
நக்சல் இயக்கத்தைப் பற்றி ஏதாவது செய்தி வரும்போது படிப்பதோடு சரி. மற்றபடி அவர்கள் வாழ்க்கையைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி கட்டுரை அதிர்ச்சி அளிப்பதாக இருந்த்து.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பெங்கால்- ஜார்கண்ட் எல்லைப்பகுதியில் சிபி ஐ – மாவொயிஸ்ட் கமாண்டராக இருந்தவர் ஷோபா மண்டி என்ற உமா. பாதுகாப்பு படையினருடன் பல மோதல்கள் இவர் தலைமையில் நடந்துள்ளன. ஆனால் அந்த இயக்கத்தை விட்டு விலகி போலீசில் சரணடைய விரும்புவதாக இவர் கூறுகிறார். ஏன்.. என்ன நடந்த்து..
ஒடுக்கப்பட்டவருக்காக போராடும் இயக்கத்தில் இருந்து ஏன் விலக வேண்டும்??
“அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் “ என்று சொல்லும் இவர் மேலும் சொல்கிறார்..
“ இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆகி இருக்கும். ஜார்கண்டில் இருக்கும் முகாமில் இரவு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தேன். அங்கே பிகாஷ் ( இப்போது மிலிட்ரி கமிஷன் தலைவராக இருக்கிறார் ) திடீரென வந்தார், தண்ணீர் கேட்டார். நான் எடுக்க சென்றேன், தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். நான் தடுத்தேன். என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் . இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டினார் . ஆனாலும் உயர் நிர்வாகிகளுடம் புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. அப்போது என் வயது 17 .
மூத்த மாவோயிஸ்ட் நிர்வாகிகள் பெண்களை தமது வேட்கைக்கு பயன்படுத்தி கொள்வது சர்வசாதாரணம். கருவுறுதலை அவர்கள் விரும்புவதில்லை. எனவே கருசிதைவு செய்தாக வேண்டும்.
கிராம மக்கள் பயம் காரணமாக அடைக்கலம் தருவார்கள். இரவெல்லாம் விழித்திருந்து, போலீஸ் வந்தால் தப்பிக்க உதவ வேண்டும். இப்படி அடைக்கலம் தரும் வீடுகளின் பெண்களையும் இவர்கள் விடுவதில்லை.
இப்படிப்பட்ட பாலியல் வன்முரையில் இருந்து தப்பிக்க ஒரே வழி, சீனியர் தலைவர் ஒருவருடன் நெருக்கம் ஆவதுதான். இப்படி எனக்கும் ஒருவர் பதுகாப்பு அளித்தார்.. என்னுடன் அவர் உறவு வைத்து இருப்பதாக அவர் அறிவித்தார். அதுதான் எனக்கு திருப்பு முனை.. உயர் பதவிகள் கிடைக்க ஆரம்பித்தன் “என்கிறார்.
போலிஸால் தேடப்படுபவர் இவர். ஜார்கண்ட் எம் பி சுனில் மஹோத்தோ 2007 ல் கொலை செய்யப்பட்தில், இவரை சந்தேகப்படுகிறார்கள். காவல் நிலைய தாக்குதல், போலிஸாரை கொன்றது, கட்த்தல் போன்றவற்றில் இவரை போலிஸ் கைது செய்ய விரும்புகிறது.
இப்படிப்பட்ட கில்லாடியான இவர் அந்த இயக்கத்தை விட்டு விலகுவதுதான் சோகம்.
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா
செய்தியை அப்படியே நம்ப வேண்டியதில்லை. மாற்று கருத்து இருப்பவர்கள் பின்னூட்ட்த்தில் தெரியப்படுத்தலாம்.
செய்தியை ஆதரிப்பவர்களும் தங்கள் கருத்தை சொல்ல்லாம்
உண்மையாயின் மிக கேவலமானசெயல்.
ReplyDelete