”அந்த துரோகி மஞ்சுவை இன்னிக்கு எக்மோர்ல பார்த்தேண்டா “
ரவி சொன்னதை கேட்டு திடுக்கிட்டேன். அவள் இங்கு வந்து விட்டாளா. அவளை உருகி உருகி காதலித்தானே! கடைசி நேரத்தில் மறுத்து விட்டாளே. திருமணம் ஆகிவிட்டதா?
அவனே தொடர்ந்தான் .
“ என்னை மறுத்து விட்டு இன்னொருத்தனை கல்யாணம் செஞ்சுகிட்டா போல.. அவன் கூடத்தான் வந்து இருந்தா. என்னை அவ கவனிக்கல “
“ விடுடா ..எப்படியோ நல்லா இருந்தா சரி.. கணவன் எப்படி இருந்தான் “
“ சின்ன பையன்தான்.. ஆனால் முடி எல்லாம் கொட்டி போய் இருந்தது.. முகம் எல்லாம் தழும்புகள். விழு புண் போல.. நீல கண்கள் . என்னை மறுத்துவிட்டு அவனை எதை வைச்சு ஏத்திக்கிட்டானு கேட்கணும்டா”
“ கேட்டு என்ன ஆகபோகுது… வேலையை பாரு “ என்றேன்..
அத்தோடு அதை மறந்தேன். ஆனால் எதை மறக்க நினைக்கிறோமோ அதுதான் மறக்க முடியாமல் போகும். மறு நாள் வேலைக்கு செல்லும் வழியில் ஒரு டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
ஒரு உணவகத்தில் நுழைந்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டு அமர்ந்திருந்த ஒரு பெண் என் கவனத்தை கவர்ந்தாள். அட.. மஞ்சு… அவள் கணவன் கைகழுவ போய் இருக்கான் போல..
அவளை நெருங்கினேன். என்னை பார்த்ததும் பிரகாசமானாள்.
“ அண்ணா.. நல்லா இருக்கீங்களா? வேலையெல்லாம் எப்படி இருக்கு ” என அரைகுறை தமிழில் அன்பாக பேசினாள். இவள் எப்படி ரவிக்கு துரோகம் செய்தாள். புரியவில்லை..
ரவியை பற்றி அவள் கேட்கவில்லை என்றாலும் நான் ஆரம்பித்தேன்.
“ ரவி வந்து.. “
“ அண்ணா.. அந்த துரோகியை நான் மறந்துட்டேன்.. ஆனால் நீங்க எனக்கு எப்பவும் அண்ணன்தான் .. வீட்டுக்கு வாங்க “ என்று சொல்லிகொண்டிருந்தபோது , அவள் கணவன் வந்து விட்டான்..
“ இவர்தான் என் கணவன்… இவர் உடன்பிறவா அண்ணன் “ அறிமுகம் செய்தாள்.
“ நமஸ்காரா .. “ என்றவனை பார்த்தேன். முடி முழுதும் கொட்டி இருந்தது, முகம் எல்லாம் விழுப்புண்கள். நீல நிற கண்கள் ..
சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள்.
****************************************************************************************************************
நானும் ரவியும் ஒரே கிராமம்தான். தோட்டம் , தோட்ட வேலை, எப்பவாச்சும் சினிமா , முத்தாலம்மன் கோயில் விழா என வாழ்க்கை அமைதியாக சென்றது..
ஆனால் மழையினமை, முதலாளி வீட்டில் பிரச்சினை போன்ற்வை தோட்ட வேலைக்கு முற்றுப்ப்புள்ளி வைத்தன.
வேறு வேலை தேட வேண்டும் என்ற நிலையில்தான், பெங்களூரில் இருந்து வந்து இருந்த பக்கத்து வீட்டு வேலன் அங்கு வருமாறு சொன்னான்.
“ சாப்பாடு போட்டு சம்பளமும் தருவாய்ங்க. பக்கத்துலேயே தங்கிக்கலாம். சூப்பர் டாக்கீஸ் இல்லைனா சிக்பேட் விஜயலக்ஷ்மில படம்.. ஜாலியா இருக்கும்டா “ என அன்பாக அழைக்கவே , பெங்களூருக்கு செல்லும் லாரியில் ஏறினோம் .
