார்க்காதே.. நாளையே அவன் பெரிய ஆள் ஆகிவிட கூடும்..

எந்த பொல்லாப்பும் இல்லாம ஒரு பார்வையாளன் போல உலகில் இரு என்ற இந்த பாடலை போல இன்னொரு  பாடல் இல்லை..

Thursday, September 9, 2010

செய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறாராம்!!

நடிகர் முரளி எதிர்பாராத வகையில் இயற்கை எய்தியது அனைவருக்கும் வருத்தம்தான்.

ஆனால் அவர் மரணமடைந்ததே தெரியாமல் , ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றைய இதழில் வந்த செய்தி இது.

முரளி புது படித்தைல் நடிப்பதாகவும், படப்பிடிப்பு தொடங்கபோவதாகவும் செய்தி..

பழைய செய்தி என்றால் அதை நீக்கி இருக்க வேண்டும்.. வேலையில் அலட்சியம்…

எந்த செய்திதாள்? கண்டுபிடியுங்கள்

news

நாலும் தெரிந்தவன்

பெரிய தாடியும் மீசையுமாக வீட்டு கதவை தட்டுபவனை குழப்பத்தோடு பார்த்தார் பரமசிவம்.

” என்ன அங்கிள் அப்படி பார்க்குறீங்க, நாந்தான் தேவசகாயம். உங்க அருந்தவ செல்வனோட நண்பன் “

“அட ஆமா.. என் நண்பன் அங்கு இரண்டு நாள் தங்குவான். வேண்டும் உதவிகளை செய்க “னு மெயில் அனுப்பிச்சுட்டு போன்லயும் சொன்னானே !!

“ வாப்பா..” உள்ளெ அழைத்தார்.

டி வி யில் ஆழ்ந்திருந்த மனைவி குஜலாம்பாள் தாடியை பார்த்து சற்று மிரண்டாள்.

“ நம்ம பையனோட பிரண்டு டீ.. காப்பி போட்டு கொண்டு வா “

“ ஆண்டி காபி சூப்பரா இருக்குமாமே .. தினேஷ் அடிக்கடி சொல்லுவான் “

” காப்பி மட்டும் இல்ல… பிரியாணியும் சூப்பரா பண்ணுவா.. ஆமா , நீங்க நான் வெஜ் சாப்பிடிவீங்களா ? “

இதற்குள் பக்கத்து வீட்டு பத்மனாபன் பேப்பர் வாங்க உள்ளே வந்தார். தாடியை பார்த்து , யாரது என குழம்பினார்.

’ உட்கருப்பா பத்மா,, நமக்கு வேண்டிய பையந்தான் “

சபையை கூட்டி பேசினால் திருப்தி பரமசிவத்துக்கு.

” சார்.. பாம்பு முதல் பறவை வரை எல்லாம் சாப்பிட்டு இருக்கேன் “

“ பார்த்தா சாமியார் மாதிரி இருக்கியே , அதான் கேட்டேன் “

 

” சார்.. இப்படி இருப்பதுதான் இயல்பு.. என் ஆய்வு கட்டுரை வெளிவந்ததும் எல்லோரும் தாடி மீசை, நகம் எல்லாம் பெருசா வளர்க்க போறாங்க.. வெய்ட் அண்ட் சீ “

அதற்குள் காப்பி வந்து விட மூவரும் காபியை உறிஞ்சினார்கள்.

 

” என்ன ஆய்வு ? “ பத்து ஆர்வமாக கேட்டார். எதையும் தூண்டி துரிவி கேட்பது அவர் இயல்பு. தெரிந்து கொள்வதற்காக அல்ல.. குறை காண.. தன் மகனுக்கு பெண் பார்க்க, பத்துவை அழைத்து சென்று பரம்சிவம் பட்ட பாடு தனி கதை.

 

“ சார் .. உங்க மனசுக்கு தோணுகிற ஏதாவது ஒரு பொருள் பேரு சொல்லுங்க” தாடியை தடவியபடி கேட்டான் தேவசகாயம்..

ஏன் கேட்கிறான். சரி இனிப்பாக சொல்லலாம் “ லட்டு “

“ குட்.. லட்டை பார்க்க முடியும். முகர்ந்து பார்த்து கெட்டு போய் இருந்தால் கண்டு பிடிக்கலாம். அதன் வடிவை கண்டு ரசிக்கலாம். அதன் சுவையை உணரலாம். அது கீழே விழுந்தால் அந்த சத்தம் கேட்கலாம்.அதை தொட்டு பார்த்து ரசிப்பதுடம் நின்று விடலாம், சர்க்கரை நோய் இருந்தால்.  அதாவது பார்த்தல், கேட்டல், உணர்தல், முகர்தல், சுவை என்ற சில விஷயங்களுக்குள் உலகில் இருக்கும் எல்லா விஷயங்களையும் அடக்கி விடலாம் . இல்லையா ? “

இதில் அடங்காத பொருள் ஏதேனும் பொருள் இருக்கிறதா என யோசித்து , பின் யோசனையை கைவிட்டனர் இருவரும்.

”  நான் என்ன சொல்கிறேன் என்றால், இதற்குள் அடங்காத பொருட்களும் இருக்க கூடும்.. ஆனால் அதை உணரும் திறன் நம் புலன்களுக்கு இல்லை. ”

“ அதெப்படி சொல்ல முடியும்? அப்படி இருந்தாலும் நம்மை பொருத்தவரை அது இல்லைதானே.. “

“ இல்லை.. பூகம்பம் போன்றவற்றை மிருகங்கள் முன் கூட்டியே அறிந்து விடுகின்றன.. அதை உணரும் தன்மை நம்க்கு இருந்தது. கால போக்கில் இழந்து விட்டோம்..  மிருகங்களுக்கும் நமக்கும் ஒரே புலன்கள் இருந்தும் ஏன் இந்த இழப்பு ? யோசித்தீர்களா? “

 

“ தெரியலையே ? “ பரிதாபமாக சொன்னார் பத்து.. அதை விட பரிதாபமாக பார்த்தார் பரமசிவம்..

