’அமுதாவுக்கு விபத்தா ? “ கணேஷ் அதிர்ந்தான்.
திருமணம் நிச்சயம் ஆகி , அடுத்த வாரம் திருமணம் .. நெட் மூலம் ஏற்பாடான திருமணம் இது..ஜாதகம் சம்பிராதயங்கள் அனைத்துக்கும் உட்பட்டு எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தன.
நிச்சயம் ஆனதில் இருந்து தினமும் மணிக்கணக்கில் அரட்டை. ஆற்றோட்டத்தை பார்த்து ரசிப்பதை போல அவள் பேசுவதை ரசிப்பான்.
என்ன ஆச்சு ?
“ ஒரு நண்பருக்கு பத்திரிக்கை கொடுக்க இரு சக்கர வாகனத்தில் சென்றாளாம்.. லாரி மோதி விட்டதாம் “
****************************************************************************
மருத்துவமனை… எல்லோரும் கூடி இருந்தனர். உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை..
ஆனால்….
ஆனால்..
வலது கையை காப்பாற்ற முடியவில்லை..
சோர்வுடன் படுத்து இருந்தாள்.. குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது..
கைபிடிக்க வேண்டிய நேரத்தில் கை இப்படி ஆகி விட்டதே…
உறவுக்கார பெரியவர் அருகில் வந்தார்..
“ இந்த நிலைல கல்யாணம் எப்படி? நிறுத்திடலாமா ? என்று மெதுவான குரலில் கேட்டார்.
கணேஷ் அவரை பார்த்தான்.. தீர்க்கமான குரலில் சொன்னான்..
” இந்த நிலைல அவ எனக்கு சரியான வாழ்க்கை துணையா இருக்க முடியாது.. நிறுத்திடுங்க “ சொல்லி விட்டு மின்னலாக வெளியேறினான் கணேஷ். ******************************************* நினைவு திரும்பியதும் அவள் கேட்ட முதல் கேள்வி , “ அவர் என்னை பார்க்க வந்தாரா ? “ பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அம்மா. கவிதை , கதை என அழகான கைஎழுத்தில் எழுதிகுவிக்கும் அவளுக்கு இந்த நிலைமையா… இதில் திருமணம் வேறு நின்றுவிட்டது, ****************************************** காயங்கள் ஆறியதும் சிலிர்த்து எழுந்தாள் அமுதா. எழுதுவது சிரமமாக இருந்தாலும் கம்ப்ய்ட்டர் மூலம் டைப் செய்வது , சில பிரத்யேக ஏற்பாடுகளுடன் சாத்தியமானது.. யாரையும் நம்பி நான் பிறக்கவில்லை …. முன்னைவிட அதிகமாக எழுதி குவிக்க ஆரம்பித்தாள்.. “ நல்ல வேளை.. திருமனம் நின்றது… இல்லை என்றால் எழுத நேரம் கிடைத்து இருக்காது “ நினைத்து கொன்டாள்… திருமணத்துக்கு பலர் முன்வந்தும்கூட நேரமின்மையால் ஒத்தி போட்டு வந்தாள்.. ஒரு நாவலுக்கு மாநில அளவில் பரிசு கிடைத்தது…. நிருபர் கேட்டார்… “உங்கள் வெற்றிக்கு ஏதாவது ஒரு காரணம்தான் சொல்ல வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள் “ | “ அவதான் என மனைவி .. என்னை பொறுத்தவரை திருமனம் எப்போதோ முடிந்து விட்டது.. நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. “ ********************************************************** திருமணம் முடிந்தது… சில நாட்களிலேயே ஒரு விஷயத்தை அவள் உணர்ந்தாள்.. கனேஷ் அவள் மேல் காட்டுவது பரிதாபம்தான்.. அன்பல்ல… தன்னை பெரிய ஆள் என காட்டிக்கொள்ள , இந்த விபத்தை பயன்படுத்தி கொள்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.. தன் பெருந்தன்மையை அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுதி , பரிசும் வென்றான்.. பரிசளிப்பு விழவுக்கு அவளையும் அழைத்தான்.. மறுத்துவிட்டாள்.. அங்கேயும் அவளை காட்சி பொருளாகத்தான் பயன்படுத்துவான்.. அவளை முழுக்க முழுக்க தன்னை சார்ந்து இருக்கும்படி பார்த்துகொண்டான் அவன்.. “ ஏன் தேவை இல்லாம ஸ்ட்ரைன் செஞ்சுக்ற.. பேசாம உட்கார்ந்து டீ வி பாரு “ எழுதுவது என்பதெல்லாம் அவளை பொறுத்தவரை பழங்கதையாகி விட்டது. ************************************ நீண்ட நாள் கழித்து அமுதாவை பார்க்க வந்த தோழி சங்கீதா திகைத்து போய் பார்த்தாள். பழைய அமுதாவா இது… அந்த துறுதுறுப்பு, நகைச்சுவை மிளிரும் பேச்சு எல்லாம் எங்கே. முகம் முழுதும் ஏதோ இனம் புரியாத சோகம்.. “ என்னடி இப்படி இருக்க…. வீட்ல எல்லா வசதியும் இருக்கு,, அப்புறம் ஏன் சோகமா இருக்க,? உன் வாழ்க்கைல எதையாவது மாத்தணும்னு நினைக்கிறியா.. விபத்தையே நினைச்சு சோகமா இருக்கியா.. இல்லை அதை விட சோகமானது ஏதாச்சும் இருக்கா ? “ |
” என் திருமணம் “ அவள் அமைதியாக சொன்னாள் ….
ithu nalla iruku . oru climax oru kathai,aanal rendu mana rethil , very good .....
ReplyDeleteநன்றி செந்தில் வேலாயுதன். நாம் நல்லது என நினைப்பது கெட்ட்தாக முடியலாம்.. கெட்ட்து என நினைப்பது நல்லதாக இருக்கலாம்..
ReplyDeleteரசிப்புக்கும், வாசித்தலுக்கும் நன்றி
திருமணம் என்பதே பெரிய விபத்து தானே ?
ReplyDeleteநல்லதும் கெட்டதும் …… nallaayirukku
ReplyDeleteஅருவியாய் தொடங்கி இரு கிளை நதிகளை பயணித்து கடலில் கலந்தது போல அழகாக இருக்கிறது.
ReplyDelete