நான் மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவரால் , கடும் ஏமாற்றத்துக்கு உள்ளானேன். சில நாட்களாகவே அந்த விஷ்யம் என்னை வாட்டி வந்த்து. மன உளைச்சல். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் இந்த உரையாடல் ஒரு வெளிச்சத்தை மனதில் பாய்ச்சியது.
எனவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவனமாக படியுங்கள் ( அடைப்பு குறிக்குள் இருப்பது நம் சொந்த சரக்கு. கண்டு கொள்ள வேண்டாம். ஹி ஹி )
******************************************************************************************
‘’ நான் பல பிரச்சினைகளில் மாட்டிகிட்டு கஷ்டபட்றேன். இதுல என்ன கொடுமைனா , ஒரு பிரச்சினையை தீர்க்க முனைவது எனக்கு மேலும் கஷ்ட்த்திலும் , சித்திரவதையிலும் முடிகிறது. போதும் போதும்னு ஆகி போச்சு. இனி என்ன பண்றதுனு தெரியல. இன்னொன்னும் சொல்லணும். நான் செவிப்புலன் பாதிக்கப்பட்டவள். ஹியரிங் எய்ட் பயன்படுத்துறேன். எனக்கு பல குழந்தைகள். ஒரே கணவர் . அவரும் என்னை கை விட்டுட்டு ஓடிட்டாரு. என் குழந்தைகள்தான் எனக்கு இப்போது எல்லாம். நான் பட்ட கஷ்டங்கள் அவர்கள் பட கூடாது என்பதுதான் என் இப்போதைய நோக்கம் “
நம்ம துன்பங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதில் வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு அக்கறை !! தீர்வு வேண்டும் என்ற நமது துடிப்பு , பிரச்சினை என்ன என்பதை அமைதியாக பார்க்கும் தன்மையை பாதிக்கிறது. பிரசினைதான் முக்கியம்.. தீர்வு அல்ல. ஒரு தீர்வை தேடினால் , கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருக்கும். ஏனென்றால் தீர்வுக்கும் , பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை . பிரச்சினையிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான் தீர்வு என்பதை தேடுதலை பயன்படுதுகிறோம் . அந்த தீர்வில் அர்த்தம் இருக்காது. எனவே புரிதல் என்பதும் இருக்காது . எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த அடிப்படை காரணம் என்ன என பார்க்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்வது மேலும் கஷ்ட்த்தையும் , சிக்கலையும்தான் ஏற்படுத்தும்.
( குடியின் தீமையை அறிந்து கொள்வதால் மட்டும் குடியில் இருந்து விடுதலை பெற முடியாது. குடியை நிறுத்தபோகிறேன் என்று உறுதி எடுப்பது பெரும்பாலும் தோல்வியில் முடிவது இதனால்தான் )
பிரச்சினையை புரிந்து கொள்வது முக்கியமானது என்ற தெளிவு வேண்டும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையாவதன் முக்கியத்துவம் புரிய வேண்டும். அப்போதுதான் பிரச்சினை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை பார்க்க முடியும். பிரச்சினைகளிலிருந்து விடுதலை இன்றி அமைதி இல்லை. மகிழ்ச்சிக்கு அமைதியே அடிப்படை. ஆனால் அதுவே முடிவு அல்ல. காற்று இல்லாத போது தண்ணீர் குளம் அமைதியாக இருக்கும். அதே போல பிரச்சினைகள் இல்லாதபோது மனம் அமைதியாக இருக்கும். ஆனால் மனதை முயற்சி செய்து அமைதியாக்க முடியாது . ( தியானம் செய்வது, மந்திரம் சொலவது போன்றவை மூலம் ) .அப்படி செய்தால் அந்த மனம் உயிர் துடிப்போடு இருக்காது.
மனம் தெளிவாக இருக்கும்போது பிரச்சினையின் அடிப்படையை தெளிவாக பார்க்க முடியும். கவனிப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த முடிவு கிடைதால் நல்லது, இது கெட்ட்து என்பது போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் வெறுமனே பார்க்க வேண்டும்.
