



தொலைக்காட்சியில் தமிழை கொலை செய்யும் அறிவிப்ப்பாளர்கள் பற்றியும் சினிமாவில் தமிழ் உச்சரிப்பு கொலை பற்றியும் நடிகர் ஒருவர் கிண்டல் செய்வதை டிவியில் கண்டுகளித்தேன்.
” நடிகருக்கு என்ன ஒரு தமிழ் அக்கறை !! “ என்று வியந்த என்னை அலட்சியமாக பார்த்தான் என் நண்பன்..
” இவர்கள் கொலை செய்வதை விட , பொறுப்பில் இருப்பவர்கள் கொலை செய்வதுதான் அதிகம்.. வெளியில் சென்று பார்.. நாட்டு நடப்பு தெரியும் “ என்றான்.
அவன் சும்மா மிகைப்படுத்துகிறான் என நினைத்த படி வெளியே கிளம்பினேன்.
சென்னை மா நகராட்சி ஆங்காங்கு கைவண்ணம் காட்டி இருக்கும் சுவரோவியங்கள் கண்ணை கவர்ந்தன..
அதை பார்த்த்தும் அதிர்ச்சி… தமிழை படுகொலை செய்து இருந்தார்கள்..
ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை… ஒன்று விடாமல் அனைத்திலும் , ஏதோ வேண்டுதல் போல , தமிழை குதறி எடுத்து இருந்தார்கள்..
தமிழை இப்படி அலட்சியமாக கையாளலாமா? மிகவும் வருத்தமாகஇருந்தது!
இதோ, அந்த தமிழ் கொளை உங்கல் பார்வைக்கு…..
1.கண்ணியாகுமரி
2.சிற்ப்பங்கள்
3 ஜல்லிகட்டுகாளை அடுக்குதல்
4உங்கலுக்கு உப்பிடும்
கொலை கொலையா மந்திரிக்கா....
ReplyDeleteதெரு தெருவா சுத்தி வா ....
உங்கலுக்கு, இந்த டமில் சிற்ப்பு பாத்துட்டு கோபம் அடுக்க முடியல.... என்க்கு சிர்ர்ப்பு!
ReplyDeleteஒலக டமிழர் தலைவன் செம்மறி மநாடு நடத்தி தமில் வலக்கிறான். இங்க தமிலன் தமிலை அலிக்கிறான். ஐயோடா யாரிடம் போய் சொல்ல. இந்த அழகில் தமிழகம் என்று ஒரு பெயர். வெட்கக் கேடு
ReplyDelete