” ஆண்டி.. இன்னும் 10 நிமிஷத்துல மழை வரபோகுது.. வெளியே காயும் துணியை உள்ளே எடுத்து போடுங்க…  என்ன வித்தியாசம் என்றால், மிருகங்கள் நகம் வெட்டுவதோ , முடி வெட்டுவதோ இல்லை.. சித்தர்களும் அப்படித்தான்.. ஆக முடி, நகம் என்பது இறந்த செல்கள் அல்ல. அவையும் ஓர் உறுப்புதான்.. இந்த அதிர்சிகரமான உண்மையைத்தான் நான் ஆய்ந்து கண்டுபிடித்து இருக்கிறேன் “

 

அவன் சொல்லி முடிப்பதற்குள் , மழை பொழிய ஆரம்பித்தது.. ஆச்சரயமாக அவனை பார்த்தனர் இருவரும்..

” இதை தவிர நமக்குள் பல புலன்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம்.. அதையும் கண்டு பிடிப்பதுதான் என் ஆய்வு. முடி, நகம் என்பதும் ஒரு புலந்தான்.. ஒரு விஷயம் நடக்கப்போவது, ஈதர்கள் மூலம் காற்றில் தகவலாக பரவும். இதை கண்ணால் பார்க்க முடியாது, கேட்க முடியாது.,, எந்த கருவியும் உணர முடியாது… ஆனால் முடி, நகம் மூலம் அந்த தகவலை படிக்க முடியும்.. சுனாமி வரப்போவதை நான் முன் கூட்டியே உணர்ந்து எச்சரித்தேன். கேட்பாரில்லை “

அரசுக்கு எழுதிய கடிததை காட்டினான்…

 

“ இந்த டெக்னிக்கை பயன் படுத்திதான் , சாமியார்கள் ஆருடம் சொல்கிறார்கள்.. எல்லாம் இதன் மகிமை “ முடியை தொட்டு காட்டி புன்னகைத்தான்..

 

” மழை வருவதை சொன்ன.. ஓ கே.. வேற ஏதவது சொல்லு .. பார்க்கலாம் “

தலையை ஆட்டியபடி, கண்களை மூடிக்கொண்டான்..  இரண்டு நிமிடங்கள்..

” இப்ப இந்த வீட்ல இருக்கறவங்கள்ள ஒருவர் இன்று மாலைக்குள் இறந்து விடுவார் “

 

தற்செய்லாக அந்த பக்கம் வந்த குஜலாம்பாள் திடுக்கிட்டாள். சும்மா வாய வச்சுக்கிட்டு இருக்காம ஆருடம் கேட்டு இப்படி வாக்கி கட்டிக்கணுமா என்பது போல கணவனை முரைத்தாள்..

” நான் இந்த வீட்டை சேர்ந்தவன் இல்லையே “ அசர்ந்தப்பமாக கேட்டார் பத்து..

“ இப்ப இங்கே தானே இருக்கீங்க.. சோ நீங்களாகவும் இருக்கலாம் .. ஒரு வேளை இங்கு இருக்கும் ஏதேனும் வளர்ப்பு பிராணியாகவும் இருக்கலாம்.. சரி அன்கிள் .. நான் குளிச்சுட்டு யுனிவர்சிட்டி போய் வந்துட்றேன்.. சாய்ங்காலம் பேசலாம் “

**********************************************************************************

ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி மாதிரி பம்மி போய் உட்கார்ந்து இருந்த பரமசிவத்துக்கு ஐடியா தோன்றியது.

“ இங்கே வாடி.. இன்னிக்கு கோழி அடிச்சி பிரியாணி செய்.. நம்ம கோழி சாவதைத்தான் அவன் ஆருடமா சொன்ன மாதிரி கணக்கு ஆயிடும் .. “ வெற்றி சிரிப்பு சிரித்தார்..

இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்போதே கிளம்பிவிட்டார் பத்து..

இவருக்குத்தான் வெளியே தலைகாட்ட பயமாக இருந்தது..

” பேசாம கோழியை தின்னுட்டு , குப்புற அடிச்சி படுத்துற வேண்டியதுதான் “

கதவை யாரோ படபடவென தட்டினார்கள்.. ஏதோ எமர்ஜன்சி.. பத்துவுக்கு பாலா?

கதவை திறந்தார்.. வெளியே…………    பத்து தான்..

முகத்தில் கலவரம்..

“ டேய்..  கடைவீதில ஆக்சிடண்ட்.. தேவசகாயம் ஸ்பாட் அவுட் “

அதிர்ந்தார் பரமசிவம்..

“ என்னவோ நம்மகிட்ட இல்லாத புலனறிவு அவன்கிட்ட இருக்குனு கதை சொன்னான்… பிரேக் பிடிக்காத லாரி வேகமா வந்தது…  அவன் செல் போன் ல பிசியா இருந்ததால அவன் கண்ணும் அதை பார்க்கல.. காதும் ஜனங்க கத்துறதை கேட்கல.. என் புலன்கள் சரியா வேலை செஞ்சதால நான் தப்பினேன்..

இருக்றதை யூஸ் பண்ண தெரியாம , புதுசா ஒண்ணுக்கு ஆசைப்பட்டா எப்படிடா ?