“ நடக்க முடியாத ஒன்றை சொல்கிறீர்கள். நமது கல்வி என்ன சொல்கிறது. நல்லது கெட்ட்தை பிரித்து பார். ஒப்பிடு .. முரண்படு. தேர்ந்தெடு. தீர்ப்பளி என்பதைத்தான் நாம் கற்றிருகிறோம். எதுவும் தீர்ப்பளிக்காமல் வெறுமனே கவனி என்கிறீர்களே. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா ? தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது? அதில் இருந்து எப்படி விடுபடுவது? “
வெறுமனே கவனித்தல் , செயலற்ற விழிப்புணர்வு – இவைதான் புரிதலுக்கு அடிப்படை என்பதை உங்களால் உணர முடிந்தால் , இந்த உண்மையே உங்களுக்கு விடுதலை வழங்கும். செயல் அற்ற – ஆனால் விழிப்புணர்வு மிக்க நிலையின் அவசியம் புரியவில்லை என்றால் தான் “ எப்படி “ என்ற கேள்வி பிறக்கிறது. உண்மைதான் விடுதலை தருகிறது. தியான முறைகளோ , வேறு வழிமுறைகளோ அல்ல . அமைதியான கவனிப்புதான் புரிதலை தருகிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தால், கண்டித்தல் நியாயப்படுதுதல் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். ஓர் ஆபத்தை பார்த்தவுடன் உடனடியாக தப்பிக்க முயல்வோம். ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்பதில்லை. அதே போன்ற தீவிரத்துடன் செயலற்ற விழிப்புணர்வின் அவசியத்தை பார்க்க முடியவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறீர்கள்.
இந்த அவசியத்தை ஏன் பார்க்க முடியவில்லை ?
” நானும் முயல்கிறேன் , ஆனால் இது போல நான் இதற்கு யோசித்து பார்த்த்தில்லை. நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: என் பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டும். பெரிய டார்ச்சரா இருக்கு.. எல்லோரையும் போல சந்தோஷமா இருக்க விரும்புறேன் “
தெரிந்தோ தெரியமலோ , செயலற்ற விழிப்புணர்வு என்ற நிலையை தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். பிரச்சினைகளிடம் இருந்து விடுதலை பெற நம் உள்மனம் விரும்புவதில்லை. பிரச்சினை இல்லாவிட்டால் நமக்கு என்ன அடையாளம் இருக்கிறது ? நம் வீட்டு பிரச்சினை நமக்கு தெரியும் . பிரச்சினை இல்லாத நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவேதான், என்னதான் கஷ்டமாக இருந்தாலும் தெரிந்த ஒன்றையே கட்டியழ விரும்புகிறோம்.
பிரச்சினை எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால் பிரச்சினையின் அடிப்படையை ஆராய தொடங்கினால் அது எதில் போய் முடியும் என்பது தெரியாது. இது மனதிற்கு பயத்திற்கு பயத்தை அளித்து சோர்வடைய செய்கிறது . பிரச்சினைகளே இல்லை என்றால் மனதிற்கு வேலை இல்லாமல் போய் விடும். பிரச்சினைகளால்தான் மனம் வாழ்கிற்து. பிரச்சினை என்பது உலகம் சார்ந்த்தாகவோ, சமையலறை சார்ந்த்தாகவோ, அரசியல் சார்ந்த்தாகவோ, உறவுகள் சார்ந்த்தாகவோ , ஆன்மீகம் அல்லது சித்தாதந்தம் சார்ந்த்தாகவோ இருக்கலாம் ( அட எதுவும் இல்லை என்றால், மெகா சீரியலில் வரும் பிரச்சினைகளை நினைத்து கவலைப்ப்டலாம் ) : எனவே பிரச்சினை என்பது நம்மை குறுகிய வட்ட்த்தில் அடைக்கிறது. உலக பிரச்சினையில் மூழ்கி இருக்கும் மனதிற்கும் ஆன்மீக பிரச்சினையில் ஆழ்ந்து இருக்கும் மனதிற்கும் அடிப்படையில் வித்தியாசம் இல்லை ( டோனி பிளைர் புத்தகதில் சொல்வது பற்றி யோசிப்பதற்கும் , நித்தியானதா நல்லவரா என விவாதிப்பதற்கும் , கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என வாதம் செய்வதற்கும் அடிப்ப்டை வித்தியாசம் இல்லை ) .. பிரச்சினைகள் மனதிற்கு ஒரு சுமையாக இருக்கின்றன ( சுகமான சுமைகள் ) “ நான் “ எனது “ போன்றவற்றுக்கு ஊட்டமளிப்பது பிரச்சினைகள்தான். பிரச்சினைகள், சாதனைகள் , தோல்விகள் இல்லாமல் “ நான் “ என்பது இல்லை.. ( நமது வாழ்க்கை என நாம் நினைப்பது நாம் என்ன சாதித்தோம் என்ன பிரச்சினைகலை சந்தித்தோம், என்ன கஷ்டப்பட்டோம் என்பதைத்தானே )
“ நான் என்ற உணர்வு இல்லாமல் எப்படி வாழ்வது ? அனைத்துக்கும் அடிப்படை அதுதானே ? “
செயல் என்பது ஆசை , நினைவுகள் , பயம்,. சந்தோஷம், வலி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் வரை , செயலின் விளைவு குழப்பமாகவும், முரண்பாடு நிறைந்தும் , பகையுணர்வு நிறைந்தும்தான் இருக்கும். உலகால் குறிப்பிட்ட வகையில் புரோகிராம் செய்ய வைக்கப்பட்டு இருக்கிறோம் ( நான் இந்த மதம் சார்ந்தவன், இந்த நாடு சேர்ந்தவன் என்பது போல ) அதற்கேற்ப நம் செயல் அமைகிறது. ஆகவே நம் செயலில் முழுமை இருக்காது. எனவே முரண்பாடுகள்.இதனால்தான் பிரச்சினைகள்.