******************************************************************************************
வேலை பழகிவிட்டது… ராகி முத்தே , சவ் சவ் பாத், சித்திரான்னம் எல்லாம் கூட பழகிவிட்டது.
ரவிக்கு கூடுதலாக ஒன்றும் பழகிவிட்டது.. பக்கத்து வீட்டு மஞ்சம்மா.. 17 வயதுக்குள்தான் இருக்கும்.
“ தமிழ் கத்துக்கொடுக்க சொன்னாள்..அப்படியே பழகிட்டாள்..ஹி ஹி “ என்றான்.
“ தமிழ் சொல்லித்தர அளவுக்கு உனக்கு கன்னடா தெரியுமா “ என்றேன் கிண்டலாக…
“ என்ன பெரிய கன்னடா.. பா வுக்கு பதில் ஹ போட்டால் போதும்.. ஹாலுனா பாலு… ஹூவுன பூவு.. எல்லாம் தெரியும்டா “ என்றான்.
ஆனால் அவனுக்கு கன்னடம் தெரியாது. அவளுக்கு தமிழ் தெரியாது. ஆனால் காதலை எப்படியோ புரிந்து கொண்டு பழகி வந்தார்கள்.
எனக்கு கன்னடம் கொஞ்சம் தெரியும் என்பதால் என்னிடம் பேசினாள். “ அண்ணா, அவரை உண்மையா காதலிக்கிறேன். எங்க வீட்ல ஓ கே சொல்லிட்டாங்க.. அவர் வீட்ல இருந்து வந்து பேச சொல்லுங்க. “
நானே இருந்து முடித்து வைக்கத்தான் விருப்பம்.. ஆனால் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்த்து. ரவியின் தந்தையை பார்த்து பேசினேன்.
“ தம்பி.. நீ சொல்றதெல்லாம் ஓகே . ஆனால் இது உண்மையான காதலானு தெரியல… அவங்க பெற்றோர் சம்மதம் கூட ரெண்டாம்பட்சம்தான். அந்த பொண்ணு உறுதியா இருக்காளானு பார்க்கணும் “ என்றார்..
அவரை உடனடியாக பெங்களூர் அனுப்பி வைத்தேன்,
*************************************************************************************
கொஞ்ச நாள் கழித்துதான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். வேலை அதிகம்..
அவளிடம் இவர் கேட்டபோது அவள் திருமனத்துக்கு மறுத்து விட்டதாக அறிந்தேன்.
“ கல்யாணத்துல ஆர்வம் இல்லைனு சொல்லிட்டாப்பா.. ” என்றார்..
என்னால் நம்ப முடியவில்லை…
”நீயே கேளு… ” என்றபடி செல்போனில் பதிவு செய்த உரையாடலை ஆன் செய்தார் .
தந்தை : யாருக்கும் பயப்படாதே… உனக்கு தோணுவதை சொல்லு.. அவன் கூட ஜாலியா பழகினது வேறு.. திருமணம் செய்ய சம்மதமா?
அவள் : இல்லை ..இல்லை..இல்லை.முடியாது
தந்தை ; நாங்க உன்னை நல்லா பார்த்துக்குவோம்… யோசிது சொல்லு.. சம்மதமா?
அவள் : இல்லை இல்லை…
தந்தை : வரதட்ச்னை எதுவும் வேண்டாம். நாங்களே உனக்கு வேண்டியதை செய்வோம்
அவள் : எனக்கு எத்வும் வேண்டாம். இங்கிருந்து போங்க
எனக்கே அதிர்சியக இருந்தது… ரவிக்கு அதைவிட அதிர்ச்சி…
” துரோகி “
***************************************************************************************************************
ஆனால் இன்றைய சம்பவம் என்னை குழப்பியது.. அவள் ஏன் ரவியை துரோகி என்கிறாள்..
ரவியின் தந்தை வந்து இருந்தார்.. நல்லதாக போயிற்று
“ சார்.. அன்னிக்கு பெங்களூர் போனீங்க,, நான் அப்ப இல்ல… ரவியும் வேலைக்கு போய்ட்டான் . அவள் கூட என்ன பேசனீங்க.. எப்படி பேசனீங்க,, “
“ ஆமா.. அவ கூட தனியா பேச விரும்புனேன்… ஆனா கன்னடத்துல பேச முடியல.. நல்ல வேலையா , கடைக்கார பையன் வந்து ஹெல்ப் செஞ்சான் .. அவன் ட்ரான்ஸ்லேட் செஞ்சான் “
எனக்கு ஏதோ உறுத்தியது..
