Friday, October 15, 2010
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? ( சவால் சிறுகதை )
சென்னை . எக்மோரில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை..
காமினிக்கு ஒரே இட்த்தில் கட்டுப்பட்டு இருப்பது பிடிக்கவில்லை.. சிறகடித்து பறக்க துடித்தாள்..
டாக்டர் செக் அப் முடித்து செல்லும் நேரம்தான் சரியான நேரம்.. வேறு யரும் இருக்க மாட்டார்கள்..
டாக்டர் வழக்கம்போல சரியான நேரத்துக்கு வந்தார்,, காமினியை சோதித்த பின் திருப்தியாக கிளம்பினார்...
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
சரியாக அதே நேரம் , பேய் வேகத்தில் வந்த குடி தண்ணிர் லாரி, இவள் குதித்த்தை எதிர்பார்க்கவில்லை.. பிரேக் போட அவகாசம் இல்லாமல் , அவள் மேல் ஏறி இறங்க, அழகும் , திறமையும், ஆயிரம் கனவுகளும் கொண்ட காமினி சம்பவ இட்த்திலேயே உயிர் இழந்தாள்...
*******************************************************************************
என்னடி டென்ஷனா இருக்க? மாலதி அக்கரையோடு விசாரித்தாள்..
காமினி கோபத்தோடு நிமிர்ந்தாள்...
“ எனக்குனு கல்யாணம், காதல் , என் வேலையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை என எல்லாம் இருக்கு... யாரோ ஒரு பதிவர் கதை போட்டியில் கலந்துக்க என்னை கொல்வதை நான் எப்படி ஏத்துக்க முடியும்..
இனி அவனோட கதையில் நான் ஒரு கதாபாத்திரமா இருக்க விரும்பல.. என் கதையை நானே எழுதிக்க போறேன்.. அந்த பதிவருக்கு என்ன கேரகடர்னு தீர்மானிப்பது இனி நான்.. நான் யாருனு அவனுக்கு காட்டுறேன் “
இந்த கதையின் ஆசிரியனான நான் , என் நண்பன் கோபாலுடன் கவலையுடன் பேசி கொண்டு இருந்தேன்..
“கடந்த சில நாளா சம்பந்தமே இல்லாம பல பிரச்சினைகள்டா... என் பார்ட்னருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்துச்சு,, வியாபாரம் நல்லபடியா போச்சு.. ஆனால் என்னவோ ஒரு கர்மா,அல்லது விதி குறுக்கிட்ட மாதிரி எனக்கும் அவனுக்கும் சண்டை... சண்டைக்கு நானோ அவனோ காரணமே இல்லை.. சண்டை வரனும்னு யாரோ தீர்மானிச்ச மாதிரி இருக்கு “ புலம்பினேன்..
அவன் பேச்சை மாற்ற விரும்பினான்,,
”கதை ஒண்ணு எழுதிகிட்டு இருந்தியே.. என்ன ஆச்சு?”
“ அது இன்னொரு சோகம்டா... எப்பவும் எழுத ஆரம்பிச்சா சீரா போகும்.. இப்ப காமினி எனும் அந்த கதாபாத்திரம் என் கட்டுப்பாடுக்குள் வரவே மறுக்குது.. அந்த பாத்திரம் உயிர் பெற்று அது இஷ்ட்த்துக்கு நடக்குற மாதிரி ஃபீலிங் . பேசாம அவள் காதலன் சிவாவை வைத்து அவள் கதைய முடிக்கலாம்னு பார்க்குறேன் “
*******************************************************
காமினி செல்போனில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்.. சிவா அவள் அறைக்குள் வந்த்தை அவள் கவனிக்கவில்லை...
” மே ஐ கம் இன் “ இறுகிய முகத்துடன் சிவா உள்ளே வந்தான்..
” வாங்க ..வாங்க,, கவனிக்கவே இல்லை”
“ எப்படி கவனிப்ப? எவனுடனோ கொஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி கவனம் இருக்கும்”
“ சிவா.. மைண்ட் யுவர் வோர்ட்ஸ் “
“ உனக்கு என்னடி மரியாதை.. தே*** நாயே “
“ சிவா...”
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா..
எதிர்பாராத நேரத்தில் பின்னால் இருந்து ஒரு அடி விழ நிலை குலைந்தான் சிவா...
