Pages

Monday, October 4, 2010

கண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்

acci acci1 

மாலை சாலையில் வந்து கொண்டு இருந்தேன் . ஓர் இடத்தில் பயங்கர விபத்து . பாதிக்கப்பட்டவர் மத்திம வயதுக்காரர்..

யார் மீது தவறு என அந்த நேரத்தில் ஆராய்வதை விட , அவரது ஈடு செய்ய முடியாத இழப்பு, குடும்பத்தினர் அடையும் அதிர்ச்சி, வேதனை ஆகியவை மனதை வாட்டியது.

சாலை விபத்து என்பது அன்றாட  நிகழ்வாகி விட்டது. சாலை விபத்து இல்லாத நாள் ஒன்று கூட இல்லாமல் போய் விட்டது வருத்ததுக்கு உரியது.

வெளியே செல்கிறோம் என்றால் உயிருக்கு உத்த்ரவாதம் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

அதிவேக வாகனங்கள், பெரிய சாலைகள் ஆகியவை நன்மைக்கு பதில் தீமை செய்வது துரதிர்ஷ்டவசமானது.

அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து விபத்துக்களை குறைப்பது சாத்தியமான ஒன்றுதான்,, நாம் பாதிக்கப்படும்போது மட்டும் கோபப்பட்டு பயனிலலை.. நிலையின் தீவிரம் புரிய வேண்டும்..

80 சதவிகித விபத்துக்கள் ஏற்பட 20% விஷயங்கள்தான் காரணமாக இருக்கின்றன.. அவற்றை ஆராய்ந்து சரி செய்ய யாரும் இல்லை..

தவ்றான பாதையில் செல்லுதல், ஓடும் பேருந்தில் ஏறுதல், தண்டவாளத்தை கடத்தல், செல்போன் மூலம் கவனம் சிதறுதல், ஒரு சில பேருந்து ஓடுனர்கள் மற்ற வாகன ஓட்டிகளின் அதி வேகம், மது , விளையாட்டுத்தனமாக வண்டி ஓட்டுதல் என தவிர்க்க கூடிய சில விஷயங்கள்தான் விபத்தை ஏற்படுத்துகின்றன..

ஒருவர் செய்யும் தவறு அவரை மட்டும் பாதிப்பதில்லை. அப்பாவிகளையும் சேர்த்து பாதிக்கிறது..

ஒரு நிமிட தவறு, வாழ்வு முழுதும் , தலைமுறை முழுதும் சோகத்தை ஏற்படுத்த கூடும்..

பத்தி நிமிடம் முன் , நம் வாகனத்தை முந்தி சென்றவர், விபத்தில் இறந்து விட்டதை காணும்போது , நம்முடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தவர் , பஸ் ஏறும் போது விபத்துக்குள்ளாவதை பார்க்கும்போது நமக்கே அவ்வளவு வேதனை ஏற்படும்போது , பாதிக்கப்பட்டொருக்கு எப்படி இருக்கும்.

இதை ஒரு சீரியஸ் பிரச்சினையாக எடுத்துகொண்டு , சாலை விபத்துக்களை குறைக்க நம்மாலான முயற்சியை செய்ய வேண்டும்.

1 comment:

  1. சாலை விதிகளை முறையாக பின்பற்றினாலே போதும்.
    முக்கால்வாசி விபத்துக்கள் குறையும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]