Monday, October 18, 2010
எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் விட்டு வைக்காத வினோத ஆய்வுகள் ( பார்ட் - 2 )
எரிசக்தி தயாரிக்கும் எக்குதப்பான முறைகளை பார்த்து வருகிறோம்... இவையெல்லாம் உடனடியாக , பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என சொல்ல முடியாது.. ஆனாலும் ஆங்காங்கு பயன்பட்டு வருகின்றன ... காற்றாலைகள் எல்லாம் முதலில் வேடிக்கையாகத்தான் பார்க்க பட்டன,,, இன்று அது ஒரு பெரிய தொழிலாக இருக்கிறது ( நான் சில காலம் அதில் வேலை பார்த்தேன் என்பது இங்கு தேவை இல்லாத சுய தம்பட்டம்.. ஹி ஹி )சரி..மேலும் சில ஏடாகூடா தொழில் நுட்ப ஆய்வுகள்..
6 பெரிய கட்டடம் கட்டும்போது மண்ணை தோண்டுகிறார்கள்... அதெல்லாம் சகதியாகி வீணாகிறது...அதே போல , சுரங்கம் அமைக்கும் பணியிலும், நிலக்கரி போன்றவை எடுக்கும் இடத்திலும் , நிலத்தடி நீருடன் கலந்து சக்தியாகி வீணாகிறது..அல்லது சரசாரி பயன்பாட்டில் செலவாகிறது..
கலிபோர்னியாவில் மட்டும் 7 லட்சம் திட வடிவ சகதி , ஆண்டொன்றுக்கு கிடைக்கிறது.. இதன மூலம் பத்து ௦ மில்லியன் kvh மின்சாரம் தயாரிக்க முடியும் ( நாள் ஒன்றுக்கு )
ஆய்வு நிலையில் இருக்கும் இந்த முறை அமுலுக்கு வந்தால், தொழிற்சாலைகளும் பொது நிறுவனங்களும் பயன் பெறும்.
செலவு செய்து சக்தியை அப்புறபடுத்தும் நிலை மாறி , வருவாய் பெறும் நிலை ஏற்படும்..
7 ஜெல்லி பிஷ்... இருளில் ஒளிரும் தன்மை கொண்டது... அதில் இருக்கும் ஒளிரும் தனமை கொண்ட பச்சை ப்ரோட்டின்தான் இந்த ஒளிரும் தன்மைக்கு காரணம்..
இந்த ப்ரோட்டீனை வைத்து ஸ்வீடனில் ஆய்வு செய்ய பட்டது.. ஒரு அலுமினியம் கம்பியில் ஒரு சொட்டு ப்ரோட்டின் விடப்பட்டது.. பிறகு அதன் மீது , புற ஊதா கதிர்களை பாய செய்யும்போது , எலக்ட்ரான் வெளியேறியது... இதன் சர்க்யூட் வழியே செல்லும்போது , மின்சாரம் உண்டானது..
உயிரியல் பேட்டரி செய்யும் சாத்தியம் , பல மருத்துவ பயன்பாடுகளுக்கு ஏற்றது.. சில நுண் கருவிகளை நம் உடலுக்குள் பொறுத்த வேண்டிய நிலை வரும்போது, அந்த கருவிகளில் பயன்படும் பேட்டரிகலாக இந்த உயிரியல் பேட்டரிகள் பயன்படும்..( சூரிய பேட்டரி , இங்கு வேலைக்கு ஆகாது என்பது தெளிவு )
மின்மினி பூச்சி உள்ளிட்ட பல உயிரின்களில் ஆய்வு நடந்து வருகிறது
8 இப்போது காண இருக்கும் முறை எல்லா இடத்துக்கும் பொருந்தாது..
சில பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு அடிப்புற மண் இடுக்களில். மீதேன் வாயுவும் , கார்பன் டை ஆக்சைடும் அடைபட்டு இருக்கும்...
வெப்பநிலை மாறும்போது, சோடா பாட்டிலில் இருந்து கேஸ் வெளியேறுவது போல, குபீர் என இவை வெளியேறும்.. ஏரி பெரிய சத்துடன் வெடித்து சிதறுவது போல இது இருக்கும்...பல நேரங்களில் உயிர் சேதமும் ஏற்படலாம்... காமரூன் நாட்டில் இதுபோன்ற சம்பவத்தில் பலர் உயிர் இழந்தனர்..
ர்வாண்டா நாட்டில் , இந்த வாயுக்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கின்றனர்...