“ ராஸ்கல் ,, நீ இப்படி நடந்துக்கவேனு எனக்கு முன்னாடியே தெரியும்.. அதனால்தான் பாடி கார்ட் ரெடியா வச்சு இருந்தேன்... இனி என் மூஞ்சிலயே விழிக்காதே “
***********************************************************************************************
” காமினி ,,, நீ ஓவரா போற... நீ நான் படைத்த ஒரு கேரகடர், அவ்வளவுதான்.. நீயா முடிவு எடுக்க்றது கூட பரவாயில்ல.. ஆனால் என் கதையை நீ எழுத முயற்சிப்பது சரி இல்லை... “
என்னை பாவமாக பார்த்தாள் காமினி..
“ உண்மையில் நாம் எல்லோருமே யாரோ ஒருவர் எழுதும் கதையில் கதாபாத்திரங்கள்தான்..இதில் நாம் சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை..
என்னை ஒரு அப்பாவி பொண்ணா உருவாக்கனும்னு நீ நினச்ச.. ஆனால், நமக்கு மேல ஒரு சக்தி , என்னை தைரியமிக்க ஒரு பெண்ணா உருவாக்கிடுச்சு..
இப்ப பேசாம என் கூட வந்து என்னோட அடுத்த அதிரடிய பாரு “
உறுதியாக சொன்னாள் ..
“ என்ன செய்ய போற? “
“ சாதாரண கரி பல ஆண்டுகள் கழித்து சில இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு வைரமா மாறுது.. நம்ம விஞ்ஞானி பரந்தாமன் சார், அதே தரத்தோட செயற்கை முறைல வைரம் கண்டுபிடித்து அங்கீகாரத்துக்கு அலைஞ்சார்.. ஆனால் அரசு எந்திரம் அவரை நொறுக்கிடுச்சு.. அவருக்கு உரிய மரியாதை தரல... அந்த வைரமும் , அதை செய்யும் முறையும் அரசின் வசம்தான் இருக்கு.,.. அங்கு இருந்து பயன் இல்லை..
அதை எடுத்து வந்து உங்க கிட்ட கொடுக்குறேன்.. இதை வெளி நாட்டுக்கு வித்து அந்த காசுல நம்ம மக்களுக்கு சேவை செய்ங்கனு சொல்லி இருக்கேன் “
நான் உருவாக்கிய காமினி என்னை விட அதிகமாக சிந்திப்பதை ஆச்சர்யமாக பார்த்தேன்..
அவளை நான் உருவாக்கவில்லை... இருவரையும் உருவாக்கியது வேறு யாரோ என்ற உண்மை புரிய ஆரம்பித்த்து...
நான் என்பதும் பொய். வாழ்க்கை என்பதும் பொய்.. எல்லாம் அர்த்தம் மிக்கது.. ஆனால் அபத்தமானது என்பது புரிய தொடங்கியது..
நான் உயிருக்கு உயிராக பழகிய கீதா , ஏதோ ஒரு மொக்கை காரணம் சொல்லி பிரிந்தபோது , எல்லோரையும் வெறுத்தேன்.,.. பிரிவுக்கு உலகம்தான் காரணம்... காமினிதான் காரணம் என்றெல்லாம் புலம்பியது எவ்வளது முட்டாள்தனம் என்பது புரிந்த்து.. நடக்கும் நாடகத்தை சும்மா பார்ப்பதுதான் நம் வேலை..
எல்லை அற்ற நாடகத்தில் நாம் ஜஸ்ட் கேரகடர்கள்தான்..
**************************************************************************
பலத்த காவலில் இருந்த வைரத்தையும் , தயாரிப்பு ரகசியத்தையும் காமினி எடுத்து வந்த போது, அவளை கை எடுத்து கும்பிட தோன்றியது..
“யாதுமாகி நின்றாய்..காளி எங்கும் நீ நிறைந்தாய் “ பாடல் தோன்றியது..
பரந்தாமன் அலுவலகத்துக்கு , வைரத்தை ஒப்படைக்க நானும் சென்றேன்..
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
” என் கடமையைத்தான் செய்தேன் .. தேசம் என்பது மக்கள்தான்.. எனவே நாட்டுக்குத்தான் என் ஆராய்ச்சி பயன்படனும்னு நினைக்காம வெளி நாட்டுல வித்து சம்பாதிங்க.. அதை வச்சு ஏழைகளுக்கு உதவுங்க “
பேசிகொண்டு இருந்து விட்டு திரும்பினோம்...
” காமினி.. உன் கிட்ட ஒண்ணு சொல்லனும் “ மெதுவாக ஆரம்பித்தேன்.
“ எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு .. போய்ட்டு வந்துறேன்” ஸ்கூட்டியை கிளப்பினாள்.
“ அதில் போகாதே “ தடுத்தேன்..
அதில் போனால் விபத்து ஏற்படும்.. அதில் சாவாள் என்பது என் கதை.. அப்படி நடக்க கூடாது.. காமினி சாக கூடாது..
