ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்பது விதி ( தலை விதி அல்ல , இயற்பியல் விதி) . எந்திரன் படம் பரவலான வரவேற்பு பெற்று வருவது ஒரு புறம் என்றால் அதே அளவுக்கு அவதூறு பிரச்சாரத்தையும் சந்தித்து வருகிறது..
இந்தியா வல்லரசு ஆவதை படம் தடுக்கிறது, ரசிகர்கள் ரஜினியை விரும்பவில்லை, ரசிகர்கள் அளவுக்க அதிகமாக ரஜினியை நேசிப்பது தவறு என்றெல்லாம் கன்னா பின்னா என வாய்க்கு வந்த்தை பேசுகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக , எந்திரன் படம் கன்னட படம் ஒன்றின் காப்பி என ஒரு பிரச்சாரத்தை தொடங்கினர்.
கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் படம் ஹாலிவுட்.. பரபரப்பை ஏற்படுத்திய படம் இது.. இதைதான் எந்திரன் என எடுத்து விட்டார்கள் என ஒரு அவதூறு கிளம்பியது..
இது குறித்து உபேந்திராவிடம் கேட்கப்பட்ட்து..
அவர் கூறுகையில் “ இப்படி சொல்வது முற்றிலும் தவறானது. கேலிக்குரியது..
என் பட்த்தை நான் எடுக்க ஆரம்பிக்கு முன்பே ஷங்கர் இந்த கதையை உருவாக்கி விட்டர். பத்து ஆண்டுகளாக இதை பற்றி பேசி வருகிறார்.
அதன் பின் தான் , ஹாலிவுட் பட கதையை நான் உருவாக்கினேன். இதுவும் ரோபோவை அடிப்படையான கதை என்பதால் ஷங்கரிடம் இது குறித்து பேசினேன்.. இரண்டும் ஒரே கதையாக் இருந்து விட்டால் பிரச்சினையாகி விடுமே என்ற கவலை எனக்கு..
என் கவலையை புரிந்து கொண்ட ஷங்கர், இரண்டும் வேறு வேறு கதை. கவலைப்படாமல் உங்கள் பட்த்தை ஆரம்பியுங்கள் என உற்சாகபடுதினார். பிறகுதான் என் படம் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆனது.
எந்திரன் படம் பார்த்தேன் சூப்பராக இருக்கிறது. ரஜினி ரஜினி தான் "என்றார்.
.
பின்குறிப்பு : எந்திரன் பட்த்துக்கும் என் பட்த்துக்கும் சம்பந்தம் இல்லை.. ஆனால் ஒரு ஆங்கில பட்த்துக்கும் , என் பட்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என பேட்டி முடிவில் நகைசுவையாக குறிப்பிட்டார் உப்பி...
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]