Wednesday, September 8, 2010

பொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா?- அதிர்ச்சி ரிப்போர்ட்

leader


நக்சல் இயக்கத்தைப் பற்றி ஏதாவது செய்தி வரும்போது படிப்பதோடு சரி. மற்றபடி அவர்கள் வாழ்க்கையைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி கட்டுரை அதிர்ச்சி அளிப்பதாக இருந்த்து.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பெங்கால்- ஜார்கண்ட் எல்லைப்பகுதியில் சிபி ஐ – மாவொயிஸ்ட் கமாண்டராக இருந்தவர் ஷோபா மண்டி என்ற உமா. பாதுகாப்பு படையினருடன் பல மோதல்கள் இவர் தலைமையில் நடந்துள்ளன. ஆனால் அந்த இயக்கத்தை விட்டு விலகி போலீசில் சரணடைய விரும்புவதாக இவர் கூறுகிறார். ஏன்.. என்ன நடந்த்து..
ஒடுக்கப்பட்டவருக்காக போராடும் இயக்கத்தில் இருந்து ஏன் விலக வேண்டும்??
“அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் “ என்று சொல்லும் இவர் மேலும் சொல்கிறார்..
“ இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி இருக்கும். ஜார்கண்டில் இருக்கும் முகாமில் இரவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தேன். அங்கே பிகாஷ் ( இப்போது மிலிட்ரி கமிஷன் தலைவராக இருக்கிறார் ) திடீரென வந்தார், தண்ணீர் கேட்டார். நான் எடுக்க சென்றேன், தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். நான் தடுத்தேன். என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் . இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டினார் . ஆனாலும் உயர் நிர்வாகிகளுடம் புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அப்போது என் வயது 17 .
மூத்த மாவோயிஸ்ட் நிர்வாகிகள் பெண்களை தமது வேட்கைக்கு பயன்படுத்தி கொள்வது சர்வசாதாரணம். கருவுறுதலை அவர்கள் விரும்புவதில்லை. எனவே கருசிதைவு செய்தாக வேண்டும்.
கிராம மக்கள் பயம் காரணமாக அடைக்கலம் தருவார்கள். இரவெல்லாம் விழித்திருந்து, போலீஸ் வந்தால் தப்பிக்க உதவ வேண்டும். இப்படி அடைக்கலம் தரும் வீடுகளின் பெண்களையும் இவர்கள் விடுவதில்லை.
இப்படிப்பட்ட பாலியல் வன்முரையில் இருந்து தப்பிக்க ஒரே வழி, சீனியர் தலைவர் ஒருவருடன் நெருக்கம் ஆவதுதான். இப்படி எனக்கும் ஒருவர் பதுகாப்பு அளித்தார்.. என்னுடன் அவர் உறவு வைத்து இருப்பதாக அவர் அறிவித்தார். அதுதான் எனக்கு திருப்பு முனை.. உயர் பதவிகள் கிடைக்க ஆரம்பித்தன் “என்கிறார்.
போலிஸால் தேடப்படுபவர் இவர். ஜார்கண்ட் எம் பி சுனில் மஹோத்தோ 2007 ல் கொலை செய்யப்பட்தில், இவரை சந்தேகப்படுகிறார்கள். காவல் நிலைய தாக்குதல், போலிஸாரை கொன்றது, கட்த்தல் போன்றவற்றில் இவரை போலிஸ் கைது செய்ய விரும்புகிறது.
இப்படிப்பட்ட கில்லாடியான இவர் அந்த இயக்கத்தை விட்டு விலகுவதுதான் சோகம்.
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா

செய்தியை அப்படியே நம்ப வேண்டியதில்லை. மாற்று கருத்து இருப்பவர்கள் பின்னூட்ட்த்தில் தெரியப்படுத்தலாம்.
செய்தியை ஆதரிப்பவர்களும் தங்கள் கருத்தை சொல்ல்லாம்

Tuesday, September 7, 2010

முரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..

அந்த காலத்தில் ரஜினி ரசிகன் நான். கமல் ரஜினி ரசிகர்கள் மோதல் பரபரப்பாக நடைபெறும் ஒன்று.
கமல் ரசிகர்கள் டார்கெட் செய்யும் விஷ்யம் , ரஜினி கறுப்பு என்பது. அதுதான் தமிழ் நாட்டின் கலர் என நாங்கள் எதிர்வாதம் செய்வது வழக்கம்.

muralipaalam



இன்னிலையில் முரளி அறிமுகமானார். பூவிலங்கு படம். படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அவரும் கருப்புதான். ஆனால் கறுப்பு என்பது பழக்கமாகி விட்ட ஒன்றாகி மாறி இருந்த்து. சிவப்புதான் அழகு என்ற பழைய கண்ணோட்டம் மாறி இருந்த்து.
முரளி போன்ற நடிகர்களுக்கு தீவிர ரசிகர்களும் இல்லை. தீவிர எதிர்ப்பாலர்களும் இல்லை. படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்.
அவர் தனக்கு கிடைத்த அறிமுகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டார் என சொல்ல முடியாது.
ஆனாலும் அவ்வப்போது நல்ல படங்கள் தந்தார்.
பாலம் என்று ஒரு படம் வந்த்து. ஒரு பாலத்தை , இளைஞர்க்ள் சிலர் கைப்பற்றி கொண்டு, தம் கோரிக்கை நிறைவேற்ற நிபந்தனை விதிப்பார்கள்.
வித்தியாசமான படம் . அந்த கோரிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுடன் பேட்டி எடுத்து தொலைகாட்சியில் ஒளிபரப்பும் காட்சி நல்ல வரவேற்பை பெற்றது.
பெரும்பாலானோர் அந்த இளைஞர்கள் செய்வது சரி என பேட்டி அளிப்பார்கள். சோ மட்டும் இது சரியான தீர்வு அல்ல என சொல்வது அப்போது பரபரபை ஏற்படுதியது.
முரளிக்கு பெருமை அளிக்கும் படம் இது.
பகல் நிலவு பட்த்தில் சத்யராஜ்தான் அதிகமாக ஸ்கோர் செய்தார் என சொல்ல வேண்டும்.
புது வசந்தம் பட்த்தை மறக்க முடியுமா?