“ சரி.. உங்க டிரைவரை அனுப்புங்க.. காரில் போறேன் ..போய்ட்டு வந்து நானும் ஒரு விஷ்யம் உங்க கிட்ட பேசணும் “ புன்னகையுடன் கிளம்பினாள்..
*******************************************************************8
சற்று நேரத்தில் போன்..
“ சார்.. உங்க கார் விபத்தில சிக்கிருச்சு.. ”
பதறினேன்.. கதையின் முடிவை நான் தான் மாற்றி விட்டேனே..அவள் சாக கூடாது..
” காமினிக்கு என்ன ஆச்சு “
“ ஒன்னும் பிராப்ளம் இல்ல சார்.. சிகிச்சை நடந்துகிட்டு இருக்கு.. எக்மோர்ல ஒரு ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கோம்..
அவசரமாக எக்மோர் கிளம்பினேன்..
***************************
சென்னை . எக்மோரில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை..
காமினிக்கு ஒரே இட்த்தில் கட்டுப்பட்டு இருப்பது பிடிக்கவில்லை.. சிறகடித்து பறக்க துடித்தாள்..
டாக்டர் செக் அப் முடித்து செல்லும் நேரம்தான் சரியான நேரம்.. வேறு யரும் இருக்க மாட்டார்கள்..
டாக்டர் வழக்கம்போல சரியான நேரத்துக்கு வந்தார்,, காமினியை சோதித்த பின் திருப்தியாக கிளம்பினார்...
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
Labels:
சவால் சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
October
(40)
- சாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...
- வரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...
- காமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு
- ஜிகாத் என்றால் என்ன ?
- எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...
- நீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா? எழுத்து சித்தர்...
- கிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...
- இருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...
- புனிதமான கலர் எது ? ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...
- என் மதிப்பு கேவலம் 15 கோடிதானா ? பேரம் பேசும் எம்எ...
- பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...
- பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...
- எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்
- எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...
- சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...
- ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...
- ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?
- கொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா ? அசத்தும் தொழி...
- பரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...
- சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )
- ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )
- என் உயிர் நீ அல்லவா !!? ( சவால் சிறுகதை )
- எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? ( சவால் சி...
- எந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா?? சர்ச்சை...
- பரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...
- எந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...
- கர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.
- பரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...
- பெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...
- எந்திரன் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?
- எந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்
- காலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ
- சுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...
- எந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...
- எந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...
- கண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்
- எந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா? ...
- எந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...
- சிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்
- எந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...
-
▼
October
(40)
முடிவு - பதற வைக்கிறது.
ReplyDeletethank you for your feedback
ReplyDeleteகதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துகள்
ReplyDeleteமுடிவு நான் எதிர்பாராதது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeletethank u so much
ReplyDeleteசெம இந்தக் கதை இத்தனை நாள் என் கண்ல படலையே.. அசத்திட்டீங்க.. பரிசு பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇது என் கதை டைம் இருந்தா படிங்க..
http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_15.html
"செம இந்தக் கதை இத்தனை நாள் என் கண்ல படலையே.. அசத்திட்டீங்க.. பரிசு பெற வாழ்த்துக்கள்..."
ReplyDeletethank u boss
இது என் கதை டைம் இருந்தா படிங்க..
http://rameshspot.blogspot.com/2010/10/blog-post_15.html "
ஏற்கனவே படிச்சுட்டேன்... இருந்தாலும் இன்னொரு முறை படிக்க, இதோ வந்து கிட்டே இருக்கேன்
உங்க கதையை எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்.. ரொம்ப அருமையா இருக்கு!! வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவெற்றிக்கு எனது பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி கலா நேசன், நன்றி கோபி,நன்றி அனு
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ;-)
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. உங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் என நேற்றே நினைத்தேன்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பர். சுழல் கதை:)
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்..
'நான் லீனியர்' வகையில் அருமையாக உள்ளது. இருந்தாலும் தண்ணி லாரியில் இறக்குமாறு தன் முடிவை அமைத்துகொண்டு இருக்க வேண்டாம் அந்த பொல்லாத காமினி :)
ReplyDeleteStranger than Fiction படம் பாருங்கள்.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் :) வாழ்த்துக்கள்..!
Stranger than Fiction படம் பாருங்கள்.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் :) "
ReplyDeleteகண்டிப்பா பார்த்துட்டு, என் கருத்தை பகிர்ந்து கொள்வேன்.. நன்றி பாஸ்
”வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்”
ReplyDeleteநன்றி விதயா .
உங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் என நேற்றே நினைத்தேன்.”
