பதிவுலகில் நண்பர்கள் கிடைப்பதும் இயல்பான ஒன்று. அதன் பின் பூசல் ஏற்படுவதும், இருதரப்பும் பழைய ஆதாரங்களை காட்டுவதும் , கடைசியில் ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிப்பதும் இயல்பு.
இந்த இயல்பை பயன்படுத்தி சில பிரபலபங்கள் மன்னிப்பு கேட்டால் எப்படி இருக்கும்…
மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் ;
நேரம் கெட்ட நேரத்தில் , பெண்புலி, கண்ணம்மா என்றெல்லாம் வசசம் எழுதி கொல்வதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
புரட்சிதலைவி
இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு , கொடனாடு செல்வதற்க்காக மன்னிப்பு
புரட்சிகலைஞர்
எப்படியும் ஒரு கட்சியுடன் கூட்டு சேரப்போகிறேன். அதுவரை சும்மா தனித்து போட்டி என உதார் விடுவதற்காக மன்னிப்பு
சாரு நிவேதிதா..
மற்றவரை திட்டுவதால் மட்டுமே, மற்றவர் பெயரை சொல்வதால் மட்டுமே தான் ஒரு எழுத்தாளன் என நிரூபிக்க முயல்வதற்காக மன்னிப்பு
ஜெயமோகன்
தன்னைத்தவிர வேறு யாரும் எழுத்தாளன் இல்லை என சொல்வதற்காக மன்னிப்பு.
விவேக்
சிரிப்பு வராத காமெடி சீனில் நடிப்பதற்காக
கமல்ஹாசன்
மேக் அப் போடுவதுதான் நடிப்பு என மக்களை நம்பவைத்ததற்காக….
ரஜினி
கல்யாணத்துக்கு கூப்பிடாததற்காக …..
சோனியா
பிரதமரை டம்மியாக்கியதற்காக …
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]