சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரைப் பற்றி பலருக்கு பலவித அபிப்ராயங்கள் இருக்க கூடும். அவர் மேல் பல விமர்சனங்கள் இருக்க கூடும். அதை எல்லாம் மறந்து விட்டு ராஸ லீலா என்ற அவரது நாவலை மட்டும் படித்தால் அது எப்படி இருக்கிறது??
இரண்டு பாகங்கள் கொண்ட பெரிய புத்தகம் இது. முதல் பகுதியில் . கண்ணாயிரம் பெருமாள் என்பவரை பற்றி கதை சொல்லப்படுகிரது.. இரண்டாம் பகுதியில் கண்ணாயிரம் பெருமாள் நமக்கு ஒரு கதை சொல்லுகிறார்.
தபால் துறையில் பணி புரியும் பெருமாள் அங்கு நடக்கும் அடக்குமுறை, ஒழுங்கீனம் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதை சொல்லுவதுடன் நின்று விடாமல், பின் குறிப்புகள் மூலம் வேறு ஒரு அர்த்த்தை தருகிறது.
அடக்குமுறை , பாசிசம் என்பது நம் ரத்த்தில் ஊறிய ஒன்று. கொடுங்கோல் ஆட்சி நடக்கும் சர்வாதிகாரிகள் செய்யும் அட்டூழியங்கள் , அவர்களுக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. நமக்குள்ளும் அந்த குணம் இருக்கிறது. நம் சக்திக்கேற்ப அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
அலுவலக மேலாளராக, தந்தையாக, கணவனாக, மனைவியாக என எங்கெல்லாம் முடியுமா அங்கெல்லாம் மற்றவரை அடக்கி ஆள முயல்கிறோம். சர்வாதிகாரியால் மற்றவரை கொல்ல முடியும்,. நாம் அப்படி செய்வதில்லை என்பது நாம் நல்லவர் என்பதால் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு சக்தி இல்லை என்பதால். மற்றபடி நமக்கும் சர்வாதிகாரிக்கும் வித்தியாசம் இல்லை..
கதையில் வரும் இந்திராணி என்ற அதிகாரியால் ஏற்படும் மன உளைச்சலை அதில் வரும் வெளினாட்டு கைதிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் இது புரியும்..
இது ஒரு புறம்..
இன்னொரு பக்கம் பார்த்தால், கட்டற்ற சுதந்திரம். ஒரு காலத்தில் ஒரு பெண்ணை பார்த்து சிரித்து அவள் பதிலுக்கு பார்த்தாலே ஒரு சாதனை..லவ் லெட்டர் கொடுபதெல்லாம் இமாலய சாதனை. இன்று நிலை வேறு.
பார்ப்பது , பழகுவது என்பதெல்லாம் இயந்திரமயமாகி விட்ட்து. ஆனாலும் சிலர் உண்மையாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்... நாம் உண்மையாக ஒருவருடன் பழகுகிறோம். அவரோ கொஞ்சம் பழகி விட்டு, நம்மை உதறி செல்கிறார். இதை நடைமுறையில் அனுபவத்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இரண்டாம் பகுதி நாவலை நன்கு ரசிக்க முடியும்.
உண்மையில் எதற்குமே அர்த்தம் இல்லை.. எல்லாமே ஜஸ்ட் ஒரு விளையாட்டுதான் என தோன்றுகிறது.. அபத்தமான நாடகம்தான்..
ஆனால் இது போன்ற அனுபவங்கள் இல்லாத ஒருவர் இந்த நாவலை படிக்கும்போது , அபத்தமான நாவலாக தோன்றலாம்..
இன்னும் சிலருக்கு இது ஒரு நல்ல ஃபாண்டசியாக தோன்றலாம். விறுவிறுப்ப்பான கவர்ச்சி நாவலாக தோன்றலாம்...
ஆனால் அனுபவித்து நொந்து போனவர்களுக்கு , இந்த நாவல் கண்ணாடியில் முகம் பார்த்து கொள்வது போல தோன்றும்.
மொத்த்தில் இந்த நாவல் எல்லோருக்குமான நாவல் அல்ல... அனைவரும் படிக்க கூடாது..
வாழ்வின் அபத்தங்களை அனுபவித்தவர்கள் படித்து பார்க்கலாம்.
சிறந்த நாவலில் ஒன்று என இதை தமிழ் உலகம் ஏற்குமா என்பது சந்தேகம். சாருவின் நாவல்களை ஒப்பிட்டாலே கூட இதை சீரோ டிகிரிக்கு அடுத்த நிலையில்தான் வைப்பார்கள்.
ஆனால் என்னை பொருத்தவரை இது நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று.
