Pages

Friday, September 10, 2010

எவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்

பழைய தமிழ் நூல்களை படித்தால் , அந்த காலத்திலேயெ எப்படி எல்லாம் சிந்தித்து இருக்கிறார்கள் என ஆச்சர்யமாக இருக்கும். மற்ற பல நாடுகள் உருவாகி இருக்கவே இல்லாத நிலையில், தமிழன் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறான். சிந்தித்து இருக்கிறான் என்பதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.

காதல் பாடல்கள் ஒருவகை.. அதிலும் இயற்கை வர்ணனைகளும் போட்டி போட்டு வரும்.

தத்துவ சிந்தனைகள் நிரம்பிய பாட்லகள் ஒருவகை..

போர் தான் வீரம், சக தமிழனை கொல்வதுதான் வீரம் என நினைத்த அரசர் ஒரு பக்கம் .. அதை போற்ருவோர் ஒரு பக்கம். போர் வேண்டாம் என சொல்லுவோர் ஒரு பக்கம் என பல பர்வைகளை தரும் நூல் புற நானூறு. அதில் முத்தாய்ப்பாக திகழ்வதுதான் கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடல். அவர் சோதிட நிபுணர் என்பதும், இந்த பாடலில் விதியின் வலிமையை கூறுகிறார் என்பதும், இதை புரிந்து கொள்ளாமல் , நாத்திக வாதிகள் இந்த பாடலை பயன் படுத்தி விட்டு , பின் அசடு வழிந்தனர் என்பதும் இங்கு தேவையில்லாத இடைசெருகல். ஆனால் உண்மையான நாத்திக பாடல்களும் தமிழில் உண்டு.

 

இந்த பாடல் விதியை மட்டும் சொல்லவில்லை. தன்னம்பிக்கை, யாரையும் பொருட்படுத்தாதே , சரி என படுவதை செய் என்று தைரியப்படுத்துதல், யாரையும் அற்பமாக நினைக்காதே என்று வழினடத்தல், தோல்வியை கண்டு துவளாதே என்று ஊக்குவித்தல், வெற்றியில் ஆடாதே என எச்சரிக்கை என பெரிய நூலையே , ஒரே பாடலில் சொல்லி இருக்கிறார் தலைவர்..

ஆனால் நல்லது செய்தால் சொர்க்கம் போவாய் என்றெல்லாம் சொல்ல முடியாது.  வாழ்க்கை அதன் போக்கில்தான் நடக்கும் . நீ நினைத்து எதுவும் மாறாது என்றும் நடைமுரையை கூறுகிறார்..

இதோ அந்த பாடல்..

 

யாவரும் ஊரே , யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்

இனிது என மகிழ்தன்றும் இலமே முனிவின்

இன்னாது என்றலும் இலமே மின்னொடு

வானம் தண் துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

 

எல்லாம் நம்ம ஊருதான், எல்லாம் சொந்த காரங்கதான்.. நமக்கு நல்லதோ கெட்டதோ .. நம்மதான் அதற்கு காரணம். இறப்புக்கு பயப்படாதே ..அது எப்போதும் இருப்பதுதான். அதே சமயம் வழ்க்கைதான் இனிதுனு நினைத்து , அதிலேயே சிக்கி கொள்ளாதே.. துனபம் வந்தா துவண்டும் போகாதே..ஆற்று வெள்ளத்தில் செல்லும் படகு ஆற்றின் போக்கின் செல்வது போல , வாழ்வு விதிப்படி செல்கிரது. இதில் எந்த ஏக்கமும் வேண்டாம் . எந்த சச்சரவும் வேண்டாம்.

ஒருத்த்ன் பெரிய ஆளா இருக்கிறான் என்றால், அவன் நேரம் நல்லா இருக்குனு அர்த்தம் . எனவே பெரிய ஆள்னு மிரள வேண்டாம். நாளைக்கே அவன் பிச்சைக்காரன் ஆகிவிட கூடும்..

ஒருத்தன் நம்மை விட கீழ் நிலைல இருக்கானா , அவனை இளக்காரமா பார்க்காதே.. நாளையே அவன் பெரிய ஆள் ஆகிவிட கூடும்..

எந்த பொல்லாப்பும் இல்லாம ஒரு பார்வையாளன் போல உலகில் இரு என்ற இந்த பாடலை போல இன்னொரு  பாடல் இல்லை..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]