”அந்த செல்போன் ஒலிப்பதிவை திரும்ப போடுங்க.”
உன்னிப்பாக கவனித்தேன்
தந்தை : யாருக்கும் பயப்படாதே… உனக்கு தோணுவதை சொல்லு.. அவன் கூட ஜாலியா பழகினது வேறு.. திருமணம் செய்ய சம்மதமா?
மொழிபெயர்ப்பாளர் : என்னவோ ஆசை பட்டு ரெண்டு பேரும் பழகிட்டீங்க.. திருமனம் சாத்தியம் இல்லை.. வேற ஆள்கூட நானே கல்யானம் செஞ்சு வைக்கிறேன்.. சரியா ?
அவள் : இல்லை,..இல்லை ..முடியாது…
தந்தை ; நாங்க உன்னை நல்லா பார்த்துக்குவோம்… யோசிது சொல்லு.. சம்மதமா?
மொழிபெயர்ப்பாளர் : காசு வேனும்னா கொடுக்கிறோம்.. சம்மதமா…
அவள் : இல்லை இல்லை…
தந்தை : வரதட்ச்னை எதுவும் வேண்டாம். நாங்களே உனக்கு வேண்டியதை செய்வோம்
மொழிபெயர்ப்பாளர் : அவனுக்கு இப்ப உன்னை பிடிக்கலை..காசு வாங்க்கிக்க
அவள் : எனக்கு எத்வும் வேண்டாம். இங்கிருந்து போங்க
கேட்டதும் எனக்கு ரத்தம் கொதித்தது…
அடடா… தீர விசாரிக்காமல் போனோமே.. அந்த மொழிபெயர்ப்பாலனை சும்மா விட கூடாது..
“ அந்த கடைப்பயன் வேலை பார்க்கும் கடை நம்பர் கொடுங்க’
அவசரமாக போன் செய்தேன்…
ரவியின் தந்தையை பேச சொன்னேன்..
“ அவன் இப்ப வேலைல இல்லையாம்பா”
சட் என போனை வாங்கி நான் பேசினேன்..
“ அவன் எங்கெ போனான் “
“ தெரியல.. நல்ல பையந்தான்.. திடீர்னு ஓடி போய்ட்டான்.. பாவம் தாழ்வு மனப்பானமை “
” தாழ்வு மனப்பன்மையா.. ஏன் ? “
“ சின்ன வயசுலயே முடி எல்லாம் கொட்டி போச்சு.. முகம் முழுதும் தழும்பு வேற.. என்ன இருந்தாலும் அவனோட நீல கண்களை மறக்க முடியாது “
**************************************************************
hai!! super story.
ReplyDeleteவாவ்.... இவ்ளோ அழகான ஸ்டோரியா... ரொம்ப நல்லாருக்குங்க... 2.17க்கு போஸ்ட் பண்ணி இருக்கீங்க... இப்போ மணி 8.30. இன்னும் ஒரு கமெண்ட் கூட வரலயே. அடப்பாவிகளா... வலையுலகத்துல 'முறைவாசல்' பண்ற கலாச்சாரம் இவ்ளோ கொடுமையா இருக்கா?!
ReplyDelete"வாவ்.... இவ்ளோ அழகான ஸ்டோரியா... ரொம்ப நல்லாருக்குங்க."
ReplyDeleteஇதயம் கனிந்த நன்றி
"hai!! super story."
ReplyDeletethank u ..thank u ..thank u very much
அழகான கதை
ReplyDeleteஅழகான கதை
ReplyDeletethank u boss
//வலையுலகத்துல 'முறைவாசல்' பண்ற கலாச்சாரம் இவ்ளோ கொடுமையா இருக்கா?! //
ReplyDeleteஅது என்ன முறை வாசல் ...சொல்லுங்க சாமியோவ்வ் ........
அருமையான கதை ........
Good story..
ReplyDelete