ஆனால் , ஆயிரம் படங்கள் வந்தாலும் , என்னை பொறுத்தவரை நினவில் நிற்பது இதயம் படம்தான்.
அனைவருமே அந்த பட்த்துடன் தம்மை அடையாளப்படுத்தி கொள்ள முடியும். அந்த தவிப்பு, சோகம் , காதல் எல்லாம் பலரும் அனுபவித்த ஒன்றுதான்.
எஸ் எம் எஸ் யுகத்தில் காதலை சொல்வதெல்லாம் பெரிய மேட்டர் இல்லை. ஆனால் அன்றைய கால கட்ட்தில் பொருத்தமானதாக இருந்த்து.
ஆனால் அந்த கால கட்டம் முடிந்த பின்னும் , அதே பாணியிலான பட்த்தை எடுத்து பலர் டார்ச்ச்ர் செய்தார்கள்.
மிகப்பெரிய நடிகர் என்று இல்லாவிட்டாலும், தனக்கு என ஒரு இட்த்தை பிடித்து வைத்து இருந்த்து முரளியின் சாதனை..

நடிகர் முரளி காலமானார்

murali


என்றும் இளமையாகவும் , கல்லூரி மாணவனாகவும் வலம் வந்த நடிகர் முரளி காலமானார்.
திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்த்து.
பூ விலங்கு படம் மூலம் அறிமுகம் ஆன அவர் பல வெற்றி தோல்விகளை சந்தித்தார். தனக்க்கென ஓர் இட்த்தை தக்க வைத்து கொண்டு இருந்தார்
இவரை அறிமுகம் செய்த சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் இவர் மகனையும் அறிமுகம் செய்த்து. அந்த படம் இப்பொது ஓடிகொண்டு இருக்கிரது.
இன்னிலையில் முரளி மரணம் இயற்கை எய்தி இருக்கிறார்.
அவர் குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்ஸ் ஒன்லி )

சென்ற வாரம் நான் ரசித்த ஐந்து விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறே,
இதில் கடைசி மேட்டரை மட்டும் சிறுவர்கள் படிக்க வேண்டாம் ( அடல்ட்ஸ் ஒன்லி ) .



Monday, September 6, 2010

பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி

நான் மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவரால் , கடும் ஏமாற்றத்துக்கு உள்ளானேன். சில நாட்களாகவே அந்த விஷ்யம் என்னை வாட்டி வந்த்து. மன உளைச்சல். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் இந்த உரையாடல் ஒரு வெளிச்சத்தை மனதில் பாய்ச்சியது.
எனவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவனமாக படியுங்கள் ( அடைப்பு குறிக்குள் இருப்பது நம் சொந்த சரக்கு. கண்டு கொள்ள வேண்டாம். ஹி ஹி )

******************************************************************************************
j_krishnamurti-2


’ நான் பல பிரச்சினைகளில் மாட்டிகிட்டு கஷ்டபட்றேன். இதுல என்ன கொடுமைனா , ஒரு பிரச்சினையை தீர்க்க முனைவது எனக்கு மேலும் கஷ்ட்த்திலும் , சித்திரவதையிலும் முடிகிறது. போதும் போதும்னு ஆகி போச்சு. இனி என்ன பண்றதுனு தெரியல. இன்னொன்னும் சொல்லணும். நான் செவிப்புலன் பாதிக்கப்பட்டவள். ஹியரிங் எய்ட் பயன்படுத்துறேன். எனக்கு பல குழந்தைகள். ஒரே கணவர் . அவரும் என்னை கை விட்டுட்டு ஓடிட்டாரு. என் குழந்தைகள்தான் எனக்கு இப்போது எல்லாம். நான் பட்ட கஷ்டங்கள் அவர்கள் பட கூடாது என்பதுதான் என் இப்போதைய நோக்கம் “


