கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பது விடை இல்லாத கேள்வி. ஏன் என்றால் கடவுள் என்று எதை சொல்கிறோம் என்ப்தை பொருத்த விஷயம் இது..
மைனா படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த்தது.
பிரபு சாலமன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கமல் வெளியிட இயக்குனர் பாலா பெற்றுக் கொண்டார்.
பாடல் ஆசிரியர் யுக பாரதி பேசும் போது பண்புடன் பேசினார்.. இயக்குனர் கிறிஸ்தவ மத நம்பிக்கை உள்ளவர். எனவே அவர் உணர்வுகளை மதிக்கும் வகையில் “ பிரபு சாலமனை கர்த்தர் கைவிடுவதும் இல்லை.. அவரை விட்டு விலகுவதும் இல்லை “ என்றார்.
அதன் பின் பேசிய பாலா “ நான் அதிகம் பேச வேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் யுக பாரதியின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.. புத்தி உள்ளவனை எந்த சாமியும் ஆசிர்வதிக்க வேண்டியதில்லை… “ ” என்று நாத்திகம் பேசி விட்டு சென்றார்.
நம்மை பொருத்தவரை, கிறிஸ்தவ நம்பிக்கையையும் , எல்லா மத நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும்..ஒருவர் கடவுள் இல்லை என நினைத்தால் அந்த உணர்வையும் மதிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ஆனால் ஒரு நம்பிக்கையாளர் இன்னொரு நம்பிக்கையாளரை குறை சொலவது தவறு.
புத்தி உள்ளவனுக்கு கடவுள் ஆசி தேவை இல்லை என்கிறாரே..அப்படி என்றால் புத்தி இருக்கும் எல்லோரும் ஜெயித்து விடுகிறார்களா.. உழைக்கும் அனைவரும் ஜெயிப்பது கிடையாது… தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் , உழைப்பு, படிப்பு என அனைதும் இருந்தும் , கஷ்டத்தில் வாழ்பவர்கள் அனேகம்..
எனவே ஒருவர் ஜெயிக்கிறார் என்றால் கண்ணுக்கு தெரியாத பல விஷ்யங்கள் அதன் பின் இருக்கின்றன.. இதை சுருக்கமாக கடவுள் ஆசி என சிலர் சொல்லலாம்..
outliers என்ற புத்தகத்தில் இது விரிவாக அலசப்பட்டுள்ளது.. வெற்றிக்கு பின் இருக்கும் காரணங்கள் என்னென்ன என ஆராய்கிறது புத்தகம்..
ஒருவர் புத்திசாலியாக பிறப்பதே கடவுளின் ஆசிதான்..எனவே புத்திசாலிக்கு கடவுள் ஆசி தேவை இல்லை என சொல்வது தவறு என்பதும் ஒரு கோணம்.
பாலாவுக்கு பின் பேசிய பிரபு சாலமன் “ தேங்க்யூ ஜீஸஸ் “ என பேச்சை துவக்கினார்.. “ தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் “ என பாலாவிடம் விளையாட்டாக கூற அரங்கில் பலத்த கைதட்டல்..
கடைசியில் பேசிய கமல் , தெளிவாகவும் ஆனால் யாருக்கும் புரியாத படியும் தன் பாணியில் பேசினார்..
கல்லை பார்த்தால் கடவுள் தெரியாது..கடவுளை பார்த்தால் கல் தெரியாது .. கல் தெரியாவிட்டால் தடுக்கி விழுந்து விடுவோம் . எனவே பகுத்தறிவு அவசியம் அன்றார்..
கடவுளை நம்பிகிறோமா இல்லையா என்பதோ பிரச்சினை இல்லை… நமது உழைப்பும் , புத்திசாலித்தனமும் கூட இரண்டாம் பட்சம்தான்…
உழைப்பு என்பது போட்டியில் இறங்க அடிப்படை தகுதி.. ஆனால் இறுதி வெற்றியை நிர்ணயிப்பது பல விஷ்யங்கள்.. இதை கடவுள் எனவும் சொல்லலாம் … அல்லது அறிவியல் பூர்வ காரணங்களை அடுக்கலாம்..
வெற்றி பெற்றதும் தான் மட்டுமே- தன் புத்தி மட்டுமே- வெற்றிக்கு காரணம் என நினைப்பது தவறு..
//கல்லை பார்த்தால் கடவுள் தெரியாது..கடவுளை பார்த்தால் கல் தெரியாது .. கல் தெரியாவிட்டால் தடுக்கி விழுந்து விடுவோம் . எனவே பகுத்தறிவு அவசியம் என்றார்..//
ReplyDeleteகடவுள், கடவுள் நம்பிக்கை, அறிவு, பகுத்தறிவு.
எல்லாத்தையும் ஜீரணிக்க கஷ்டமா இருக்குங்க.
"கடவுள், கடவுள் நம்பிக்கை, அறிவு, பகுத்தறிவு.
ReplyDeleteஎல்லாத்தையும் ஜீரணிக்க கஷ்டமா இருக்குங்க."
உண்மைதான்
தெளிவாக தெரிந்தால் சித்தாந்தம்.. தெரியாமல் போனால் வேதாந்தம்
//புத்தி உள்ளவனை எந்த சாமியும் ஆசிர்வதிக்க வேண்டியதில்லை… “ ” என்று நாத்திகம் பேசி விட்டு சென்றார்.//
ReplyDeleteஉண்மையில் புத்தி உள்ளவன் எந்த நேரத்திற்கு எது தேவையோ அதை தான் செய்வான் ...
நாத்திகம் ,ஆதிக்கம் போன்ற கொள்கைகள் என்பது சுட்டெரிக்கும் வெயில் -கூட சிலர் கோட்டு என்ற கொள்கையை போட்டு கொண்டு அலைவார்களே அது போல முட்டாள் தனமானது ......