ReplyDeleteஎன்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் , அன்புக்கும் நன்றி பாஸ்
RVS said...
ReplyDeleteவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ;-) “
நன்றி
வாழ்த்துக்கள் தலைவரே...
ReplyDeleteபார்வையாளன் ...கலக்கிடீங்க..நேர்த்தியான உரையாடல்...உங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்...வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.. இதே பாணியில் நான் ஒரு கதை படித்திருக்கிறேன்...நேரம் கிடைத்ததால் படித்து, உங்கள் கருத்தைப் பரிமாறுங்கள்.. http://manamaerelax.blogspot.com/2010/04/blog-post_17.html
ReplyDeleteபார்வையாளன் ...கலக்கிடீங்க..நேர்த்தியான உரையாடல்...உங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்...வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.. இதே பாணியில் நான் ஒரு கதை படித்திருக்கிறேன்...நேரம் கிடைத்ததால் படித்து, உங்கள் கருத்தைப் பரிமாறுங்கள்.. http://manamaerelax.blogspot.com/2010/04/blog-post_17.html
ReplyDelete”நேரம் கிடைத்ததால் படித்து, உங்கள் கருத்தைப் பரிமாறுங்கள்”
ReplyDeleteபடிச்சுட்டேன்.. என் கருத்தையும் அங்கே பதிஞ்சுட்டேன்
[ma][im]http://friends18.com/img/thank-you/052.jpg[/im][/ma]
ReplyDeleteபார்வையாளன் முதலில் வாழ்த்துக்கள் பரிசு பெற்றமைக்கு. முதன் முதலில் பரிசு பேரும் போது உண்டாகும் சந்தோஷம் எனக்கு தெரியும். அது இன்னும் பல படிகள் உங்களை உயர்த்தும். உங்கள் குருங்கதைகளிலேயே கதை சொல்லும் திறமை தெரிந்தது. மறுபடியும்வாழ்த்துக்கள்
ReplyDelete"மறுபடியும்வாழ்த்துக்கள்"
ReplyDelete[co="red"]இதயம் கனிந்த நன்றி [/co]
ஹா, பட்டையக் கெளப்பிட்டீங்க கதைல.. வித்யாசமா யோசிச்சது தூள் ! பெருமையுள்ள முதல் பரிசுக்குப் பாராட்டுக்கள் .
ReplyDeleteபெருமையுள்ள முதல் பரிசுக்குப் பாராட்டுக்கள்"
ReplyDeleteநன்றி
வெல்டன், வித்யாசமான சிந்தனை.
ReplyDeleteவாழ்த்துக்கள் வெற்றி பெற்றமைக்கு.
வாழ்த்துக்கள் வெற்றி பெற்றமைக்கு."
ReplyDeleteநன்றி அரபு தமிழரே
உங்களின் மூன்று கதைகள் டாப் லிஸ்டில் வந்தமைக்கும் இது பரிசு பெற்றமைக்கும் முதல் வாழ்த்துகள்.
ReplyDeleteஇது ஒரு வித்தியாசமான ஃபேண்டசி அனுபவத்தையும், ஒரு வித்தியாசமான சுழற்சி அனுபவத்தையும் தந்தது. இரண்டுமே இந்தக் கதை தனித்துத் தெரியவும், வெற்றி பெறவும் காரணமாக அமைந்திருக்கலாம். ஃபேண்டஸி ஓகே, ஆனால் இந்தக் கதைக்கு முடிவுச் சுழற்சி பொருத்தமாக இருக்கவில்லையோ என எனக்கு ஒரு சந்தேகம்.
தொடர்ந்து நிறைய கதைகள் எழுதுங்கள். வாழ்த்துகள்.
"உங்களின் மூன்று கதைகள் டாப் லிஸ்டில் வந்தமைக்கும் இது பரிசு பெற்றமைக்கும் முதல் வாழ்த்துகள்"
ReplyDeleteகவனித்து பாராட்டியமைக்கு நன்றி..
”தொடர்ந்து நிறைய கதைகள் எழுதுங்கள். வாழ்த்துகள்”
உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவியாக என்றென்றும் இருக்கும்...
அதே சமயம், இந்த சீருகதை போட்டி என்றும் என் நினைவில் மறக்க முடியாத இனிய நிகழ்வாக நீடித்து இருக்கும்...
மிகுந்த நன்றி
Infinite looping or labrynth story...wonderful!!!!!!கதையின் விதிகளோடு உஙள் விதியையும் சேர்த்து எழுதிய விதம் simply poetic!!!ஒரு மெகா வாழ்த்துக்கள்!!!!!!!
ReplyDelete