நான் என்பதன் வெளிப்பாடுதான் முரண்பாடுகள். வெற்றி தோல்வி, ஆசை பயம் போன்ற முரண்பாடுகள் இன்றி வாழ்வது சாத்தியமான ஒன்றுதான் . ஆனால் அது தியரட்டிக்கலாகத்தான் இருக்கிறது. நேரடியாக அதை அனுபவித்தால்தான் அது உண்மையாக மாறும்.
நான் என்பது எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் பேராசையில் இருந்து விடுபட முடியும்.
“ எனது காது கேளாமை என்ற குறை , என் பயங்கள் , அடக்கப்பட்ட உணர்ச்சிகள் இவற்றின் விளைவு என நினைக்கிறீர்களா? உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா ? ஏதாவது ஒரு வகையில் நான் என் வாழ்வில் அடக்கப்பட்டுத்தான் வருகிறேன். நான் நினைத்த எதுவும் எனக்கு கிடைக்கவில்லை., நினைத்தை செய்யவும் முடியவில்லை “
புரிந்து கொள்ளுதலை விட அடக்கிதல் எளிது. குழந்தை பருவத்தில் இருந்து அடக்கி வைக்கப்பட்டவர்களுக்கு புரிந்து கொள்ளல் கஷ்டமான ஒன்று. அடக்குதல் என்பது பழக்கமாகி விடும் . ஆனால் புரிதல் என்பது அவ்வப்போது நிகழ வேண்டும். அது பழக்கம் ஆகாது. தொடர் கவனிப்பு, விழிப்புனர்வு தேவை. புரிதல் நிகழ வேண்டுமென்றால் நிதானம் , அமைதி , நெகிழ்வுத்தன்மை , சுரணைத்தன்மை ஆகியவை தேவை. செண்டிமெண்ட்டுகெல்லாம் இதில் வேலை இல்லை.
ஒரு பிரச்சினை என்றால் அடக்குதல் என்பதற்கு எந்த வித விழிப்புணர்வும் தேவையில்லை.சுலபமானது ஆனால் முட்டாள்தனமானது ( ஒருவர் மேல் கோபம் என்றால் நான் கோப்ப்படமாட்டேன்,. நான் அமைதியானவன் என திரும்ப திரும்ப சொல்லும் செல்ஃப் ஹிப்னாடிசம் மூலம் கோபத்தை அடக்க முயலுதல் ஓர் உதா. ) இப்படி அடக்குதல் நமக்கு ஓர் மரியாதையை தரும். மேலோட்டமான பாதுகாப்பை தரும் . புரிதல் என்பது விடுவிக்கிறது. அடக்குதல் என்பது ஒரு குறுகிய இட்த்தில் சிக்க செய்கிரது. அதிகாரத்தின் மேல் பயம், பாதுகாப்பின்மை , கருத்தின் மீது பயம் போன்றவை ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதில் பாதுகாப்பு பெற முயல்கிறது ( மாமியாரிடம் பேச பயப்படும் சில பெண்கள் , எதயாவது ஒன்றை படித்து கொண்டே இருப்பார்கள் . படிப்பாளி என்ற முத்திரை அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை தரும். சிலர் ஆன்மீக்வாதி என்ற முத்திரை பெற பார்ப்பார்கள் ) , மனம் சார்ந்த இது உடலிலும் பாதிப்பு ஏற்படுத்தி உடல் சார்ந்த விஷ்யமாகவும் மாறும். இந்த அடைக்கலம் எப்படிப்பட்ட்தாக இருந்தாலும் , அதில் பயம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். பயதில் இருந்துதான் , ஒன்றுக்கு பதில் இன்னொன்றை பயன்படுதுதல், இன்னொன்றில் ஒளிதல் , கட்டுப்பாடு போன்றவை பிறக்கின்றன. இது எல்லாமே அடக்கு முறைதான். இந்த அடக்குமுறைக்கு ஏதோ ஒரு வடிகால் தேவை. இது உடல் ரீதியாக வெளிப்படலாம் .. அல்லது ( ஆன்மீக !! ) மாயத்தோன்றங்களாக வெளிப்படலாம் . இது தனி நபரை பொறுத்த்து..
