Pages

Wednesday, September 15, 2010

ஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்

 

சில நாட்களுக்கு முன், நான் முன்பு வேலை செய்த நிறுவனம் வழியாக செல்ல நேர்ந்தது. அது இயந்திர பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 

அதன் தற்போதைய நிலையை பார்த்து அதிர்ந்தேன், அது தன் இயக்கத்தை நிறுத்தி இருந்த்து. காவலுக்காக ஒருவர் மட்டும் இருந்தார். அதை விற்க முயற்சி நடப்பதாக சொன்னார்.

பல பணிகளை செய்த இடம், நடந்த இடம், சண்டை இட்ட இடம், கொண்டாட்டங்கள் நடந்த இடம், பல சாதனைகள் செய்த இடம், முக்கிய வாடிக்கையாளர்களை சந்தித்த இடம் என ஒவ்வொன்றாக தொட்டு பார்த்தேன்.. மனதில் இனம் புரியாத சோகத்துடன் வெளியே வந்தேன்..

சுந்தர ராமசாயின் புளியமரதின் கதையை படித்து முடித்த பின்னும் அப்படி ஓர் உணர்வு தோன்றியது..

சமூக சீர்திருதம், ஆன்மீக பிரச்சாரம், நாத்திக பிரச்சாரம் , தனிமனித சாகசம் என்பதெற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரு சாட்சியாக அனைத்தயும் பார்க்கும் நோக்கில் நாவல் அருமையாக உள்ளது. 

ஒரு புளிய மரத்தை சாட்சியாக வைத்து அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் கதை..  அந்த புளியமரத்தை நாம் சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கிறோம்.

அதன் மர்மங்கள், அதன் இளமைக்காலம், அதன் வசந்த காலம் , அதன் வீழ்ச்சி என அனைத்தையும் பார்க்கும்போது எதற்குமே அர்த்தம் இல்லை என தோன்றுகிறது. ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்தவை என்றும் தோன்றுகிறது.

  புளியமரத்தை சுற்றி வாழும் ஊர், ஊரின் அடையாளமாக புளிய மரம் இருஜ்தல், சிறிது சிறிதாக நகரமயமாதல், இயற்கை அழிக்கப்படுதல், அரசியலுக்க்காக புளியமரத்தையே அழிக்க துணிதல், புளியமரம் தெய்வமாதல், அது அழிக்கப்படுதல், அழிக்க முயன்றோரும் காக்க முயன்றோரும் அழிதல் என படிக்கும் போது புளியமரம் ஒரு குறியீடு மட்டும்தான் என புரிகிறது…

இடையறாத விளையாடுதான் உண்மை. தனி மனிதனோ, இடங்களோ , இந்த உலகமோ கூட எந்த முக்கியத்துவமும் அற்றவை…

இரு பலசாலிகள் நடதும் போரில் , சம்பந்தமே இல்லாமல் ஒரு முதியவர் இருவரையும் மீறி வெல்வதும் , ஆனால் அந்த வெற்றி அவருக்கு பயன் இல்லாமல் இருப்பதும் வாழ்வின் அபத்தங்களில் ஒன்று.

தத்துவ நாவலை போல தோன்றும் இந்த நாவல் . மிக சுவையாக எழுதப்பட்டுள்ளது…

முன் ஒரு முறை மரம் வெட்டப்பட வேண்டிய நிலையில், கிளையை மட்டும் இழந்து தன்னை காத்து கொள்கிறது. பல்லி வாலை இழந்து தன்னை காப்பது போல என்பது போன்ற வார்த்தை பிரயோயங்கள் அபாரம்..

ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்கலாம். நாவலில் ஓர் எழுத்துகூட அனாவசியமாக இல்லை..  செதுக்கி இருக்கிறார் சு . ரா..

 

சு ரா என்ற பெயரை முதலில் கேட்டது, அவரின் ஒரு கமெண்ட் மூலம்தான்.. “ முதல் தர எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். மூன்றாம் தர எழுத்தாலர்கள் , சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் ” என ஒரு முறை சொன்னார்..

அப்போது பாலகுமாரன் பரபரப்பாக எழுதி குவித்த நேரம், நான் பாலாவின் ரசிகன் என்பதால், சுரா மேல் கோபம்.

அதனால் அவரை படிக்கவேயில்லை..

எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை சொல்லலாம். நாம் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் எழுத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்ற ஞானோதயம் இப்போதுதான் ஏற்பட்டு , அனைவரையும் படிக்கிறேன். அந்த வகையில் இப்போதாவது படித்தேனே என மகிழும்படி இருந்த்து நாவல்..

காதர் , தாமு , ஆசான், மகராஜா என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர் . யாரும்    நாவல் முழுதும் வரவில்லை என்ற போதிலும்…   இன்னும் கொஞ்ச நேரம் வரமாட்டார்களா என ஏங்க சேயும் வகையில் அனைவரும் சுவையாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

வட்டார பாஷை – இனிது இனிது…..  suraa

புளியமரத்தின் கதை – அனைவரும் படிக்க வேண்டிய கதை..

 

பின்குறிப்பு – இதை படித்து நான் ஏன் வருத்தப்பட்டேன்? நல்ல புத்தகம் படிக்க நேர்ந்தால், உடனடியாக அதன் ஆசியருடன் பேசி அல்லது எழுதி பாராட்டுவது என் இயல்பு. இந்த நாவல் ஆசியருடன் பேச அதிர்ஷ்டம் இல்லாததை நினைது உண்மையில் வருந்தினேன்…

7 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. தற்போது தான் நண்பர் கா. பா கொடுத்து படித்துக் கொண்டிருக்கிறேன்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாவ்.. படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க

    ReplyDelete
  3. அந்த புத்தகம், உங்கள் எண்ணங்களில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை, உங்கள் இடுகை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  4. ஆம்... மறக்க முடியாத புத்தகம்

    ReplyDelete
  5. ஓர் அருமையான நாவல். பல வருடங்களுக்கு முன் படித்தது. மீண்டும் படிக்க வேண்டும்.
    மேலும் நீங்கள் நா.கந்தசாமி எழுதிய "சாயாவனம்" படித்திருக்கிறீர்களா? மற்றுமொரு மனதை விட்டு அகலாத படைப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. இன்றைய சூழ்நிலையில் புளியமரம் என்பது எந்த எதிர்வினையையும் காட்டாத மரம் போன்ற மக்களைக் குறிக்கலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]