அதற்காக எல்லோரும் படியுங்கள் என சொல்ல வில்லை... படித்துவிட்டு என்னை திட்டாதீர்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
September
(32)
- அதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...
- ரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...
- எந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் ?- அலசல் ...
- அயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...
- சாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...
- மைக்ரோ கதைகள்
- சினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...
- அய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...
- அயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்
- தமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...
- தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி
- வாசித்ததில் நேசித்த ஐந்து ….
- அனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே
- பதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….
- ஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்
- நல்லதும் கெட்டதும் ……
- அமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..
- முப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...
- பதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...
- எவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்
- செய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...
- நாலும் தெரிந்தவன்
- பொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா?- அதிர...
- முரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..
- நடிகர் முரளி காலமானார்
- நான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...
- பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...
- சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...
- சிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி
- கொலை செய்தால் ஊக்க தொகையா? - மனிதாபிமானிகளின் ஓவர்...
- வேலூர் புத்தக கண்காட்சி
- ராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா ?
-
▼
September
(32)
Padichittu Solren Thala...
ReplyDeleteஇவ்வளவு அவசர உலகிலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விடாமல் வைத்திருப்பதற்கு பிடியுங்கள் ஓர் பாராட்டு
ReplyDelete700 pakka navalukku ivlothan unga vimarsanama??
ReplyDeletethanks
www.narumugai.com
வெறும்பய said...
ReplyDelete"Padichittu Solren Thala..."
படிங்க,,உங்க கருத்தை தெரிந்து கொள்ள ஆவல்
****************************************************8
"நாய்க்குட்டி மனசு said...
இவ்வளவு அவசர உலகிலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விடாமல் வைத்திருப்பதற்கு பிடியுங்கள் ஓர் பாராட்டு"
நன்றி..மறந்து போன என் தமிழ் வாசிப்புக்கு உயிர் கொடுத்த்து பதிவுலகம்தான் என்ப்தை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்
***************************************************
"மதன்செந்தில் said...
700 pakka navalukku ivlothan unga vimarsanama??"
இன்னும் நிறைய எழுதனும்... ஒரு நண்பருடன் ஒரு நாள் முழுக்க இதை பற்றி பேசிய அனுபவன் எனக்கு இருக்கிறது..ஆனால் விரிவாக எழுதினால் பலர் படிப்பதில்லை . எனவேதான் ஷார்ட் ரைட்டிங்
//எல்லாமே ஜஸ்ட் ஒரு விளையாட்டுதான் என தோன்றுகிறது.. அபத்தமான நாடகம்தான்.. //
ReplyDeleteபுரிதல் அதிகம் ஆனால் இவ்வாறு தான் தோணும் ....
0 டிகிரி புத்தகம் ஒரு மாததிற்கு முன்பே வாங்கினேன் ........ஒரு 20-25 பக்கம் படித்து இருப்பேன்.....
கதை எதோ கோர்வை இல்லாமல் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது ..
தல ,இந்த புத்தகம் இப்படி தான் இருக்குமா?
” கதை எதோ கோர்வை இல்லாமல் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது ..”
ReplyDeleteநண்பரே.. உண்மையில் வாழ்க்கை கோர்வை இல்லாமல்தான் இருக்கிறது.. சினிமாவிலோ, ஒரு நாவலிலோ இருவர் காதலித்தால், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருமே அவர்களை சேர்த்து வைப்பதுதான் வாழ்க்கை அல்லது பிரிப்பதுதான் வாழ்க்கை என்பது போல வாழ்வதாக சித்தரிக்கப்படுவார்கள்.. அது நமக்கு கோர்வையான கதையாக தோன்றினாலும் அது போலியானது...
”தல ,இந்த புத்தகம் இப்படி தான் இருக்குமா”
என்னிடம் கேட்டு இருந்தால், சீரோ டிகிரி வாங்குவதை விட ராஸ லீலா வாங்கி படியுங்கள் என சொல்லி இருப்பேன்..
Read Rasa Leela detailed vimarsanam :
ReplyDeletehttp://tinyurl.com/2arjbrm
உண்மை
ReplyDeleteஆனால் விரிவாக ஹார்ட் அட்டாக்கை பற்றி விவரிக்கும்போது என்னால் பதட்டத்தில் அவ்வளவாக படிக்க இயலவில்லை
அது கொஞ்சம் மிகைப்படுத்துதலோ என ஐயம்
மற்றபடி உங்கள் கருத்துக்களில் உடன்பாடே!
சீரோ டிகிரி ராசா லீலாவிற்கு அடுத்தபடியே
தினகரன்