நம்ம துன்பங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதில் வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு அக்கறை !! தீர்வு வேண்டும் என்ற நமது துடிப்பு , பிரச்சினை என்ன என்பதை அமைதியாக பார்க்கும் தன்மையை பாதிக்கிறது. பிரசினைதான் முக்கியம்.. தீர்வு அல்ல. ஒரு தீர்வை தேடினால் , கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருக்கும். ஏனென்றால் தீர்வுக்கும் , பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை . பிரச்சினையிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான் தீர்வு என்பதை தேடுதலை பயன்படுதுகிறோம் . அந்த தீர்வில் அர்த்தம் இருக்காது. எனவே புரிதல் என்பதும் இருக்காது . எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த அடிப்படை காரணம் என்ன என பார்க்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்வது மேலும் கஷ்ட்த்தையும் , சிக்கலையும்தான் ஏற்படுத்தும்.
( குடியின் தீமையை அறிந்து கொள்வதால் மட்டும் குடியில் இருந்து விடுதலை பெற முடியாது. குடியை நிறுத்தபோகிறேன் என்று உறுதி எடுப்பது பெரும்பாலும் தோல்வியில் முடிவது இதனால்தான் )
பிரச்சினையை புரிந்து கொள்வது முக்கியமானது என்ற தெளிவு வேண்டும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையாவதன் முக்கியத்துவம் புரிய வேண்டும். அப்போதுதான் பிரச்சினை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை பார்க்க முடியும். பிரச்சினைகளிலிருந்து விடுதலை இன்றி அமைதி இல்லை. மகிழ்ச்சிக்கு அமைதியே அடிப்படை. ஆனால் அதுவே முடிவு அல்ல. காற்று இல்லாத போது தண்ணீர் குளம் அமைதியாக இருக்கும். அதே போல பிரச்சினைகள் இல்லாதபோது மனம் அமைதியாக இருக்கும். ஆனால் மனதை முயற்சி செய்து அமைதியாக்க முடியாது . ( தியானம் செய்வது, மந்திரம் சொலவது போன்றவை மூலம் ) .அப்படி செய்தால் அந்த மனம் உயிர் துடிப்போடு இருக்காது.
மனம் தெளிவாக இருக்கும்போது பிரச்சினையின் அடிப்படையை தெளிவாக பார்க்க முடியும். கவனிப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த முடிவு கிடைதால் நல்லது, இது கெட்ட்து என்பது போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் வெறுமனே பார்க்க வேண்டும்.


“ நடக்க முடியாத ஒன்றை சொல்கிறீர்கள். நமது கல்வி என்ன சொல்கிறது. நல்லது கெட்ட்தை பிரித்து பார். ஒப்பிடு .. முரண்படு. தேர்ந்தெடு. தீர்ப்பளி என்பதைத்தான் நாம் கற்றிருகிறோம். எதுவும் தீர்ப்பளிக்காமல் வெறுமனே கவனி என்கிறீர்களே. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா ? தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது? அதில் இருந்து எப்படி விடுபடுவது? “


வெறுமனே கவனித்தல் , செயலற்ற விழிப்புணர்வு – இவைதான் புரிதலுக்கு அடிப்படை என்பதை உங்களால் உணர முடிந்தால் , இந்த உண்மையே உங்களுக்கு விடுதலை வழங்கும். செயல் அற்ற – ஆனால் விழிப்புணர்வு மிக்க நிலையின் அவசியம் புரியவில்லை என்றால் தான் “ எப்படி “ என்ற கேள்வி பிறக்கிறது. உண்மைதான் விடுதலை தருகிறது. தியான முறைகளோ , வேறு வழிமுறைகளோ அல்ல . அமைதியான கவனிப்புதான் புரிதலை தருகிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தால், கண்டித்தல் நியாயப்படுதுதல் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். ஓர் ஆபத்தை பார்த்தவுடன் உடனடியாக தப்பிக்க முயல்வோம். ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்பதில்லை. அதே போன்ற தீவிரத்துடன் செயலற்ற விழிப்புணர்வின் அவசியத்தை பார்க்க முடியவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறீர்கள்.
இந்த அவசியத்தை ஏன் பார்க்க முடியவில்லை ?

” நானும் முயல்கிறேன் , ஆனால் இது போல நான் இதற்கு யோசித்து பார்த்த்தில்லை. நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: என் பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டும். பெரிய டார்ச்சரா இருக்கு.. எல்லோரையும் போல சந்தோஷமா இருக்க விரும்புறேன் “

தெரிந்தோ தெரியமலோ , செயலற்ற விழிப்புணர்வு என்ற நிலையை தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். பிரச்சினைகளிடம் இருந்து விடுதலை பெற நம் உள்மனம் விரும்புவதில்லை. பிரச்சினை இல்லாவிட்டால் நமக்கு என்ன அடையாளம் இருக்கிறது ? நம் வீட்டு பிரச்சினை நமக்கு தெரியும் . பிரச்சினை இல்லாத நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவேதான், என்னதான் கஷ்டமாக இருந்தாலும் தெரிந்த ஒன்றையே கட்டியழ விரும்புகிறோம்.
பிரச்சினை எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால் பிரச்சினையின் அடிப்படையை ஆராய தொடங்கினால் அது எதில் போய் முடியும் என்பது தெரியாது. இது மனதிற்கு பயத்திற்கு பயத்தை அளித்து சோர்வடைய செய்கிறது . பிரச்சினைகளே இல்லை என்றால் மனதிற்கு வேலை இல்லாமல் போய் விடும். பிரச்சினைகளால்தான் மனம் வாழ்கிற்து. பிரச்சினை என்பது உலகம் சார்ந்த்தாகவோ, சமையலறை சார்ந்த்தாகவோ, அரசியல் சார்ந்த்தாகவோ, உறவுகள் சார்ந்த்தாகவோ , ஆன்மீகம் அல்லது சித்தாதந்தம் சார்ந்த்தாகவோ இருக்கலாம் ( அட எதுவும் இல்லை என்றால், மெகா சீரியலில் வரும் பிரச்சினைகளை நினைத்து கவலைப்ப்டலாம் ) : எனவே பிரச்சினை என்பது நம்மை குறுகிய வட்ட்த்தில் அடைக்கிறது. உலக பிரச்சினையில் மூழ்கி இருக்கும் மனதிற்கும் ஆன்மீக பிரச்சினையில் ஆழ்ந்து இருக்கும் மனதிற்கும் அடிப்படையில் வித்தியாசம் இல்லை ( டோனி பிளைர் புத்தகதில் சொல்வது பற்றி யோசிப்பதற்கும் , நித்தியானதா நல்லவரா என விவாதிப்பதற்கும் , கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என வாதம் செய்வதற்கும் அடிப்ப்டை வித்தியாசம் இல்லை ) .. பிரச்சினைகள் மனதிற்கு ஒரு சுமையாக இருக்கின்றன ( சுகமான சுமைகள் ) “ நான் “ எனது “ போன்றவற்றுக்கு ஊட்டமளிப்பது பிரச்சினைகள்தான். பிரச்சினைகள், சாதனைகள் , தோல்விகள் இல்லாமல் “ நான் “ என்பது இல்லை.. ( நமது வாழ்க்கை என நாம் நினைப்பது நாம் என்ன சாதித்தோம் என்ன பிரச்சினைகலை சந்தித்தோம், என்ன கஷ்டப்பட்டோம் என்பதைத்தானே )


