Pages

Wednesday, October 6, 2010

காலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ

” என்னடா சொல்ற.. நேரம் விலைமதிப்பு அற்றதுனு சொல்வாங்க.. நேரத்தை காசு கொடுத்து வாங்க முடியும்னு நீ சொல்றத நம்ப முடியல “
சந்தேகத்துடன் சங்கரை பார்த்தேன்..
சங்கர் புன்னகைத்தான் ..
” அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கு,.. நீ வாழ்வில் சாதிக்க விரும்பும் இளைஞன்.. ஒரு மணி நேரம் தாமதம் ஆனதுல ஒரு முக்கியமான மீட்டிங் போக முடியாம பெரிய வாய்ப்பை இழந்துட்ட “
“ ஆமாம் “ சோகத்துடன் தலை ஆட்டினேன்.. அந்த ஒரு மணி நேரம் கிடைத்து இருந்தால் , இன்னேரம் இந்தியா முழுதும் பிரபலம் ஆகி இருப்பேன்.
” எனக்கு தெரிஞ்ச சாமியார் ஒருவர் பெரிய பணக்கார்ர்களுக்கு நேரத்தை விற்பனை செய்றார். விலை அதிகம்தான்.. ஆனால் பலன் அதிகம் “
புரியாமல் அவனை பார்த்தேன் ..” நேரத்தை எப்படி வாங்க முடியும் ? “
” உனக்கு உழைக்க ஆசை.. நேரம் பத்தல... சித்தர் ஞானத்தை பயன்படுத்தி , அந்த சாமியார் ஒரு மருந்து தயாரிச்சு இருக்கார்.. அதில்தான் நேரம் அடங்கி இருக்கு.. ஒரு மணி நேர மருந்து சாப்பிட்டா , உனக்கு ஒரு மணி நேரம் கிடைக்கும்.. விலை ஐம்பாதாயிரம் “
எனக்கு புரியவும் இல்லை.. நமபவும் முடியவில்லை..ஆனால் முயற்சிக்க தீர்மானித்தேன்

சாமியார் ஆசிரமத்துக்குள் நானும் சங்கரும் நுழைந்தோம்..
அமைதியான, இயற்கை அழகு கொஞ்சும் இடம்...இனிய காற்று...
ஒரு பிரமாண்ட காளி சிலை கண்ணை கவர்ந்த்து..
சாமியார் பெரிய தாடி , மீசையிடன்இருந்தார்.. நரைத்து இருந்தார்..
“ வணக்கம் சாமி’
இருக்கையில் அமருமாறு சைகை காட்டினார்..
என்ன விஷ்யம் என்பது போல சங்கர் முகம் பார்த்தார்.
“ சாமி..இது என் நண்பன்.. பெரிய பிசினஸ் மேன் ஆகணும்னு முயற்சி செய்றான்.. நேரம் பத்தல... அதுதான் உங்க்கிட்ட நேரம் வாங்கலாம்னு... “