ஏரியில் இருந்து உறிஞ்சப்படும் வாயுக்கள் மூலம் 3 .7 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.. அடுத்த சில ஆண்டுகளில், நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்..
உடனே இது போல புழல் ஏரியில் அமல் படுத்த முடியுமா என அவசரப்பட கூடாது... இயற்கையாக அமைந்தால்தான் உண்டு...
9 பாக்டீரியா என்றால் படையும் நடுங்கும்.. பாக்டீரியா இல்லாத இடமே இல்லி என்பதால் , அதை வைத்து மின்சாரம் தயாரித்தல் பெரிய வெற்றி கிடைக்கும்..
ஒவ்வொரு உயிருக்கும் தற்காப்பு முறை ஒன்று இருக்கும்... பெக்டீரியவுக்கும் அது உண்டு.. உணவு கிடைக்காத போது , சமாளிப்பதற்காக, பக்டீரியா தன சக்தியை கொழுப்பு அமிலமாக மாற்றி சேகரித்து வைத்து கொள்ளும்... இந்த அமிலம்தாம் பயோ டீசல் தயாரிக்கவும் பயன் படுகிறது.. இந்த இரண்டு தனமியும் சேர்த்து பார்த்த விஞ்ஞானிகள், பேக்டீரியா மூலம் மின் உற்பத்தி சாத்தியத்தை உணர்ந்தனர்,,
பாக்டீரியாவில் இருக்கும் என்சைம்களை செயற்கை முறையில் நீக்கி , அது அமிலம் சுரப்பதை அதிகப்படுத்துதல்.. அதன் பின், அதில் ஆக்சிஜனை நீக்கி விட்டு , பயோ டிசல் உருவாக்குதல் என்பதே இந்த முறை..
பேக்டீரியா நிரப்பி வண்டி ஓட்டும் காலமும் வரலாம்... ஆனால் இப்போதைக்கு முடியாது... செலவு அதிகம் ஆகிறது... போக போக குறைந்த செலவில் தயாரிக்க முடியலாம்
10 கார்பன் பைப்புகள் மிகவும் உறுதி தன்மை வாய்ந்தவை... அதிக எடையை தாங்க வேண்டிய இடங்களில் இவை பயன்படுகின்றன..
இவற்றின் இன்னொரு பண்பு சமிபத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது.. சஊரிய சக்தியை உறிஞ்சும் ஆற்றல் இதற்கு அதிகம் என்பதே அந்த கண்டு பிடிப்பு..
இப்போது இருக்கும் முறையில், கூரை முழுதும், ஒரு தகடு போல ஒன்றை பொருத்தி , சூரிய சக்தியை உறிஞ்சுவதை பார்த்து இருப்பிர்கள்
கார்பன் பைப்புகளை பயன் படுத்தினால், குறைந்த இடத்தில் அதிக சக்தியை உறிஞ்சலாம்.. மின்சாரமும் தயாரிக்கலாம்...
********************************************************************
இது போல பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.. அவை நடைமுறைக்கு வரும் வரையாவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது..
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
October
(40)
- சாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...
- வரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...
- காமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு
- ஜிகாத் என்றால் என்ன ?
- எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...
- நீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா? எழுத்து சித்தர்...
- கிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...
- இருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...
- புனிதமான கலர் எது ? ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...
- என் மதிப்பு கேவலம் 15 கோடிதானா ? பேரம் பேசும் எம்எ...
- பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...
- பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...
- எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்
- எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...
- சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...
- ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...
- ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?
- கொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா ? அசத்தும் தொழி...
- பரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...
- சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )
- ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )
- என் உயிர் நீ அல்லவா !!? ( சவால் சிறுகதை )
- எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? ( சவால் சி...
- எந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா?? சர்ச்சை...
- பரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...
- எந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...
- கர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.
- பரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...
- பெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...
- எந்திரன் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?
- எந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்
- காலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ
- சுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...
- எந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...
- எந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...
- கண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்
- எந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா? ...
- எந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...
- சிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்
- எந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...
-
▼
October
(40)
எல்லாமே செலவு அதிகம் பிடிக்கும் அல்லது நமக்கு வர இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதுவரைக்கும் ஆற்காட்டாரே துணை.
ReplyDeleteமிகவும் பயனுள்ள விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ராதாகிருஷ்ணன் சார்
ReplyDeleteசீக்கிரம் தேர்தல்ல நின்னு ஜெயிச்சு , பொற்கால ஆட்சி வழங்க அண்ணன் நாகராஜ சோழனை அழைக்கிறேன்
ReplyDelete