“ நான் என்ற உணர்வு இல்லாமல் எப்படி வாழ்வது ? அனைத்துக்கும் அடிப்படை அதுதானே ? “

செயல் என்பது ஆசை , நினைவுகள் , பயம்,. சந்தோஷம், வலி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் வரை , செயலின் விளைவு குழப்பமாகவும், முரண்பாடு நிறைந்தும் , பகையுணர்வு நிறைந்தும்தான் இருக்கும். உலகால் குறிப்பிட்ட வகையில் புரோகிராம் செய்ய வைக்கப்பட்டு இருக்கிறோம் ( நான் இந்த மதம் சார்ந்தவன், இந்த நாடு சேர்ந்தவன் என்பது போல ) அதற்கேற்ப நம் செயல் அமைகிறது. ஆகவே நம் செயலில் முழுமை இருக்காது. எனவே முரண்பாடுகள்.இதனால்தான் பிரச்சினைகள்.
நான் என்பதன் வெளிப்பாடுதான் முரண்பாடுகள். வெற்றி தோல்வி, ஆசை பயம் போன்ற முரண்பாடுகள் இன்றி வாழ்வது சாத்தியமான ஒன்றுதான் . ஆனால் அது தியரட்டிக்கலாகத்தான் இருக்கிறது. நேரடியாக அதை அனுபவித்தால்தான் அது உண்மையாக மாறும்.
நான் என்பது எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் பேராசையில் இருந்து விடுபட முடியும்.

“ எனது காது கேளாமை என்ற குறை , என் பயங்கள் , அடக்கப்பட்ட உணர்ச்சிகள் இவற்றின் விளைவு என நினைக்கிறீர்களா? உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா ? ஏதாவது ஒரு வகையில் நான் என் வாழ்வில் அடக்கப்பட்டுத்தான் வருகிறேன். நான் நினைத்த எதுவும் எனக்கு கிடைக்கவில்லை., நினைத்தை செய்யவும் முடியவில்லை “

புரிந்து கொள்ளுதலை விட அடக்கிதல் எளிது. குழந்தை பருவத்தில் இருந்து அடக்கி வைக்கப்பட்டவர்களுக்கு புரிந்து கொள்ளல் கஷ்டமான ஒன்று. அடக்குதல் என்பது பழக்கமாகி விடும் . ஆனால் புரிதல் என்பது அவ்வப்போது நிகழ வேண்டும். அது பழக்கம் ஆகாது. தொடர் கவனிப்பு, விழிப்புனர்வு தேவை. புரிதல் நிகழ வேண்டுமென்றால் நிதானம் , அமைதி , நெகிழ்வுத்தன்மை , சுரணைத்தன்மை ஆகியவை தேவை. செண்டிமெண்ட்டுகெல்லாம் இதில் வேலை இல்லை.
ஒரு பிரச்சினை என்றால் அடக்குதல் என்பதற்கு எந்த வித விழிப்புணர்வும் தேவையில்லை.சுலபமானது ஆனால் முட்டாள்தனமானது ( ஒருவர் மேல் கோபம் என்றால் நான் கோப்ப்படமாட்டேன்,. நான் அமைதியானவன் என திரும்ப திரும்ப சொல்லும் செல்ஃப் ஹிப்னாடிசம் மூலம் கோபத்தை அடக்க முயலுதல் ஓர் உதா. ) இப்படி அடக்குதல் நமக்கு ஓர் மரியாதையை தரும். மேலோட்டமான பாதுகாப்பை தரும் . புரிதல் என்பது விடுவிக்கிறது. அடக்குதல் என்பது ஒரு குறுகிய இட்த்தில் சிக்க செய்கிரது. அதிகாரத்தின் மேல் பயம், பாதுகாப்பின்மை , கருத்தின் மீது பயம் போன்றவை ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதில் பாதுகாப்பு பெற முயல்கிறது ( மாமியாரிடம் பேச பயப்படும் சில பெண்கள் , எதயாவது ஒன்றை படித்து கொண்டே இருப்பார்கள் . படிப்பாளி என்ற முத்திரை அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை தரும். சிலர் ஆன்மீக்வாதி என்ற முத்திரை பெற பார்ப்பார்கள் ) , மனம் சார்ந்த இது உடலிலும் பாதிப்பு ஏற்படுத்தி உடல் சார்ந்த விஷ்யமாகவும் மாறும். இந்த அடைக்கலம் எப்படிப்பட்ட்தாக இருந்தாலும் , அதில் பயம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். பயதில் இருந்துதான் , ஒன்றுக்கு பதில் இன்னொன்றை பயன்படுதுதல், இன்னொன்றில் ஒளிதல் , கட்டுப்பாடு போன்றவை பிறக்கின்றன. இது எல்லாமே அடக்கு முறைதான். இந்த அடக்குமுறைக்கு ஏதோ ஒரு வடிகால் தேவை. இது உடல் ரீதியாக வெளிப்படலாம் .. அல்லது ( ஆன்மீக !! ) மாயத்தோன்றங்களாக வெளிப்படலாம் . இது தனி நபரை பொறுத்த்து..