“ விலை அதிகம் ஆகுமே “
நான் குறுக்கிட்டேன்.
“ சாமி..காசை வச்சு நீங்க என்ன செய்வீங்க..? .. ஏன் இவ்வளவு சார்ஜ் செய்ரீங்க “
“ பத்து ஆயிரம் லிட்டர் பால் வாங்கி , இந்த காளிக்கு அபிஷேகம் செய்வது என் வழக்கம்.. இது போல பல ஆன்மீக பணிகள், பூஜைகள் இருக்கு “
“ சாமி..கேட்கறெனு தப்பா நினைக்காதீங்க.. இவ்வளவு பாலை சாமி சிலை மேல் ஊத்துவதற்கு பதில் ஏழைகளுக்கு கொடுக்கலாமே..”
“ நான் வேண்டாம்னு சொல்ல்லையே..பிசினஸ் செஞ்சு சம்பாதி..ஏழைகளுக்கு கொடு.. நான் என் காசை எப்படி செலவு செய்றேனு நீ ஏன் கவலைப்படுற? .. “ ஏழைகள் எப்பவும் இருக்காங்க... ஆனால் கடவுளை நாம் அடையும் வாய்ப்பு எப்பவும் இருப்பதில்லை .”
“ இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே? “
” பைபிள் ல இருக்கு...படிச்சு பாரு” பைபிளை கொடுத்தார்..
“ நீங்க எப்படி பைபிள் “ குழம்பினேன்..
“ ஞானம் என்பது அனைவருக்கும் பொதுதான் “
சங்கர் பேச்சை மாற்ற விரும்பினான்...
“ சரி சாமி... அந்த மருந்தை கொடுங்க “
அவர் சைகை காட்ட சீடன் ஒருவன் சின்ன சின்ன டுயூப்களை – மெட்ராஸ் ஐ வந்தால் போடும் ஐ டிராப் சைசில் – எடுத்து வந்தான்..
நான் சந்தேகமாக பார்த்தேன்.. இது உண்மையில் வேலை செய்யுமா..? சின்ன சைசில் இருக்கும் இதன் விலை ஐம்பதாயிராமா?
” சரி சாமி..ரெண்டு கொடுங்க”
இரண்டு கை மாறியது..
” காசு இப்ப தர வேண்டாம்... இதை பயன்படுத்தி இருபத்து நாலு மணி நேரத்துக்குள் தந்தால் போதும்.. ஆனால் ஏமாற்ற நினைத்தால் , கொடுத்த நேரத்தை வட்டியோடு வாங்கிக்குவேன்”
கறாராக சொன்னார் சாமியார்..
சற்று அவ நம்பிக்கையுடந்தான் வெளியே வந்தேன்..
காரை கிளப்பினோம்..
“ டிரைவர்... இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பிடிக்கனும்.. சீக்கிரம் போ”
நானும் சங்கரும் பின் சீட்டில்..
கார் வேகம் எடுத்த்து...
ஓர் இட்த்தில் கார் நின்றுவிட்ட்து...
“ சார்..பஞ்சர் சார்..ரெண்டு நிமிஷம் ..மாத்திடுறேன்” சொன்ன டிரவரை முறைத்தேன்..
டிரெயுனுக்கு நேரம் ஆகி கொண்டே இருந்த்து..
ஒரு வழியாக அவன் முடித்து , கிளம்பாவும் , ஊர்வலம் ஒன்று குறுக்கிடவும் சரியாக இருந்த்து..
அட ஆண்டவா..இன்னிக்கு டிரெய்னை பிடிக்க முடியாது..
இன்னும் ஐந்து நிமிட்த்தில் டிரெய்ன் கிளம்பிவிடும்.. ஆனால், நாங்கள் இருந்த இட்த்தில் இருந்து ஸ்டேஷனை அடைய அரை மணி நேரமாவது ஆகும்..
தலையில் கை வைத்து அமர்ந்தேன்..
திடீரென தோன்றியது.. அந்த மருந்தை சாப்பிட்டு பார்க்கலாமா..
இரண்டில் ஒரு டுயூபை எடுத்தேன்... பயமாக இருந்த்து..
அதன் முனையை வெட்டி விட்டு, மருந்தை அருந்தினேன்.. மயக்கம் வருவது போல இருந்த்து..
கார் சென்று கொண்டே இருந்த்து...
கண் விழித்து பார்த்த போது , டிரைனில் இருந்தேன்..
நம்ப முடியவில்லை..எப்படி வந்து சேர்ந்தோம்?
ஒரு மணி நேரம் டிரையின் தாமதமாம்.. சன்கர் என்னை சரியான நேரத்தில் ஏற்றி விட்டு விட்டான்..
மருந்தின் மகத்துவமா அல்லது தற்செயலா...
சாமியாருக்கு காசு கொடுப்பதா வேண்டாமா? புரியவில்லை..
வெளினாட்டு பிரதி நிதி முன் நானும், இன்னும் சில தொழில் முனைவோர்களும் அமர்ந்து இருந்தோம்..
“ நாங்க எடுத்து இருக்குறது முக்கிய பிராஜக்ட்.. உங்களில் ஒருவருக்குத்தான் சான்ஸ் தர முடியும்...
இந்த டிராயிங்கை பாருங்க.. இதற்கு எப்படி டிசைன் அமைத்தால் எகனாமிக்கலா இருக்கும் அப்படீங்கரதை , உங்க டீம் மெம்பர்சோட பேசி இன்னும் ஒரு மணி நேரத்துல யார் தரீங்களோ அவங்களுக்கு வாய்ப்பு”