“ எனக்கு பிடிக்காத விஷயங்களை கேட்க நேரும்போது, காது கேட்க உதவும் கருவியை சரணடைவேன். யதார்த்த்தை விட்டு தப்பித்து எனக்கே உரிய தனி உலகில் வாழ இது உதவுகிறது. ஆண்டுக்கணக்கில் அடக்கி வைக்கப்பட்ட்தில் இருந்து எப்படி விடுதலை ஆவது? இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே !! ? “
எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே அர்த்தம் அற்றது. இது காலம் சம்பந்தப்பட்ட்து அல்ல. கடந்த காலத்தை ஆய்தல், பாதிப்பு ஏற்படுதிய சம்பவங்களை அலசுதல் என்பதெல்லாம் தேவையில்லை. அடக்குதல் என்பதை ஓர் உண்மையாக நேருக்கு நேர் பார்ப்பதுதான் முக்கியம். செயலற்ற விழிப்புணர்வு , விருப்பு வெறுப்பு இன்றி கவனித்தல், உண்மைக்கு எடுத்து செல்லும். நேற்று நாளை என்ற சிந்தனை மூலம் உண்மையை காண முடியாது. காலம் என்பதை கடந்தாக வேண்டும். உண்மையை அடைய முடியாது. பார்க்கவும் முடியாது. கொஞ்சம் , கொஞ்சமாக முயற்சிது , தவணை முறையில் உண்மையைஅ அறிய முடியாது.
உண்மையை அறிய வேண்டும் என்ற துடிப்பே தடைக்கல்லாக அமைந்து விடும். ஆசையில் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று இல்லை. ஆசை இருக்கும் இட்த்தில் விழிப்புணர்வு இருக்காது. தேடல், விடாமுயற்சி என்றெல்லாம் பெயரிட்டாலும், தேடினால் உண்மை கிடைக்காது. செயல் புரியாமல் வெறுமனே கவனிப்பதுதான் உண்மையை காட்டும். நான் என்பது எண்ணங்களால் ஆனது . எனவே நான் என் எண்ணத்தை ஆராய முடியாது. ஆராயப்படும் விஷயமும் ஆராயும் நபரும் ஒரே பொருளால் ஆனது. இரண்டும் வேறு வேறு அல்ல..
உண்மைதான் விடுவிக்கும். முயற்சியோ செயலோ அல்ல
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
September
(32)
- அதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...
- ரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...
- எந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் ?- அலசல் ...
- அயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...
- சாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...
- மைக்ரோ கதைகள்
- சினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...
- அய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...
- அயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்
- தமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...
- தமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி
- வாசித்ததில் நேசித்த ஐந்து ….
- அனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே
- பதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….
- ஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்
- நல்லதும் கெட்டதும் ……
- அமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..
- முப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...
- பதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...
- எவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்
- செய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...
- நாலும் தெரிந்தவன்
- பொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா?- அதிர...
- முரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..
- நடிகர் முரளி காலமானார்
- நான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...
- பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...
- சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...
- சிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி
- கொலை செய்தால் ஊக்க தொகையா? - மனிதாபிமானிகளின் ஓவர்...
- வேலூர் புத்தக கண்காட்சி
- ராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா ?
-
▼
September
(32)
இதன் பெயர் தானே ஞான யோகம் ?
ReplyDeleteஓஷோ ,ரமணர் கூட அடிப்படையில் இதனை தான் சொன்னார்கள்,செய்தார்கள்....
"இதன் பெயர் தானே ஞான யோகம் ?"
ReplyDeleteசரியா சொன்னீங்க .. ஆனால் சில கார்பொரேட் குருமார்கள் இதை தங்கள் பாட திட்டமாக ஆக்கி விட்டார்கள்
[im]http://img204.imageshack.us/i/kpsuku1.jpg[/im]
ReplyDelete