“ எனக்கு பிடிக்காத விஷயங்களை கேட்க நேரும்போது, காது கேட்க உதவும் கருவியை சரணடைவேன். யதார்த்த்தை விட்டு தப்பித்து எனக்கே உரிய தனி உலகில் வாழ இது உதவுகிறது. ஆண்டுக்கணக்கில் அடக்கி வைக்கப்பட்ட்தில் இருந்து எப்படி விடுதலை ஆவது? இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே !! ? “

எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே அர்த்தம் அற்றது. இது காலம் சம்பந்தப்பட்ட்து அல்ல. கடந்த காலத்தை ஆய்தல், பாதிப்பு ஏற்படுதிய சம்பவங்களை அலசுதல் என்பதெல்லாம் தேவையில்லை. அடக்குதல் என்பதை ஓர் உண்மையாக நேருக்கு நேர் பார்ப்பதுதான் முக்கியம். செயலற்ற விழிப்புணர்வு , விருப்பு வெறுப்பு இன்றி கவனித்தல், உண்மைக்கு எடுத்து செல்லும். நேற்று நாளை என்ற சிந்தனை மூலம் உண்மையை காண முடியாது. காலம் என்பதை கடந்தாக வேண்டும். உண்மையை அடைய முடியாது. பார்க்கவும் முடியாது. கொஞ்சம் , கொஞ்சமாக முயற்சிது , தவணை முறையில் உண்மையைஅ அறிய முடியாது.
உண்மையை அறிய வேண்டும் என்ற துடிப்பே தடைக்கல்லாக அமைந்து விடும். ஆசையில் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று இல்லை. ஆசை இருக்கும் இட்த்தில் விழிப்புணர்வு இருக்காது. தேடல், விடாமுயற்சி என்றெல்லாம் பெயரிட்டாலும், தேடினால் உண்மை கிடைக்காது. செயல் புரியாமல் வெறுமனே கவனிப்பதுதான் உண்மையை காட்டும். நான் என்பது எண்ணங்களால் ஆனது . எனவே நான் என் எண்ணத்தை ஆராய முடியாது. ஆராயப்படும் விஷயமும் ஆராயும் நபரும் ஒரே பொருளால் ஆனது. இரண்டும் வேறு வேறு அல்ல..
உண்மைதான் விடுவிக்கும். முயற்சியோ செயலோ அல்ல

Sunday, September 5, 2010

சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத்தாளர் பாலகுமாரன் கருத்து

balakumaaran


கேள்வி : இலங்கையின் இன்றைய நிலை பற்றி நீங்கள் பேசுவதே இல்லையே ?

பாலகுமாரன் பதில்
விடுதலைப் புலிகளை நசுக்கி , தமிழ் இனத்தை சீரழித்து , கொக்கரிக்கின்ற சிங்கள மக்களுக்கு பின்னால் மிகப்ப்பெரிய வெடி குண்டு இருக்கிறது. மிக மோசமான ஒரு மனிதரை இலங்கை அரசு தன் நண்பனாக கொண்டு இருக்கிறது.
சீனா தனக்கு பாதுகாப்பு என நினைத்து கொண்டிருக்கிறது இலங்கை.
தமிழர்களுடைய அழிவை விட மிக மோசமான வகையில் சிங்களவர்களின் அழிவு இருக்கும். பதினொரு வருட்த்துக்குள் சீன அரசு இதை செய்து முடித்து விடும்.
இந்திய துணைக்கண்ட்த்துக்கு நெருக்கடி கொடுக்க, அமெரிக்க சந்தையை தடுக்க , தன் சந்தையை விரிவு படுத்த சீன அரசு முன்னும் பின்னும் நெருக்கி தொந்தரவு கொடுக்க கூடிய ஒரு சூழ்னிலை ஏற்படும் . அப்போது இலங்கைக்கு துணை போக தமிழர்கள் இருக்க மாட்டார்கள். சிங்கள மக்களிடையே அரசியல் படுகொலைகள் வெகு வேகமாக விரைவில் நடைபெறும். நிலையற்ற தனமைக்கு அதுதான் ஆரம்பம்.
சரி, இந்த சீனாவை யார் அதட்டி கேட்க முடியும் ? இயற்கை அழிவு , உள் நாட்டு குழப்பம், அந்த ஊர் மக்களின் கிளர்ச்சி , மாணவர்கள் புரட்சி என பல ஆபத்துக்கள் அங்கே இருக்கின்றன.
2010 முதல் 2020 வரை தினசரி சீனாவின் ஏதேனும் ஓர் அழிவை பற்றி கேட்காமல் நாம் தூங்க முடியாது.

Saturday, September 4, 2010

சிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி

டியர் பதிவர் பிச்சைக்காரன்,
உங்கள் எழுத்தில் மயங்கிய கோடிக்கணக்கான ரசிகைகளில் ஒருத்தி மயங்கியவள் நான். உங்களை நேரில் பார்த்தால் .. ( சென்சார் ட் )
என்னதான் நீங்கள் எங்களை திட்டினாலும் எங்கள் நேசம் மாறாது..
ஆயிரம் முத்தங்களுடன்,
நடாலியா ஷரபோவா, மாஸ்கோ, ரஷ்யா...