அவர் சொல்லி முடிக்க நாங்கள் சுறு சுறுப்பானோம் ..
சற்று முயன்ற அனைவரும், ஒரு மணி நேரத்தில் முடியாது என சொல்லி கிளம்பினர்..
ஆமாம்.. ஒரு மணி நேரத்தில் முடியாதுதான்..
சிந்தித்த நான் , சட் என மருந்தை குடித்தேன்..
ஐம்பது நிமிடங்கள் முடிந்தன.. இன்னும் ஒரு மணி நேரம் இருந்தால் முடித்து விடுவேன்..
” காதல் அணுக்கள் “ செல் போன் அலறியது..
அந்த வெளி நாட்டான்..
“ ஹலோ”
“ நான் ஜேம்ஸ் பேசுறேன்.. நீங்கதானே போன முறை , ஒரு டிசைன் சப்மிட் செஞ்சவரு.. இப்பத்தான் பார்தேன்.. வெரி இம்ப்ரசிவ்... அடிப்படை ஒகே ஆயிடுச்சு..அதனால இன்னும் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ள அனுமதிக்றேன் “
குதூகலித்தேன்.
“******************************************
“ அருமை.. செவ்வாய் கிழமை வந்து உங்க பணி ஆர்டரை வாங்கிகோங்க”
ஜேம்ஸ் சொல்ல , மகிழ்வுடன் கை குலுக்கி வெளியேறினேன்..
யோசித்து பார்த்தால் மிராக்கிள் போலவும் இருந்த்து... தற்செயல் போலவும் இருந்த்து..
சட் என முடிவெடுத்தேன்.
”சாமியாரே.. என்னை மன்னிச்சுடுங்க... நானே சாமிக்கு கூழ் ஊத்திக்கிறேன்...”
*********************************
செவ்வாய் கிழமை...
ஜேம்ஸை பார்த்து ஆர்டர் வாங்க கிளம்பினேன்..
கார் சீறிச்செல்ல , கனவில் மிதந்தேன்...
திடீரென எதிர்பாரமல் ஒரு பைக் வந்து இடிக்க , அதிர்ந்தேன்..
பின் சண்டை, சமாதானம் முடிந்து கார் கிளம்ப சற்று தாமதமானது..
புயல் போல ஜேம்ஸ் அலுவலகம் நுழைந்தேன்..
“ என்ன சார்..இவ்வளவு லேட்டா வறீங்ல.. வெயிட் செஞ்சு பார்துட்டு, இன்னொருவருக்கு ஆர்டர் கொடுத்துடாரு.,.. பன்க்சுவல் அவர்க்கு முக்கியம்”
அதிர்ந்தேன்..
“ இப்ப ஜேம்ஸ் எங்கே ? “
”அவரு கிளம்பி போயி ஒரு மணி நேரம் ஆச்சே “
சோர்வுடன் சங்கரை பார்க்க கிளம்பினேன்
“ என்னடா இது... சாமியாருக்கு கொடுக்க வேண்டிய காசை இன்னும் கொடுக்காம இருக்க “ கோபித்தான் அவன்..
” எல்லாம் த்ற்செயல்டா.. இதுக்கு என்ன காசு .. “
பேசிகொண்டிருந்த அவன் திடீரென நெஞ்சை பிடித்தபடி சரிந்தான்..
ஹார்ட் அட்டாக்..
பதறியபடி முதல் உதவி செய்தேன்.
நல்ல வேளை .. உயிருக்கு ஆபத்து இல்லை..
“ கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கடா”
ஊரை விட்டு வெளியே வந்த நேரத்தில் இப்ப்டி ஆகி விட்ட்தே.. பக்கத்தில் டாக்டர் யாரும் இல்லை..
ஒரு வழியாக மருதுவம்ன்னை வந்த்து..அவனை உள்ளே தூக்கி சென்றார்கள்..
“ சாரி சார்.. எங்களால் காப்பாத்த முடியல.. ஒரு மணி நேரம் முந்தி வந்து இருந்தா காப்பாற்றி இருக்கலாம் “
தலை சுற்றியது..
எத்தனை இழப்புகள்..இதற்கு முடிவே இல்லையா...
சாமியாரை சந்திக்க முடிவு செய்தேன்..
இருபத்து நாலு மணி நேரத்தில் வர சொன்னார்.. இருபத்து நாட்கள் ஆகியும் நான் போகவில்லை..
பணத்துடன் சென்றேன்..
ஆசிரம்ம் தன் வழக்கமான அமைதியை இழந்து இருந்த்து..
“சாமியாரை பார்க்கணும் “ சீடன் ஒருவனிடம் சொன்னேன்..
“ பார்க்க முடியாது..அவர் மகா சமாதி அடைஞ்சுட்டாரு “
திடுகிட்டேன்
“ எப்ப? “
“ இப்பத்தான்..ஒரு மணி நேரம் ஆச்சு “

3 comments:

  1. வித்தியாசமான கதை

    ReplyDelete
  2. வேகமான படிக்கத்தூண்டும் எழுத்து நடை மற்றும் வித்தியாசமான கதை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]