டியர் ஷரபோவா,
இந்த உண்மை சம்பவத்தை பாருங்கள். அதன் பின் நான் ஏன் கோப்ப்படுகிறேன் என்பது புரியும்.
எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்து விட்ட்தால் யாரையாவது திருமனம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
தினமும் ஒரு பெண்ணை பார்க்கும் சூழ் நிலை இருந்த்து. அவளிடம் மனதை பறிகொடுத்தேன்.
காதலை சொல்ல தயக்கமாக இருந்த்து. பயமாகவும் இருந்த்து.
எப்படியோ கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்து கொண்டு , அவளை தனியாக சந்திக்க விரும்புவதாக சொல்லி விட்டேன்.
ஒரு ஹோட்டலில் அமர்ந்து இருந்தோம்.
மெதுவாக பேச ஆரம்பித்தேன்..
“ உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்.. உங்க பேர் , முகவரி சொன்னால் வீட்டில் வந்து பெண் கேட்கிறேன். பிடிக்கவில்லை என்றால் நண்பர்களாக பிரிந்து விடுவோம்” என்றேன் .
அவள் காலில் இருந்து செருப்பை கழட்டி பளார் என அறை விட்டாள். கூட்டம் கூடி விட்ட்து..
என்ன ஆச்சு என அவளிடம் கேட்டார்கள்.
“ பாருங்க சார்.. கல்யாணம் ஆகி இத்தன நாள் கழிச்சு என் பெயர் என்ன்னு கேட்குறாரு. கட்டின பொண்டாட்டிக்கே லவ் லெட்டர் தர்ராரு.. இவரை அடிச்ச்து தப்பா ? “
நான் இந்த அளவுக்கு உலகையே மறந்து இலக்கியப்பணி செய்கிறேன்.. என்னை கிண்டல் செய்தால் கோபம் வருமா வராதா..?

ஞாயிற்று கிழமை கூட ஓய்வெடுக்காமல் எழுதுவது என் வழக்கம். ஒரு நண்பன் அவசரமா வா.. பார்க்கணும் என்றதால் அவன் வீட்டுக்கு போனேன்.
நான் போன நேரத்தில் அவன் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது அவனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..
“ உன்னையும் சாப்பிட கூப்பிட ஆசை.. ஆனால் கூப்பிட்டால் சாப்பிடவா போற? “
“ நான் வேண்டாம்னு சொன்னாலும் நீ விட்டுடவா போற ? “
“ நான் வற்புறுத்துனாலும், சாப்பிட்டுட்டுதான் வர்ரேன் அப்படீனு சொல்லிடுவ.. உன்னை கஷ்டப்படுத கூடாது . “
“ நான் சாப்பிடுடுதான் வந்தெனு ஃபார்மாலிட்டுக்கு சொன்னா கூட . அட்லீஸ்ட் லெக் பீஸா வது சாப்பிடுனு சொல்லுவியே .. பாசக்கார பையண்டா நீ “
“ ஆமா. அப்படி சொல்ல ஆசைதான்,, ஆனா, சாப்பாடு இல்லாம லெக் பீஸை மட்டும் கொடுக்க சங்கடாமா இருக்குமே பார்க்குறேன் “
இப்படியே இரண்டு மணி நேரம் சென்றது. கடைசியில் தண்ணீர் கூட தராமல் அனுப்பி வைத்தான்.
ஞாயிற்று கிழமை ஆகி விட்டாள் பிச்சைக்காரன் என்ற இந்த கி பு வின் ( கிறுக்கு புண்ணாக்கின் ) நினைவு வந்து போன் போட்டு விடுகிறார்கள்
இலக்கியவாதிக்கு இதுதான் மரியாதை.. எத்தனுக்கு எத்தனாக இருக்கிறார்கள்.
ஒரு கதை..

ஒரு பெண் கடவுளுக்கு தொண்டாற்ற போகிறேன் என சொல்லி விட்டு கல்யானம் செய்து கொள்ளாமல் இருந்தாள். யாரும் தன் முகத்தை கூட பார்க்க கூடாது என முகத்தை மூடியே இருப்பாள். அவளை அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்டான் ஒருவன்.
எப்படி என புரியாமல் தவித்தான். அவன் ஏக்கத்தை புரிந்து கொண்ட பொறுக்கி ஒருவன் ஐடியா கொடுத்தான்.
”நீதான் கடவுள் என அவளை நம்புமாறு செய்து விடு.. அவள் உன் ஆசைக்கு இணங்கி விடுவாள்.”
நல்ல யோசனையாக தோன்றியது..
அன்று இரவு அவள் தனியாக முகத்தை மூடியபடி வந்து கொண்டு இருந்தாள். இவனும் முகத்தை மூடிக்கொண்டு அவள் முன் சென்றான்.
“ நான் தான் கடவுள். உன் பக்தியை மெச்சினேன். அதுதான் உன் முன் வந்தேன். என் ஆசைக்கு இணங்கு ” என்றான்..
“ சரி கடவுளே.. ஆனால் என் கன்னித்தன்மையை இழக்க விரும்பவில்லை. அதனால் என் ”பின் வாசலை” பயன்படுத்தி உங்கள் ஆசையை தீர்த்து கொள்ளுங்கள் “ என்றாள்.
அவனும் அப்படியே செய்தான்.
செய்து முடித்த்தும், வெற்றி புன்னகையுடன் சொன்னான்.
“ நான் கடவுள் இல்லை. உன் பின் சுற்றிய வாலிபன் ..ஹா ஹா “
அவள் சொன்னாள்.
“ நானும் அந்த பெண் இல்லை.. உனக்கு ஐடியா கொடுத்த பொறுக்கி ..ஹாஹா “

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா